Showing posts with label மனித சுபாவம் Human Realities. Show all posts
Showing posts with label மனித சுபாவம் Human Realities. Show all posts

Sunday, 20 September 2026

சொல்வது எளிது, செய்வது கடினம் — ஏன்?

  

Title: AI for the Rest of Us - Description: AI for the Rest of Us - book cover by Kannan M

📘 எல்லோருக்குமான ஏ.ஐ (AI for the Rest of Us)

“தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது, ஆனால் மனித சுபாவம் மாறவில்லையே?” — ஏ.ஐ (AI) என்பது ஏதோ சிலருக்கு மட்டுமானது அல்ல, நம் அன்றாட வாழ்க்கையையும் சிந்தனையையும் எளிதாக்க வந்த ஒரு தோழன். ஏ.ஐ-யை எளிய முறையில் புரிந்துகொள்ளவும், அதை நமது வழக்கமான பணிகளுக்குப் பயன்படுத்தவும் உதவும் எனது “AI for the Rest of Us” புத்தகத்தை இப்போது வாசியுங்கள்.

📖 புத்தகம் பெற / வாசிக்க:

🛒 அமேசான்: https://amzn.to/3HgWcZB

▶️ கூகுள் பிளே: https://play.google.com/store/books/details?id=xg5kEQAAQBAJ

💬 வலைப்பதிவு வழியாக செய்தி அனுப்ப


✨ இந்தக் கட்டுரையை PDF ஆக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் — ஆஃப்லைனில் படிக்கவும், பகிரவும் ஏற்றது!


மனித யதார்த்தங்கள்

எனது பார்வையில் மனிதர்களும், மனித மனமும்

பகுதி 3 — “சொல்வது எளிது. செய்வது கடினம்”


கண்ணன் மீ

செயற்கை நுண்ணறிவு ஆலோசகர் | நிதி ஆய்வாளர் | சிந்தனையாளர்

radhaconsultancy.blogspot.com 


Title: சொல்வது எளிது. செய்வது கடினம் - Description: Part 3 cover: shouting sounds reaching an ear while the eye sees a smartwatch showing 0 steps


சொல்வது எளிது. செய்வது கடினம்.

சொல்வது வேறு, செய்வது வேறு.

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்.

“நான் பொறுமையாக இருப்பேன்...”

“நான் யோகா செய்வேன்...”

“நாள்தோறும் நடப்பேன்...” ஆனால், நாலு நாளில் காணாமல் போகும் நடைப்பயிற்சி!

சொல்வது எளிது. செய்வது கடினம்.


அமைதியான கூச்சல்

புத்தரை நான் நேரில் பார்த்ததில்லை. புத்தரைப் போன்ற யாரையும் பார்த்ததாக ஞாபகமும் இல்லை. சத்தம் போடாதவர்களை, கோபம் கொள்ளாதவர்களை நான் பார்த்ததே இல்லை. “நிறைய பேர் சத்தம் போடுவதில்லை, கோபம் கொள்வதில்லை” என்று சிலர் என்னிடம் மறுத்து பேசலாம். அவர்களுக்கு எனது பதில்: அமைதியாகவும் சத்தம் போடலாமே? அதுதான் பல்லைக் கடிப்பது. என்ன, பார்க்கிறீர்கள் தானே?

எனக்கு அடிக்கடி ஒன்று தோன்றும். நாம் அனைவரும் ஏன் இப்படி இருக்கின்றோம்? ஏன், எதற்கு, எப்படி என்றெல்லாம் தோன்றும். “குழந்தையின் சிரிப்பில் இறைவன்” என்று கூறும் நாம், இந்தக் கோபங்களையும் தாபங்களையும் எப்போது கற்றுக்கொண்டோம்? பெரியவரான பிறகா? குழந்தைப் பருவத்திலா? இல்லை இல்லை, கருவிலேயேவா? சற்று யோசிக்கத்தான் வேண்டும்.

குழந்தை பார்க்கிறதா? கேட்கிறதா?

நாம் வளர்ந்த சூழல் வேறு. இன்று இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் சூழல் வேறு. ‘மாற்றம் என்பது மாறாதது’தானே? நாம் நமது காவ்யாவை எடுத்துக்கொள்வோம். அவள் தனது நான்காம் வகுப்பு படிக்கும் மகள் சுமாவிற்கு நாள்தோறும் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாள். தப்பாகப் புரிந்துகொள்ள வேண்டாம்—அது பாட்டு கிளாஸ் (Music Class) இல்லை. பாட்டு பாடுவது என்பது தினந்தோறும் வசைபாடுவதுதான்!

சுமா கேட்பது எல்லாம் ஒரே சத்தம்தான்: “சத்தம் போடாதே! கத்தாதே! உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? புத்தகத்தை எடுத்து வை! பென்சிலைச் சீவி வை! ரப்பரைப் பையில் போடு!” என்று நாள்தோறும் 40 கட்டளைகள், விமர்சனங்கள். சுமா படுசுட்டி, படுகெட்டி. அம்மாவை அலட்சியப்படுத்துவதே அவளின் தினசரி வேலை. காவ்யாவிற்குப் புரியவில்லை—ஏன் நம் மகள் நமக்கே போக்கு காட்டுகிறாள் என்று!

யுத்தத்திற்கு முந்தைய அமைதி

நேரம் கடக்கிறது. சுமாவின் தந்தை பிரவீன் அலுவலகத்திலிருந்து வருகிறான். ஷூவைக் (Shoes) கழற்றிப் போடுகிறான்; விட்டெறிந்த சாக்ஸ் (Socks) சோபாவின் அடியில் சென்று அமைதி கொள்கிறது. யூகிக்க வேண்டாம்—பின்னர்  காவ்யாவிற்கும் பிரவீனுக்கும் ஒரு யுத்தம் நேரப்போகிறது! எந்த ஜோசியமும் தேவையில்லை. “எனது சாக்ஸ் எங்கே?” என்று ஆரம்பிக்கும் அந்த யுத்தம்!

இன்றைய யுத்தம் தொடங்கிவிட்டது. “நான் வந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது, ஏன் எனக்கு இன்னும் காபி தரவில்லை?” என்று கத்த ஆரம்பிக்கிறான். காவ்யாவும் சளைத்தவளா என்ன? “எனக்குப் பிரதோஷத்திற்குச் செல்ல வேண்டும், காபி போட நேரமில்லை! உங்களுக்கு உங்கள் அம்மா காபி கூடப் போடக் கற்றுத்தரவில்லையா? நீங்களே போட்டுக்கொள்ளுங்கள் முடிந்தால்!” என்று சத்தமாகச் சொல்கிறாள். அது பிரவீன் போட்ட சத்தத்தை விட அதிகம் என்பதை அவள் என்றாவது உணர்வாளா?

சற்றே திரும்பிப் பாருங்கள்... சற்று தள்ளி அமர்ந்திருக்கும் சுமா இருவரையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்—புத்தகத்தைப் புத்தகப் பையில் வைக்காமலே!

சொல் ஒன்று... செயல் வேறு!

இப்போது சுமா ஏன் காவ்யாவின் பேச்சை அலட்சியம் செய்கிறாள் அல்லது கேட்பதே இல்லை என்று உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதைத்தான் நாம் பெரும்பாலும் எல்லா வீட்டிலும் செய்துள்ளோம், செய்கின்றோம், இனியும் செய்வோம். அதுதான் “சொல்வது வேறு, செய்வது வேறு”.

இதைத்தான் ‘காக்னிடிவ் டிஸோனன்ஸ்’ (Cognitive Dissonance - சொல்-செயல் முரண்பாடு) என்று சொல்கிறார்கள். சொல்-செயல் முரண்பாடு காரணமாக மனத்தில் வரும் அசௌகரியம்தான் அது. பெற்றோர் சண்டையிடுகிறார்கள், ஆனால் குழந்தைகளிடம் “அழாதே, சத்தம் போடாதே” என்று போதிக்கிறார்கள். சுமாவின் நடத்தைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்தானே?

காவ்யாவை மாற்ற முடியுமா? முடியாது என்று நினைக்கின்றேன். யாரும் யாரையும் எப்போதும் எளிதில் மாற்றிவிட முடியாது. சரி போகட்டும், அவளாக மாறுவாளா? அதற்கும் சாத்தியக்கூறுகள் குறைவே என்று எண்ணுகின்றேன். அவளாக மனது வைத்துத் தன்னைப் புரிந்துகொள்ளக் காரண காரியங்களைத் தேடினால், ஒருவேளை நடக்கலாம். தற்போதைக்கு இது அவளது சுபாவம் என்று விட்டுவிடுவோம். வீட்டில் சத்தத்தைக் கட்டுப்படுத்த முடியாத குடும்பத்தில், உடம்பைக் கட்டுப்படுத்தக் கிளம்பிய பிரவீனின் கதையைப் பார்ப்போம். 

பிரவீனின் நடைபயண நாடகம்

ஆசை ஆயிரம்... அத்தனையும் கைகூடுமா?

50-ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் நமது பிரவீன், சென்ற மாஸ்டர் ஹெல்த் செக்கப் (Master Health Checkup) ரிப்போர்ட்டில் டோட்டல் கொலஸ்ட்ரால் (Total Cholesterol) 250-க்கு மேலே போய், தடித்த சிவப்பு எழுத்தில் முதல் ‘கால் அவுட்’ (Call-out) பார்த்ததிலிருந்தே பயந்துவிட்டான். டாக்டர் ஒரு ஸ்டேடின் (Statin) டேப்லெட் கொடுத்து, தினமும் வாக்கிங் (Walking) போகச் சொன்னார்.

புது ரீபாக் ஷூ (Reebok Shoes), புது கூகுள் ஃபிட் ஸ்மார்ட் வாட்ச் (Google Fit Smartwatch), ஸ்போர்ட்ஸ் ஜெர்கின் (Sports Jerkin), ட்ராக் பேன்ட் (Track Pants) என்று அவனது சம்பளத்தில் மாத்திரையை விட மற்ற சாமான்களுக்கு அதிக செலவாகிவிட்டது! இது வருடாவருடம் புத்தாண்டு அன்று எடுக்கும் சத்தியம் இல்லை; இது உடல்நிலை சார்ந்தது, கட்டாயம் நீங்கள் வாக்கிங் செல்ல வேண்டும் என்று காவ்யா கடுமையாகச் சொல்லிவிட்டாள்.

பிரவீனின் நிலைமையோ பரிதாபம், பயம் மட்டும் அகலவில்லை. சரி என்று வாக்கிங் திருவிழாவை ஆரம்பித்தாயிற்று. முதலில் 30 நிமிடங்கள்... சில நாட்களில் 15 நிமிடங்கள். அப்புறம் பேருக்கு வாக்கிங்; “ஆஃபீஸில் அர்ஜென்ட் வொர்க் (Urgent Work), காலையில் முடியாது, மாலையில் செல்லலாம், தனியாக போரடிக்குது, நாம் இருவரும் செல்லலாமே, போகும்போது ஒரு புது ஏர்பாட்ஸ் (AirPods) வாங்கி பாட்டு கேட்டால் நன்றாக இருக்குமே, நடப்பதற்கு எளிதாக இருக்குமே” என்று எத்தனையோ எண்ணங்கள், காரணங்கள்!

காவ்யா கறாராகச் சொல்லிவிட்டாள்: “அதிக செலவாகிவிட்டது, ஏர்பாட்ஸ் எல்லாம் இல்லை! எனக்குக் காலையில் மார்க்கெட் போக வேண்டும், மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டும், உங்களுடன் நடக்க முடியாது!” 50 வயதில் சராசரியாக நாளொன்றுக்கு 8,000 முதல் 10,000 ஸ்டெப்புகள் (Steps) நடக்க வேண்டும். மாதத்திற்கு 2.5 லட்சம் ஸ்டெப்புகள் வரை நடக்கலாம். ஆனால் பிரவீனின் ஸ்மார்ட்வாட்ச் காட்டியதோ வெறும் 60,000 - 70,000 மட்டுமே!

கடைசியில் ஸ்மார்ட்வாட்சைக் கழற்றி வைத்துவிட்டு, “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” படத்தை நெட்ஃபிளிக்ஸில் (Netflix) பார்ப்போமே என்பதில் முடிகிறது பிரவீனின் நடைபயண நாடகம்!

எண்ணம் நல்லதுதான்... ஆனால்?

சாட் ஜிபிடி (ChatGPT) வந்தது, ஸ்மார்ட் வாட்ச் (Smartwatch) வந்தது, வெல்னஸ் கோச் (Wellness Coach) வந்தது... நமது நடைப்பயணம் மட்டும் வெற்றிநடையாக மாற மாட்டேன் என்கிறது!

இதைத்தான் ‘இன்டென்ஷன்-பிஹேவியர் கேப்’ (Intention–Behavior Gap - நோக்கம் இருந்தும் செயல் இல்லாதது) என்கிறார்கள். நடக்க வேண்டும் என்ற நோக்கம் நல்லது—ஆனால் நடக்க முடியவில்லை! படம் பார்ப்பதில் உள்ள விருப்பம் நடப்பதில் இல்லை. நோக்கத்துடன் செயல் பொருந்தவில்லை.

“ஏன் இவர்களுக்குச் சொல்லிப் புரிவதில்லை? எத்தனை தடவை கத்தினாலும் ஏன் கேட்பதில்லை?” என்று நாம் சொல்வதை நாம் என்றுதான் கடைப்பிடித்தோம்? யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது!

“எனது சூழ்நிலை வேறு, எனக்குக் கஷ்ட காலம், எனக்குக் கத்துவதே வாழ்க்கையாகிப்போனது, எனக்குக் கஷ்டம்... கஷ்டத்தில் கத்துவது இயல்பு” என்பார்கள். “இப்போது கார் இருக்கிறது, ஐபோன் (iPhone) இருக்கிறது, சௌகரியங்கள் இருக்கின்றன, அப்புறம் ஏன் கத்த வேண்டும்?” என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

சுமாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவள் சத்தங்களுக்கு இடையே வாழ்ந்து வருகின்றாள். கத்துவதே வாழ்க்கை என்று எண்ணுகின்றாள். கத்துவதற்குக் காரணம் பணமோ சுகமோ இல்லை—வளர்ப்பும் வார்ப்பும் அப்படி!

பிள்ளைகளுக்குப் போதனை செய்வதை விட, நம் நடத்தையை மாற்றுவதே கடினம். ஏனெனில், இங்கு சொல்வது அனைவருக்கும் எளிது... செய்வதுதானே கடினம்?

சிந்திப்பதே மனிதத்தன்மை. அதைப் பாதுகாப்போம்.


மனித சுபாவங்கள்! எனது பார்வையில்

நான் நடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்கள் — அவர்களின் சுபாவங்கள் உண்மையில் நமது எண்ணங்களின் பிரதிபலிப்பா? மாறுபட்ட முகங்களில் எது அசல்? எது போலி? நாம் காண்பிப்பது எது? நம் அன்றாட வாழ்க்கையைச் சற்றே கவனித்து, நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ளும் ஒரு முயற்சியே இந்த 15 அத்தியாயங்கள் கொண்ட தொடர்.

🔗 பகுதி 1: நமக்கு வந்தால் வழக்கறிஞர், அடுத்தவருக்கு நீதிபதி

🔗 பகுதி 2: வெற்றி எனது, தோல்வி உனது

📌 பகுதி 3: சொல்வது எளிது. செய்வது கடினம் (நீங்கள் இப்போது படித்தது)

இந்தக் கட்டுரையில் நீங்கள் கண்ட கதாபாத்திரங்கள், உங்கள் சுற்றத்தாரையோ அல்லது உங்களின் எண்ணங்களையோ பிரதிபலிக்கிறதா? உங்கள் அனுபவங்களை என்னுடன் கமெண்ட்டில் பகிரலாமே! 

குறிப்பு

இக்கட்டுரையில் இடம்பெறும் நிகழ்வுகள் அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் அவதானிக்கக்கூடிய பொதுவான மனித சூழல்களை அடிப்படையாகக் கொண்டவை. தனிநபர் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், பெயர்கள் மற்றும் விவரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது எவரையும் நேரடியாகக் குறிப்பிடும் நோக்கம் கொண்டதல்ல.


கண்ணன் மீ அவர்களுடன் இணைந்திருங்கள்

LinkedIn  |  Twitter  |  Instagram  |  Facebook

மனித ஞானமும், நவீன AI தொழில்நுட்பமும் இணைந்த புதிய பார்வைகளுக்கு எங்களின் வலைப்பதிவைப் பின்தொடருங்கள். 🌐 radhaconsultancy.blogspot.com

 

நாங்கள் வழங்கும் சேவைகள்:

🔹 AI பயிற்சி & விழிப்புணர்வு (AI Training)

🔹 தனி நபர் முதலீட்டு வழிகாட்டுதல் (Mutual Fund Investments)

🔹 மென் திறன் பயிற்சி & வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் (Soft Skills & Career Guidance)

🔹 மாணவர்களுக்கான பிராஜெக்ட் வழிகாட்டுதல் (Project Work Assistance)

💡 “பாரபட்சமற்ற, தரமான ஆலோசனைக்கு நம்பிக்கையுடன் அணுகுங்கள்!”

📩 தொடர்பு கொள்ள:

▶️ YouTube: எங்கள் சேனலை Subscribe செய்யவும்

💬 வலைப்பதிவு வழியாக செய்தி அனுப்ப

🌐 radhaconsultancy.blogspot.com


✨ இந்தக் கட்டுரையை PDF ஆக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் — ஆஃப்லைனில் படிக்கவும், பகிரவும் ஏற்றது!


#மனிதயதார்த்தங்கள் #தமிழ்உளவியல் #HumanRealities #CognitiveDissonance #IntentionBehaviorGap #சொல்வதுஎளிதுசெய்வதுகடினம் #மனிதசுபாவம் #AIForTheRestOfUs