Monday, 23 October 2017

TitBit - 20

TITBIT - 20 - TALK OF THE TOWN - Balanced Mutual funds

Date: 22-10-2017

Please go through the image given below, to know more about balanced fund investments.



Key take away:
Markets are in the peak - it is better to be safe than sorry - instead of 100% equity funds, investments can be made in suitable balanced funds

1) Image source : ICICI direct
2) Previous tidbits : https://radhaconsultancy.blogspot.in/2017/04/asset-allocation.html



Sunday, 22 October 2017

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாற்றம்... யாருக்கு நன்மை?

My article has been published in Nanayam Vikatan on 22nd October 2017. 
Click here to read this article directly from the vikatan website.

SEBI has recently issued a circular regarding standardization of names and merging of schemes in Mutual Funds. To know how it is going to impact your existing holdings or your prospective investments, read about it here! 

You can download this article here.


மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிக மாற்றங்களை, சீரமைப்பு என்கிற பெயரில் கொண்டுவர முடிவெடுத் திருக்கிறது பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்  கட்டுப்பாட்டு வாரியமான செபி. அது என்ன சீரமைப்பு என்பதைத் தெரிந்துகொள்ளும்முன், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தற்போதைய நிலை என்னவென்று பார்த்து விடுவோம்.



குழப்பும் திட்டங்கள்:

கடந்த ஒரு வருடத்தில் சரிவிகிதத் திட்டம் எனப்படும் பேலன்ஸ்டு திட்டங்கள் முதலீட்டாளர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளன. சரிவிகிதத் திட்டம் எனப் பெயர் வைத்திருந்தாலும், இதில் பங்கும், கடன் சார்ந்த முதலீடும்  ஒருபோதும் சரிவிகிதத்தில் இருப்பதில்லை. தற்போதைய சரிவிகிதத் திட்டங்களில் நிறைய சின்ன சின்ன வேறுபாடுகளைச் செய்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடத்துகின்றன.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், பேலன்ஸ்டு திட்டங்கள், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் திட்டங்கள், டைனமிக் திட்டங்கள் என்று பல பெயர்களில் ஃபண்ட் களை வெளியிட்டு வருகின்றன. இந்த வகையில் ஃபண்ட் நிறுவனங்கள், முன்னர் வேறு பெயர்களிலிருந்த திட்டங்களை ‘பேலன்ஸ்டு திட்டங்கள்’ என்று பெயர் மாற்றி விற்பதும் நடக்கிறது.

செபி இப்போது எடுத்துவரும் நடவடிக் கைக்கு, இந்தப் பெயர் மாற்றம் மட்டுமே காரணமல்ல. வேறு பல விஷயங்களும் உள்ளன. இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம்.

வரிச் சேமிப்பு என்கிற பெயரில்... 

வரிச் சேமிப்புத் திட்டங்கள் எனப் பல ஃபண்டு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களை நடத்தி வருகின்றன. இவை எல்லாவற்றிலும் வரிச் சேமிப்பு என்கிற பெயர் அந்தத் திட்டத்துடன் இணைந்திருக்கும். சமீபத்தில், புதிதாக வந்த ஃபண்ட் நிறுவனங்கள் இந்தப் போக்கை சற்றே மாற்றி, வரிச் சேமிப்பு என்ற வார்த்தையைத் திட்டத்தின் பெயருடன் சேர்க்காமல், நீண்ட காலப் பங்குத் திட்டம் (Long Term Equity Fund) என்ற பெயருடன் வெளியிட்டு வருகிறது.

இந்தத் திட்டங்களில் சில நம்பர் ஒன் திட்டங்களாகவும் உள்ளன. சில ஃபண்டுகளில் பெயரை இப்படி மாற்றி வைப்பதன் மூலம்  முதலீட்டாளர்களுக்குப் பெரிய நன்மை எதுவும் இல்லை. ஆனால், பழைய திட்டத்துக்குப் புதிய பெயர் வைத்துள்ளதைப் பார்த்து முதலீட்டாளர்கள் குழம்பவே செய்கின்றனர்.

ஆப்பிளும் ஆரஞ்சும்:

தற்போது 42-க்கும் மேற்பட்ட ஃபண்ட் நிறுவனங்கள், சுமார் 2,000 திட்டங்களுக்கு மேல் வழங்கி வருகின்றன. இந்தத் திட்டங்களின் தன்மை, செயல்படுத்தப்படும் முறை ஆகியவற்றைப் புரிந்துகொண்டு முதலீடு செய்வது எல்லோருக்கும் எளிதான விஷயமல்ல. காரணம், ஒரு நிறுவனத்தின் லார்ஜ் கேப் திட்டமும் மற்றொரு நிறுவனத்தின் லார்ஜ் கேப் திட்டமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதனால், நாம் ஆப்பிளையும் ஆரஞ்சையும்  ஒப்பிட்டு ஆராய்கிறோம். இதனால், எந்த நன்மையும் கிடைக்காது என்பதுடன்,  தவறான முதலீட்டுக்கே முதலீட்டாளர்களைக் கொண்டு செல்லும்.

See the consolidated list of the classification table here

குறைந்த என்.ஏ.வி-தான் பெஸ்ட்டா? 

ஃபண்ட் நிறுவனங்கள், தங்களிடமுள்ள திட்டங்களுக்குப் புதிதாக முதலீட்டாளர்களைக் கொண்டுவர முடியாமல், புதுப்புதுத் திட்டங்களைச் சின்னச் சின்ன மாறுதல்களோடு, கவர்ச்சிகரமான பெயர்களில் அறிமுகப்படுத்தி முதலீட்டாளர்களை ஈர்க்கின்றன. முதலீட்டாளர்கள், தற்போதிருக்கும் திட்டங்களில் அதிகமாக என்.ஏ.வி இருக்கும் பட்சத்தில், அதில் முதலீடு செய்யாமல், என்.ஏ.வி குறைவாக உள்ள திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். என்.ஏ.வி  குறைவு, கூடுதல் என்று பார்த்து ஒரு ஃபண்டில் முதலீடு செய்யக்கூடாது. அதன் கடந்த கால வருமானம் உள்பட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்தே முதலீடு செய்ய வேண்டும்.

To know more about NAV and impact of investments, click here and navigate to section 6.

சுதாரித்த செபி:

இது மாதிரி சிலபல குழப்பங்கள் நடந்து வருவதைப் பார்த்துச் சுதாரித்துக்கொண்ட செபி, ஒரே நிறுவனத்திலிருந்து ஒரே மாதிரியான திட்டங்கள் வருவதற்கும், புதுப்புதுத் திட்டங்கள் வருவதற்கும் கடிவாளம்போட ஆரம்பித்தது. மேலும், நிறுவனங்கள் ஏற்கெனவே நடத்திவரும் பல்வேறு திட்டங்களை மறுபரிசீலனைச் செய்து, ஒரே மாதிரியான திட்டங்களாக மாற்றிவிடுமாறு கூறியது.

இருந்தபோதிலும், செபியின் இந்த வேண்டு கோளை ஃபண்ட் நிறுவனங்கள் நடைமுறை படுத்தத் தயக்கம் காட்டின. எனவே, தற்போது செபி ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

செபியின் இந்த உத்தரவின்படி, எல்லா வகையான ஓப்பன் திட்டங்களும் ஐந்து வகையில் வகைப்படுத்தப்படும். ஒன்று, பங்கு சார்ந்தவை (Equity). இரண்டு, கடன் பத்திரங்கள் (Debt). மூன்று, கலப்பினங்கள் (Hybrid). நான்காவது, குறிக்கோளுடன் கூடிய திட்டங்கள். ஐந்து, இ.டி.எஃப் போன்ற மற்ற திட்டங்கள்.

பங்கு சார்ந்த திட்டங்கள் 10 வகையான உள்பிரிவாகவும், கடன் பத்திரங்கள் 16 வகையான உள்பிரிவாகவும், கலப்பினப் பத்திரங்கள் ஆறு வகையான உள்பிரிவாகவும், குறிக்கோளுடன் கூடிய திட்டங்கள் இரண்டு பிரிவாகவும், மற்றவை ஒரு வகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

மேலும், பங்குகளின் மார்க்கெட் கேப்பிட் டலைசேஷன் குறித்த விளக்கங்களும் ‘செபி’ யினால் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. சந்தையில் மார்க்கெட் கேப் அதிகமுள்ள முதல் நூறு நிறுவனங்கள் லார்ஜ் கேப் பங்குகளாகும். இவற்றின் மார்க்கெட் கேப் ரூ.26,000 கோடிக்கு மேல்.

அடுத்த 150 நிறுவனங்கள் அதாவது, மார்க்கெட் கேப் அடிப்படையில் அமைந்த 101 முதல் 250 வரையிலான மிட்கேப் என்று அழைக்கப்படும். மார்க்கெட் கேப் ரூ.26,000 முதல் ரூ.5,200 வரையிலான மற்ற எல்லா நிறுவனங்களும் இதன் கீழ் வரும். ரூ.5,000 கோடிக்கும் குறைவான மார்க்கெட் கேப் கொண்ட நிறுவனங்கள் ஸ்மால் கேப் என்றும் வகைப்படுத்தப்படும்.

முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை? 

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செபி செய்ய நினைக்கும் இந்த மாற்றங்களில் முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

முதலாவதாக, முதலீட்டாளர்கள் பல்வேறு திட்டங்களை ஆராய்ந்து குழப்பிக்கொள்ளாமல், தங்களுக்கேற்றத் திட்டத்தைத் தேர்வு செய்துகொள்ள முடிகிற அளவுக்கு எளிமையாக இருக்கும். இரண்டாவதாக, இரு நிறுவனங்களின் ஒரே மாதிரியான திட்டங்களை ஒப்பீடு செய்யும் போது சரியான முறையில் ஒப்பீடு செய்ய முடியும். மூன்றாவதாக, இணையதளங்களிலும் ஒரே மாதிரியாக வகைப்படுத்தி இருக்கும்போது திட்டங்களைப் பற்றி ஆராய்ந்து நல்ல முடிவுகளை எடுக்க முடியும்,

நான்காவதாக, வருங்காலத்தில் இந்தத் திட்டங்கள் சேர்க்கப்படும்போது, இதனால் முதலீட்டாளர்களுக்கு எந்த வகையான புதிய வரியும் செலுத்த வேண்டிய தேவை ஏற்படாது. இந்தத் திட்டங்கள் சேர்க்கப்படும்போது, இது விற்ற வகையில் கணக்கில் வராது. அதே திட்டத்தை நாம் வைத்திருப்பது போன்றே கணக்கிடப்படும்.

இன்னும் அறுபது நாள்களுக்குள் செபி சொன்ன விஷயங்கள் நடக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Monday, 9 October 2017

மியூச்சுவல் ஃ பண்ட் முதலீடு - நில், கவனி, செல்..!

My article has been published in Nanayam Vikatan on 15th October 2017. The article published in the magazine is shorter and condensed version. You can read the same article below which is non-condensed version. 

Click here to read this article directly from the vikatan website.

உச்சத்தில் சந்தை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நில்... கவனி... செல்..!!!

தரையில் இறங்கும் விமானங்கள், எழுத்தாளர் இந்துமதியின் பிரபலமான நாவல். அதை தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கும், சந்தையில் மிகவும்  தீவிரமாக இருப்பவர்களுக்கும் எச்சரிக்கையாக  சொல்லாம். தற்போதைய நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என பார்ப்பதற்கு முன்  இந்தியப் பங்குச் சந்தையின் தற்போதைய நிலவரத்தையும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு வரும் முதலீட்டு விவரங்களை பார்ப்போம்.



மும்பை  பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 32402 ( 19-09-17) புள்ளிகளுக்கு ஏற்றம் கண்டது. அதன் பிறகு சர்வதேச காரணங்களால் இறக்கம் கண்டு, இப்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு ரூ.20.97 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் ஈக்விட்டி ஃபண்ட்களில் மட்டும் ரூ. 6 லட்சம் கோடி உள்ளது. இது கடந்த ஐந்தாறு வருடங்களுக்கு முன் ரூ. 2 லட்சம் கோடியாகதான் இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும்  மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு வந்த மொத்த முதலீடு ரூ. 62,000 கோடி.

தற்போது எல்லோரும் உச்சரிக்கும் மந்திரச் சொல் எஸ்ஐபி  (SIP).  சென்ற வருடம் எஸ்ஐபி  முறையில் ஒருவர் சராசரியாக மாதம் முதலீடு செய்த தொகை  சுமார் ரூ. 2,200. இது இப்போது ரூ. 3,000 - 3,250 ஆக அதிகரித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி   கணக்கு வைத்திருந்தவர்கள்  எண்ணிக்கை சுமார் 68 லட்சம். இப்போது அது, 1.4 கோடியாக  உயர்ந்துள்ளது.  ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 5,206  கோடி.

எல்லாம் நன்மைக்கே என்று மனம் ளம் மகிழ்வதா, மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் பலன்களை புரிந்துகொண்டு விட்டார்கள் என்று பூரிப்பதா, அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்று கொள்வதா?

பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில்  ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களின் வருமானம் மூன்று மற்றும்  ஐந்து வருடத்தில்  இரட்டை இலக்கத்தில்  பாசிடிவ் ஆக பரவசம் தருவதாக உள்ளது. எனவே முதலீட்டாளர்கள, மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி திட்டங்களில் தொடர்ந்து பலரும் முதலீடு செய்து வருகிறார்கள்.

பங்குச் சந்தை எப்படி உள்ளது  பார்ப்போம். சென்செக்ஸ்-ன்  பி/இ விகிதம் 24.25  ( 19-09-17)  மற்றம்  பிரைஸ் டு புக்  விகிதம்  3.08 ஆக உள்ளது. இது கடந்த கால சராசரிகளை விட சற்று அதிகமாக உள்ளது.

இப்போது ஆரம்பத்தில் கூறிய தரையில் இறங்கும் விமானங்கள் பற்றி பார்ப்போம். விமானம் எவ்வளவு உயர உயர பறந்தாலும், ஒரு நாள் தரையிறங்க வேண்டும். அதுபோலத்தான் இந்தப் பங்குச் சந்தை சென்செக்ஸ்  பி/இ மற்றம்  பி/பி  விகிதம். எவ்வளவு அதிகம் போனாலும், அது நீண்ட காலத்தில் சராசரி பக்கம் வந்துவிடும் என்பது காலத்தின் கட்டாயம்.

இது நடப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன.  ஜிஎஸ்டி மற்றம்  பண மதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்ட சென்செக்ஸ் இ பி எஸ் ஏற வேண்டும் அல்லது பங்குச் சந்தை   விலை இறங்க வேண்டும்.  இரண்டில் ஒன்று நடக்கும் வரை சந்தையின் ரிஸ்க் சற்று அதிகம்தான்.
இதைப் புரிந்துகொண்டு நாம் நமது பணத்தை முடிந்தவரை பத்திரமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். கடந்த 3 மற்றும் 5 வருடங்களில் கிடைத்த அதிக லாப விகிதங்களை பாரத்து, இப்போது முதலீடு செய்து இன்னும்  3 அல்லது 5 வருடங்களில் நல்ல லாபம் கிடைக்கும் என்று அதீத ஆசை கொள்ள வேண்டாம். உங்களது ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கு ஏற்றவாறு, ஃபண்ட்களை தேர்ந்தெடுத்து , பண வீக்கத்தை விட, வங்கி வட்டியை விட, சற்று கூடுதல் லாபம் கிடைத்தால் போதும் என்று பக்குவத்தோடு / எதிர்பார்ப்போடு முதலீடு செய்தால், ஏமாற்றங்களை தவிர்க்கலாம்

எனவே, ரிஸ்க் அதிகம் விரும்பாதவர்கள், பங்குச் சந்தை மிக அதிகமாக எறியுள்ள இந்தக் கால கட்டத்தில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் அதிக  லாபம் இருக்கும்பட்சத்தில், ஒரு பகுதியை கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கோ அல்லது   பேலன்ஸ்ட் ஃபண்ட்களுக்கோ மாறுவது  பலன் தரும் என்று எதிர்பார்க்கலாம்
புதிதாக முதலீடு செய்ய நினைப்பவர்கள், முற்றிலும்
பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டை தேர்வு செய்யாமல்  டைனமிக் அஸெட் ஃபண்ட்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

புரிந்து, தெரிந்து, அறிந்து முதலீடு செய்யுங்கள். ஞாபக்தில் வையுங்கள் தரை இறங்கும் விமானங்களை.

Friday, 6 October 2017

மியூச்சுவல் ஃபண்ட் - தகவல் களஞ்சியங்கள்


சமீப்த்தில் படித்தேன், செபி ( Security and exchange Board of India)  நடத்தய ஆய்வில், 95% இந்திய மக்கள், வங்கி வைப்பு நிதி மூதலிட்டையே நாடுகிறார்கள். 10% சதவிகிதத்திற்கு குறைவானவர்களே மியூச்சுவல் ஃபண்ட் களில் முதலீடு செய்கிறாரகள்!! கிராமப்புறங்களில் 1.4% சதவிகிதத்தவர்களே , மியூச்சுவல் ஃபண்ட் பற்று அறிந்து இருக்கிறார்கள். காரணம், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது, மற்றும் தகவல்கள், பெறுவது மிகவும் கடினம், என்ற கருத்து சமூகத்தில் ஆழ பதிந்துள்ளதே. ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் தகவல்கள், பெறுவது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை, தொடர்ந்து படியுங்கள் , முடிவில் உங்களுக்கே, புரியும், இது எவ்வளவு எளிது என்று!!

முதலில் தற்போது முதலீடு செய்து இருப்பவர்கள், எப்படி, தகவல்களை பெறலாம் என்று பார்போம்.

வாசகர்களுக்கு, ஒற்றை அடையாளத்தில் நிதி விபரம் (Single sign on ) பெறுவது  பற்றி தெரிந்து இருக்கலாம், அதற்கு  பயன்படுத்துபவர் பெயரும், அதற்கான கடவுசொல்லும் (Username  , Password)  தேவை, இன்னும் தொழில் நுட்ப விபரங்கள், பிடிபடாதவர்கள் எப்படி, எளிமையாக தகவல்களை பெறலாம் என்று பார்போம். இதில் பயன்படுத்துபவர் பெயரும், கடவுசொல்லும்  (Username  , Password)  இல்லை. எனவே இது எளிமைதானே. 

ஆர் . டி. எ  (RTA -Registrar and Transfer Agents)

இதற்கு முன், நாம், ஆர் . டி. எ    பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இவர்களை ஆங்கிலத்தில் Intermediary  என்பார்கள், நாம் தமிழில், இடைதரகர்கள் /இடைப்பட்ட  சேவை நிறுவனங்கள் என்று கொள்ளலாம். நாம் எந்த திட்டதில், எந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தாலும். அவர்கள் , நமது பணத்தை மட்டுமே நிர்வகிக்கிறார்ரகள். நமது பெயர் விபரம், வாங்கிய தேதி, போன்ற, தனிநபர் முதலீட்டு விபரங்களை நிர்வகிப்பவர்கள், இந்த இடைப்பட்ட நிறுவனங்களே. ஐ சி ஐசி ஐ , எஸ் பி ஐ  (ICICI MF, SBI MF) ஆகிய நிறுவனங்களில் நாம் முதலீடு செய்து இருந்தாலும், நாம் என்று செய்தோம், எவ்வளவு செய்தோம் என்ற விபரங்கள் இவர்களிடம் இருக்கும். அணைத்து பரஸ்பர நிதி நிறுவனங்களும், பெரும்பாலும் இரண்டு ஆர் . டி. எ  (RTA  )நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. அவை, கேம்ஸ் (CAMS)  மற்றும் கார்வி (Karvy )ஆகும். இது போக இன்னும் இரண்டு நிறுவனம் இடை நிறுவணம் இன்றி, அவர்களே முதலீட்டாளர்கள் விபரங்களை பராமரித்து கொள்கிறாகள். அவையாணவை பிராங்களின், சுந்தரம்  (Franklin , Sundaram). ஆக எல்லா பரஸ்பர நிதி விபரங்களும், இந்த  4 நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. எனவே நமக்கு தேவையான விபரங்களை இந்த நிறுவனங்களிடம் இருந்து நாம் பெற்றுகொள்ளலாம். 

இந்த இரண்டு பெரிய ஆர் . டி. எ  நிறுவனத்திடம் இருந்து, எந்த முன் பதிவு இல்லாமல், பயன்படுத்துபவர் பெயரும், கடவுசொல்லும்  (user name / Password)  இல்லாமல், நமக்கு வேண்டிய தகவலை, வேண்டிய தருணத்தில், மின்னஞ்சல், மூலம் மெயில் பேக் ரிப்போர்ட் (Mail back reports)  பெற்று கொள்ளலாம். 

முதல் 5 வகையான தகவல் அறிக்கையை கேம்ஸ் and  கார்வி  தளஙகளில் இருந்த பெறகூடிய இணைய முகவரிகளை தந்துள்ளேன், இது போன்ற தகவல் அறிக்கையை பிராங்களின், சுந்தரம்  தளஙகளில் இருந்த பெறகூடிய இணைய முகவரிகளை 6,7  இல் தந்துள்ளேன்,

1. முதலீட்டு மதிப்பு தகவல் (Consolidated Account Statement ). நமது திட்டங்களின் தகவல்கள், இந்த  நான்கு நிறுவனதில், கலந்து இருக்கலாம். இருப்பினும் , எல்லாவற்றையும் சேர்த்து , ஒரே இடத்தில் பெறலாம் - இதன் பெயர் - Consolidated Account Statement - CAMS + Karvy + FTAMIL + SBFS – (http://www.camsonline.com/InvestorServices/COL_ISAccountStatementCKF.aspx

இந்த தகவல் அறிக்கையில், என்னென்ன திட்டங்கள் எத்தனை, யூனிட்கள், எவ்வளவு மதிப்பு, என்று பெறலாம்.

2. அடுத்த தகவல் அறிக்கையின் பெயர் - Consolidated Portfolio Statement - Now with Dividend Payout Summary !!  https://www.camsonline.com/InvestorServices/COL_ISPortfolioStmt.aspx https://www.karvymfs.com/karvy/Investorservices/PortfoilioDetails/InvEmailPortfolio.aspx 

இதில் மேற்கொண்ட தகவல்கள், மற்றும், நமது தகவல்களை, பலவாறு ஆராய்ந்து விரிவாக, படங்களுடன், நமது முதலீட்டின் வருமான விகித்துடன்(Xirr), இந்த மேம்படுத்தபட்ட அறிக்கையில் பெறலாம். உதராணமாக, நமது முதலீடு எந்த, எந்த, நிறுவனங்களில் உள்ளது, அதன் சதவிகிதம், எவ்வளவு, நாம் எந்த வகை திட்டங்களில் முதலீடு செய்துள்ளோம், நமது மொத்த முதலீட்டில் பங்கு, கடன், கலப்பின வகைகளின் சதவிகிதம், எவ்வளவு,  என்று அறியலாம்.



3. மேலே குறிப்பிட்ட இரண்டும், அன்றய மதிப்பு மட்டுமே தரும். வாங்கி விற்ற விபரங்கள் பெற இந்த தகவல் அறிக்கையை உபயோகபடுத்தலாம் Consolidated Transaction Details https://www.camsonline.com/InvestorServices/COL_ISTransactionDetails.aspx https://www.karvymfs.com/karvy/InvestorServices/General/InvtransReport.aspx 

4. ஒவ்வொரு திட்டத்திலும்  நமது முலீட்டின் விபரம், முதலீட்டாளரின், விபரம் அடங்கிய அறிக்கை – Statement of Account ( SOA)  என படும். இதை பெற Single Folio Account Statement https://www.camsonline.com/InvestorServices/COL_ISFolioAccountStatement.aspx https://www.karvymfs.com/karvy/Investorservices/PortfoilioDetails/InvTrackAcctDet.aspx 

இதில் நமது பெயர், விலாசம், பான் நம்பர், வங்கி கண்க்கு விபரம், கைபேசி எண், போன்ற பல்வேறு தகவல்கள் இருக்கும், இதை வருடம், ஒரு முறை ஏடுத்து நமது தகவல்களை சரிபாரத்து, மாறுதல் தேவையெனில், அதை செளய்வது உத்தம்ம். 

5. வருமான வரி கணக்கு சமர்பிக்க, லாப நஷ்ட விபரம் தேவை, இதை இந்த தளங்களிலிருது பெறலாம். Consolidated Realised Gain Statement https://www.camsonline.com/InvestorServices/COL_ISGainStmt.aspx https://www.karvymfs.com/karvy/Investorservices/General/Invemailcapitalgains.aspx 

இந்த தகவல், மற்றும் டிவிடணட், விபரத்தை, உங்களது கணக்காளரிடம் கொடுத்துவிட்டால், வருமானவரி பதிவு எளிதாக இருக்கும்

6. பிராங்களின்  (Franklin Templeton) நிறுவனத்தில் இருந்து இதுமாதிரியான தகவல்கள் பெற https://online.franklintempletonindia.com/aspx_app/Generalaccess/Mailbacks/InvNotification.aspx

7. சுந்தரம்  (Sundaram) நிறுவனத்தில் இருந்து இதுமாதிரியான தகவல்கள் பெற https://www.sundarambnpparibasfs.in/web/service/cas/

இதுபோன்று இன்னமும் நிறைய தகவல்கள், இந்த தளங்களில் இருந்து பெற முடியும். எளிமை கருதி இத்துடன் முடிக்கின்றேன் 

தமிழும் இணையமும் (Tamil vs Internet)

தமிழின் நல்ல வருமானம் குறைந்த ரிஸ்கில்

எனது புத்தகத்தை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்

புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்ய



காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டு தமிழ் கருத்தரங்கத்தில் பங்கு பெற்று, "இணையமும் தமிழும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வாசித்தேன். அனைவரிடத்திலும்  அக்கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது. விருப்பமுள்ளவர்கள் அக்கட்டுரையை இங்கே வாசிக்கலாம்...

முட்டை முதலா, இல்லை கோழி முதலா? முடிவில்லாத தர்க்கம், தரணி  இருக்கும் வரை தங்கும் தர்க்கம் தான். இது போல் தான் தமிழ் முதலா இல்லை சமஸ்கிருதம் எனப்படும் வட மொழி முதலா? தொடரும் தர்க்கம் தான். அவ்வப்போது ஆங்காங்கே செய்தித்தாளில் பதிப்பிக்கப்படும் தர்க்கம் தான். இதில் "கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு" முந்தைய மொழியான தமிழ்  மொழி பற்றி சற்று பார்ப்போம்.

கடந்த காலம் :

தமிழ் மொழி இந்தியாவில் சுமார் 6.8 கோடி மக்களால் பேசப்படும் மொழி. இந்திய மக்கள் தொகையில் இது சுமார் 6.1% ஆகும். தரணியில் பல நாடுகளில் பேசப்படும் மொழி. ஆக சுமார் 7.6 கோடி மக்களால் பேசப்பட்டு வருகின்ற மொழி. அதே சமயம் அடுத்த மொழியான வட மொழியை பார்க்கும் போது அது குறிப்பிட்ட பகுதிகளில் பேசப்படும் மொழியாக இல்லை. மேலும் சமயம் சார்ந்த மொழியாக உள்ளது. சிலர் மறுக்கலாம். இது அழிந்து வரும் மொழியாக கருதப்படுகின்றது. உயிர்ப்பிக்க சில முயற்சிகள் எடுக்கப்படுவதாக நாம் அறிகின்றோம். சமீபத்திய கீழடி அகழ்வராய்சியை பற்றி தெரிந்து கொள்வோம். முதலில் தெரிந்தது, பழைய தமிழில் கூறப்படும் முதல் சங்கம் தோன்றிய மதுரையாக இருக்கலாம் என்று. மற்றும் அங்கு சமயம் சார்ந்த பொருட்கள் இல்லை. எனவே தமிழை எடுத்துக்கொண்டால் தெய்வ திருமுறை திருக்குறளில் இருந்து அறிந்து கொள்ளலாம். தமிழ் சமயம் சாரந்த மொழி இல்லை.  சீறா புராணமும் , சிலப்பதிகாரமும் , நாலாயிர திவ்ய பிரபந்தமும் இருக்கும் மொழி தான் தமிழ்.
கீழடியில் தமிழ் இருந்ததா என்று மேற்கொண்டு ஆராய்ந்தால் திரும்பவும் கூறுகின்றேன் மேற்கொண்டு ஆராய்ந்தால் தமிழின் தொண்மை பற்றி தெளிவு கிடைக்கும். போகட்டும், அரசு விருப்பம் போல் நடக்கட்டும். இது கடந்த கால அகழ்வாய்வு. கடந்த காலம் தெளிவாக தெரியவில்லை. வருங்காலமாவது எப்படி இருக்கும் என்று ஆருடம் செய்வோமா. இதுவே இந்த கட்டுரையின் தலையாய நோக்கம்.

நிகழ்காலம் :தொழில்நுட்ப வளர்ச்சியும் தமிழும்

தகவல் தொழில்நுட்பம் என்பது, ஆங்கிலத்தில் சொல்வார்களே “speed of thought” என்பது  போல, வெகு வேகமாக நமது வழக்கில் "அசுர" வேகமாக வளர்ந்து வருகின்றது. யாம் அறிந்த வரையில் 1990 வா கில் புழக்கத்திற்கு வந்த கணினியில் ஆங்கிலம் உபயோகப்படுத்தப்பட்டது. அன்றுலிருந்து இன்று வரை ஆழி சூழ்ந்த பேரலை எனும் சுனாமி அனைத்தையும் அடித்து செல்வது போல ஆங்கிலம் சூழ்ந்த கணினி தமிழை அடித்து செல்வதாக ஒரு மாயை அல்லது உணர்வு நம்மிடம் உள்ளது. சரி சுனாமியில் தமிழ் மட்டுமா அடித்து செல்லபட்டது? வட மொழி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்ன ஆனது என்ற கேள்வி எழலாம். சுனாமி ஒன்றை மட்டும் தேடி அழிப்பதில்லை. அகப்பட்டதெல்லாம் அழிவே. அது போன்ற உணர்வே தற்போது நிலவி வருகின்றது. இதில் மிகவும் பேசப்படாத, அறியப்படாத உண்மை ஒன்று புதைந்து கிடக்கின்றது. தகவல் தொழிநுட்பம் அறிந்தவர்கள், அறிந்தது தான். கணினிக்கு ஆங்கிலமும் தெரியாது தமிழும் தெரியாது, இந்தியாவில் பேசப்படும் இன்ன பிற மொழிகளும் தெரியாது. நாம் முன்னர் கட்டுரையின் முகப்பில் சொன்ன முட்டையும் அதாவது பூஞ்சியம் (0) மற்றும் ஒன்று (1) மட்டுமே கணினி அறியும். பின்னர் ஆங்கிலம் எதற்கு தேவை? மனிதனுக்கும் கணினிக்கும் இடையே மனிதன் புரிந்து கொள்ள ஒரு மொழி அவசியம் ஆகிறது.  இந்த மொழி ஆங்கிலமாக இப்போது இருந்து வருகிறது. ஆனால் மாற்றத்திற்கான உதயம் தூரத்தில் தெரிகின்றது. தற்போது சீனாவில் நன்கு உதித்தே விட்டது. கணினிக்கும் மனிதனுக்கும் இடையே ஆங்கிலம் இல்லாமல் மற்ற இந்திய மொழிகள் உபயோகத்தில் வர துவங்கி விட்டது.

இணையம்:  

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, அதாவது 2000 முதல் பரவலாக பயன்படுத்தப்படும் இணையம் பற்றி அறியாதவர்கள் அபூர்வமே. இருந்தாலும்  முழுமை கருதி, இணையம் என்பது பல்வேறு கணினிகள்  இணைந்து நமக்கு வேண்டிய உபயோகமான தகவல்களை மிக மிக குறுகிய வினாடிகளில் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் நமது காட்சித்திரையில் காண்பிக்க உதவும் அலாவுதீனின் அற்புத விளக்கு.  கணினி தந்த வரப்பிரசாதமான இந்த இணையத்தில் தமிழ் ஆங்காங்கே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.

அடுத்த கேள்வி இந்த இணையத்தை இயக்க ஆங்கிலம் தேவையா? பதில் என்னவோ இல்லை தான். ஆனால் ஆங்கிலம் பரவலாக பயன் படுத்தப்படுகிறது. தற்போதுள்ள மொத்த இணைய தளங்களில் ஆங்கில இணைய தளங்கள் அதிகம் உள்ளது. மீதம் உள்ளவை மற்ற மொழி தளங்கள். சிலருக்கு ஆச்சர்யம் தான். ஆங்கிலம் இல்லாமல் இணைய தளம் உள்ளதா என்று! சீன மொழியில் தளங்கள் மிக அதிகம். ஆக தமிழுக்கும் இணையத்திற்கும் இடையே ஆங்கிலம் ஒரு தடை அல்ல. தற்போது தமிழிலும் இணைய தளங்கள் உள்ளன. இதற்கு வலைப்பூ என்ற சொல்லாடல்  உபயோகப்படுத்தப்படுகின்றது. நானும் தமிழில் ஒரு வலைப்பூ பதிந்துள்ளேன். அதை இங்கு காணலாம் https://radhaconsultancy.blogspot.com/ 

தற்போது தமிழில் தளங்கள் இருந்தாலும் மக்கள் விரும்பி அந்த தளங்களை உபயோகப்படுத்திகிறார்களா என்றால், அது தற்போது அதிகம் இல்லை. குறைவு தான். இதில் ஆறுதலான விஷயம், தமிழ் தளங்கள் புழக்கத்தில் உள்ளன என்பது மட்டுமே. தமிழ் தளங்களின் குறைவான எண்ணிக்கைக்கு காரணம்  என்ன? முழு முதற் காரணம், தற்போது இணையம் பெரும்பாலும் தமிழும் ஆங்கிலமும் தெரிந்த யுவன் யுவதிகளால் இயக்கப்படுகிறது. இவர்கள் இயல்பாகவே ஆங்கிலம் தெரிந்த, இயக்க எளிதான, ஆங்கில தளங்களை நாடுகிறார்கள். உதராணமாக 75 மில்லியன் தமிழ் தெரிந்தவர்களில், 40 மில்லியன் பேர்கள் மட்டுமே தமிழை, உபயோகபடுத்கிறார்கள்.



இது இப்படியே இருக்குமா? தமிழ் மெல்ல இனி சாகுமா? தமிழும் காலத்திற்கேற்ப உலா வரும் என்று நம்புவோமாக. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்பு என கொள்ள வேண்டாம். இதற்கும் ஒரு பின்புலம் உள்ளது. வாருங்கள் அதையும் பார்த்துவிடுவோம்.

வருங்காலம்:

தற்போது கைபேசி இல்லாதவர்கள் கற்காலத்தவர் என்றாகி விட்டது. கைபேசியிலும் நளின , சூட்டிகை கைபேசி வைத்திருப்பது கெளரவம் என்றாகிவிட்டது. இதிலும் அவர்களுக்கு ஒரு சிக்கல். கௌரவத்திற்காக கைபேசி வைத்துக்கொண்டு ஆங்கிலம் தெரியாமல் அந்த கைபேசியின் முழு உபயோகத்தையும் அனுபவிக்க முடியாமல் "பேருக்கு" வைத்திருப்பது கடினமாக உள்ளது. இவர்கள் மெதுவாக தங்கள் தாய் மொழி சார்ந்த செயலிகள் மற்றும் இணைய தளங்களை நாடுகிறார்கள். கைபேசி மூலம் இணையத்தை நாடுவதும் மிக அதிகமாக உள்ளது. வரும் காலங்களில் கைபேசி எண்ணிக்கை அதிகரிக்கும் போது, இந்த தாய் மொழி, தமிழ் மொழி சார்ந்த தகவல் பக்கங்கள் நிறைய தேவை என்பது வெட்ட வெளிச்சம். வருங்காலத்தில் தமிழ் செயலி மற்றும் தமிழ் தகவல் பக்கங்களை நாடுபவர்கள் மற்ற மொழி பக்கங்களை நாடுபவர்களை விட அதிகமாக இருப்பார்கள் என்று சமீபத்திய கூகில் ( Google) மற்றும் கே.பி.எம்.ஜி. ( KPMG) நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கு தரப்பட்டுள்ள படத்தின் மூலம் இது தெளிவாக தெரிகின்றது. ஆகவே வருங்காலங்களில் ஆங்கிலம் இல்லாமல் பிராந்திய வட்டார மொழிகளில் , தமிழில் இணையம் உபயோகிக்கப்படும் என்பது தெள்ள தெளிவு. தமிழும் பிழைத்து இருக்கும்.



தமிழும், இணையமும், வளர வழி வகைகள்:

தமிழும், இணையமும், வளர என்ன செய்யலாம்? தமிழில் நிறைய இணைய தளங்கள் வடிவமைக்கப்படவேண்டும். தமிழ் செயலிகள், உருவாக்கபடவேண்டும். “Voice To Text”   என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள், இதை தமிழில் அறிமுகபடித்தினால், தமிழில் அதிக இணைய தளங்கள் வருவதற்க்கும், கைபேசியில் அதிக தமிழ் பயன்பாட்டிற்க்கும், வழி வகுக்கும்.

ஆங்கிலத்தில் 26 எழுத்துகளாக இருப்பது, நமது தமிழில் 248 எழுத்துகளாக இருப்பதை நாம் சிறப்பு என்று கொண்டாடினாலும், தட்டச்சு பலகை, எழுத்து ஊள்ளீட்டு கருவி என்று வரும்போது, இந்த எழுத்து ஊள்ளீட்டு செயல் மிக மிக கடினமான செயலாகிவிடுகின்றது. கணனியிலும், இணையத்திலும், தமிழ் வளர இது ஒரு மிக பெரிய வேக தடுப்பாக உள்ளது. நாம் முன்னர் பார்த படி, நாம் பேச பேச, தமிழ் எழுத்துகள், காட்சி திரையில் தோன்றினால், மிக ஏதுவாக இருக்கும்.  இதனால், எழுத்து ஊள்ளீட்டு எளிதாகி , தமிழில் அதிக இணைய தளங்கள் வருவதற்க்கும் வழி வகுக்கும். இதன் மூலம் தற்பொழுது  குறைவாக இருக்கும் தாய்க்கும், பிள்ளைகளுக்குமான, தமிழ் செய்தி பரிமாற்றம், குறுஞ் செய்திகளாக பரிமளிக்கலாம்.

இந்த தொழில் நுட்ப வளர்சியால், போக போக  சமூக தொடர்பு பக்கங்கள், மற்றும் Meme என்று, எங்கெங்கு நோக்கினும், தமிழாகும் வாய்புகள், அதிகம் என்றே தோன்றுகிறது. தற்கால தடைபட்ட தமிழ் வளர்சிக்கு, தட்டச்சு பலகை மட்டுமே காரணம் என்று, முடிவு சொல்லவிரும்பவில்லை.  இணையமும், கணனியும் சேராத காரணங்கள் பல உள்ளன. 

கலைசொற்கள், அறிவியல் சொற்கள், பயன்பாடு தமிழில் குறைவு. பயன்படுத்தபட்டாலும், ஒழுங்குமுறை  வரைமுறை குறைவு. உதராணமாக மேம்படுத்தபட்ட கைபேசிக்கு ஏற்ற சொல், ஒரே மாதரி பயன் படுத்தபடவில்லை. நளின, சூட்டிகை கைபேசி, என்று அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி ஆங்காங்கே, உபயோகபடுத்தகிறார்கள். இது ஒரு காரணமோ என்று நினைக்க தோன்றுகிறது. மற்றுமொறு காரணம், தற்போதய இளம் தாய்மார்கள், நமக்கு மிகவும் பரிச்சியம் இல்லாத ஆங்கிலத்தில், நமது பிள்ளைகள் படித்தால், ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்கலாம், என்ற எண்ணங்கள் உள்ளவரக்களாக இருகிறார்கள். இப்படி சமுகத்தில் ஆழபதிந்த எண்ணங்கள், இணையத்திலும் கணனி, மற்றும் கைபேசியில், தமிழ் குறைவாக இருக்க காரணீகள் ஆகிவிடுகின்றது.

தொலைநோக்கு பார்வை:

முடிவாக பல ஆயிரம் ஆண்டுகள், பயனித்து வந்த தமிழ்,  பத்தாண்டில் அழியபோவதில்லை. ஆனால் மாற்றி யோசிக்க வேண்டிய கட்டமும், இதுதானே. AI  எனப்படும் Artificial Intelligence, செயற்கை அறிவு, மற்றும் – Brain reading, போன்ற அதி நவீன தொழில் நுட்ப வளர்சியில்,  எழுத்துகள் இல்லாமல், சொல் இல்லாமல், பேச்சு இல்லாமல்,  ஒருவரது எண்ணங்கள், மற்றவருக்கு தொழில் நுட்ப  மூலமாக மாற்றபடும் போது , மொழி இருக்குமா? அப்படியே, எண்ணங்களுக்கு மொழி தேவைப்பட்டால், அது தமிழாக இருக்குமா? காலமே, பதில் சொல்ல வேண்டும்!

மேற்கொண்டு  படிக்க விரும்பவர்கள், செல்ல வேண்டிய தளம்

--------------------------------------------------------------------------

ஓய்வூதிய திட்டமிடுகிறீர்களா? நாணயம் விகடன் கேள்வி-பதில் பகுதியில் ஓய்வூதிய நிதியை புத்திசாலித்தனமாக முதலிடுவதற்கான வழிகாட்டுதல்களை எனது பதில்  அளிக்கிறது.  

குறைந்த அபாய முதலீடுகளிலிருந்து கலப்பு மியூச்சுவல் பண்டுகள் வரை, ஓய்வுக்குப் பின் நிரந்தர வருமானம் பெறும் முதலீட்டு தந்திரோபாயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.



நமது முதலீட்டுத் திறனை மேம்படுத்த, பெஞ்சாமின் கிராஹாம் அவர்களின் சிந்தனைகளைப் பின்பற்றுவது அவசியம். அவரது நூல்களிலிருந்து எங்களுடைய முக்கிய பகிர்வுகளைப் பார்க்க, முகநூல் இணைப்பைக் கிளிக் செய்யவும்

ஓய்வூதிய திட்டமிடலில் வழிகாட்டுதல் தேவைப்படும் உங்கள் தொடர்புகளுடன் இதைப் பகிருங்கள்.


Wednesday, 4 October 2017

TitBit - 19

TITBIT - 19 - Be Careful about tips on investments

Date: 04-10-2017

Please go through the image given below - Understand it!!

Timely warning by Securities and Exchange Board of India (SEBI)  to Public.

The key take away is,

Be realistic in returns and do not get carried away in luring advertisements, sms and posts.



1) Article source : SEBI warning ad published in Dinamalar
2) Previous tidbits : https://radhaconsultancy.blogspot.in/2017/04/asset-allocation.html


TitBit - 18

TITBIT - 18 - HOLD TIGHT

Date: 28-09-2017

Please go through the image given below - Understand it - do not do anything in knee jerk reaction!!

The key take away is,

In the last 10 days markets have fallen by around 4% ( Sensex 32423 to 31159 )

How long it will be subdued?? It is difficult to predict.. Hope for the best! Continue SIP - it will be good to buy more units for the given value of sip when market go down




1) Article source : L& T mutual fund
2) Previous tidbits : https://radhaconsultancy.blogspot.in/2017/04/asset-allocation.html