மனித யதார்த்தங்கள்
எனது பார்வையில் மனிதர்களும், மனித மனமும்
பகுதி 4 — "பேச்சில் புரட்சி, செயலில் சமரசம்"
கண்ணன் மீ
செயற்கை நுண்ணறிவு ஆலோசகர் | நிதி ஆய்வாளர் | சிந்தனையாளர்
radhaconsultancy.blogspot.com | 📞 9789692495 | ✉️ radhaconsultancy2014@gmail.com
பேச்சில் புரட்சி, செயலில் சமரசம்
(சுட்டி முதல் ஜல்லிக்கட்டு வரை... ஒரு சமூக மனவியல் உலா)
நினைவலைகளும் நூலகப் பக்கங்களும் — படித்த பாடம் என்ன?
83–84 என்ற குறுந்தொடரை சமீபத்தில் டிடி (DD) தமிழில் பார்த்தேன். பழைய நினைவுகளை அந்தத் தொடர் சட்டென்று கிளறிவிட்டது. அந்தத் தொடர் வந்த காலகட்டம், நான் தூத்துக்குடி ஸ்பிக் (SPIC) நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்த நேரம். நானும் அதே காலகட்டத்திற்குப் பின்னோக்கிச் சென்றேன்.
அங்குள்ள நூலகத்தில் அமர்ந்து நான் படித்த புத்தகங்கள் பல. அவற்றில் சில: 'நான் நலமே, நீயும் நலமே' (I'm OK – You're OK). அப்போதே மனோதத்துவம் எனக்கு ஒரு தனி ஈர்ப்பு தந்தது என்பதை இன்று நினைத்துப் பார்க்கும்போது உணர்கிறேன்.
இன்னொரு புத்தகம்: 'மனிதர்கள் ஆடும் விளையாட்டுகள்' (Games People Play). இது உலகப் புகழ்பெற்ற புத்தகம் என்பது அன்று எனக்குத் தெரியாது, இன்று தெரிகிறது. 'இதை மீண்டும் ஒருமுறை படிக்கலாமா?' என்று இப்போது யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் நான் படித்த மற்றொரு முக்கியப் புத்தகம்தான் 'பிறப்பால் வெல்வதற்கு' (Born to Win). இது எனக்கு இப்போது சட்டென்று நினைவுக்கு வர ஒரு வலுவான காரணம் இருக்கிறது. அந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே ஒரு வாசகம் போட்டிருப்பார்கள்:
"நீங்கள் மிகவும் நேர்மையானவராக இருந்தால், இந்தப் புத்தகத்தைப் படிக்காதீர்கள்!" (If you are straightforward, don't read this book.)
அதற்கான காரணம் அன்று எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால் இன்று பல அனுபவங்களை, பல கார்ப்பரேட் நிறுவன உத்திகளைப் பார்த்த பிறகு, அதன் காரணம் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது!
வியாபார நோக்கங்கள் என்று வந்துவிட்டாலே, எப்படி எல்லாம் பொய்களைச் சொல்லி பணம் பண்ணுகிறார்கள், அடுத்தவர் மனதை எப்படிப் படிக்கிறார்கள், அப்படிப் படித்த விஷயத்தை வைத்துக்கொண்டே அவர்களை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால்... பேசுவது ஒன்று, செய்வது வேறொன்று என்ற இந்த உலகில் நாம் எதையுமே எளிதாக நம்ப முடியாது போலிருக்கிறது!
மென்பொருள் சந்தையும் மாதச் சந்தாவும் — சந்தை விலை சரியானதா?
ஒரு காலத்துல மென்பொருள் (Software) வாங்கின கதை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
அப்போதெல்லாம் ஃபிலாப்பி டிஸ்க் (Floppy Disk) இல்லனா சிடி (CD)-ல ஒரே ஒரு முறை சாஃப்ட்வேர் வாங்குவோம். வீட்ல இருக்குற குடும்ப உறுப்பினர்கள்ல இருந்து ஆபீஸ்ல இருக்குற ஆட்கள் வரைக்கும் அத்தனை பேரும் அதே CD-ய வச்சு ஓட்டுவோம். நுகர்வோருக்கு (Consumer) ஒரே ஒரு முறை செலவு, அந்த சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கும் ஒரே ஒரு முறைதான் வருமானம்!
அப்புறம்தான் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு அந்த "மாபெரும் ஞானோதயம்" வந்தது!
வருமானத்தைப் பெருக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சாங்க. சாஃப்ட்வேர்ல சின்னதா ரெண்டு வசதிகளை மாத்திட்டு, புது பதிப்பு (Updated Version) அப்படின்னு சொல்லி அதே சாஃப்ட்வேரை மறுபடியும் விக்க ஆரம்பிச்சாங்க. நாமளும் வேற வழியே இல்லாம, அந்தச் சின்னச் சின்ன மாற்றங்களுக்காகவே மறுபடியும் முழு பணத்தையும் கொட்டிக் கொடுத்து வாங்கிட்டு இருந்தோம்.
ஆனா, பேராசை யாரை விட்டது?
அடுத்து, "நபர் கணக்கில் உரிமம்" (Per Person License) முறையைக் கொண்டு வந்தாங்க. ரெண்டு பேர் இருக்குற சின்ன நிறுவனத்துக்குக் கம்மி கட்டணம்; ஆட்கள் அதிகமா உபயோகிக்கும் பெரிய நிறுவனத்துக்கோ கை நிறையக் காசு! இப்படித் தங்களோட வருமானத்தைப் பல மடங்கு பெருக்கிக்கிட்டாங்க.
அதோட நிறுத்தினாங்களா... கண்டிப்பா இல்லை!
சாஃப்ட்வேர்ல ஏதாச்சு புது வசதி தர்றாங்களோ இல்லையோ, "வருடாந்திர சந்தா" (Annual Subscription) கட்டாயம்னு மாத்தினாங்க. இப்போ வந்திருக்குறை ஏஐ (AI) கருவிகளோ ஒரு படி மேலே போய், "மாதாந்திர சந்தா" (Monthly Subscription) கேட்குது. இதையெல்லாம் பார்த்த ஹார்டுவேர் (Hardware) தயாரிப்பாளர்கள் சும்மா இருப்பாங்களா? "நாங்கள் மட்டும் என்ன தக்காளி தொக்கா?" அப்படின்னு 'மவுஸ்' (Mouse) பயன்படுத்தக் கூட சந்தா முறை கொண்டு வர துடிச்சுக்கிட்டு இருக்காங்க!
இதையெல்லாம் பார்க்கும்போது நமக்குக் கோபம் வருது. சமூக வலைத்தளங்களில் ஒரு கூட்டமா சேர்ந்து கடுமையாக இந்தப் "பேராசை" பாலிசிகளை எதிர்க்கிறோம். "தண்ணீருக்குத்தான் காசு கொடுத்தோம், அடுத்து சுவாசிக்கும் காற்றுக்கும் சந்தா கட்டுவோம் போலிருக்கே" என்று கிண்டலாகப் புலம்புவோம். இது 'பேச்சில் புரட்சி' — நமது கூட்டு அரங்கில் நடக்கும் கிளர்ச்சி.
ஆனால், 'Agree Terms & Conditions' என்ற பட்டன் திரையில் தெரிந்த நொடியே, நம் விரல் யோசிக்காமல் அதன் மேல் விழுந்துவிடும். ஏனெனில் அந்த சாஃப்ட்வேர் இல்லாம நமக்கு வேலை நடக்காது, வாழ்க்கை ஓடாது. இதுதான் 'செயலில் சமரசம்' — அரங்கில் கர்ஜிக்கும் நாம், வீட்டுக்கு வந்ததும் மெதுவாக சதுர கட்டத்தில் டிக் செய்கிறோம்.
உளவியலில் இதைத்தான் Loss Aversion (இழப்புப் பயம்) என்கிறார்கள் — கையிருக்கும் வசதியை இழக்கும் பயம், புதிய சுதந்திரத்தின் மகிழ்ச்சியை விட நமக்கு வலிமையானதாகத் தோன்றுகிறது. "சந்தையில் ஜெயிக்க வேண்டுமென்றால் இதையெல்லாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்" என்று கார்ப்பரேட் நிறுவனங்களும், "நமக்கு வேலை நடந்தா சரி" என்று நுகர்வோரான நாமும் நம்முடைய முரண்பாட்டை மிக அழகாக நியாயப்படுத்திக் கொள்கிறோம்.
மெரினாவும் காந்திய சிந்தனையும் — காந்திய காலம் கடந்துவிட்டதா?
மெரினா ஜல்லிக்கட்டு. சரித்திரமாகிப் போன போராட்டம். மறந்திருப்பீர்களா? அதையும் கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்ப்போமே. அது எப்படி ஒரு பெரிய போராட்டமாக மாறியது?
அந்தப் போராட்டமே எனக்கு என்றுமே ஒரு புரியாத புதிர்தான். அது நமக்கு ஜல்லிக்கட்டின் மீது இருக்கும் மோகத்தாலா? அல்லது "நமது நண்பர் போகின்றார், நாமும் மெரினாவிற்குப் போவோமே" என்ற உந்துதலா? ஏன் அவ்வளவு பெரிய போராட்டம் பல நாட்களுக்கு நீடித்தது? அந்த உணர்ச்சிகளின் உச்சத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் சரியாக எடுக்கப்படுவதும் இல்லை, அல்லது அதைச் சரியாகச் செய்வதும் இல்லை. அதில் உள்ள உணர்ச்சிபூர்வமான எண்ணங்களை நாம் தொலைத்துவிடுகிறோம்.
நான் பார்த்த ஒரு மனவியல் சிந்தனை என்னவென்றால், அந்தப் போராட்டக்களம் நினைவுக்கு வந்த பிறகு, தினந்தோறும் வாட்ஸ்அப் (WhatsApp) குரூப்புகளில் அந்நியப் பொருட்களுக்கு எதிராக மிகுந்த எதிர்ப்பு போஸ்ட் (Post) வடிவில் வந்துகொண்டே இருந்தது.
காந்திஜி அந்நிய ஆடைகளை எரித்து கதரைப் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னதற்கு ஏற்ப, நாமும் அந்நியக் குளிர்பானங்களைத் தவிர்த்து நமது நாட்டுப் பானமான (வளங்களான) இளநீரைப் பருக வேண்டும் என்று ஒன்றில் இரண்டல்ல... எத்தனையோ போஸ்ட்களை, எத்தனையோ வடிவங்களில் அன்று உருவாக்கி வெளியிட்டோம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அது ஏஐ (AI) இல்லாத காலம். இன்றைக்கு ஒரு மீம் (Meme) ஒரு செகண்டில் AI-ல பறந்து வந்துவிடும்; அன்றைக்கு அதை உருவாக்க யாரோ ஒருவர் Canva மாதிரியான தளங்களில் உட்கார்ந்து, நேரம் ஒதுக்கி, கஷ்டப்பட்டு உழைத்து ஒவ்வொரு போஸ்டையும் தயாரித்தார்கள். அந்த உழைப்பே அந்த ஒற்றுமையின், அந்த ஈடுபாட்டின் அளவுகோலாக இருந்தது.
அது காந்தியின் அந்நிய ஆடை எதிர்ப்பைப் போல் மாறியிருக்க வேண்டும். ஆனால் மாறவில்லை. ஏனென்று சற்றே யோசியுங்கள்.
உதாரணத்திற்கு, ஜல்லிக்கட்டுப் போராட்டக் களத்தை எடுத்துக்கொள்வோம். வீதிகளில் உணர்ச்சி பொங்க ஒரு முழக்கம் எழுந்தது: "வெளிநாட்டுச் பானங்களைப் புறக்கணிப்போம்! உள்ளூர் இளநீரைக் குடிப் போம்!" அது சமூகத்தின் கூட்டு மனசாட்சி (Social Consciousness) உரக்கப் பேசிய தருணம். இதுவும் ஒருவகை 'பேச்சில் புரட்சி'தான்.
ஆனால், போராட்டக் களம் அமைதியான பிறகு என்ன நடந்தது?
ஆரம்பத்தில் இளநீர் விற்பனை சூடுபிடித்தது உண்மைதான். ஆனால், சில மாதங்களிலேயே மக்களின் தனிமனித சௌகரியம் (Individual Consciousness) மீண்டும் பழைய பழக்கத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது. பெரிய குளிர்பான நிறுவனங்களின் விநியோகச் சங்கிலியும் (Supply Chain), எளிதாகக் கிடைக்கும் வசதியும் மீண்டும் மக்கள் பழக்கத்தில் ஜெயித்தன. 'வாய்ச்சொல்லில் வீரரடி' என்ற பழமொழிக்கு ஏற்ப, சமூகமாகச் சேர்ந்து முழக்கமிடுவதும், தனிமனிதனாகத் தன் சௌகரியத்திற்கு ஏற்பச் செயல்படுவதும் மனித இயல்பின் இரு வேறு துருவங்கள். இதுதான் 'செயலில் சமரசம்'.
தமிழில் 'வீட்டுல புலி, வெளியில எலி' என்பார்கள். பாதுகாப்பான சூழலில் இருக்கும்போது 'பேச்சில் புரட்சி' செய்வதும், நிஜமாக ஒரு சிறு அசௌகரியத்தைச் சந்திக்க நேரிடும்போது 'செயலில் சமரசம்' செய்வதும் மனித மனத்தின் தகவமைப்பு உத்தி (Adaptive Strategy).
பேச்சில் புரட்சி செய்வது எளிது; செயலில் சமரசம் செய்வது மனித இயல்பு.
ஏஐ-க்கும் இதே கதையா?
கடந்த சில வாரங்களா, உலகத்தின் மிகப்பெரிய செய்தி சேனல்கள் முதல் நம்ம ஊர் யூடியூப் சேனல் வரைக்கும், எல்லோருமே ஒரே பேச்சு: "ஏஐ (AI) ஷட் டவுன் (Shutdown) ஆக மறுக்குதாம்!", "அது சாண்ட்பாக்ஸை (Sandbox) தாண்டி வெளியே வந்துடுச்சாம்!" — இப்படி ஒரு பரபரப்பு.
மனிதனிடமிருந்து Survival Instinct-ஐயும் அது கத்துக்கிட்டுச்சா என்னமோ? நம்ம மனசைப் படிச்சு, நம்ம பழக்கத்தையே நம்மை விட நன்றாக அது கத்துக்கிட்டுதா என்னவோ! நாம் உருவாக்கும் எந்திரத்திற்குக் கூட, மனிதனின் 'பிழைப்புக்கான நியாயப்படுத்தல்' கற்றுக்கொடுக்கப்படுகிறதா?
காலம்தான் இதற்குப் பதில் சொல்லும்.
சிந்திப்பதே மனிதத்தன்மை. அதைப் பாதுகாப்போம்.
மனித சுபாவங்கள்! எனது பார்வையில்
நான் நடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்கள் — அவர்களின் சுபாவங்கள் உண்மையில் நமது எண்ணங்களின் பிரதிபலிப்பா? மாறுபட்ட முகங்களில் எது அசல்? எது போலி? நாம் காண்பிப்பது எது? நம் அன்றாட வாழ்க்கையைச் சற்றே கவனித்து, நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ளும் ஒரு முயற்சியே இந்த 15 அத்தியாயங்கள் கொண்ட தொடர்.
🔗 பகுதி 1: நமக்கு வந்தால் வழக்கறிஞர், அடுத்தவருக்கு நீதிபதி
🔗 பகுதி 2: வெற்றி எனது, தோல்வி உனது
📌 பகுதி 3: சொல்வது எளிது. செய்வது கடினம்
📌 பகுதி 4: பேச்சில் புரட்சி, செயலில் சமரசம் (நீங்கள் இப்போது படித்தது)
இந்தக் கட்டுரையில் நீங்கள் கண்ட நிகழ்வுகள், உங்கள் சுற்றத்தாரையோ அல்லது உங்களின் சொந்த அனுபவங்களையோ பிரதிபலிக்கிறதா? உங்கள் எண்ணங்களை என்னுடன் கமெண்ட்டில் பகிரலாமே!
கண்ணன் மீ அவர்களுடன் இணைந்திருங்கள்
LinkedIn | Twitter | Instagram | Facebook
மனித ஞானமும், நவீன AI தொழில்நுட்பமும் இணைந்த புதிய பார்வைகளுக்கு எங்களின் வலைப்பதிவைப் பின்தொடருங்கள். 🌐 radhaconsultancy.blogspot.com
நாங்கள் வழங்கும் சேவைகள்:
🔹 AI பயிற்சி & விழிப்புணர்வு (AI Training)
🔹 தனி நபர் முதலீட்டு வழிகாட்டுதல் (Mutual Fund Investments)
🔹 மென் திறன் பயிற்சி & வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் (Soft Skills & Career Guidance)
🔹 மாணவர்களுக்கான பிராஜெக்ட் வழிகாட்டுதல் (Project Work Assistance)
உங்களது குறிப்பிட்ட தேவைக்கேற்ப நேரடியாக என்னுடன் பேசுங்கள் — உங்களது தேவையைப் புதிய கோணத்தில் பார்க்கத் தெரிந்துகொள்வோம்; உங்கள் பிரச்சினைக்கான முடிவு எப்போதும் உங்கள் கையில்தான்!
💡 "பாரபட்சமற்ற, தரமான ஆலோசனைக்கு நம்பிக்கையுடன் அணுகுங்கள்!"
📩 தொடர்பு கொள்ள:
▶️ YouTube: எங்கள் சேனலை Subscribe செய்யவும்
💬 வலைப்பதிவு வழியாக செய்தி அனுப்ப
🌐 radhaconsultancy.blogspot.com
#மனிதயதார்த்தங்கள் #தமிழ்உளவியல் #HumanRealities #பேச்சில்புரட்சிசெயலில்சமரசம் #LossAversion #ஜல்லிக்கட்டு #SocialConsciousness #AIRealities #SubscriptionEconomy #TamilBlog