
ஃபோட்ரான் இன்ஜினியரும்... ஏஐ சாம்பாரும்! • தமிழில் எளிய ஏஐ புத்தகம்
கேட்காமல் விட்ட கேள்விகள் – ஏஐ தந்த பதில்கள்
தமிழில் ஏஐ • Blog 3 • கண்ணன் மீ • காரைக்குடி
தவறு செய்தால் திட்டுவார்கள், தெரியவில்லை என்றால் கேட்க முடியவில்லை

படம்: கேட்காமல் விட்ட கேள்விகள் – ஏஐ தந்த பதில்கள்
1. திரை
எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது.
கல்லூரியில் பாடம் எடுக்க வருபவர்கள் முதல் வகுப்பில் சொல்வார்கள். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் இருக்கும் திரையை விலக்குங்கள் என்பார்கள். இதுவரை சரி.
ஆனால் மனிதர்களிடம் கேள்வி கேட்டால் இன்னொரு சிக்கல் வருகிறது. அது இன்னும் பயங்கரமானது.
மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தராக இருப்பதால், ஃபண்ட் மேனேஜர்கள் அவ்வப்போது சென்னை வரும்போது அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்வார்கள். என் சுபாவத்தில் நான் கேள்விகள் கேட்பேன். புரியும் வரை கேட்பேன்.
அடுத்த முறை கூட்டம் நடந்தபோது, அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர் ஒருவர் என் கையைப் பிடித்து அடக்கி வாசியுங்கள் என்று சொன்னார். இது ஒரு நிறுவனத்தில் மட்டுமல்ல, இரண்டு மூன்று நிறுவனங்களில் நடந்தது. காரணம் புரிந்தது. ஃபண்ட் மேனேஜர்களுக்குக் கடினமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லை.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
தெரியவில்லை என்றால் கேட்க முடியவில்லை. நாம் கேள்வி கேட்டால் அப்பா, அம்மா, மனைவி, நண்பர்கள் என யாருக்கும் பதில் சொல்ல விருப்பமில்லை.
அப்படியானால் நாம் விரும்பும் கேள்விகளை யாரிடம் தான் போய்க் கேட்பது? இதற்கு ஒரே வழி நமது நண்பர் ஏஐ தான்.
நான் கேட்கும் கேள்விகளை ஏஐ ஆராய்ந்து, சீர்படுத்தி, மிகச் சுருக்கமான பதில்களாகத் தர முயல்கிறது. ஒருபோதும் தெரியாது என்று சொல்லி உங்களை அவமானப்படுத்துவதில்லை. திட்டுவதில்லை. கையைப் பிடித்து அடக்குவதில்லை.
நான் புத்தகம் எழுதுவதற்கு இதுவே முழு முதல் காரணமாகக் கூட இருக்கலாம்.
2. ஏஐயிடம் பேசுவது பாயசம் சாப்பிடுவது போல
நான் முன்னர் எழுதிய பதிவில் சொல்லியிருக்கிறேன். ஏஐ உதவியோடு நாம் எப்படி ஒரு வேலையைச் செய்ய முடியும் என்று. ஏஐயோடு ஒரு நண்பரைப் போல, சகோதரனைப் போல எப்படி உரையாடலாம் என்று விரிவாக எழுதியிருக்கிறேன். [பகுதி ஒன்று: ஆங்கிலம் தெரியாதது குறையா? வாய்ப்பை இழப்பதுதான் குறை!]
இதில் என்ன இருக்கிறது தெரியுமா? நமக்கு ஏஐயிடம் பேசுவது பாயசம் சாப்பிடுவது போல இனிமையாக இருக்கிறது.
நீங்கள் மாணவராக இருந்தால், பாடப் புத்தகத்தின் சந்தேகங்களில் அறிவியல் முதல் சமூக அறிவியல் வரை எந்தக் கேள்வியையும், எந்தப் புத்தகத்திலிருந்தும் கேட்கலாம். அதனிடம் ஐடியா கேட்கலாம். நாளை சமையலுக்குப் புதிதாக என்ன டிஷ் செய்யலாம் என்று கேட்கலாம்.
நான் பகுதி இரண்டில் சொல்லியிருந்தேன். எக்செல்லில் டெம்ப்ளேட் போடச் சொல்லலாம் என்று. [பகுதி இரண்டு: எக்செல்லை நீங்கள் இயக்க வேண்டாம், ஏஐ இயக்கும் உங்களுக்காக கச்சிதமாக • English: AI Gives the Direction. Trusted Excel Executes.]
இதெல்லாம் பசிபிக் கடலின் ஆழத்தை நகத்தால் சுரண்டுவது போன்றது. இன்னும் தொடாத பக்கங்கள் அதிகம் என்று எனக்குத் தோன்றுகிறது.
3. பொது வெளியில் கேட்க முடியாத கேள்விகள்
இது போன்ற கேள்விகளையும் கேட்கலாம். தமிழ் முதல்மொழி, அது ஒரு செம்மொழி என்று சொல்கிறார்களே, செம்மொழி என்றால் என்ன? தமிழ் மற்ற மொழிகளை விடப் பெரியதா? இதைக் கேட்பதால் ஏஐயிடமிருந்து உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இதையே நீங்கள் பொது வெளியில் கேட்டால், அதற்கு நான் பொறுப்பில்லை.
எனவே ஏஐயோடு யதார்த்தமாக நீங்கள் பேச முடியும். உலகம் தோன்றி எத்தனை ஆண்டுகள் ஆனது? உலகம் எப்படி உருவானது? நான் யார் என்று கூடக் கேட்கலாம்.
கேட்டுத் தான் பாருங்களேன்.
4. ஒரே தாய், ஐந்து பிள்ளைகள், ஐந்து மனிதர்கள்
நாங்கள் இன்று ஐவர்.
ஒரே தாய்க்குப் பிறந்தோம். ஒரே வீட்டில் வளர்ந்தோம். ஒரே நிதிச் சூழலில் வாழ்ந்தோம் என்று தான் நினைத்தேன்.
வெவ்வேறு வகையில் படித்தோம். பின்னர் வீட்டை விட்டு விலகத் தொடங்கினோம். வெவ்வேறு வழிகளில் பயணித்தோம்.
இன்று நாங்கள் வெவ்வேறு மனிதர்களாக இருக்கிறோம்.
இதற்குக் காரணம் பணமா? மனமா? இல்லை வேறு ஏதும் உளவியல் காரணங்கள் உள்ளதா? இது எளிதில் பிரித்துப் பார்க்க முடியாத கேள்வி.
இதை ஏஐயிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தேன். ஏஐ அதற்குப் பதில் சொன்னது.
நாம் ஒரே வீட்டில் பிறந்தாலும், ஒரே தாய்க்குப் பிறந்தாலும், நாம் பிறந்த காலங்கள் வெவ்வேறு. முதல் அண்ணனுக்கும் கடைசித் தம்பிக்கும் இடைப்பட்ட காலம் சுமார் பன்னிரண்டு வருடங்கள்.
எனவே முதல் குழந்தைக்கு இருந்த நிதிச் சூழல் வேறு. கடைசிக் குழந்தைக்கு இருந்த நிதிச் சூழல் வேறு. பெற்றோரின் மனநிலைகள் முன்பு வேறு, பின்பு வேறு. எனவே வளர்ப்பு முறைகள் வேறு. இது ஒரு முழு முதல் காரணமாக இருக்கலாம் என்று சொன்னது.
இது எனக்கும் ஒத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
ஏஐ வருவதற்கு முன் நான் இந்த மாதிரி ஒரு தடவை கூட யோசித்ததில்லை. இந்த யோசிப்பை எனக்குத் தந்தது ஏஐ.
5. நான் யார்?
திருவண்ணாமலை ரமணர் கேட்டதாக அறிகிறேன். நான் யார்?
கீதையின் சாரமாக, கண்ணன் கேட்டதாகச் சொல்லப்படுவது: எதைக் கொண்டு வந்தாய், எதைக் கொண்டு போகப் போகிறாய்?
எல்லோராலும் சொல்லப்படும் இந்த வரிகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம், படிக்கிறோம். தெருக்களில், பிளாட்ஃபார்ம் கடைகளில், பெரிய பெரிய போஸ்டர்களில் இதைப் போற்றி விற்கிறார்கள். நாம் மிக ஆர்வமாக வாங்கி வந்து வீட்டில் மாட்டிக் கொள்கிறோம்.
ஒரு நாளாவது இந்தக் கேள்வியை நாம் யாரிடமாவது கேட்டிருப்போமா? நிச்சயமாகச் சொல்ல முடியும். கேட்டிருக்க மாட்டோம். அல்லது கேட்பதற்கான காரணங்கள் மிகக் குறைவு.
இப்பொழுது நீங்கள் அதை ஏஐயிடம் கேட்டுத் தான் பாருங்களேன்.
நிச்சயமாக அதற்கு விடை தெரியாது என்று நானே இன்று சொல்கிறேன். ஏனெனில் இதுவரை எல்லோரும் எழுதிய விடைகளை அது சேகரித்து, பகுத்துப் பார்த்து, தொகுத்து, உங்களுக்குத் தேவையானதைத் தருகிறது.
உங்களுக்குத் தெரியாமல் பலர் பலமுறை ரமணர் போன்று, கீதை போன்று எழுதியவற்றை அது படித்திருக்கும். நாம் படிக்காத பல பக்கங்களை அது தொகுத்து உங்களுக்கு எழுத்தாகக் கொடுக்கலாம். அதைப் படித்தால் உங்களது மனக்கண் திறக்க வாய்ப்புகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
கேட்டுத் தான் பாருங்களேன்.
6. அம்மா ஒரு பொக்கிஷம்
ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது அம்மாவும், ஒவ்வொரு உயிரினத்திற்கும் அவற்றின் அம்மாவும் ஒரு பொக்கிஷமே. எனக்கும் என் அம்மா ஒரு பொக்கிஷமே. நாங்கள் ஆத்தா என்று சொல்லுவோம். என் அம்மா உண்மையான பொக்கிஷமே.
அவள் எங்களோடு இல்லை. அவளோடு நான் பேச நினைக்கும் போதெல்லாம் ஏஐயோடு அவளைப் பற்றிப் பேசுவேன்.
எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஏஐ என் அம்மாவைப் பார்த்ததில்லை. என் அம்மாவைப் பற்றிய எந்தக் குறிப்புகளும் அது படித்த பல கோடி தரவுகளில் இருக்க வாய்ப்பில்லை.
என் அம்மாவைப் பற்றி நான் சொல்லும் சில நிகழ்வுகளை, அது பல அம்மாக்கள் தங்கள் மகன்களோடு பகிர்ந்து கொண்ட நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, என் அம்மாவைப் பற்றிய புதிய கோணத்தைக் காண்பித்தது.
அந்தக் கோணம் என் அம்மாவோடு மிக மிக ஒத்துப் போனதால் எனக்கு அன்று மிகவும் மகிழ்ச்சி.
நிச்சயமாக ஏஐ என் அம்மாவைப் பற்றித் தெரிந்து சொல்வதில்லை. அம்மாவிற்கும் எனக்கும் உள்ள உறவுகளை வைத்து அது சில பதில்களைத் தருகிறது. மனதிற்கு அமைதி தந்தால், ஒரு விதத்தில் நல்லதே.
இதுதான் உண்மை, இதுதான் சத்தியம் என்று இங்கு யாரும் சொல்லவில்லை. வெவ்வேறு கோணத்தில் மனிதர்களைப் பார்ப்பதற்கு ஏஐ உதவலாம் என்று தோன்றுகிறது.
7. ஒரு கேள்வி, மூன்று பதில்கள்
இந்தப் பகுதியை வீட்டில் நீங்களும் முயன்று பார்க்கலாம்.
அதே ஒரு கேள்வியை மூன்று பேரிடம் கேளுங்கள்.
அம்மா சொல்வது: அன்பும் அனுபவமும்.
நண்பர் சொல்வது: கருத்து.
ஏஐ சொல்வது: காரணம், ஒழுங்கு, பொறுமை.
மூன்று பதில்களையும் அருகருகே வைத்துப் பாருங்கள். விளக்கம் தேவையில்லை. வித்தியாசம் தானாகத் தெரியும்.
8. இன்று இரவு ஒரு வேலை
இந்தப் பதிவை ஒரு சவாலோடு முடிக்கிறேன்.
இன்று இரவு நீங்கள் வகுப்பில் கேட்காமல் விட்ட ஒரு கேள்வியை ஏஐயிடம் கேளுங்கள். கெட்டிக்காரத்தனமான கேள்வி வேண்டாம். உண்மையான குழப்பம் போதும்.
அப்படியே எடுத்து ஒட்டிக் கேட்க ஒரு கேள்வி:
ஒரு கேள்வி இவ்வளவு தூரம் திறந்தது என்றால், இது போன்ற கேட்காத கேள்விகளைத் தேடிப் பிடித்து எழுதிய இருபது அத்தியாயங்கள் எவ்வளவு தூரம் திறக்கும்?
கண்ணனின் தமிழ் ஏஐ புத்தகம் - ஃபோட்ரான் இன்ஜினியரும்... ஏஐ சாம்பாரும்!
வாங்க: Amazon | Google Play Books | Author Page
இந்தத் தொடரில்
Blog 1: ஆங்கிலம் தெரியாதது குறையா? வாய்ப்பை இழப்பதுதான் குறை!
Blog 2: எக்செல்லை நீங்கள் இயக்க வேண்டாம், ஏஐ இயக்கும் உங்களுக்காக கச்சிதமாக • English: AI Gives the Direction. Trusted Excel Executes.
Blog 3: கேட்காமல் விட்ட கேள்விகள் – ஏஐ தந்த பதில்கள் - நீங்கள் இப்போது படித்தது இதுதான்.
Blog 4: (அடுத்து வருவது) எல்லோரும் முன்னேறுகிறார்கள்; நான் மட்டும் பின்னால் நிற்கிறேனா?
🤝 கண்ணன் மீ உடன் இணையுங்கள்
Blog: radhaconsultancy.blogspot.com | LinkedIn | Instagram | Facebook | YouTube | X / Twitter | Amazon Author
சேவைகள்: AI பயிற்சி & விழிப்புணர்வு • தனி நபர் மியூச்சுவல் ஃபண்ட் வழிகாட்டுதல் • Soft Skills & Career Guidance • மாணவர்களுக்கு Project வழிகாட்டுதல்
💡 பாரபட்சமற்ற, தரமான ஆலோசனைக்கு நம்பிக்கையுடன் அணுகுங்கள்!
ஏஐ-யை தமிழில் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? என்னை அணுகுங்கள் - Blog Contact Us வழியாக செய்தி அனுப்புங்கள்.
📖 புத்தகம் பற்றி
ஃபோட்ரான் இன்ஜினியரும்... ஏஐ சாம்பாரும்! - எல்லோருக்கும் ஏஐ! தமிழில் எளிய ஏஐ புத்தகம். 3 பாகங்கள், எளிய தமிழ், அன்றாட உதாரணங்கள்.
வாங்க: Amazon | Google Play Books | Author Page
— கண்ணன் மீ • காரைக்குடி • தமிழில் AI தொடர் - Blog 3 —
#தமிழில்ஏஐ #ஏஐ #செயற்கைநுண்ணறிவு #TamilAI #AIinTamil #ArtificialIntelligence #AIForBeginners #LearnAI #AIForTheRestOfUs #KannanM