Tuesday, 3 May 2016

Systematic Investment Plan (SIP) - சிறுக சிறுக சேமிக்கலாம்

Read/download this article in magazine/pdf format

நாம் நமது வாழ்க்கையை  சற்றே திரும்பிப் பார்த்தால், அது ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக காணப்படும். வருங்காலமும் அப்படியே இருக்கலாம், சிலர் இதை மறுக்கலாம், ஆனால் யாராலும் மறுக்க முடியாதது பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்கள். இதன் நெளிவுசுளிவு தெரிந்து, மூதலீட்டில் எப்படி  லாபம் பார்ப்பது என்று அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். சிறு துளி பெருவெள்ளம் என்கிற கூற்றைப் போல சிறுக சிறுக சேமித்து, நமது நிதி நிலைமையை வலுவடையச் செய்வது முக்கியமானதும், அவைசயமனதும் கூட. பரஸ்பர நிதிகளில் (Mutual Funds)  பல தவனைகளில் பணம் கட்டும் முறையை  Systematic Investment Plan (SIP) என்று கூறுவார்கள். இதை Small Is Plenty என்றும் கொள்ளலாம் இது வங்கிகளில் மாதம் தோறும் பணம் கட்டும் Recurring deposit (RD) போன்று செயல் படும். RD யை விட SIP எப்படி சிறந்தது என்கிறீர்களா? பரஸ்பர நிதிகளின் மூலம்  சிருவாக  சேமித்து பயன் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.


சினிமாவில் நடிகர் சந்தானம் தன்னுடைய நெருங்கிய நண்பனான ஆர்யாவைப் பார்த்து "நன்பேண்டா" என்று கூறுவது போல, தற்போதய காலத்தில் வாலிபர்களின் இணைபிரியா நண்பனாகிவிட்டது இந்த கைபேசி! ஏதேனும் புதிய மாடல் கைபேசி ஒன்று சந்தையில் அறிமுகப்படுத்திய மறுநாளே... இல்லை இல்லை... மறுகணமே, அது காலையோ மாலையோ, அலுவலகமோ வீடோ, எதுவாக இருந்தாலும் இருந்த இடத்தில் இருந்து வாங்குகிறார்கள். சிலர் இதை தவணை முறையிலும் வாங்குவதுண்டு. பரஸ்பர நிதியின் SIP மூலம் எப்படி கைபேசி வாங்கி லாபம் பெறலாம் என்று கூறுகிறேன். உதாரணமாக, மிக அதிக விலையில் உயர்ந்த நிறுவனத்தின் ஒரு கைபேசியை பத்து மாத தவணையில Rs 2000 வீதம் 10x2000=20,000 கொடுத்து வாங்குகிறார்கள். பெரும்பாலாணவர்களுக்கு வரும் மாத சம்பளத்தில் பெரும் பகுதி இந்த தவணை கட்டுவதற்க்கு போய்விடும். தவணையில் வாங்குவதால்  பணம் கூட செலுத்த வேண்டியதாக உள்ளது. அதே கைபேசியை தவணையில் வாங்காமல் உடனடியாக  பணம் கொடுத்து வாங்கினால், பத்து மாத முடிவில் அதே மாடல் கைபேசி குறைந்தபட்சம் 15%  அல்லது 20%  குறைந்து இருக்கும். செலுத்திய பணமோ கைபேசியை முதலில் வாங்கும் விலையைவிட 5% அல்லது 10%  அதிகமாக இருக்கும்.

இதற்க்கு மாற்றாக இந்த ரூபாய் 2000 ஐ ஒரு கடண் பத்திர பரஸ்பர நிதியில் சேமித்து வந்தால் மாத முடிவில் அந்த பணம் பெருகி  ரூபாய்  20,610 #ஆக இருக்கும். ஆனால் அதே சமயம் சந்தையில் அந்த கைபேசியின் விலை குறைந்து இருக்கும். உதாரணமாக  20% குறைந்த்தால் அது  ரூபாய் 16,000  ஆக இருக்கும். நமது பரஸ்பர நிதியில் சேமித்த பணத்தில் அந்த  கைபேசியை வாங்குவதன் மூலம், நமது கையில் விரும்பிய கைபேசியும், வங்கியில் கூடுதல் பணமாக ரூபாய் 4610 ஆக இருக்கும். இந்த இரண்டில் எந்த முறை சிறந்த முறை என்று முடிவு செய்து நிதியை பராமரியுங்கள்!

பரஸ்பர நிதியில் முதலீடு  செய்ய இரண்டு முறை உள்ளது. மொத்தமாக பணம் செலுத்துவதற்கு Lump sum investment  என்று பெயர். பல தவணையில் பணம் செலுத்துவதற்கு Systematic Investment Plan  என்று பெயர்.  இதன் சுருக்கமே SIP.  இதை “Small is Plenty” என்றும் கொள்ளலாம். தவணை என்பது,  மாதந்தோறும் அல்லது வருடத்தில் இரண்டு முறை, வருடத்தில் நான்கு முறை என்று அவரவர் தேவைக்கு ஏற்ப உள்ளது. இது SIP  யின் ஒரு முக்கிய அம்சமாகும். பரஸ்பர நிதியில்  ஒரு  திட்டத்தில் ஒரே தவணயில் ரூபாய் 50,000 முதலீடு செய்வதற்க்கும் ரூபாய் 5000 வீதம் பத்து தவணயில் முதலீடு செய்வதற்க்கும் சிறு வேறுபாடு உள்ளது. தவணை முறை முதலீடு எப்படி லாபம் தருகின்றது எண்பதை அட்டவணையில் பார்க்கலாம்.


இதன் முக்கிய காரணம், பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப நாம் வாங்கும் unit மாறுபடுகின்றது.  பங்கு சந்தை  கரடியின் கையில் இருக்கும் போது (Bear Market)  நிறைய unit வாங்கப்படும். பங்கு சந்தை  காளையின் கையில் இருக்கும் போது (Bull Market), குறைந் unit வாங்கப்படும். இதற்க்கு Rupee cost averaging  என்று பெயர்.

இந்த SIP தவணையின் முதலீட்டு தொகை ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், பங்கு சந்தை  கரடியின் கையில் இருக்கும் போது நிறைய முதலீட்டு தொகையும், பங்கு சந்தை  காளையின் கையில் இருக்கும் போது குறைந் முதலீட்டு தொகையும் இருந்தால் நன்றாகத்தானே  இருக்கும். இதற்க்கும் SIP உள்ளது.  இந்த மேம்படுத்த  பட்ட திட்டத்தின் பெயர் Flex SIP.  இந்த Flex SIP மிகவும் சிறந்த முறையாகும். ஆனால் நிறைய பேருக்கு தெரிவதில்லை. இப்போது தெரிந்துகொண்டு இனி Flex SIP  முதலீடு செய்யுங்கள்.

பரஸ்பர நிதியில் SIP யில் முதலீடு செய்த பல பேர் பங்கு சந்தை  காளையின் கையில் இருக்கும் போது SIP யைஆரம்பித்து, பங்கு சந்தை  கரடியின் கையில் போகும் போது பயந்து, SIP யை நிறுத்திவிடுவார்கள். இது மிகவும் தவறு. SIP யின் நோக்கமே, பங்கு சந்தை  இறங்கினாலும், தவணயை தொடர்ந்து, நாம் வாங்கிய Unit களின் சராசரி விலையை குறைத்து கொள்ள வேண்டும். சந்தை திரும்பவும் ஏறும் போது லாபம் கிடைக்க இது வழி வகை செய்யும்.  

பரஸ்பர நிதிகளில் SIP நடைமுறையில் பரவலாக பயன் படுத்தபட்டு வருகிறது. இப்போது இதே முறையில், பங்கு சந்தையில் பங்குகளையும், இதே SIP முறையில் வாங்க முடியும். உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் 50 பங்கை, உடனடியாக வாங்காமல், 10 வாரத்தில் 5 வீதம் மொத்தம்  50 பங்கை வாங்கலாம். பங்கின்  சராசரி விலை குறைவாக இருக்கும். ஆக SIP  மூலம், நீண்ட கால மூதலீட்டில் வாங்கிய சராசரி விலை குறைந்து நல்ல லாபம் கிடைக்க ஏதுவாக இருக்கிறது.

ஒழுங்கான முறையில்  நீண்ட கால முதலீட்டில் பொறுமையாகவும் நமது வருமானமத்திற்க்கு ஏற்றவாறு தவணை  கூடவோ, குறையவோ சிறுக சிறுக சேமித்து வந்தால், நாளிடைவில் நமது முதலீடு பெருகி நமக்கு லாபத்தை நல்கும்

இன்னும் என்ன தயக்கம்? இப்போதே பரஸ்பர நிதிகளில் ஒரு SIP ஆரம்பியுங்கள்!




__________________________________________________________________

# 8% வருட வட்டியில்  10 தவணயில் கணக்கிடபட்டுள்ளது.
Formula for calculating investment amount in Flex sip = whichever higher of {(Fixed amount per instalment x no. of instalments including current) - Market Value} or Fixed amount



No comments:

Post a Comment