Friday, 24 August 2018

நிதி நலம் பேண, உடல் நலம் பேணும் ஃபண்டுகளில் முதலீடு செய்வோமா?

My recent article on PHARMA FUNDS has been published in "Nanayam Vikatan". Click here to read the article directly from vikatan website. The same article is given below.

பார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?

சந்தை மீண்டும் உச்சத்தில்! மும்பை சென்செக்ஸ் குறியீடு முப்பத்தி ஏழாயிரத்தற்கும் மேல் (Sensex @ 37000+). முன்னர் முதலீடு செய்தவர்கள் சந்தோஷத்தின் உச்சத்தில், சந்தர்ப்பத்தை தவற விட்டவர்கள் சற்று வருத்தத்தில். எல்லாம் முடிந்து விட்டது, போய்விட்டது என்று  எவரும் எண்ண வேண்டாம். சந்தை உச்சம் என்பது நிரந்தரம் இல்லை.  எந்த நேரத்திலும் சந்தையில் லாபம் பெற வழிவகை இருந்துகொண்டே இருக்கின்றது. ஏதாவது ஒரு ரூபத்தில் சந்தர்ப்பம் நமக்கு வரும். அதுபோன்று இப்போதும் ஒரு சந்தர்ப்பம் இருப்பதாகவே பொதுவாக தோன்றுகின்றது. அதுதான் உடல்நலம் பேணும் பங்குகளும் அது சார்ந்து முதலீடு செய்யும்  ஃபண்டுகளும்.  இதை பார்மா அண்ட் ஹெல்த் கேர் பண்ட் என்று கூறுவார்கள். இப்போது இது பற்றி விரிவாக பார்ப்போமா. 

முன்னர் இந்த பார்மா மற்றும் ஹெல்த்கேர் பண்டுகள் நல்ல வருமானம் தந்து வந்தது. சமீப காலங்களில் அமெரிக்க அரசாங்கத்தின் கெடுபிடிகளால் மாத்திரை தயாரிக்கும் பார்மா பங்குகளின்  வருமான தன்மை குறைந்து, இந்த பண்டுகள் செயல்பாடு சிறப்பாக இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த நிலைமை மாறி வருகின்றது.  பி.இ. (PE) 34 என்று இருந்து வந்த பார்மா பங்குகள் தற்போது பி.இ. (PE) 25 என்றவாறு உள்ளது. எனவே பங்குகளின் விலை குறையும்போது அந்தப் பங்குகளை, அது சார்ந்த பண்டுகளை  வாங்குவது சரியான செயலாகும். தற்போது இந்த பார்மா மற்றும் ஹெல்த்கேர் வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதற்கு என்னென்ன காரணங்கள் ஏதுவாக உள்ளது என்பதை இப்போது விரிவாக பார்ப்போம்.

பார்மா மற்றும் ஹெல்த்கேர் ஃபண்டுகளில் முதலீடு காரணிகள்

காரணி 1 - இந்திய மாத்திரைகள் தயாரிப்பில் முன்னேற்றம் 

தற்போது நமது இந்திய பார்மா நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு ஏற்றவாறு தங்களது உற்பத்தி முறையை மாற்றிக் கொண்டு வந்து அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியை (US FDA)  பெற்று திரும்பவும் தமது ஏற்றுமதியை அதிகரிக்கும்  நிலைமை உண்டாகி வருகின்றது. இது ஒரு மிகப் பெரிய மாற்றம் ஆகும். எனவே இந்தப் பங்குகள் மிகவும் சிறப்பாக செயல்பட சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. அமெரிக்கச் சந்தையில் விற்கும் இந்திய மருந்துகளின் சதவிகிதம் 2010 ல்  20% ஆக இருந்தது. 2017 இது 35% ஆக ஏறி வருகின்றது. எனவே வரும் காலங்களிலும் இந்திய மருத்துவப் பொருட்கள் அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி அதிகரிக்க வாய்புகள் அதிகம்.

காரணி 2 - சந்தையின் ஏற்ற இறக்க சுழற்சி

நாம் முன்னர் கூறியபடி இந்த ஃபார்மா பங்குகளின் சந்தை குறியீடு எண் உச்சத்திலிருந்து குறைந்து கொண்டே வந்தது. தற்சமயம் குறைந்த நிலையில் உள்ளது.  இது மேல் முகமாக ஏறுவதற்க்கு ஏதுவாக உள்ளது. இந்த சந்தையின் போக்கு மாறுவதை கண்டறிந்து ஏறுமுகமாக மாறும் தொடக்கத்தில் முதலீடு செய்வதே முதலீட்டிற்க்கு ஏற்ற காலம். இந்த வகையில் மருத்துவம் மற்றும் பார்மா உடல்நலம் பேணும் பங்குகளும், அது சார்ந்த பண்டுகளும் வருங்காலங்களில் நல்ல லாபம் பெற வாய்புகள் உள்ளது. கடந்த மூன்று வருட நிப்டி பார்மா குறியீட்டு எண்ணின் வரைபடத்தை கீழே  படத்தில் காணலாம்.



காரணி 3 -  உடல் நிலை மாற்றங்கள்

இதய நோய், சர்க்கரை நோய், கேன்சர் போன்ற ஆட் கொல்லி நோய்கள நமது இந்தியர்களை அதிகமாக  தாக்கி வருகின்றது. இந்த நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் கூடிக் கொண்டே போகிறது. 2008 இல் இருந்ததை விட இப்பொழுது நான்கு மடங்கு அதிகமாக இருக்கின்றது.  முன்னர் வயதான காலத்தில் வந்த நோய்கள் இப்போது சில வருடங்கள் முன்னதாகவே தாக்குகின்றது. இளைஞர்களும், யுவதிகளும் பாதிக்கபடுகிறாற்கள்.  எனவே உடல்நலம் பேணுவதற்கும் அதற்குத் தேவையான மாத்திரைகளும் மற்றும் இது சம்பந்தமான மருத்துவர் சேவைகளுக்கும் தேவை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. 

காரணி 4 - மருத்துவ சேவைகள் அதிகரிப்பு
  • தற்சமயம் தனிநபர் வருமானம் அதிகரிப்பதாலும் சிறுசிறு வியாதிகளுக்கும் மருத்துவச் சேவையை நாடுபவர்கள் அதிகம்.
  • தற்சமயம் இந்தியாவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 6%, 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் 28%. இதனால் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி வயதானவர்களாக இருக்கிறார்கள். வயதானவர்களுக்கு மருத்துவச் சேவை அதிகம்தானே. 
  • அயல் நாடுகளிலிருந்து மருத்துவ தேவைகளுக்காக இந்தியா வருபவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.
  • மருத்துவ செலவின் பணவீக்கம், சாதாரண  பணவீக்கத்தை விட அதிகமாக இருக்கின்றது எனவே மருத்துவ சேவைக்கு நாம் செலவழிக்கும் பணம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

காரணி 5 - இன்சூரன்ஸ்'ம் மருத்துவம் (மருத்துவ காப்பீடுகள் - Medical Insurance)

நாம் ஆயுட்கால காப்பீடு அல்லது லைஃப் இன்சூரன்ஸ் எடுத்து பழக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் வாழும் ஒவ்வொருவரும் இன்சூரன்ஸ் வைத்திருக்கிறோம். அதே சமயம் நாம் ஒவ்வொருவரும் உடல்நலம் பேணும் காப்பீடுகள் எடுத்தது இல்லை. உடல் நலம் பேண ஹெல்த் இன்சூரன்ஸ் மிகவும் முக்கியம் என்ற கருத்து மக்களுக்கு புரிந்து வருகின்றது. மேலும் தமிழ்நாட்டில் அரசாங்கமே மருத்துவ காப்பீடுகள் வழங்கி வருகின்றது. இதுபோன்று இந்திய அளவிலான மருத்துவ காப்பீடு  பேசப்பட்டு வருகின்றது. எனவே இந்தத் இன்சூரன்ஸ் துறை வளர்வதால் மருத்துவச் சேவைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

முடிவாக….

இது போன்ற மருத்துவம் சார்ந்த பண்டுகள் தற்சமயம் எஸ்.பி.ஐ ( SBI), ரிலையன்ஸ் ( Reliance), டாட்டா ( Tata)  மற்றும் யூ.டி.ஐ  (UTI) நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. வருங்காலத்தில் நல்ல லாபம் வரும் என்ற நோக்கால் தற்சமயம் ஐ.சி.ஐ.சி.ஐ  (ICICI) மற்றும் மிரே ( Mirae)  நிறுவனங்கள் புதிதாக வழங்கி வருகின்றது. தற்போது இருக்கும் பண்டுகளின் ஒன்று அல்லது மூன்று வருட லாபம் பெரிதாக தரவில்லை. முன்னர் கூறியபடி இதில் லாபம் பெறுவதற்கு வாய்புகள் மேற்கூறிய காரணங்களால் இருக்கிறது என்று நம்புவதால் இந்த பண்டிகளில்  எஸ்.ஐ.பி (SIP) முறையில்  முதலீடு செய்யலாம். ஒன்று மட்டும் முதலீட்டாளர்கள் நன்கு நினைவில் கொள்ள வேண்டும், லாபம் மற்றும் ரிஸ்க் வரைபடத்தில் (Risk vs Return chart) ‘லிக்வுட் பண்டுகள்’ குறைந்த லாபம், குறைந்த ரிஸ்க். அதேசமயம் ‘மருத்துவ பண்டுகள்’ அதிக லாபம் அதிக ரிஸ்க். எனவே புதிதாக முதலீடு செய்பவர்கள் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய கூடாது. ரிஸ்க் பற்றி புரிந்தவர்கள், பண்டுகளில் அனுபவம் உள்ளவர்கள், இது போண்ற மருத்துவ பண்டுகளில் முதலீடு செய்து லாபம் பெறலாம். மொத்த முதலீட்டில் 10% இந்த செக்டார் பண்டுகளில் ( Sector funds)  முதலீடு செய்யலாம்.

Details of Pharma and Health care funds - Returns in %
Mutual Fund Scheme
AUM
1yr
2yr
3yr
5yr
Reliance Pharma Fund (G) 
1,695.82
9
1.1
1.6
14.8
Tata India Pharma & HealthCare - RP (G) 
113.52
-2.2
-5.8


UTI Healthcare Fund (G) 
362.92
-2.3
-4.4
-3.5
9.9
SBI Healthcare Opportunities (G)
828.41
-10.6
-10.6
-6.6
11.3
ICICI PH&D (P.H.D) Fund - RP (G)
New




Mirae Asset HF - Regular (G)
New




CATEGORY AVERAGE

-1.9
-3.5
-1.7 
5.9



Monday, 20 August 2018

TitBit - 33

TITBIT - 33 - Extension of Income Tax Filing return date to 31st August 2018

Date: 20-08-2018

Government has extended the last date for filing Income tax return for individuals from 31st July to 31st August.

Reach out to me for filing income tax returns.


Read more:

Source - TOI dated 27-07-2018 https://timesofindia.indiatimes.com/business/india-business/deadline-to-file-itr-extended-for-certain-categories/articleshow/65151162.cms




Thursday, 16 August 2018

Sky-high Stock Market! What should investors do?

Markets are on fire in the uncharted territory, it continues to remain high. It is hard to anticipate when it is going to reach the saturation point! At the same time, the question on everyone’s mind - Should we just watch the market go sky-high without participating? Is this a good time to enter into the market? Clearly, it’s a debatable question! Market never stops surprising, it provides opportunity to investors in all sorts of time in some way or the other. It paves way for knowledgeable investors and provides various entry points. One such entry point for investment is through Equity Savings Fund (ESF) which is best suited for the current senario. So, what is ESF? What is the speciality of ESF? Let’s find out.





Hybrid fund

ESF is a Hybrid fund. Hybrid fund is an investment fund that is characterized by diversification among two or more asset classes. These funds typically invest in a mix of stocks and bonds.

Different type of hybrid funds:
  • Conservative Hybrid
  • Equity Savings Fund
  • Dynamic asset allocation
  • Aggressive Hybrid

 Conservative hybrid is a low risk, low return product which is not tax efficient Aggressive hybrid will invest more in equity (65% to 80%). It is high risk but at the same time, it is highly tax efficient. Naturally investors look for low risk, high return products which are also tax efficient. In that case don’t search any further, the answer is Equity Savings Fund!

Equity Savings Fund (ESF)


What is the specialty of Hybrid ESF? Here, the investment is made in three categories. First category is unhedged equity 35%, second one is arbitrage opportunity 32% and third one is Debt 33%. Out of these 3 categories, the energy equity and debt equity adds to 67% which is higher than the requirement of equity classification (60%). In these funds, equity and debt portions are comparatively low risk categories.






Return potential of ESF

We can expect moderate returns from ESF. See the table below, they give return in the range of 8 – 12%. When markets are better positioned, our return will be better, when the markets are in downhill, ESF returns will be low, but the risk and volatility will be lower. In the following table, best case is when equity return is 20% and debt return is 9% , investor in esf will get 12.8% return, on the other hand when market falls at -10% and debt also doing bad and gives 7%, esf investor will get around 1% return




Key features of ESF:
  • ·         Low risk
  • ·         Tax efficient
  • ·         Potential for Growth


Increase in ESF Investment

In the last 3 yearsfrom 2015 to 2018 these types of funds have been very popular. Those who want slightly better return with risk and to overcome the mortality expected in near term, can consider investing in UTI Equity Savings Fund.


This fund is best suited for those who are planning to move their Bank Deposits to Mutual Funds. It is also suitable for first time investors because there is low risk and low volatility. In the long run, these funds can generate better returns which are tax efficient.


Existing ESF funds in the market


New Equity Savings fund in the Market ( NFO)

Currently UTI is offering Equity Savings Fund Investment which is open from August 10th to August 24th. To make an investment in this fund, Mailto: radhaconsultancy2014@gmail.com

Sunday, 12 August 2018

சந்தையில் ஏற்றம்! இப்போது என் செய்வது?

My recent article on EQUITY SAVINGS FUND has been published in "Nanayam Vikatan". Click here to read the article directly from vikatan website. The same article is given below.

பங்கு சார்ந்த முதலீட்டு திட்டம் - ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் (Equity savings fund)

சந்தை ஏற்றத்தில் இருக்கிறது, இது எங்கு போய் முடியும் என்று யாமறியோம். பக்கத்தில் இருக்கும் படத்தைப் பார்க்க இதில் பி இ (PE) ஏறி கொண்டே உள்ளது. பங்குகள் விலை அதிகம் என்பதைக் காண்பிக்கிறது. இந்த தருணம் புதிய முதலீட்டுக்கு உகந்த தருணமா? முற்றிலும் ஆம் என்று கூற முடியவில்லை. அதுவும் ஈக்விட்டி (Equity) அல்லது பங்கு சார்ந்த முதலீட்டில் ஒரே முறையில் முதலீடு செய்வது நல்லதல்ல என்பது பலரது கருத்து. பின் இந்த காலகட்டத்தில் எவ்வாறு முதலீடு செய்வது? நாம் முன்னர் கூறியபடி எல்லாத் தருணங்களிலும் முதலீடு செய்ய சந்தையில் திட்டங்கள் பல இருக்கு. சந்தையும் பல வகைகளில் வழிவகை செய்கிறது. அதுபோல் இந்த காலக்கட்டத்திலும், முதலீடு செய்ய ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் உள்ளது. அது என்ன? அது தான் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் எனப்படும் பங்கும் கடனும் கலந்த கலப்பின திட்டம். 



கலப்பின திட்டம்

இந்த கலப்பின  வகைகளில் நான்கு வகை உள்ளது:
  1. கன்சர்வேடிவ் ( Conservative Hybrid )
  2. ஈக்விட்டி சேவிங்ஸ் ( Equity Savings Fund)
  3. டைனமிக் அசெட் அலகேஷன் ( Dynamic asset allocation)
  4. அக்கிரசிவ் ( Aggressive Hybrid)
இதில் முதல் வகையான கன்சர்வேடிவ் (Conservative Hybrid) ல், ரிஸ்க் குறைவாக இருந்தாலும் லாபமும் குறைவாக இருக்கும்.  இதில் வரும் லாபத்திற்கு வரி சற்று அதிகமாக இருக்கும். வரி என்ற நோக்கில் பார்க்கும்போது  அவ்வளவு பயன் அளிப்பதில்லை. அதே நேரத்தில் கடைசியாக உள்ள அக்கிரசிவ் ( Aggressive Hybrid) திட்டம் பங்கு மற்றும் பங்கு சார்ந்த திட்டமாக கருதப்படுவதால், வரி குறைவு. அதே சமயத்தில் இதில் பங்கு அதிகமாக உள்ளது. இதனால் ரிஸ்க் அதிகமாகிறது. எனவே எதை தேர்ந்தெடுப்பது? லாபம் அதிகமாக இருக்க வேண்டும், ரிஸ்க் மற்றும் வரி குறைவாக இருக்குமாறு பார்த்தால் அதற்கு நம் கண்முன் முதலில் வருவது ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டமே!

ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டம்



இதுவும் ஒரு கலப்பின  திட்டமே. இந்த திட்டங்களில் மூன்று வகையான முதலீட்டு முறையில்  முதலீடு  செய்யப்படுகின்றது.  முதல் வகையாக நேரடியாக பங்குகளில் (Equity)  சுமார் 35%, கடன் (debt) பத்திரங்களில் 33%, மீதம் டெரிவேட்டிவ் ( Derivative arbitrage)  என்ற வகையில் 32%, ஆக 100% முதலீடு  செய்யப்படுகின்றது. 


3 X 33 சதவிகித முறையில் இது முடிவு செய்யப்படுகிறது. இதில் மூன்றல் ஒரு பகுதி, பங்குகளில்  முதலீடு செய்வதால், சற்று லாபம் கூட வர வாய்புள்ளது.  அதே சமயம் டெரிவேட்டிவ்ஸ் முதலீடு பங்குகள் முதலீடு  என்ற வகையில் வருவதால்  இந்த திட்டங்கள் வரி பார்வையில் பங்கு திட்டமாக பார்க்கபடுவதால் வரி குறைவு. ஆக இதில் வரும் லாபத்திற்கு வரும் வரி குறைவாக உள்ளது. 

டெரிவேட்டிவ் ஆர்பிட்ரேஸ்

இரண்டு சந்தைகளில், வரத்தகமாகும் பங்குகளின் விலை சற்று கூடி, குறைந்து இருக்கும்.  இந்த இரு சந்தைகளில் விற்கப்படும் பங்குகளில் எதிர்மறையான முதலீடு செய்யப்படும் போது அதாவது ஒன்றில் வாங்குவது மற்றதில் விற்பது.  இதுபோன்ற சந்தை பரிவர்த்தனையில் லாப வாய்ப்புகள் நடைமுறையில் உள்ளது. அந்த நடைமுறையை பயன்படுத்துவது டெரிவேட்டிவ் ஆர்பிட்ரேஸ் என்பது ஆகும். எதிர்மறையான முதலீடு செய்வதால் ரிஸ்க் மிக குறைவு. முதலீடு பங்குகளை சாரந்தே இருப்பதால் இது பங்கு முதலீடாக கொள்ளபடும். பங்கில் முதலீடு, ஆனால் பங்கிற்கான ரிஸ்க் குறைவு என்பதே இதன் சிறபம்சம்.


லாப விகிதங்கள் 

சராசரியாக 10% அருகில் சற்று கூடுதலாகவும் குறைவாகவும் லாபம் கிடைக்க ஏதுவாக உள்ளது. அருகில் இருக்கும் அட்டணை பார்க்கவும். லாபம்  12% மேலும் கிடைக்க வாய்ப்பு இருப்பது தெரிகிறது. லாபம் குறைவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது.  இது வங்கி வைப்பு நிதியில் கிடைக்கும் லாபத்தை விட கூட  கிடைப்பதற்கு வாய்யுபுள்ளதால் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.


ஆக இந்த திட்டங்களில் 
  • லாபம் கூடுதலாக இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது
  • வரி சுமை  குறைவாக இருக்கும்
  • இவற்றில் ரிஸ்க் குறைவு 




அதிக முதலீடுகள் செய்யப்படும் திட்டம்

2015 முதல் 2018 வரை, இந்த வகை திட்டங்களில் முதலீடு அதிகரித்து வருகின்றது. 2015-ல் சுமார் Rs 5000 கோடி தற்போது Rs 22126 கோடி ஆக உயர்ந்துள்ளது.  எனவே இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. 


இந்த மேற்கூறிய காரணங்களால் இந்த வகையான திட்டங்கள் வங்கி வைப்பு ( Bank fixed deposit) நிதிக்கு ஒரு மாற்றாக கருதலாம்.




நடப்பு திட்டங்கள்

நிறைய நிதி நிறுவனங்கள் இந்த ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டங்களை வழங்கி வருகின்றது . 


சந்தைக்கு வந்துள்ள புதிய ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டங்கள்

தற்போது யு.டி.ஐ  நிறுவனமும் இதுபோன்று  திட்டங்களை ஆகஸ்ட் 10 முதல் வழங்குகிறது (Aug-10 to Aug-24). பிராங்களின் இதுபோன்று  திட்டங்களை  சந்தைக்கு கொண்டு வருகின்றது ( August 3 to Aug 17).



இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு எங்களுக்கு மின்னஞ்சல்  அனுப்பவும். Mailto: https://radhaconsultancy.blogspot.com/2016/10/email-me.html


Thursday, 9 August 2018

Q & A - Swatantra - Hindu Newspaper

UTI Mutual Fund launched the largest Investor Education Initiative calledSwatantra for creating awareness about the concepts of financial planning and benefits of investing in mutual funds. 

In one of the recent Hindu edition, UTI Swantatra published several investment articles and addressed investor queries. I am glad I got the opportunity to answer a query raised by one of the investor. You can find the same here.


Tuesday, 7 August 2018

TitBit - 32

TITBIT - 32 - DMAT and Transfer of Shares

Date: 07-08-2018

News: SEBI announces compulsory dematerialization, for transfer securities in Physical form from Dec 2018.

Take away: It is better to have the shares in DMAT form. If held currently in physical forms, it is the time to convert the same into DMAT.

Reach out to me for assistance in this regard


Read more:

Source - https://www.thehindubusinessline.com/economy/deadline-to-dematerialise-physical-shares-is-dec-5/article24255939.ece#!