Showing posts with label PE STP. Show all posts
Showing posts with label PE STP. Show all posts

Sunday, 9 October 2016

PE-STP: சந்தை மதிப்புக்கேற்ப முதலீடு


This article has been recently published in "Nanayam Vikatan" dated 04/10/2016. Here's the link to read my article online, if you have online access in vikatan group.

http://www.vikatan.com/nanayamvikatan/2016-oct-09/mutual-fund/124074-new-investment-scheme-will-give-more-profit.art

The same article is given below.

சமீபத்தில் உச்சத்தைத் தொட்ட சந்தை தற்போது சுமார் இரண்டு, மூன்று சதவிகிதம் குறைந்து வர்த்தகம் ஆகிறது. இந்த சிறிய இறக்கத்தினால் சந்தையின் மதிப்பு (valuation) என்பது பெரிய அளவில் குறைந்துவிடவில்லை. எனவே, அதிக விலை தந்தே பங்குகளை வாங்கவேண்டிய கட்டாயம் முதலீட்டாளர்களுக்கு இருப்பதால், இப்போதைக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் ஒதுங்கி நிற்பதே சரி என பல முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் இதே மாதிரியான எண்ணத்துடன் எப்போது சந்தை இறங்கும் என்கிற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

உள்ளபடி பார்த்தால், இப்படி ஒதுங்கி நிற்கத் தேவையே இல்லை. நம் கையில் மொத்தமாக இருக்கும் பணம் இருந்தாலோ அல்லது தீபாவளி போனஸ் கிடைப்பதாக இருந்தாலோ அல்லது 7-வது கமிஷன் மூலம் கணிசமான தொகை கிடைப்பதாக இருந்தாலோ, சந்தை இறங்கும் வரை அதை வங்கிக் கணக்கில் வைத்திருப்பதைவிட பிஇ - எஸ்டிபி ஃ முதலீட்டு முறை மூலம் சந்தையின் மதிப்புக்கேற்றபடி நம் பணத்தை சரியாக முதலீடு செய்ய முடியும். தற்போது மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸின் சராசரி பிஇ ரேஷியோ (Price Earning Ratio) 20.78-ஆக உள்ளது. 
சென்செக்ஸின் நெடு நாளைய சராசரி பிஇ 18.6. சென்செக்ஸின் அதிகபட்ச பிஇ 29-ஆகவும் (2000 வருடம்), குறைந்தபட்ச பிஇ 12 ஆகவும் (2008 வருடம்) இருந்திருக்கிறது. இதிலிருந்து நமக்கு சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரியவருவது, சந்தையின் மதிப்பு சற்று அதிகம் என்பதே. 

கையில் இருக்கும் மொத்த பணத்தையும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரே நேரத்தில் பங்கில் முதலீடு செய்யாமல், மதிப்பு அதிகமாக இருக்கும்போது குறைவாகவும் குறைவாக உள்ளபோது அதிகமாகவும் முதலீடு செய்யவேண்டும். 
ஆனால் மதிப்பு எப்போது அதிகமாக உள்ளது அல்லது குறைவாக உள்ளது என்பதை நாமே கண்டறிவது கொஞ்சம் கடினம். இதைச் செய்வதற்கு டைனமிக் ஈக்விட்டி ஃபண்டுகள் செய்கின்றன. கடந்த காலங்களில் இந்த வகை ஃபண்டுகள் ஓரளவு நல்ல வருமானத்தைத் தந்திருக்கின்றன.

இப்போது டைனமிக் ஃபண்டுகளைவிட சிறப்பான முதலீட்டுக்கு வழிவகுக்கும் ஒரு முதலீட்டுத் முறை வெளியிட்டிருக்கிறது ஐடிஎஃப்சி நிறுவனம் பிஇ - எஸ்டிபி (PE - STP) என்கிற முதலீட்டுத் முறை யில் நாம் முதலில் முதலீடு செய்யும் தொகை கடன் சார்ந்த திட்டங்களில் (Debt fund) முதலீடு செய்யப்படும். அதிலிருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் பங்கு சார்ந்த திட்டத்துக்கு எஸ்டிபி (STP - Systematic Transfer Plan) மூலம் மாற்றப்படும். இப்படி மாற்றும்போது ஒவ்வொரு மாதத்திலும் ஒரே அளவிலான தொகையை மாற்றம் செய்யாமல், சந்தை மதிப்பு குறைந்திருக்கும்போது கூடுதல் தொகையையும், தற்சமயம் போல் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும்போது குறைந்த தொகையும் மாற்றுவதன் மூலம் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பினை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.  
இந்தத் முதலீட்டு முறையின் படி, பிஇ 16-க்குக் கீழ் இருக்கும்போது நாம் கடன் திட்டத்தில் இருந்து பங்கு திட்டத்துக்கு மாறும் தொகை ஐந்து மடங்காகவும் (Green Zone), பிஇ 16-19-ஆக இருக்கும்போது மாறும் தொகை இரண்டு மடங்காகவும் (Yellow Zone), பிஇ 19-க்கு மேல் இருக்கும்போது மாறும் தொகை ஒரு மடங்காக (Red Zone) இருக்கும். (பார்க்க படம்-1)  


ஆக, சந்தை இறங்கி இருக்கும்போது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிக முதலீடும், சந்தை ஏறி இருக்கும்போது குறைந்த முதலீடும் செய்கிறோம். இவ்வாறு செய்வதால் சாதாரணமாக செய்கிற எஸ்டிபியைவிட பிஇ - எஸ்டிபி மூலம் செய்யும்போது நமக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. மேலும், நாம் வாங்கும் யூனிட்களின் என்ஏவி பிஇ - எஸ்டிபி மூலம் வாங்கும்போது நார்மல் எஸ்டிபி-யைவிடக் குறைவாக இருக்கிறது. (அட்டவணை-1 பார்க்கவும்)


Sample calculation of PE STP
Table 1


Amount

Units
Month
nav
stp
pe stp
pe zone
stp
pe stp
1
10
1000
2000
y
100.00
200.00
2
9
1000
2000
y
111.11
222.22
3
8
1000
5000
g
125.00
625.00
4
11
1000
2000
y
90.91
181.82
5
12
1000
1000
r
83.33
83.33
6
8
1000
5000
g
125.00
625.00
7
7
1000
5000
g
142.86
714.29
8
8
1000
5000
g
125.00
625.00
9
9
1000
2000
y
111.11
222.22
10
10
1000
2000
y
100.00
200.00
11
11
1000
2000
y
90.91
181.82
12
10
1000
2000
y
100.00
200.00
Total

12000
35000

1305.23
4080.70
Avg unit price -cost of acquisition




9.19
8.58

PE STP could help lower the cost of acquisition compared to regular STP

Historical data of cost of acquisition of PE-STP vs Normal STP ( indexed to base 100)



ஒன்றை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இந்த PE STP என்பது ஒரு குறிப்பிட்ட திட்டம் இல்லை. இது SIP மற்றும் STP போன்ற முதலீட்டு முறையே. Dynamic Equity திட்டங்களில் PE பொறுத்து பங்கின் அளவு திட்டதில் மாறுபடும். இந்த PE STP இல் PE பொறுத்து நாம் முதலீடு செய்யும் பணத்தின் அளவு மாறும். Dynamic Equity ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் மட்டுமே முதலீடு. இந்த PE STP இல் எந்த பங்கு திட்டதிலும் முதலீடு செய்யலாம். ஒரு குறிபிட்ட பங்கு திட்டதில் இல்லாமல், எந்த பரந்து பங்கு திட்டத்திலும் ( Diversified Equity schemes)  சந்தை இறங்கி இருக்கும் போது அதிக அளவில் நம் முயற்சியின்றி ஆட்டோமேடிக்காக ( Automatic transfer) மூதலீடு செய்ய இது சிறந்த வழி.



Tuesday, 3 May 2016

Systematic Investment Plan (SIP) - சிறுக சிறுக சேமிக்கலாம்

Read/download this article in magazine/pdf format

நாம் நமது வாழ்க்கையை  சற்றே திரும்பிப் பார்த்தால், அது ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக காணப்படும். வருங்காலமும் அப்படியே இருக்கலாம், சிலர் இதை மறுக்கலாம், ஆனால் யாராலும் மறுக்க முடியாதது பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்கள். இதன் நெளிவுசுளிவு தெரிந்து, மூதலீட்டில் எப்படி  லாபம் பார்ப்பது என்று அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். சிறு துளி பெருவெள்ளம் என்கிற கூற்றைப் போல சிறுக சிறுக சேமித்து, நமது நிதி நிலைமையை வலுவடையச் செய்வது முக்கியமானதும், அவைசயமனதும் கூட. பரஸ்பர நிதிகளில் (Mutual Funds)  பல தவனைகளில் பணம் கட்டும் முறையை  Systematic Investment Plan (SIP) என்று கூறுவார்கள். இதை Small Is Plenty என்றும் கொள்ளலாம் இது வங்கிகளில் மாதம் தோறும் பணம் கட்டும் Recurring deposit (RD) போன்று செயல் படும். RD யை விட SIP எப்படி சிறந்தது என்கிறீர்களா? பரஸ்பர நிதிகளின் மூலம்  சிருவாக  சேமித்து பயன் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.


சினிமாவில் நடிகர் சந்தானம் தன்னுடைய நெருங்கிய நண்பனான ஆர்யாவைப் பார்த்து "நன்பேண்டா" என்று கூறுவது போல, தற்போதய காலத்தில் வாலிபர்களின் இணைபிரியா நண்பனாகிவிட்டது இந்த கைபேசி! ஏதேனும் புதிய மாடல் கைபேசி ஒன்று சந்தையில் அறிமுகப்படுத்திய மறுநாளே... இல்லை இல்லை... மறுகணமே, அது காலையோ மாலையோ, அலுவலகமோ வீடோ, எதுவாக இருந்தாலும் இருந்த இடத்தில் இருந்து வாங்குகிறார்கள். சிலர் இதை தவணை முறையிலும் வாங்குவதுண்டு. பரஸ்பர நிதியின் SIP மூலம் எப்படி கைபேசி வாங்கி லாபம் பெறலாம் என்று கூறுகிறேன். உதாரணமாக, மிக அதிக விலையில் உயர்ந்த நிறுவனத்தின் ஒரு கைபேசியை பத்து மாத தவணையில Rs 2000 வீதம் 10x2000=20,000 கொடுத்து வாங்குகிறார்கள். பெரும்பாலாணவர்களுக்கு வரும் மாத சம்பளத்தில் பெரும் பகுதி இந்த தவணை கட்டுவதற்க்கு போய்விடும். தவணையில் வாங்குவதால்  பணம் கூட செலுத்த வேண்டியதாக உள்ளது. அதே கைபேசியை தவணையில் வாங்காமல் உடனடியாக  பணம் கொடுத்து வாங்கினால், பத்து மாத முடிவில் அதே மாடல் கைபேசி குறைந்தபட்சம் 15%  அல்லது 20%  குறைந்து இருக்கும். செலுத்திய பணமோ கைபேசியை முதலில் வாங்கும் விலையைவிட 5% அல்லது 10%  அதிகமாக இருக்கும்.

இதற்க்கு மாற்றாக இந்த ரூபாய் 2000 ஐ ஒரு கடண் பத்திர பரஸ்பர நிதியில் சேமித்து வந்தால் மாத முடிவில் அந்த பணம் பெருகி  ரூபாய்  20,610 #ஆக இருக்கும். ஆனால் அதே சமயம் சந்தையில் அந்த கைபேசியின் விலை குறைந்து இருக்கும். உதாரணமாக  20% குறைந்த்தால் அது  ரூபாய் 16,000  ஆக இருக்கும். நமது பரஸ்பர நிதியில் சேமித்த பணத்தில் அந்த  கைபேசியை வாங்குவதன் மூலம், நமது கையில் விரும்பிய கைபேசியும், வங்கியில் கூடுதல் பணமாக ரூபாய் 4610 ஆக இருக்கும். இந்த இரண்டில் எந்த முறை சிறந்த முறை என்று முடிவு செய்து நிதியை பராமரியுங்கள்!

பரஸ்பர நிதியில் முதலீடு  செய்ய இரண்டு முறை உள்ளது. மொத்தமாக பணம் செலுத்துவதற்கு Lump sum investment  என்று பெயர். பல தவணையில் பணம் செலுத்துவதற்கு Systematic Investment Plan  என்று பெயர்.  இதன் சுருக்கமே SIP.  இதை “Small is Plenty” என்றும் கொள்ளலாம். தவணை என்பது,  மாதந்தோறும் அல்லது வருடத்தில் இரண்டு முறை, வருடத்தில் நான்கு முறை என்று அவரவர் தேவைக்கு ஏற்ப உள்ளது. இது SIP  யின் ஒரு முக்கிய அம்சமாகும். பரஸ்பர நிதியில்  ஒரு  திட்டத்தில் ஒரே தவணயில் ரூபாய் 50,000 முதலீடு செய்வதற்க்கும் ரூபாய் 5000 வீதம் பத்து தவணயில் முதலீடு செய்வதற்க்கும் சிறு வேறுபாடு உள்ளது. தவணை முறை முதலீடு எப்படி லாபம் தருகின்றது எண்பதை அட்டவணையில் பார்க்கலாம்.


இதன் முக்கிய காரணம், பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப நாம் வாங்கும் unit மாறுபடுகின்றது.  பங்கு சந்தை  கரடியின் கையில் இருக்கும் போது (Bear Market)  நிறைய unit வாங்கப்படும். பங்கு சந்தை  காளையின் கையில் இருக்கும் போது (Bull Market), குறைந் unit வாங்கப்படும். இதற்க்கு Rupee cost averaging  என்று பெயர்.

இந்த SIP தவணையின் முதலீட்டு தொகை ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், பங்கு சந்தை  கரடியின் கையில் இருக்கும் போது நிறைய முதலீட்டு தொகையும், பங்கு சந்தை  காளையின் கையில் இருக்கும் போது குறைந் முதலீட்டு தொகையும் இருந்தால் நன்றாகத்தானே  இருக்கும். இதற்க்கும் SIP உள்ளது.  இந்த மேம்படுத்த  பட்ட திட்டத்தின் பெயர் Flex SIP.  இந்த Flex SIP மிகவும் சிறந்த முறையாகும். ஆனால் நிறைய பேருக்கு தெரிவதில்லை. இப்போது தெரிந்துகொண்டு இனி Flex SIP  முதலீடு செய்யுங்கள்.

பரஸ்பர நிதியில் SIP யில் முதலீடு செய்த பல பேர் பங்கு சந்தை  காளையின் கையில் இருக்கும் போது SIP யைஆரம்பித்து, பங்கு சந்தை  கரடியின் கையில் போகும் போது பயந்து, SIP யை நிறுத்திவிடுவார்கள். இது மிகவும் தவறு. SIP யின் நோக்கமே, பங்கு சந்தை  இறங்கினாலும், தவணயை தொடர்ந்து, நாம் வாங்கிய Unit களின் சராசரி விலையை குறைத்து கொள்ள வேண்டும். சந்தை திரும்பவும் ஏறும் போது லாபம் கிடைக்க இது வழி வகை செய்யும்.  

பரஸ்பர நிதிகளில் SIP நடைமுறையில் பரவலாக பயன் படுத்தபட்டு வருகிறது. இப்போது இதே முறையில், பங்கு சந்தையில் பங்குகளையும், இதே SIP முறையில் வாங்க முடியும். உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் 50 பங்கை, உடனடியாக வாங்காமல், 10 வாரத்தில் 5 வீதம் மொத்தம்  50 பங்கை வாங்கலாம். பங்கின்  சராசரி விலை குறைவாக இருக்கும். ஆக SIP  மூலம், நீண்ட கால மூதலீட்டில் வாங்கிய சராசரி விலை குறைந்து நல்ல லாபம் கிடைக்க ஏதுவாக இருக்கிறது.

ஒழுங்கான முறையில்  நீண்ட கால முதலீட்டில் பொறுமையாகவும் நமது வருமானமத்திற்க்கு ஏற்றவாறு தவணை  கூடவோ, குறையவோ சிறுக சிறுக சேமித்து வந்தால், நாளிடைவில் நமது முதலீடு பெருகி நமக்கு லாபத்தை நல்கும்

இன்னும் என்ன தயக்கம்? இப்போதே பரஸ்பர நிதிகளில் ஒரு SIP ஆரம்பியுங்கள்!




__________________________________________________________________

# 8% வருட வட்டியில்  10 தவணயில் கணக்கிடபட்டுள்ளது.
Formula for calculating investment amount in Flex sip = whichever higher of {(Fixed amount per instalment x no. of instalments including current) - Market Value} or Fixed amount