(CPSE – ETF – FFO 3 –
Fourth issue)
மத்திய அரசு நான்காவது முறையாக அதன் பொதுத்துறை பங்குகளை ஈ.டி.எப் மூலம் வெளியீடு செய்ய முனைகிறது. இதைப் பற்றி பார்ப்போம்.
{என்.எப்.ஓ ஒரு முறையும் ( New fund offer), எப்.எப்.ஓ (Follow on fund offer) இரண்டு முறையும் வெளியீடு செய்துள்ளது 1 NFO + 2 FFO }
முன்கதைச் சுருக்கம்
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை நேரடியாக விற்காமல், நவரத்தினா எனப்படும் பல பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை ஒரே கூடையில் வைத்து சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப் ஆக முதன்முதலில் மாரச் 2014 கொடுத்தது (என்.எப்.ஓ). இந்த சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப்-ல் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இறங்கினார்கள். இந்த வெற்றியின் காரணமாக மத்திய அரசு மீண்டும் இரண்டு முறை சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப் வெளியீடு செய்தது(எப். எப்.ஓ - 2017). தற்போது மீண்டும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களை முதலீட்டாளர்களுக்கு விற்க்கும் எண்ணத்தோடு நான்காவது முறையாக களம் இறங்கின்றது (சந்தையை சந்திக்கின்றது). இதுவரை எப்பொழுது சந்தையை சந்தித்தது எவ்வளவு தொகை திரட்டியது என்பதை அட்டவணை 1 ல் பார்கலாம்.
நான்காவது முறையாக வெளியீடு
தற்போது மத்திய அரசு நான்காவது முறையாக சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப் ஐ சந்தைப்படுத்தும் தேதி 28-11-2018 முதல் 30-11-2018 தேதி வரை. இந்த வெளியீடு ரிலையன்ஸ் ஃபண்ட் நிறுவனம் மூலமாக வெளியீடு செய்யப்படுகின்றது.
சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப் ன் சிறப்பு அம்சங்கள்
- இது ஒரு பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு. ஆனால் ஒரு வித்தியாசம்: சாதாரண பண்ட் ல் நாம் முதலீடு செய்யும் போது எண்னென்ன நிறுவனங்கள் அதில் இருக்க வேண்டும் என்று நாம் நிர்ணயிக்க முடியாது. ஆனால் இந்த சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப் திட்டத்தில் என்ன பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் உள்ளது என்று நாம் முன்னரே அறிய முடியும்.
- தற்போது இந்த சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப் ல் எண்னென்ன பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் உள்ளது என்பதை அட்டவணை 2-ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
- தற்சமயம் 11 வகையான பொதுத்துறை நிறுவன பங்குகள் அடங்கி உள்ளது.
- இந்த பொதுத்துறை நிறுவன பங்குகள் அனைத்தும் லாபம் தரும் பங்குகள்.
- சி.பி.எஸ்.இ - ஈ.டி.எப் ல் முதலீடு செய்ய டீமேட் கண்க்கு தேவைபடும்.
- சி.பி.எஸ்.இ - ஈ.டி.எப் 4.5% தள்ளுபடி விற்பனை மூலம் வழங்கபடுகின்றது.
லாபம்
சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப் பண்டு முதலில் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து இன்று 20-11- 2018 வரை கிடைத்த லாப விகித்தை அட்டவணை 1-ல் பார்கலாம் . தற்போது சந்தை இறங்கி உள்ளதால், எப். எப்.ஓ - 2017 முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தில் உள்ளது. தற்போது சந்தை சரிந்த நிலையில் இருக்கும்போது பொதுத்துறை நிறுவன பங்குகளை, சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப் மூலம் 4.5% தள்ளுபடி விற்பனை மூலம் வாங்குவது வரும் காலத்தில் லாபம் தரக்கூடிய ஒன்றாக கருதலாம்.
முதலில் சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப் ல் 10 நிறுவனங்கள் இருந்தது. அதில் 2 வெளியேறி, 3 புதிதாக உள்ளே வந்துள்ளது. தற்போது உள்ள 11 பங்குகளின் லாபமீட்டும் தன்மைகள் மற்றும் அதன் விலையை பொருத்து வருங்காலத்தில் இந்த சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப் பண்டு லாபம் அமையும். இதில் ரிஸ்க் குறைவாகவும் சராசரி லாபம் கிடைக்க எதுவாகவும் உள்ளது. இந்த சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப் பண்டில் புதிய முதலீட்டாளர்கள் பங்கு பெற்று பயன்பெறலாம்.
உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டு, மற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் . நன்றி
No comments:
Post a Comment