This article has been recently published in "Nanayam Vikatan" dated 04/10/2016. Here's the link to read my article online, if you have online access in vikatan group.
http://www.vikatan.com/nanayamvikatan/2016-oct-09/mutual-fund/124074-new-investment-scheme-will-give-more-profit.art
The same article is given below.
http://www.vikatan.com/nanayamvikatan/2016-oct-09/mutual-fund/124074-new-investment-scheme-will-give-more-profit.art
The same article is given below.
சமீபத்தில் உச்சத்தைத் தொட்ட சந்தை தற்போது சுமார்
இரண்டு, மூன்று சதவிகிதம் குறைந்து வர்த்தகம் ஆகிறது. இந்த
சிறிய இறக்கத்தினால் சந்தையின் மதிப்பு (valuation) என்பது
பெரிய அளவில் குறைந்துவிடவில்லை. எனவே, அதிக
விலை தந்தே பங்குகளை வாங்கவேண்டிய கட்டாயம் முதலீட்டாளர்களுக்கு இருப்பதால், இப்போதைக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் ஒதுங்கி
நிற்பதே சரி என பல முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். பங்கு முதலீட்டாளர்கள்
மட்டுமல்ல, ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் இதே
மாதிரியான எண்ணத்துடன் எப்போது சந்தை இறங்கும் என்கிற எதிர்பார்ப்புடன்
இருக்கின்றனர்.
உள்ளபடி பார்த்தால், இப்படி
ஒதுங்கி நிற்கத் தேவையே இல்லை. நம் கையில் மொத்தமாக இருக்கும் பணம் இருந்தாலோ
அல்லது தீபாவளி போனஸ் கிடைப்பதாக இருந்தாலோ அல்லது 7-வது
கமிஷன் மூலம் கணிசமான தொகை கிடைப்பதாக இருந்தாலோ, சந்தை
இறங்கும் வரை அதை வங்கிக் கணக்கில் வைத்திருப்பதைவிட பிஇ - எஸ்டிபி ஃ முதலீட்டு முறை மூலம்
சந்தையின் மதிப்புக்கேற்றபடி நம் பணத்தை சரியாக முதலீடு செய்ய முடியும். தற்போது மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸின்
சராசரி பிஇ ரேஷியோ (Price Earning Ratio) 20.78-ஆக
உள்ளது.
சென்செக்ஸின் நெடு நாளைய சராசரி பிஇ 18.6. சென்செக்ஸின் அதிகபட்ச பிஇ 29-ஆகவும்
(2000 வருடம்), குறைந்தபட்ச
பிஇ 12 ஆகவும் (2008 வருடம்)
இருந்திருக்கிறது. இதிலிருந்து நமக்கு சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரியவருவது, சந்தையின் மதிப்பு சற்று அதிகம் என்பதே.
கையில் இருக்கும் மொத்த பணத்தையும் மியூச்சுவல்
ஃபண்ட் திட்டங்களில் ஒரே நேரத்தில் பங்கில் முதலீடு செய்யாமல், மதிப்பு
அதிகமாக இருக்கும்போது குறைவாகவும் குறைவாக உள்ளபோது அதிகமாகவும் முதலீடு
செய்யவேண்டும்.
ஆனால் மதிப்பு எப்போது அதிகமாக உள்ளது அல்லது குறைவாக
உள்ளது என்பதை நாமே கண்டறிவது கொஞ்சம் கடினம். இதைச் செய்வதற்கு டைனமிக் ஈக்விட்டி
ஃபண்டுகள் செய்கின்றன. கடந்த காலங்களில் இந்த வகை ஃபண்டுகள் ஓரளவு நல்ல
வருமானத்தைத் தந்திருக்கின்றன.
இப்போது டைனமிக் ஃபண்டுகளைவிட சிறப்பான முதலீட்டுக்கு
வழிவகுக்கும் ஒரு முதலீட்டுத் முறை
வெளியிட்டிருக்கிறது ஐடிஎஃப்சி நிறுவனம் பிஇ - எஸ்டிபி (PE - STP) என்கிற முதலீட்டுத் முறை யில் நாம் முதலில் முதலீடு செய்யும் தொகை கடன் சார்ந்த
திட்டங்களில் (Debt fund) முதலீடு
செய்யப்படும். அதிலிருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் பங்கு சார்ந்த திட்டத்துக்கு
எஸ்டிபி (STP - Systematic Transfer Plan) மூலம்
மாற்றப்படும். இப்படி மாற்றும்போது ஒவ்வொரு மாதத்திலும் ஒரே அளவிலான தொகையை
மாற்றம் செய்யாமல், சந்தை மதிப்பு குறைந்திருக்கும்போது கூடுதல்
தொகையையும், தற்சமயம் போல் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும்போது
குறைந்த தொகையும் மாற்றுவதன் மூலம் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பினை நாம்
உருவாக்கிக் கொள்ளலாம்.
இந்தத் முதலீட்டு முறையின் படி, பிஇ 16-க்குக்
கீழ் இருக்கும்போது நாம் கடன் திட்டத்தில் இருந்து பங்கு திட்டத்துக்கு மாறும்
தொகை ஐந்து மடங்காகவும் (Green Zone), பிஇ 16-19-ஆக இருக்கும்போது மாறும் தொகை இரண்டு மடங்காகவும் (Yellow Zone), பிஇ 19-க்கு
மேல் இருக்கும்போது மாறும் தொகை ஒரு மடங்காக (Red Zone) இருக்கும்.
(பார்க்க படம்-1)
ஆக, சந்தை
இறங்கி இருக்கும்போது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிக
முதலீடும், சந்தை ஏறி இருக்கும்போது குறைந்த முதலீடும்
செய்கிறோம். இவ்வாறு செய்வதால் சாதாரணமாக செய்கிற எஸ்டிபியைவிட பிஇ - எஸ்டிபி
மூலம் செய்யும்போது நமக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. மேலும், நாம் வாங்கும் யூனிட்களின் என்ஏவி பிஇ - எஸ்டிபி மூலம்
வாங்கும்போது நார்மல் எஸ்டிபி-யைவிடக் குறைவாக இருக்கிறது. (அட்டவணை-1 பார்க்கவும்)
Sample calculation
of PE STP
|
Table 1
|
|||||
Amount
|
Units
|
|||||
Month
|
nav
|
stp
|
pe stp
|
pe zone
|
stp
|
pe stp
|
1
|
10
|
1000
|
2000
|
y
|
100.00
|
200.00
|
2
|
9
|
1000
|
2000
|
y
|
111.11
|
222.22
|
3
|
8
|
1000
|
5000
|
g
|
125.00
|
625.00
|
4
|
11
|
1000
|
2000
|
y
|
90.91
|
181.82
|
5
|
12
|
1000
|
1000
|
r
|
83.33
|
83.33
|
6
|
8
|
1000
|
5000
|
g
|
125.00
|
625.00
|
7
|
7
|
1000
|
5000
|
g
|
142.86
|
714.29
|
8
|
8
|
1000
|
5000
|
g
|
125.00
|
625.00
|
9
|
9
|
1000
|
2000
|
y
|
111.11
|
222.22
|
10
|
10
|
1000
|
2000
|
y
|
100.00
|
200.00
|
11
|
11
|
1000
|
2000
|
y
|
90.91
|
181.82
|
12
|
10
|
1000
|
2000
|
y
|
100.00
|
200.00
|
Total
|
12000
|
35000
|
1305.23
|
4080.70
|
||
Avg unit price
-cost of acquisition
|
9.19
|
8.58
|
PE STP could
help lower the cost of acquisition compared to regular STP
|
||||
Historical data
of cost of acquisition of PE-STP vs Normal STP ( indexed to base 100)
|
||||
ஒன்றை
நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இந்த PE STP என்பது
ஒரு குறிப்பிட்ட திட்டம் இல்லை. இது SIP மற்றும் STP போன்ற முதலீட்டு முறையே. Dynamic Equity திட்டங்களில் PE பொறுத்து பங்கின் அளவு திட்டதில் மாறுபடும். இந்த PE STP இல் PE பொறுத்து
நாம் முதலீடு செய்யும் பணத்தின் அளவு மாறும். Dynamic Equity ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் மட்டுமே முதலீடு. இந்த PE STP இல் எந்த பங்கு திட்டதிலும் முதலீடு செய்யலாம். ஒரு குறிபிட்ட பங்கு திட்டதில் இல்லாமல், எந்த பரந்து பங்கு திட்டத்திலும் ( Diversified Equity schemes) சந்தை இறங்கி இருக்கும் போது அதிக அளவில் நம்
முயற்சியின்றி ஆட்டோமேடிக்காக ( Automatic
transfer) மூதலீடு செய்ய இது சிறந்த வழி.
Hi Sir.. You are doing a great job in capturing up to date investment topics.. Appreciate your efforts.. Is this PE STP scheme specific to IDFC fund house?
ReplyDeleteThanks for your feed back. Yes you are right, This PE STP is currently introduced by IDFC mutual funds - you can invest lumpsum in IDFC liquid or short term debt funds and move into IDFC group of equity funds like Classic equity fund and other other equity funds through this PE STP- for investing in this IDFC PE STP, i can assist you, please provide your contact details, so that i can in touch with you
Delete