Sunday, 19 March 2023

நாமினேஷன் விவரத்தை பதிய கடைசி தேதி 31-03-2023 - தற்பொழுது இது 30-09-2023 மாற்றப்பட்டுளது


19-மார்ச் -2023 - மறு பதிவு 29-03-2023

ஒவ்வொரு முதலீட்டாளரும் தங்கள் முதலீட்டு கணக்கில் தங்கள் முதலீட்டின் பலன் யாருக்கு செல்ல வேண்டும் என்ற நாமினேஷன் விவரம் பதியவேண்டும். இது பண்டு முதலீடு, பங்கு முதலீடு என்னும் எல்லா வகையான முதலீட்டுக்கும் பொருந்துகிறது. இதை நமது செபி சிறிது காலத்திற்கு முன்பு கட்டாயம் ஆக்கியது. ஏதோ சில காரணங்களால் முதலீட்டாளர்கள் நாமினேஷன் விவரம் பதிய விரும்பாது என்றாலும், அவர்கள் நாமினேஷன் பதிய விரும்பாது என்ற விபரத்தை அந்த கணக்கில் பதிய வேண்டும் என்ற வழிமுறையும் செபி வகுக்கின்றது.

 

இருந்தபோதும் இன்றைய தேதியில் இன்னும் பல கணக்குகள் முழுமையாக நாமினேஷன் விபரத்தையோ அல்லது நாமினேஷன் செய்ய விருப்பமில்லை என்ற விவரத்தையோ தராமல் இருக்கின்றது. எனவே கடைசி தேதியாக 31 மார்ச்  23 க்குள் எல்லா முதலீட்டாளர்களும் தங்களது முதலீட்டு கணக்கில் நாமினேஷன் செய்யவிருப்பமா? ஆம் எனில் என்ன விவரம்? விருப்பமில்லை என்றால் விருப்பமில்லை என்ற விவரம் முதலியவற்றை பதிவு செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. 31-03-2023 க்கு மேலும் பதியாமல் காலம் தாழ்த்தி வருகின்ற கணக்குகள் முடக்கப்படும் என்று கடுமையாக செபி  கூறியுள்ளது.

 (தற்பொழுது இது 30-09-2023 மாற்றப்பட்டுளது)

எனவே இதுவரை தாங்கள் இந்த விபரத்தை உங்களது பங்கு அல்லது ஃபண்ட்  டீ மேட் கணக்குகளில் பதிவு செய்யாமல் இருந்தால், இல்லை முன்னாடியே பதிவு செய்து இருந்தாலும், அதை இரண்டு வகை  வழிமுறை மூலம்  உறுதி செய்ய வேண்டும். இந்த இரண்டு வழிமுறை உறுதி கட்டாயம் செய்ய வேண்டும். அதாவது ஒரு முறை நாம் பதிய வேண்டும். பின்னர் ஈமெயில் அல்லது ஓ டி பி மூலம் அந்த நாமினேஷனை உறுதி செய்ய வேண்டும். எனவே இந்த வகையில் தாங்கள் தங்களது கணக்கு நிறுவனத்தின் வழிமுறைகளை பின்பற்றி இரண்டு வகையான உறுதி செய்யும் முறையில் நாமினேஷன் தகவல்களை உடனடியாக உறுதி செய்து விடுங்கள்.

 

இன்னும் பத்து நாட்களே பாக்கி உள்ளது.எனவே விரைந்து செயல்படுங்கள். உங்களது கணக்குகள் முடக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

To Update nomination online

Through MF utility click here

Through Cams, Please click here

Through  kfintech click here.

மேலும் அறிய 

https://radhaconsultancy.blogspot.com/2020/10/nomination.html

http://bit.ly/Nominationvikatan

 

No comments:

Post a Comment