My article on "Impact on SIP for Goal based investments because of LTCG Tax" has been recently published in "Nanayam Vikatan". Click here to read the link directly from vikatan website. The same article is given below with more tables for better understanding..
நீண்ட கால மூலதன ஆதாய வரியால் குறிக்கோளுடன் கூடிய முதலீட்டுகளின் மாதாந்திர எஸ் ஐ பி, கூடுகின்றது.
பட்ஜெட் பார்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது. வரிகள் கூடுகிறது. படித்துதான். நீண்ட கால மூலதன ஆதாய வரி பத்து சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது. தெரியும். ஆனால் தெரியாத, நாம் படிக்காத, கண்ணுக்கு எளிதில் புலபடாத, எளிதில் புரிபடதா, பாதிப்புகள், சில உள்ளது. நாம் நமது குழந்தைகளுக்காக அவர்களது திருமணச் செலவிற்காக, அவர்களது உயர் படிப்பு செலவுக்காக, அல்லது நமது ஒய்வு கால வருமானத்திற்க்காக சிறுகச் சிறுக தேனீ போல எஸ் ஐ பி, ல் சேமித்து வரும் பணம் , படிப்பு, திருமணத்திற்க்கு, பிற்கால வருமாணத்திற்கு போதுமா? பொதுவாக நான் முன்னர் போட்ட திட்டங்களின் படி அதே அளவு பணம் குறிபிட்ட முதிர்வு தொகை நமக்கு கிடைக்குமா? சாத்திய கூறுகள் குறைவு. நிச்சயமாக ஒன்று மட்டும் சொல்ல முடியும், நாம் கூடுதலாக சற்று பணம் சேமித்தால் மட்டுமே முன்னர் குறிப்பிட்ட அதே தொகையை நாம் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். என்ன சற்று குழப்பமாக உள்ளதா, வாருங்கள் விரிவாக இதை பார்ப்போம்.
முதலில் நாம், நமது வருங்கால தேவைகளுக்காக சுமார் ஒரு கோடி ரூபாய், பதினைந்து வருட முடிவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வருகிறோம்.பெரும்பாலும் நாட்பட்ட குறிக்கோளுடன் கூடிய தேவைகளுக்கு பணம் மியூச்சுவல் பண்ட் ஈக்விட்டி திட்டங்களிலேயே முதலீடு செய்யப்படுகின்றன. எனவே சமீபத்திய பட்ஜெட்டின் படி இந்தத் திட்டங்களில் நீண்ட கால மூலதன ஆதாய வரியாக பத்து சதவிகிதம் செலுத்தப்பட வேண்டி உள்ளது. ஆகவே நமக்கு கிடைக்கும் முதிர்வு தொகையில் ஆதாய வரி செலுத்திய பின் கிடைக்கும் தொகை சற்று குறைவு. முடிவில் நமக்கு கையில் கிடைக்கும் பணம் நான் முன்னர் போட்ட திட்டத்தின்படி கிடைக்கும் தொகையைவிட நிச்சயம் குறைவாகவே இருக்கின்றது. இதை பற்றி புரிந்துகொள்ள அட்டவணை ஒன்றை பார்கவும். எனவே நாம் முதலில் திட்டமிட்ட ஒரு கோடி ரூபாய் பெற, நாம் சற்று சிரமப்பட்டு, மெனக்கெட்டு அதிகமாக சேமிக்க வேண்டியுள்ளது. மாதா மாதம் சுமார் ரூபாய் 1500 அதிகம் செலுத்தினால் மட்டுமே நமக்கு அதே அளவு முதிர்வு தொகை கிடைக்க ஏதுவாக உள்ளது கீழே குறிப்பிட்டுள்ள முதல் அட்டவணை, அடிப்படை கணக்குகளை வரி விபரத்தை கொண்டுள்ளது. நாம் எவ்வளவு கூடுதல் பணம் சேமிக்க வேண்டும் என்பதை மற்ற அட்டவணைகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இதில் நான் முக்கியமாகக் கொண்டுள்ள அனுமானங்கள், கிடைக்கும் லாப வருமானம், முதலீடு செய்யும் வருடம். மற்றும் எல்லாக் காரணிகளும் பட்ஜெட்டுக்கு முன்னும், பின்னும் ஒரே மாதிரியாக உள்ளது, வரியை தவிர என்பதாகும்.
முதல் அட்டவணை
|
|
பதினைந்து வருட முடிவில் ரூபாய் ஒரு கோடி பெற மாதா
மாதம் முதலீடு செய்ய வேண்டிய தொகை
|
|
லாப சதவிகிதம்
|
12.5%
|
குறிக்கோளை அடைய
வருடங்கள்
|
15
|
குறிக் கோளுக்கு
தேவையான தொகை
|
1,00,00,000
|
மாதாமாதம்
செலுத்தும் தொகை
|
20,930
|
தொகை செலுத்தும்
மாதங்கள்
(14*12)
|
168
|
நாம் செலுத்திய மொத்தத்
தொகை (
168*20930)
|
35,16,227
|
எஸ் ஐ பி முடிந்த 14 வருட முடிவில் இருக்கும் தொகை
|
95,47,532
|
15 வருட
முடிவில் இருக்கும் தொகை
|
1,07,40,974
|
நமக்குக் கிடைத்த
லாபத் தொகை
|
72,24,746
|
வரி விலக்கு தொகை
|
1,00,000
|
வரிக்கு உள்ளாகும்
லாபத் தொகை
|
71,24,746
|
வரி
|
7,40,974
|
15 வருட
முடிவில் இருக்கும் நிகர முதிர்வு தொகை
|
1,00,00,000
|
அட்டவணை இரண்டு இந்த வரி விதிப்பிற்கு பிறகு நாம் மாதா மாதம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை காண்பிக்கின்றன.
அட்டவணை இரண்டு
|
|||
தற்போதைய வரி விதிப்பிற்கு பின் மாதா மாதம், நமது குறிக்கோளுக்காக நாம் செலுத்த வேண்டிய தொகை - வருடங்களும் வருமான விகிதங்களும்
|
|||
10%
|
12.50%
|
15%
|
|
10 வருடங்கள்
|
54229
|
46925
|
40437
|
15 வருடங்கள்
|
26355
|
20929
|
16463
|
20 வருடங்கள்
|
14362
|
10359
|
7356
|
அட்டவணை மூன்று வரி விதிப்பதற்கு முன் நாம் மாதா மாதம் எவ்வளவு பணம் செலுத்தினால் போதும் என்று எண்ணி திட்டமிட்டோம் என்பதைக் காண்பிக்கிறது.
அட்டவணை மூன்று
|
|||
வரி விதிப்பிற்கு முன் மாதா மாதம், நமது குறிக்கோளுக்காக நாம் செலுத்த வேண்டிய தொகை - வருடங்களும் வருமான விகிதங்களும்
|
|||
10%
|
12.50%
|
15%
|
|
10 வருடங்கள்
|
51798
|
44433
|
37997
|
15 வருடங்கள்
|
24781
|
19486
|
15204
|
20 வருடங்கள்
|
13336
|
9526
|
6715
|
அட்டவணை நான்கு இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு காண்பிக்கிறது இந்த அட்டவணையில் பத்து, பதினைந்து, இருபது வருடங்கள் என்ற காலங்களில் மாதா மாதம் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் தேவை என்பதைக் காண்பிக்கிறது அதேபோல் நமக்குக் கிடைக்கும் வருமானம் 10%,(பத்து), 12.5% ( பண்டிட் புள்ளி அஞ்சு), 15% ( பதிணைத்து), பத்து என்பது குறைந்த பட்ச மாகவும் பதினைந்து என்பது அதிகபட்சமாகவும் இருக்கும் தளத்தில் நாம் சேமிக்கும் மாதா மாதம் தொகை எப்படி மாறுபடுகிறது என்பதை காண்பிக்கிறது.
அட்டவணை நான்கு
|
|||
மாதா மாதம், நமது குறிக்கோளுக்காக நாம் செலுத்த வேண்டிய கூடுதல் தொகை - வருடங்களும் வருமான விகிதங்களும்
|
|||
10%
|
12.50%
|
15%
|
|
10 வருடங்கள்
|
2431
|
2492
|
2440
|
15 வருடங்கள்
|
1574
|
1443
|
1259
|
20 வருடங்கள்
|
1026
|
833
|
641
|
நிப்டியின் வருமான லாப சதவீதத்தை பார்க்கும் போது கடந்த பத்து, பதினைந்து, இருபது, வருடங்களில் சுமார் பதினொன்று சதவிகிதம் (11%) முதல் பதினான்கு சதவிகிதம் (14%) வரை நீண்டகால முதலீட்டுக்கு கிடைத்து வந்திருக்கின்றது. எனவே சராசரி சதவிகிதமாக (12.5%) பன்னெண்டு புள்ளி ஐந்து சதவீதம் வருமானத்தை வரும் காலங்களில் கணக்கிற்கா எடுத்து கொள்வது உசிதமாக இருக்கும்
இதில் நாம் முக்கியமாகக் குறித்துக் கொள்ள வேண்டியது பத்து வருடத்தில் முதிர்வு தொகை பெற, நாம் ஒன்பது வருடங்கள் எஸ் ஐ பி, செலுத்த வேண்டும் பத்தாம் வருட முடிவில் முதிர்வு தொகை பெறலாம் என்ற நோக்கில் கணக்கிடப்பட்டுள்ளது.
என்ன முதலீட்டாளர்களே,புரிந்ததா? நடக்கும் எஸ் ஐ பி, யில் சற்று டாப் அப் செய்யுங்கள், மறந்து விட்டு விடாதீர்கள்.
No comments:
Post a Comment