Showing posts with label Why Should You Invest in Mutual Funds? (ஏன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?). Show all posts
Showing posts with label Why Should You Invest in Mutual Funds? (ஏன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?). Show all posts

Tuesday, 15 August 2023

ஏன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?

 


மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் பணம் எவ்வாறு யூனிட்டாக மாற்றப்படுகிறது? அது எப்படி இயங்குகின்றது?  என்றெல்லாம்பற்றி போன. மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு அறிமுகம் என்ற கட்டுரையில் பார்த்தோம். குறிப்பாக சில நன்மைகளையும் அறிந்துகொண்டோம். இங்கு இப்போது நமக்கு தெரிந்த பல முதலீட்டு வகைகளில் எதை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். ஏன் அவசியம்  மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்? என்றெல்லாம் இங்கு பார்க்கலாம் 

முதலீடு வழிகள் மற்றும் வகைகள்

முதலீட்ட்டின் பல வகைகளில் 

  1. பங்கு,(Equity) பங்கு நேரடியாக வாங்கலாம் விற்கலாம். 

  2. வீடு, இடம் (Real Estate) போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது. இது மிகவும் பிரபலமான எல்லோரும் செய்து வரும் முதலீடு . 

  3. கமோடிட்டி (Commodity) எனப்படும் பொருள்களை வாங்குவது, விற்பது. தங்கம் வெள்ளி என்பது நமக்கு தெரிந்து, அதில் ஆயில, சர்க்கரை போன்றவையும் அடங்கும். 

  4. நாம் எப்பொழுதும்  செய்து வரும், வங்கி வைப்பு . அரசாங்கத்து பாத்திரங்கள். இவை கடன் (Debt) வகை முதலீடுகள் என்ற வகையில் வரும். 

முதலீட்டின் வகைகளின் லாப விகிதங்கள்  

இதில் எந்த வகையில் முதலீடு செய்வது என்று தெரியாமல் கஜானா பெட்டியில் வைத்து பணத்தை அடை காத்ததால்  பணம் பத்திரமாக இருக்கும். ஆனால் பணத்தின் மதிப்பு பண வீக்கத்தால் குறைந்து போயிருக்கும். உதாரணம் இன்றைய  ரூபாய் ₹50,000 கஜானா பெட்டியில வைத்தால் அடுத்த 20 வருடங்க்ளுக்கு அப்படியே இருக்கும். ஆனால் அதன்  வாங்கும் திறன் சுமார் ₹16,000 மட்டுமே இருக்கும். ( 6% சதவிகித பண வீக்கத்தில் ). அதேசமயம் அந்த ₹50,000 ஐ மியூச்சுவல் ஃபண்டுகளில பங்கு திட்டத்தில் முதலீடு செய்தால் அது அடுத்த 20 வருடங்க்ளில் வளர்ந்து குட்டி போட்டு சுமார். 12 லட்சம் ரூபாயாக இருக்கும். பங்கு முதலீடுகள் கடந்த, 2003 – 2023, 20 வருடங்க்ளில். 17 சதவீத லாபம் தந்துள்ளது. கீழே உள்ள 


அட்டவணையில் ஒவ்வொரு வகையான முதலீடும் 20 வருடங்க்ளில் எவ்வளவு வருடாந்திர  லாபம் தந்திருக்கிறது என்பதை பார்க்கலாம். 


இந்திய பங்குகள் 17.2%

அமெரிக்க பங்குகள் 12.9%

தங்கம் 12.0%

நிலம்   9.0%

கடன் பத்திரங்கள்   7.2%

எதை விடுவது, எதை தேர்த்தெடுப்பது 

நிச்சயமாக அதிக லாபம் அதிகரிக்கும் ரிஸ்க் என்பது நமக்கு தெரிந்ததுதான். எனவே இந்த மேலே குறிப்பிட்டுள்ள நான்கு வகை முதலீடுகளில் எவ்வாறு முதலீடு செய்வது?  குழப்பத்தில் தவிக்க வேண்டாம். நீங்கள்   மேற்கண்ட பல வகையிலும் முதலீடு செய்யலாம். நமக்கா நிதி மேலாளர்கள் அந்த செயலை செய்து தருவார்கள் . உதாரணமாக மியூச்சுவல் ஃபண்டுகளில், மல்டி அசெட் திட்டங்களில் நாம் முதலீடு செய்தால் பெரும்பாலும் பங்கு, தங்கம் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து, ஒரே திட்டத்தில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் லாபங்களையும் பெறலாம். தனித்தனியாக முதலீடு செய்யாமல், ஒரே திட்டத்தில் முதலீடு செய்தால் இந்த மூன்றின் நன்மையும் கிடைக்கும். 

மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம் 

நாம்  பங்கில் முதலீடூ செய்ய வேண்டுமென்றால், பங்குகள் வாங்கலாம் உதாரணமாக  இன்போசிஸ் பங்குகள் வாங்கலாம். அந்த பங்கு விலை சற்றே அதிகமாகவே இருக்கின்றது, அப்படியே  நாம் வாங்கினாலும். பங்கு விலை குறைந்தால்  லாபம் இருக்காது, நமக்கு நஷ்டமே கிடைக்கும். ஒரு சில பங்குகள் வாங்குவதால் ரிஸ்க் அதிகம் ஆகுகின்றது . அதற்கு பதிலாக. மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். குறைந்த பணத்தில் பல நிறுவன பங்குகளில் முதலீடு செய்து அதனால் பெரும் நஷ்டத்தை தவிர்க்கலாம். 

மியூச்சுவல் ஃபண்ட்  முதலீட்டீன் நன்மைகள்

  1. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்யும் போது கிடைக்கும் நன்மைகள். நல்ல சிறந்த பங்கு மேலாளர் மூலம் முதலீடு செய்யும் பொழுது அவர்கள் சிறந்த பங்குகளை வாங்கி முதலீடு செய்வதால் நமக்கு வரும் லாபம் அதிகமாகலாம். நஷ்டங்கள் குறைக்கப்படலாம். 

  2. நாம் ஒரு சில பங்குகள் வாங்குவதற்கு பதிலாக அவர்கள் 20, 30 பங்குகளை வாங்குவதால் நமக்கு ரிஸ்க்கு குறைகின்றது. 

  3. அன்றைய தேசத்தின் நிதி நிலைமைகளை பார்த்து, பொருளாதார வளர்ச்சியும், வீழ்ச்சியும் அறிந்து அவர்கள் முன்னமே யூகித்து. சரியான பங்குகளில் நமக்கு முதலீடு செய்வதால், நாம்  தனிப்பட்ட முறையில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் முதலீடு செய்ய மியூச்சுவல் ஃபண்டுகள் துணையாக இருக்கின்றன. 


மியூச்சுவல் பண்டு முதலீடுகள் வாங்குவதற்கும் விற்பதற்கும் எளிதானவை. 

வீடு மற்றும் நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும். அதற்கான கால அவகாசம் பெரும்பாலும் மாதக்கணக்கில் இருக்கும். எளிதாக விற்கவோ அல்லது வாங்கவோ முடிவதில்லை. அதேசமயம் மியூச்சுவல் ஃபண்டுகளை 2,3 தினங்களில் வாங்கிவிட முடியும். நமக்கு அவசர தேவைக்கு பணம் வேண்டும் எனும் போது மருத்துவச் செலவுக்காகவோ அல்லது. தமது குழந்தைகளின் படிப்பு செலவுக்காகவோ, பணம் வேண்டுமெனில் மிக விரைவாக  2, 3 நாட்களில்  அவற்றை விற்று நமது வங்கிக் கணக்கில் பணத்தை பெற்றுவிடலாம். 

கண்கானிப்பு  

நமக்கு ஒரு அச்சம் இருக்கலாம். நாம் எப்படி,  மியூச்சுவல் பண்டு முதலீடுகளை நம்பி முதலீடு செய்வது என்று. அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட செபி, எப்பொழுதும் கண்கொத்தி பாம்பாக மியூச்சுவல் பண்டு முதலீடிட்டு முறைகளை  பார்த்துக் கொண்டே இருக்கின்றது. எனவே நமது முதலீடு. பெரும்பாலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நியாயமான முறையில் செயல்படுவது கண்கூடு. 

வாங்க நீந்தலாம் 

இன்னும் என்ன பயம்? உங்களது முதலீட்டு பணத்தை மியூச்சுவல் பண்டுகளில்  முதலீடு செய்யுங்கள் . கரையிலிருந்து கொண்டு நீந்த  கற்றுக்கொள்ள முடியாது. தண்ணீரில் குதிக்க வேண்டும். லாபம் பெற  மியூச்சுவல் பண்டு வேண்டும் 


உங்களது பண்டு முதலீடுகளுக்கு எங்களை அணுகி பயன் பெறுங்கள் 


தொடர்பு கொள்ள கிளிக் செய்யவும் 


மேலும் படிக்க 


எஸ்.ஐ.பி யில் லாபத்தை அதிகரிக்கும் 6 வழிமுறைகள்


சிறுக சிறுக சேமிக்கலாம்


#MutualFunds

#InvestmentJourney

#FinancialLiteracy