Tuesday, 13 March 2018

FAQ

கேள்வியும் நானே பதிலும் நானே


சில வருடங்களாக, நான் சந்திக்கும் முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அதற்கு சரியான பதில்களையும் தொகுத்து முதலீட்டாளர்களின் நன்மை கருதி இங்கு தந்துள்ளேன்.



சந்தேகங்களுக்கு தீர்வு காண கேள்விகளை கிளிக் செய்யுங்கள் .





x----------------------------------------x-----------------------------x----------------------------------------------x

கேள்வி-1: என்னிடம் சுமார் ஏழு மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் உள்ளது, இத்துடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டுமா? அதன் வழி வகைகள் என்ன? ஏழு மியூச்சுவல் பண்ட் திட்டங்களுடனும் ஆதாரை  தனித்தனியாக இணைக்க வேண்டுமா? 



கேள்வி-2: மியூச்சுவல் பண்ட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நமக்கு வரி குறைய வாறய்புகள் உள்ளது என்று கூறுகிறார்களே? இது உண்மையா?

பதில்-2: ஆம் இது உண்மை தான். வங்கிகளில் நாம் பணத்தை வைப்பு நிதியில் வைக்கும்போது அதற்கு வருகின்ற வரியை, டீடிஎஸ் என்ற முறையில் பிடித்துக் கொள்கிறார்கள். ஆனால் நாம் மியூட்சுவல் பன்ட் கடன் பத்திரங்கங்களில் முதலீடு செய்யும்போது இந்த டீடிஎஸ் முறை கிடையாது. நாம் முதலீடு செய்த தொகையை மூன்று வருடங்களுக்கு பிறகு திரும்பப் பெறும்போது நமக்கு இன்டெக்ஸ் ரேஷன் செய்யும் முறையும் உள்ளது. இதன் காரணங்களாக நமது வரி குறைவாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.


கேள்வி-3: 2018-ல் மியூட்சுவல் ஃபண்டில் எங்கு முதலீடு செய்ய வேண்டும்?

பதில்-3: இதற்கு பதிலை பார்பதற்க்கு முன் ஒன்றை நன்கு நினைவில் கொள்ள வேண்டும். 2017-ல் நமக்குக் கிடைத்தது போல் ஈக்விட்டி திட்டங்களில் இருந்து லாபம் 25% மேல் இந்த வருடமும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. கடன் திட்டங்களிலும் இரண்டு இலக்க லாப வருமான விதங்களை பெறுவது சற்று கடினம் என்றே தோன்றுகிறது. மூன்றாவதாக தற்போதைய மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் விலை மிக அதிகமாக உள்ளதாக தோன்றுகிறது. இவற்றை வைத்து பார்க்கும் போது நமது வருமான எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். ஒரே தடவையில் திட்டங்களில் முதலீடு செய்யாமல் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். கடன் திட்டங்களில் ஷார்ட் டேர்ம் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.


கேள்வி-4: மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் எவ்வளவு வருடம் முதலீடு செய்ய வேண்டும்?

பதில்-4: இது நிறைய பேர் அடிக்கடி கேட்கும் கேள்வி. நாம் வங்கியில் வைப்பு நிதியிலும் காப்பீட்டில் குறிப்பிட்ட காலம் கட்டாயம் பணத்தை முதலீடு செய்து வைத்திருந்து பழகிகிவிட்டோம். அதுபோன்று எந்த வித கட்டுப்பாடுகளும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு கிடையாது. நாம் முதலீடு செய்த தொகையை இரண்டு நாளிலும் திரும்ப எடுத்துக்கொள்ளலாம், இருபது வருடத்திற்கு பின் திரும்ப எடுத்துக் கொள்ளலாம். அது போலவே எஸ்.ஐ.பி ல் ஆறு மாதமும் கட்டலாம், அறுபது மாதமும் கட்டலாம். காலத்தின் கட்டாயம் இங்கே கிடையாது. அதுபோல் எந்தவிதமான அபராதத் தொகையும் குறைந்த காலத்திற்கு என்று பெரும்பாலும் கிடையாது. நாம் நமது குறிக் கோளுக்கு என்றபடி எஸ்.ஐ.பி ல் சேர்ந்து நீண்ட கால முதலீடு செய்வது உபயோகமாக இருக்கும். நீண்ட காலம் என்பது அவரவர்கள் தேவைகேற்ப மாறுபடும், எந்தவித கட்டாயங்களும் இங்கு இல்லை.

No comments:

Post a Comment