Wednesday 7 November 2018

எஸ்.டபீள்யூ.பி Vs எம்.டி எதை தேர்ந்தெடுப்பது? (SWP Vs MD)

Click here to read the same article directly from Nanayam vikatan website. The same article is given below.

Click here to read the same article in English

இன்னுமா எம்.டி  திட்டத்தில் உள்ளீர்களா? மாறுங்கள் எஸ்.டபீள்யூ.பி க்கு கூடுத்ல் லாபத்திற்கு


மாதாமாதம் வருமானம் தரும்  திட்டங்கள் ( MD) மன்திலி  டிவிடெண்ட் திட்டங்கள். (Monthly dividend plans) பெரும்பாலும் ஓய்வுபெற்ற முதலீட்டாளர்கள் தங்களது ஒய்வு கால பணத்தை இது மாதிரியான திட்டங்களில் முதலீடு செய்து மாதாமாதம் டிவிடெண்ட் வருமானம் பெற்று வந்தார்கள். மாதாமாதம் வருமானம் கொடுக்கும் திட்டங்கள் சமீப காலங்களில் மிக மிக பிரபலமான திட்டமாகும். முதலில் ஒரு பெரும் தொகையை இது மாதிரியான  திட்டங்களில் முதலீடு செய்து மாதாமாதம் டிவிடெண்ட் வருமானம்  மூலம் கைச்செலவுக்கு, மாதாந்திர செலவுக்கு  பணம் பெற்று வந்தார்கள். சிறிது காலம் முன்பு வரை இந்த மாத வருமானத்திற்கு எந்த வரியும் கிடையாது. ஆனால் தற்போது நிலைமை வேறு.

எஸ்.டபீள்யூ.பி   (SWP - Systematic Withdrawal Plan)
சமீபத்தில் மத்திய அரசாங்கம் ஈக்விட்டி பண்டுகளின் டிவிடெண்ட் வருமானத்திற்கு டிவிடெண்ட் டிஸ்ட்ரிபூசன் வரி (Dividend distribution tax) என்ற 10 % வரி விதித்தது. வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து நாமும் ஈக்விட்டி  டிவிடெண்ட்   திட்டத்திலிருந்து, ( Dividend paying equity Plans) குரோத் திட்டத்திற்கு  (Growth Plans) மாறுமாறு எழுதி வந்தோம். இது போல் ஈக்விட்டி  டிவிடெண்ட்  திட்டத்திலிருந்து, குரோத் திட்டத்திற்கு மாறுவது நல்லது என்றாலும், நல்ல பலன் உள்ளது என்றாலும், அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக பல முதலீட்டாளர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள். பெரும்பாலும் மாதாமாதம் வரும் வருமானத்தை வைத்து செலவு செய்பவர்களுக்கு குரோத்   திட்டங்களின் மூலம் தொடர் வருமானம் (Monthly cash flow) வராத காரணத்தால் அதை சிலர் விரும்பவில்லை. இதற்கு என்னதான் தீர்வு? டிவிடெண்ட் திட்டத்திலிருந்து குரோத் திட்டத்திற்கு மாறிய பிறகு, குரோத் திட்டத்திலிருந்து எஸ்.டபீள்யூ.பி என்ற முறையில் மாதாமாதம் நாம் அந்தத் திட்டங்களில் இருந்து பணம் பெறுவதற்கான வழி வகையே ஆகும். அதுசரி எங்களுக்கு எஸ்.ஐ.பி (SIP) தெரியும், ஆனால்  அது என்ன எஸ்.டபீள்யூ.பி   (SWP) என்று எண்ணுகிறீர்களா? மாதாமாதம் பணம் கட்டுவது எஸ்.ஐ.பி,  மாதாமாதம் பணம்  பெறுவது  எஸ்.டபீள்யூ.பி . 

எஸ்.டபீள்யூ.பி -யில்  மாதாமாதம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையை நமது வங்கியில் போட்டு விடுவார்கள்.  எள்ளவும் சந்தேகம் வேண்டாம். லாபம் வருகிறதோ,  இல்லையோ, நாம் குறிப்பிட்ட தொகையை நமது வங்கியில் கட்டிவிடுவார்கள். எப்படி லாபம் இல்லாமல் பணம் வரும் என்று சரியான கேள்வி எழலாம். லாபம் இருந்தால் லாபத்திலிருந்து வரும்,  லாபம் இல்லாத காலங்களில் தற்போது போல் சந்தை சரிந்த நிலையில் நமது முதலீட்டுத் தொகையில் இருந்து வரவேண்டிய மாதாந்திர தொகையை தந்து விடுவார்கள்.  இது  நிறையப் பேருக்கு பிடிபடவும் இல்லை, பிடிக்கவும் இல்லை. அது ஏன் நமது முதலீட்டு தொகையிலிருந்து வரவேண்டும் என்று ஆயிரம் கேள்விகள் எழலாம் , அதற்கும் விடை காணலாம் இங்கே. 

முதலில் விளக்கத்திற்கு போகும் முன்பு அருகில் உள்ள அட்டவணையை பார்ப்போம். உதாரணமாக பண்டு நிறுவனத்தின் ஒரு திட்டத்தை உதாரணமாக கொண்டுள்ளோம். ஐ.சி.ஐ.சி.ஐ பாலண்ஸ் அட்வான்டேஜ்  திட்டம் மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது (ICICI Prudential balanced advantage plan). இந்த அட்டவணையில் மன்திலி  டிவிடெண்ட்  monthly dividend மூலம் வரும் வருமான விகிதமும் எஸ்.டபீள்யூ.பி -யில்  நமக்கு கிடைக்கும் தொகையின் லாபவிகிதமும் தனித்தனியாக கணக்கிடப்பட்டு தரப்பட்டுள்ளது.  இந்த அட்டவணையைப் பார்க்கவும். ஆக நாம்  எளிதாக புரிந்து கொள்ளலாம், எஸ்.டபீள்யூ.பி  முறையில் வரும் லாபம் மன்திலி  டிவிடெண்ட்  விட அதிகமாக உள்ளது என்று.

இதன் சிறப்பம்சங்களை இப்போது இங்கு பார்ப்போம்

விபரம்

குரோத் + எஸ் டபீள்யூ பி

மாதாமாதம் வருமானம் தரும்   டிவிடெண்ட் திட்டங்கள் 

மாதாமாதம் வருமானம்
நமது யூனிட்டுகள் விற்கப்பட்டு நமக்கு பணம் கொடுக்கப்படுகிறது
திட்டத்தில் அறிவிக்கப்படும் டிவிடென்ட் மூலம் நமக்கு வருமானம் கிடைக்கின்றது
வருமானம் வரும் தேதி
குறிப்பிட்ட தேதியில் நமக்கு ஏற்ற தேதிகளில் நாம் தேரந்தெடுத்துகொள்ளும் தேதிகளில் வருமானம் கிடைக்கின்றது
திட்ட மேலாளரின் நோக்கில் லாபம்  வரும் தருணங்களில் , திட்டத்தால் நிர்ணயக்கபட்ட்ட தேதியில் வருமானம் கிடைக்கின்றது
வருமானமாக வரும தொகை
நாம் குறிப்பிட்ட தொகை
லாபத்திற்கு  ஏற்ப திட்டத்தில் வருமானமாக தரப்படும் தொகை மாறுகின்றது

குறிப்பிட்ட தேதியில் வருமானம் 

மாதாந்திர வருமானம் திட்டத்தில் குறிப்பிட்ட தேதிகளில் வருமானம் கிடைப்பதில்லை. முதல் வாரத்திலேயே (4/4/18) கிடைக்கலாம், அல்லது மாதத்தின் இறுதி வாரத்தில் கிடைக்கலாம் (28/9/18). சில மாதங்களில் டிவிடெண்ட் கிடைக்காத மாதங்களும் இருக்கின்றது. பிப்ரவரி,  மார்ச்,  2016.  சில மாதங்களில் இரண்டு முறை  கிடைத்துள்ளது ஏப்ரல் 2016 . ஆக ஒரே மாதிரியாக டிவிடென்ட் கிடைப்பதில்லை. ஆனால் நமது மாதாந்திர செலவுகள் குறிப்பிட்ட தேதிகளில் இருப்பதால் இதுபோன்று வருமானம் கிடைக்கும் போது இந்த வருமானத்தை நம்பி செலவு செய்ய எண்ணுபவர்களுக்கு ஏற்றதாக இல்லை. எஸ்.டபீள்யூ.பி  முறையில் குறிப்பிட்ட தேதியில் நமக்கு வருமானம் கிடைப்பதால் செலவிற்கு ஏற்றவாறு உள்ளது.


செலவுக்கு ஏற்ற தொகை
 மாதாந்திர வருமானம் திட்டத்தில் மாதா மாதம் கிடைக்கும் தொகை ஒரே மாதிரி இருப்பதில்லை.  நாம் உதராணமாக எடுத்த திட்டதில் கடந்த  நான்கு வருடங்களில் அதிகபட்சம் Rs 12167 ( May 16)  கிடைத்துள்ளது. குறைந்தபட்சம் Rs 1520 ( jan 2016) கிடைத்துள்ளது. எனவே குறிப்பிட்ட தொகை கிடைக்காதபோது சில மாதங்களில் நமக்கு செலவுக்கு ஏற்ற தொகை கிடைக்காமல் போகலாம்.  இதை எண்ணும்போது எஸ் டபீள்யூ பி     முறையில் நாம், நமது செலவுக்கு ஏற்றவாறு, லாபத்தை அனுசரித்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெறுவது சிறப்பல்வா

அட்டவணையில் நன்கு புரிந்து படிதால், ஒரு கேள்வி  எழும். எஸ் டபீள்யூ பி     யில் நமது யூனிட்டுகள் விற்கப்பட்டு நமக்கு பணம் கொடுக்கப்படுகிறது. என்வே, முடிவில் எனது யூணிட்கள் குறைகின்றது. அசலும் குறையுமா? நல்ல கேள்விதான்

சந்தை  நன்றாக  இருக்கும்போது  மன்திலி  டிவிடெண்ட் திட்டங்கள்   மற்றும்  குரோத் திட்டங்களில் லாபம் அதிகம் கிடைக்கின்றது.  சந்தை கரடியின் பிடியில் இருக்கும்போது இரண்டு திட்டங்களிலும் நஷ்டம் வரும்.  இரண்டிலும் அசல் குறைய வாய்ப்புகள் உள்ளது.
மன்திலி  டிவிடெண்ட் திட்டங்கள் , டிவிடெண்ட் திட்டங்கள், குரோத் திட்டங்கள்     ஆக 3  திட்டங்களும் அடிப்படையில் ஒன்றே. எனவே அதன் லாபமீட்டும் தன்மையும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ரிஸ்க்கும் அதே மாதிரி இருக்கும் .  இருந்தபோதிலும் மூன்றிலும் நமக்கு கிடைக்கும் லாப விகிதம் சற்று மாறுபடுவதற்கு சரியான காரணம்,  நமக்கு கிடைக்கும் தொகையும் தேதியும்  மூன்று திட்டங்கிளிலும்  மாறுபடுவதால் நமக்கு கிடைக்கும் லாப விகிதம் மாறுகின்றது. இந்த தன்மையை புரிந்து கொண்டால் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நமக்கு எளிதாக பிடிபட்டுவிடும்

யூனிட்டுகளும் அதன் மதிப்பும் 
மன்திலி  டிவிடெண்ட் திட்டங்களில் யூனிட்டுகள் மாறாது.  ஆனால் எண் ஏவி பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்து வருகின்றது ( Low 13.02, High 14.9) அதே சமயத்தில் எஸ் டபிள் யூ வியில்யூனிட்டுகள்  குறைந்து கொண்டே வரும், எண் ஏவி  ஏறிக் கொண்டே வருகிறது ( Low 23.47, High 34.09) இரண்டிலும் மதிப்பு என்று பார்த்தால் அதிக மாற்றம் இருப்பதில்லை இதை புரிந்து கொள்வது அவசியம்

எஸ்.டபீள்யூ.பி செய்யும்போது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது நாம் மாதாமாதம் எடுக்கும் பணம்  திட்டத்தில்  சராசரியாக வருகின்ற லாபத்தை விட சற்று குறைவாகவே எடுத்தால்  சுமார் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பின் பார்க்கும்போது அசல் குறைந்திருப்பதற்கு வாய்புகள் குறைவு.  உதாரணமாக நாம்  எஸ்.டபீள்யூ.பி I  - என்றால் ரூபாய்  7000 எடுக்கின்றோம் அதே சமயம் எஸ்.டபீள்யூ.பி  II - என்றால் நாம் மாதாமாதம் 10,000 எடுக்கின்றோம் பத்ஆயிரம் ரூபாய் என்பது சுமார் 12 சதவீத வட்டி. 12 சதவீதம் என்பது திட்ட லாபத்தை ( 9.71%)  விட அதிகமாக உள்ளது. எனவே இதில்  அசல் 863,246 ஆக   குறைந்திருக்கிறது.

Period:             From    20 Oct 2014     To        20 Oct 2018                
Scheme:           ICICI Prudential Balanced advantage Fund       

Description
SWP - I
SWP - II
MD
Initial investment
1,000,000
1,000,000
1,000,000
Monthly Cash withdrawal
7,000
10,000
6,100 #
Cash received by investor
336,000
480,000
298,676
Current value
1,013,805
863,246
1,038,783
Return -xirr
9.11%
9.71%
8.63%
Initial units
   42,607.58
42,607.58
    76,045.63
Final units
   30,842.87
25,814.79
    76,046.63
initial nav
23.47
23.47
13.15
final nav
32.87
32.87
13.66
 # Average cash flow in Monthly dividend option is Rs 6100

வரியும் வருமானமும் 
வரியானது வருமானம் கிடைக்கும் விதத்தில் விதிக்கபடுகின்றது.  முக்கியமாக இந்த இரண்டு வகையான திட்டங்களில் நாம் எஸ் டபீள்யூ பி      முறையை தேரந்தெடுக்க முக்கிய காரணம் வரி  விதிக்கபடும் முறைதான். இங்கே அட்டவணையில் காட்டப்பட்ட உதாரணங்கள் வரிக்கு முன் தரபட்ட டிவிடண்ட் தகவல்கள் மார்ச் 2018 வரை. அதன் பின்னர் உள்ள டிவிடண்ட் தகவல்கள் வரி கட்டிய பிறகு உள்ளவை . இப்போது டிவிடண்ட் வரி விதிக்கப்படுவதால் இனிமேல் வரும் காலங்களில் இந்த வகையான டிவிடண்ட் வருமானம் குறைவாக இருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது எனவே அதன் லாப விகிதம் இன்னும் குறையலாம்.  அதேசமயம் எஸ் டபீள்யூ பி      யில் நாம் ஒரு வருடம் கழித்து பணம் எடுக்க  ஆரம்பித்தால வரும் வரி குறைவாக இருக்கும்.  முதலில் கிடைக்கும் ஒரு லட்ச லாப ரூபாய்க்கு வரி கிடையாது.  வரி நோக்கிலும் எஸ்.டபீள்யூ.பி,  எம்.டி யை விட சிறந்ததாக கருதப்படுகின்றது.

நினைவில் கொள்ளவும்
நிறைய முதலீட்டாளர்கள் இதுபோன்ற ஹைபிரிட்  திட்டங்களில் 12% வட்டியில் டிவிடண்ட்  பணம் மாத மாதம்  கிடைக்கும் என்று எண்ணி முதலீடு செய்துள்ளார்கள். தற்போதைய சுழலில்  இது ஒரு மறுபரிசீலனை செய்யக் கூடிய செயல் ஆக இருகின்றது.  சந்தை நன்கு இருக்கும் போது இது சாத்தியம் . ஆணால் மாதந்தோறும், வருடா வருடம் இதே போன்று கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை அதை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.


உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டு, மற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் நன்றி 

No comments:

Post a Comment