Tuesday, 13 November 2018

டெப்ட் எப்.எம்.பி (Debt FMP) - ஏற்ற இறக்கங்கள் குறைவாகவும், லாபம் கூடுதலாகவும் பெறும் வழிகள்

Click here to read the same article directly from Nanayam vikatan website. The same article is given below.

Click here to read this article in English

நிதானமான பண்டுகள் - லாபத்தை யூகித்து, மூதலீடு செய்யலாம் வாருங்கள்

சந்தையும் சத்தமும்

கடந்த இரண்டு மாதங்களாக பங்கு மற்றும் கடன் சந்தைகளில் ஒரே கொந்தளிப்பு தான். இந்த சூழலில் முதலீட்டாளர்கள் எங்கு போய் ஒளிவது? எந்த மருந்தை குடித்தால் பித்தம் தெளியும்?  எங்குதான் செல்வது, எங்கு முதலீடு செய்தால்   குறைவான ஏற்ற இறங்களில் அதே சமயம் சீரான / சராசரியான லாபம் கிட்டும்? மனம் தளர வேண்டாம்!! தற்போது இருக்கும் சூழ்நிலையில் சந்தை மிகவும் ஏறி இறங்குவதால் வம்பு வேண்டாம், பங்கும் வேண்டாம்  என்று நினைப்பவர்களுக்கு கடன் திட்டங்களில் ஒருவகையான திட்டங்கள் உள்ளது.  ஏற்ற இறக்கங்கள் குறைவாகவும், நிதானமான பண்டுகளும் உள்ளது. இதில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சாதாரணமான வருமானம் கிடைப்பதற்கு வழிவகை உள்ளது. அதைப் பற்றி இப்போது விரிவாக பார்ப்போம். மீய்சுவல் பண்டுகளில் எல்லா வகையான பித்ததிற்க்கும் மருந்து உள்ளது. அதன் பெயர் டெப்ட் எப்.எம்.பி (FMP - Fixed maturity plan).

குறிப்பிட்ட காலதிட்டங்கள் (Close ended)

பண்டு முதலீட்டாளர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி, நான் பங்குகளில் எவ்வளவு நாள் முதலீடு செய்ய வேண்டும், எப்போது பணம் திருப்பித் கிடைக்கும் என்பதே.  காரணம் வங்கி இருப்பு நிதிகள் மற்றும் இன்சூரன்ஸ்-ல் இந்த வகையான முதலீடுகளில் காலத்தை குறிப்பிட வேண்டும். பெரும்பாலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஓபன் எண்ட்  (OPEN ENDED) என சொல்லப்படும் திட்டங்களில் காலம் நிர்ணயிக்கப்படுவதில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், எப்பொழுது வேண்டுமானாலும் திரும்ப பெறலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில்  குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு திட்டங்களும் உள்ளது. இதற்கு குளோஸ் எண்ட் என சொல்லப்படுகிறது (CLOSE ENDED). குளோஸ் எண்ட் திட்டங்களில் பங்கிலும் முதலீடு செய்யலாம், கடனிலும் முதலீடு செய்யலாம். கடனில் முதலீடு செய்யப்படும் திட்டங்களுக்கு ஒரு பெயர் உண்டு எப்.எம்.பி  FMP / FTP / FTF ( Fixed maturity plan / Fixed tenure plan /Fixed tenure fund) என்பதாகும். அதைப் பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்.

எப்.எம்.பி  (FMP)

நாம் அறிந்ததுதான், அனைத்து கடன் திட்டங்களையும் பாதிக்கும் ரிஸ்க் காரணிகளை. அவை  கிரெடிட் ரிஸ்க், (credit risk) வட்டி விகித ரிஸ்க் (interest rate risk) மற்றும் லிக்விடிட்டி ரிஸ்க் (liquidity risk)  ஆகிய மூன்று வகைகள்.  இந்த மாதிரியான எப்.எம். பி  திட்டங்களில் வட்டி விகித ரிஸ்க் மற்றும் லிக்விடிட்டி ரிஸ்க்  குறைவாகவே இருக்கும். காரணம்  குறிபிட்ட கால திட்டம் என்பதால் நமது பணத்தை கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்றவாறு பணம் திரும்பக் கிடைக்குமாறு முதலிடு செய்யபடுகின்றது.  இதனால் இடைப்பட்ட காலங்களில் ஏற்றபடும் வட்டி விகித  ஏற்ற இறக்கங்கள் இந்த திட்டங்களின் வட்டி விகிதத்தை பாதிப்பதில்லை.  என்.எ.வி யும் (NAV) அதிகம் பாதிப்பதில்லை.  அதேசமயம் கிரெடிட் ரிஸ்க் இந்த திட்டங்களிலும் உள்ளது. எனவே இந்த எப்.எம்.பி  திட்டங்களில் முதலீடு செய்யும்போது நல்ல நிறுவனத்தின் பண்டுகள்  ரிஸ்க் குறைவாக இருக்கிறதா என்று தெரிந்து முதலீடு செய்யலாம். AAA நிறுவணங்களில் முதலீடு செய்யபடுகின்றதா என்று பார்த்து முதலிடு செய்லாம். சமீபத்திய சரித்திரம், ஒரு விதி விலக்கு (ஐ.எல்.எப்.எஸ் சரித்திரம் - IL&FS) இருந்தாலும் AAA மதிப்புகளை நம்பித்தான் ஆகவேண்டும். எல்லா AAA நிறுவணங்களும் பாதிப்புகுள்ளாகும் என்று எண்ண வேண்டாம்

உத்தேசமான லாபத்தை அறியும் வழி

உதாரணமாக நமது திட்டம் மூன்று வருடத்தில் முடிகிறது  என்று வைத்துக்கொள்வோம், ஏனெனில் இது மாதிரியான திட்டங்கள், முன்னர் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.  தற்போது ஷார்ட் டேர்ம் லாபம் என்பது கடன் திட்டங்களுக்கு மூன்று வருடமாக,  மாற்றப்பட்டதால் இவ்வாறான திட்டங்கள் 3 வருடதுக்கு மேல் தற்பொழுது  அளிக்கப்படுகின்றது. எனவே உதாரணத்திற்கு 3 வருட திட்டம் என்று கொள்வோம். திட்டம் AAA வகையில் முதலீடு செய்வதாக கொள்வோம். அந்த மூன்று வருட முடிவில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை முதலீட்டு ஆலோசகர்களோ, நிறுவனமோ தெரிவிக்கப் போவதில்லை. இது செபியின் கட்டளையாகும் . நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பதை இந்த திட்டங்களில் ஒரு வழியாக யூகிக்கலாம். அது எப்படி?? பொதுவாக மூன்று வருட AAA கடன் பத்திரங்கள் 9% லாபம் வருகிறது என்றால் நிர்வாகத்தின் செலவு 0.5% கழித்து மூன்று வருட முடிவில் நமக்கு  8.5 % லாபம்  கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அறியலாம்.  நாம் முதலீடு செய்திருக்கும் திட்டம் இரண்டு, மூன்று வகையான கடன் பத்திரங்களில் முதலீடு செய்து இருக்கும்போதே அதில் கிடைக்கும் லாபமும் மாறுகின்றது. இந்த வகையில் நமக்கு கிடைக்கும் உத்தேசமான லாபத்தை கீழ்க்கண்ட உதாரணம் மூலம் அறியலாம்.

Example for calculating indicative yield of FMP
Instrument
Allocation %
Expected yield %
Weighted yield %
AA Bond
75
9.25%
6.9375
AAA Bond
25
8.80%
2.2
Yield for the fund
9.1375
Expense ratio
0.5
Indicative final yield for investor
8.6375

நவம்பர் மாதத்தில் வரவிற்கின்ற எப்.எம்.பி திட்டங்கள்

தற்போது நடப்பில் உள்ள அல்லது நவம்பர் மாதத்தில் வரவிற்கின்ற எப்.எம்.பி திட்டங்களை கீழ்க்கண்ட அட்டவணையில் பார்க்கலாம்.

Fund name
Launch Date
Close Date
Tenure-Days
ICICI Prudential Fixed Maturity Plan - Series 84 - 1247 Days Plan M
2-Nov-18
5-Nov-18
1247
Aditya Birla Sun Life Fixed Term Plan - Series RN (1240 Days)
5-Nov-18
13-Nov-18
1240
Reliance Fixed Horizon Fund XXXIX - Series 15
13-Nov-18
14-Nov-18
1259
Tata Fixed Maturity Plan Series 56 Scheme E
19-Oct-18
2-Nov-18
1099
UTI FTIF Series XXX - XI
12-Nov-18
26-Nov-18
1246

நிறைவாக

திட்டத்தின் முடிவில் கிடைக்கும் லாபத்திற்கு இண்டக்சேசனக்கு பின் வரி செலுத்துவதால்  எப்.எம்.பி  (FMP) கடன் பண்டுகளின் லாபத்திற்கான வரி  குறைகிறது . ஒரளவு லாபத்தை யூகித்து முதலீடு செய்வதற்கு ஏற்றது இந்த எப்.எம். பி  (FMP) பண்டுகள். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் , வதி விலக்குகளை தவிர்த்து, ஒரளவு லாபத்தை யூகித்து, மூதலீடு செய்யவல்ல திட்டம். இது மட்டுமே.


உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டுமற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் நன்றி 

No comments:

Post a Comment