Tuesday, 6 March 2018

LTCG Tax - புதிய வரியால் கூடும் எஸ்.ஐ.பி

My article on "Impact on SIP for Goal based investments because of LTCG Tax" has been recently published in "Nanayam Vikatan". Click here to read the link directly from vikatan website. The same article is given below with more tables for better understanding..

நீண்ட கால மூலதன ஆதாய வரியால் குறிக்கோளுடன் கூடிய முதலீட்டுகளின் மாதாந்திர எஸ் ஐ பி, கூடுகின்றது.

பட்ஜெட் பார்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது. வரிகள் கூடுகிறது. படித்துதான்.  நீண்ட கால மூலதன ஆதாய வரி பத்து சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது. தெரியும். ஆனால் தெரியாத, நாம் படிக்காத, கண்ணுக்கு எளிதில் புலபடாத, எளிதில் புரிபடதா, பாதிப்புகள், சில உள்ளது.  நாம் நமது குழந்தைகளுக்காக அவர்களது திருமணச் செலவிற்காக, அவர்களது உயர் படிப்பு செலவுக்காக, அல்லது நமது ஒய்வு கால வருமானத்திற்க்காக  சிறுகச் சிறுக தேனீ  போல எஸ் ஐ பி, ல் சேமித்து வரும் பணம் ,  படிப்பு, திருமணத்திற்க்கு, பிற்கால வருமாணத்திற்கு போதுமா? பொதுவாக நான் முன்னர் போட்ட திட்டங்களின் படி அதே அளவு பணம் குறிபிட்ட முதிர்வு தொகை நமக்கு கிடைக்குமா? சாத்திய கூறுகள் குறைவு.  நிச்சயமாக ஒன்று மட்டும் சொல்ல முடியும், நாம் கூடுதலாக சற்று பணம் சேமித்தால் மட்டுமே முன்னர் குறிப்பிட்ட அதே தொகையை நாம் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். என்ன சற்று குழப்பமாக உள்ளதா, வாருங்கள் விரிவாக இதை பார்ப்போம்.



முதலில் நாம், நமது வருங்கால தேவைகளுக்காக சுமார் ஒரு கோடி ரூபாய், பதினைந்து வருட முடிவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வருகிறோம்.பெரும்பாலும் நாட்பட்ட குறிக்கோளுடன் கூடிய தேவைகளுக்கு பணம் மியூச்சுவல் பண்ட் ஈக்விட்டி திட்டங்களிலேயே முதலீடு செய்யப்படுகின்றன. எனவே சமீபத்திய பட்ஜெட்டின் படி இந்தத் திட்டங்களில் நீண்ட கால மூலதன ஆதாய  வரியாக பத்து சதவிகிதம் செலுத்தப்பட வேண்டி உள்ளது. ஆகவே நமக்கு கிடைக்கும் முதிர்வு தொகையில்  ஆதாய வரி செலுத்திய பின் கிடைக்கும் தொகை சற்று குறைவு.  முடிவில் நமக்கு கையில் கிடைக்கும்  பணம் நான் முன்னர் போட்ட திட்டத்தின்படி கிடைக்கும் தொகையைவிட நிச்சயம் குறைவாகவே இருக்கின்றது. இதை பற்றி புரிந்துகொள்ள அட்டவணை ஒன்றை பார்கவும். எனவே நாம் முதலில் திட்டமிட்ட  ஒரு கோடி ரூபாய் பெற, நாம் சற்று சிரமப்பட்டு, மெனக்கெட்டு  அதிகமாக சேமிக்க வேண்டியுள்ளது. மாதா மாதம் சுமார் ரூபாய் 1500 அதிகம் செலுத்தினால் மட்டுமே நமக்கு அதே அளவு முதிர்வு தொகை கிடைக்க ஏதுவாக உள்ளது கீழே குறிப்பிட்டுள்ள  முதல் அட்டவணை, அடிப்படை கணக்குகளை வரி விபரத்தை கொண்டுள்ளது. நாம் எவ்வளவு  கூடுதல் பணம் சேமிக்க வேண்டும் என்பதை மற்ற அட்டவணைகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இதில் நான் முக்கியமாகக் கொண்டுள்ள அனுமானங்கள், கிடைக்கும் லாப வருமானம், முதலீடு செய்யும் வருடம். மற்றும் எல்லாக் காரணிகளும்  பட்ஜெட்டுக்கு முன்னும், பின்னும் ஒரே மாதிரியாக உள்ளது, வரியை தவிர என்பதாகும்.

முதல் அட்டவணை
பதினைந்து வருட முடிவில் ரூபாய் ஒரு கோடி பெற மாதா மாதம் முதலீடு செய்ய வேண்டிய தொகை
லாப சதவிகிதம்
12.5%
குறிக்கோளை அடைய வருடங்கள்
15
குறிக் கோளுக்கு தேவையான தொகை
                              1,00,00,000
மாதாமாதம் செலுத்தும் தொகை
                                       20,930
தொகை செலுத்தும் மாதங்கள் (14*12)
                                             168
நாம் செலுத்திய மொத்தத் தொகை ( 168*20930)
                                 35,16,227
எஸ் ஐ பி முடிந்த 14  வருட முடிவில் இருக்கும் தொகை
                                 95,47,532
15 வருட முடிவில் இருக்கும் தொகை
                              1,07,40,974
நமக்குக் கிடைத்த லாபத் தொகை
                                 72,24,746
வரி விலக்கு தொகை
                                    1,00,000
வரிக்கு உள்ளாகும் லாபத் தொகை
                                 71,24,746
வரி
                                    7,40,974
15 வருட முடிவில் இருக்கும் நிகர முதிர்வு தொகை
                              1,00,00,000

அட்டவணை இரண்டு இந்த வரி விதிப்பிற்கு பிறகு நாம் மாதா மாதம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை காண்பிக்கின்றன.

அட்டவணை இரண்டு
தற்போதைய வரி விதிப்பிற்கு பின் மாதா மாதம், நமது குறிக்கோளுக்காக நாம் செலுத்த வேண்டிய தொகை - வருடங்களும் வருமான விகிதங்களும்
10%
12.50%
15%
10 வருடங்கள்
54229
46925
40437
15 வருடங்கள்
26355
20929
16463
20 வருடங்கள்
14362
10359
7356

அட்டவணை மூன்று வரி விதிப்பதற்கு முன் நாம் மாதா மாதம் எவ்வளவு பணம் செலுத்தினால் போதும் என்று எண்ணி திட்டமிட்டோம் என்பதைக் காண்பிக்கிறது.

அட்டவணை மூன்று
வரி விதிப்பிற்கு முன் மாதா மாதம், நமது குறிக்கோளுக்காக நாம் செலுத்த வேண்டிய தொகை - வருடங்களும் வருமான விகிதங்களும்
10%
12.50%
15%
10 வருடங்கள்
51798
44433
37997
15 வருடங்கள்
24781
19486
15204
20 வருடங்கள்
13336
9526
6715

அட்டவணை நான்கு இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு காண்பிக்கிறது இந்த அட்டவணையில் பத்து, பதினைந்து, இருபது வருடங்கள் என்ற காலங்களில் மாதா மாதம் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் தேவை என்பதைக் காண்பிக்கிறது அதேபோல் நமக்குக் கிடைக்கும் வருமானம் 10%,(பத்து), 12.5% ( பண்டிட் புள்ளி அஞ்சு), 15% ( பதிணைத்து), பத்து என்பது குறைந்த பட்ச மாகவும் பதினைந்து என்பது அதிகபட்சமாகவும் இருக்கும் தளத்தில் நாம் சேமிக்கும் மாதா மாதம் தொகை எப்படி மாறுபடுகிறது என்பதை காண்பிக்கிறது. 

அட்டவணை நான்கு
மாதா மாதம், நமது குறிக்கோளுக்காக நாம் செலுத்த வேண்டிய கூடுதல் தொகை - வருடங்களும் வருமான விகிதங்களும்
10%
12.50%
15%
10 வருடங்கள்
2431
2492
2440
15 வருடங்கள்
1574
1443
1259
20 வருடங்கள்
1026
833
641

நிப்டியின் வருமான லாப சதவீதத்தை பார்க்கும் போது கடந்த பத்து, பதினைந்து, இருபது, வருடங்களில் சுமார் பதினொன்று சதவிகிதம் (11%) முதல் பதினான்கு சதவிகிதம் (14%) வரை நீண்டகால முதலீட்டுக்கு  கிடைத்து வந்திருக்கின்றது. எனவே சராசரி சதவிகிதமாக (12.5%) பன்னெண்டு புள்ளி ஐந்து சதவீதம் வருமானத்தை வரும் காலங்களில் கணக்கிற்கா எடுத்து கொள்வது உசிதமாக இருக்கும்

இதில் நாம் முக்கியமாகக் குறித்துக் கொள்ள வேண்டியது பத்து வருடத்தில்  முதிர்வு தொகை பெற, நாம் ஒன்பது வருடங்கள் எஸ் ஐ பி,  செலுத்த வேண்டும் பத்தாம் வருட முடிவில் முதிர்வு தொகை பெறலாம் என்ற நோக்கில் கணக்கிடப்பட்டுள்ளது.

என்ன முதலீட்டாளர்களே,புரிந்ததா?  நடக்கும் எஸ் ஐ பி, யில் சற்று டாப் அப் செய்யுங்கள், மறந்து விட்டு விடாதீர்கள்.

TitBit - 27

TITBIT - 27 - ULIP vs Mutual Funds

Date: 06-03-2018

The LTCG Tax has restarted the fight between these two arch rival.



Wonderful heading and artcile in ET - https://economictimes.indiatimes.com/wealth/invest/think-ulips-can-beat-mutual-funds-after-ltcg-tax-heres-the-winner/articleshow/63053948.cmsSource ET Feb 26, 2018 - TOI 05-03-2018 - 

Key take away : Mutual funds are for superior investments than Ulips

Read previous tidbits : https://radhaconsultancy.blogspot.in/2017/04/asset-allocation.html

Tuesday, 20 February 2018

பிஎன்பி ( Punjab National Bank) முறைகேடுகள் - முதலீட்டாளர்களுக்கு தந்த பாடங்கள்

பிஎன்பி முறைகேடுகள் பதினோராயிரம் கோடி ( 11000 0000000). எத்தனை சைபர்கள் என்று என்ன முடியாதபடி, முறைகேடுகள், ஊழல்கள்.  இதற்கு நடுவில் நாம் நியாயமாக முதலீடு செய்து லாபம் பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.  பிஎன்பி, வங்கி முறைகேடுகள் பற்றி அறிந்து இருப்பீர்கள். அறியாதவர்களுக்கு ஒரு குறுந்தகவல், நாட்டின் இரண்டாவது பெரிய  அரசு வங்கியில் முறைகேடுகள் என்று தகவல். தற்சமயம் சி.பி.ஐ விசாரணை  நடந்து வருகின்றது. தற்போதைய தகவல் படி முறைகேடுகளின் அளவு பதினோராயிரம் கோடி, அதற்கு மேலும் போகலாம். இது என்ன வகையான முறைகேடு? யார்யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? எப்படி நடந்தது? என்று விளக்குவது இல்லை இந்தக் கட்டுரை! ஆனால் இதுபோன்ற, அதில் துளியும் சம்பந்தம் இல்லாத நம்மைப் போன்ற முதலீட்டாளர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்ப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.



முதல் பாடம்

இந்த முறைகேடுகளால் முதலீட்டாளர்களுக்கு அதாவது பங்கில் நேரடியாக முதலீடு செய்பவர்களுக்கும், மற்றும் மியூச்சுவல் பண்ட்  மூலம் முதலீடு செய்பவர்களையும் எப்படி பாதிக்கிறது என்று பார்ப்போம். நாங்கள் அடிக்கடி சொல்வதுண்டு நேரடி பங்கு முதலீட்டில் அதிகம் ரிஸ்க் என்றும் மியூச்சுவல் பண்ட் பங்கு முதலீட்டில் ரிஸ்க் குறைவு என்றும், இது இப்போது உறுதி செய்யபடுகின்றது.   உதாரணமாக நீங்கள் சுமார் ஒரு லட்சம் ரூபாயை முறைகேடு தகவலுக்கு முன் பிஎன்பி  ல் முதலீடு செய்திருந்தால் அது இன்றைய தேதியில் 22.3% சதவிகிதம் குறைந்து 77,000 ஆயிரமாக இருக்கும். அதேசமயம் ஒரு டைவர்ஸிபைடு மியூச்சுவல் பண்டில் ( Diversified equity mutual fund)  முதலீடு செய்திருந்தால் இவ்வளவு குறைந்து இருக்காது, லார்ஸ் கேப் திட்டங்கள்  சராசரியாக -0.28% குறைந்துள்ளது காரணம் எந்தவொரு மியூட்சுவல் பன்ட்  திட்டமும் தனிப்பட்ட பங்குகளில் ஐந்து சதவீதத்திற்கு மேல் முதலீடு  செய்வது இல்லை. எனவே நேரடி பங்கு முதலீட்டில் ரிஸ்க் அதிகம். இது போன்ற முறைகேடு வரும்போது அந்த பங்கில் முதலீடு செய்த அனைவரும் அதிகபட்சம் பாதிக்கப் படுகிறார்கள். ஹச் டி எப் சி புருடென்ஸ் திட்டம் பி என்பி பங்கில் வேல்யூ ரிசர்ச் தகவல்படி,  ஐனவரியில் 728 கோடி, அதாவது, அதன் மொத்த முதலீட்டில் 1.85% வைத்திருத்த்து. இதனால் இந்த திட்டத்தின் பாதிப்பு நேரடி பங்கு முதலீட்டை விட நிச்சியம் குறைவாகவே இருக்கும்.

இந்த பிஎன்பி முறைகேடுகளால் பிஎன்பி மட்டும் பாதிக்கபடுவதில்லை, இந்த முறைகேட்டுடன் தொடர்புடைய மற்ற வங்கிகளும், நிறுவனங்களும் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக அலகாபாத் வங்கி, யூனியன் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ் பி ஐ வங்கி, கீதாஞ்சலி ஜெம்ஸ் என்று பல நிறுவனங்கள  இதனுடன தொடர்பு கொண்டவை என்று சில தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளது. இது போன்ற நேரங்களில் அந்தந்த பங்குகளின் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது.

பங்கு
12/02/18
16/02/18
வித்தியாசம்
சதவிகித மாற்றம்
கீதாஞ்சலி ஜெம்ஸ்
62.85
37.55
-25.3
-40.3%
பி என்பி வங்கி
161.65
125.65
-36
-22.3%
அலகாபாத் வங்கி,
61
54.75
-6.25
-10.2%
யூனியன் வங்கி
127.5
118.3
-9.2
-7.2%
எஸ் பி வங்கி
288
271.75
-16.25
-5.6%
ஆக்சிஸ் வங்கி
562
537
-25
-4.4%
பி எஸ்   வங்கி
29080
28396
-684
-2.4%
பி எஸ் சென்செக்ஸ்
34292
34016
-276
-0.8%

இரண்டாவது பாடம்

நாம் நமது நேரடி முதலீடுகளில் இந்த நிறுவனங்களில் குறிப்பாக வங்கிகளில்  முதலீடு செய்திருந்தால் நமது முதலீட்டுக்கு பாதிப்புகள் அதிகம் இருக்கும். இந்த முறைகேட்டால் வங்கி சார்ந்த முதலீடு அல்லது வங்கி சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் நஷ்டம் அதிகமாக இருக்க வாய்புகள் உள்ளது. எனவே இந்த முறைகேடுகள் கற்றுத்தரும் இரண்டாவது பாடம் நாங்கள் முன்னர்  சொல்வது போல்  டைவர்ஸிபைடு மியூச்சுவல் பண்டு திட்டங்களை விட அதிக ரிஸ்க் வாய்ந்தது செக்டார் பண்டு ( sector funds)  எனப்படும் இந்த வங்கி சார்ந்த திட்டங்கள் ஆகும். எனவே ரிஸ்க் அதிகம் விரும்பாதவர்கள் பரந்த பங்கு முதலீட்டு திட்டங்களில் ( Diversified equity schemes) முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற குறிப்பிட்ட வங்கி திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் அதன் ரிஸ்க் தன்மையை உணரந்து  முதலீடு செய்ய வேண்டும் என்று இந்த பிஎன்பி முறைகேடு கற்றுத்தரும்  பாடம்.

மியூச்சுவல் பண்ட திட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் சதவிகித சரிவு
நிப்டி பி எஸ் யூ வங்கி
-2.49%
Nifty PSU bank index
பி எஸ்   வங்கி
-2.40%
BSE bankex
வங்கி திட்ட சராசரி
-1.41%
Mutual fund banking sector funds
நிப்டி வங்கி
-1.02%
Nifty bank index
பி எஸ் சென்செக்ஸ்
-0.84%
BSE Sensex
நிதி நிறுவன திட்ட சராசரி
-0.62%
Mutual fund Financial  sector funds
மல்டி கேப் திட்ட சராசரி
-0.37%
Mutual fund Multi cap equity funds
லார்ஸ் கேப் திட்ட சராசரி
-0.28%
Mutual fund Large cap equity funds

மூன்றாவது பாடம் 

மேலும் பி என்பி யின் நிதி நிலமை குறியீடு வருங்காலங்களில், இந்த முறைகேட்டால் மாற்றபடலாம் ( credit rating)  - இதனால் இந்த வங்கி விநியோகித்துள்ள கடன் பத்திரங்களின் ( bonds issued by PNB) விலை குறையும் அபாயமும் உள்ளது. இதனால் இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள மியூச்சுவல் பண்டு  திட்டங்களின் என்.எ.வி குறைய வாய்புகள் உள்ளது. யூ டி ஐ ஷார்ட் டேர்ம் திட்டம் (UTI Short term Plan)  பி என்பி கடன் பத்திரங்களில்  255 கோடி, அதாவது, அதன் மொத்த முதலீட்டில் 2.47% ஐனவரியில் வைத்திருத்த்து.

நாலவது பாடம் 

பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடுகள் என்பது கப்பலில்  பயணிப்பது போன்றது. முறைகேடு போன்ற சூறாவளிகளும்,  பணம் விழுங்கும் திமிங்கலங்கழளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். திமிங்கலங்கள் இல்லாத கடல்கள் இல்லை. அது இல்லாத கடலில் பயணித்து அக்கரை செல்வது என்பது லாபம் தரும் விஷயமாகவும் இல்லை. எனவே எந்த கப்பலில் எந்த வழியில் சென்றால் சூறாவளியும் திமிங்கலங்களும் இல்லாமல் லாபம் பெறலாம் என்று பார்ப்பது நம் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் நாம் நன்கு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் பங்குகள். பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடுகளைச் செய்யும்போது இதுபோன்ற முரண்பாடு சூறாவளி களையும் திமிங்கலங்களையும் எதிர் நோக்கித்தான் ஆக வேண்டும் இதுவே நிதர்சனம்.

சத்தியம் (Sify) நிறுவணத்தின் முரண்பாடுகளின் போது நிறைய கேள்விகள், நிறைய பதில்கள். அப்போது இதை முற்றிலும் தடுத்துவிட முடியுமா என்று பல ஆலோசனைகள். பெரிய முறைகேடுகளை குறக்க முடியுமே தவிர முற்றிலுமாக தவிர்க்க முடியுமா என்பது கேள்விக் குறியே. வரும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இப்போது நாம் எதை எதிர்பார்க்கலாம்? 
  • வங்கிகள் தங்களது கொடுக்கல் வாங்கலில் புது கட்டுபாடுகளை  கொண்டுவருவார்கள் 
  • இதுபோன்ற பரிமாற்றங்களை நுட்பமாக ஆராய்ந்து வழி நடத்துவார்கள். 
எனவே இதுபோன்ற முறைகேடுகள் இனிமேல் குறைக்கப்படலாம், தவிர்க்கப்படும் ஆனால் முறைகேடு வேறு ரூபத்தில் வேறு ஒரு நிறுவனத்தில் வேறு ஒரு சமயத்தில் வராது என்று எப்படி இப்போது சொல்ல முடியும்.  முடிந்தவரை முறைகேடுகளில் பணம் பறி போகாமல் முதலீடு செய்ய முயலுவோம்!


Find the links below to read more:


Tuesday, 13 February 2018

TitBit - 26

TITBIT - 26 - Putting their money where their mind is

Date: 11-02-2018

Top executives reveal their traditional method of saving, as well as the new age idea that they invest in.

ASHISH GOEL, Cofounder, UrbanLadder
"Mutual funds provide me with fluid investment options that are closer to traditional investments, but also reliable from a long-term perspective"

NITHIN KAMATH, CEO, Zerodha
"For traditional investments, SIP in an ELSS is a must; it reduces the risk from market volatility"

DIVYANK TURAKHIA, Founder, Media.net
"Whether you use ETFs or mutual funds, deploy only as much that will allow you to stay invested across a long multi-year time frame"

ANANTH NARAYANAN, CEO, Myntra
"For higher returns, I invest in mutual funds"

KARAN BHAGAT, CEO, IIFL Wealth
"My asset allocation has always been heavily skewed towards equity. I am a long term buy-hold investor, I do not try to time the market. My core equity portfolio is diversified mix of direct equity and mutual funds"

Key take away: Mutual funds are indispensable part of the investments

Read More:

1) Source TOI 10-02-2018 - https://epaper.timesgroup.com/Olive/ODN/TimesOfIndia/#


2) Previous tidbits : https://radhaconsultancy.blogspot.in/2017/04/asset-allocation.html

Tuesday, 6 February 2018

பட்ஜெட்: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்னென்ன பாதிப்புகள்..!

My article on "Impact of budget proposal on Mutual Funds" has been recently published in "Nanayam Vikatan". Click here to read the link directly from vikatan website. The same article is given below..

பட்ஜெட் 2018-19 ஆல்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் என பார்ப்போம். 

பிப்ரவரி 1  பட்ஜெட், 
பிப்ரவரி 2 சென்செக்ஸ்  839 புள்ளிகள் சரிவு,
பிப்ரவரி 5  சந்தையில் இறக்கம்.


ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில், நீண்ட கால மூலதன ஆதாய வரி, ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு 10% கட்ட வேண்டும். இது 01-02-2018 முதல் நடைமுறைக்கு வரும். மேலும், விலைவாசி உயர்வு சரிகட்டல் (இண்டெக்ஸேஷன்)  செய்ய இயலாது.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் டிவிடண்ட் விநியோக வரி 10%   01-04-2018  முதல் அமலுக்கு வரும்.

இந்த இரண்டு விஷயங்களும் முக்கியமாக மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களை பாதிக்கும் வகையில் உள்ளது. அந்தப் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்று இப்போது பார்க்கலாம்.

தற்சமயம் கடன் சார்ந்த ஃபண்ட்களுக்கு 25% டிவிடெண்ட் விநியோக வரி உள்ளது. பட்ஜெட்க்கு பிறகு ஈக்விட்டி ஃபண்ட்களுக்கு 10% டிவிடெண்ட் விநியோக வரி இருக்கும்.

ஈக்விட்டி ஃபண்ட்களில் குறிப்பாக டிவிடெண்ட் ஃபண்ட்கள் என்பது மிகவும் பிரபலமான ஒன்று. இந்த புதிய வரி விதிப்பு காரணத்தால் இந்த டிவிடண்ட் ஃபண்ட்கள் பிரபலம் சற்றே குறையலாம்.

குறிப்பாக பேலன்ஸ்ட் ஃபண்ட்களில் மாத வருமானத்தை மனதில் கொண்டு முதலீடு செய்தவர்களுக்கு மாத டிவிடண்ட் வருவாய் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. உதாரணமாக மாத டிவிடண்ட் வருமானம் 1,000 ரூபாயாக இருக்கும் சமயத்தில் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து அது 900 ரூபாய்க்கு மாறலாம்.

டிவிடெண்ட் விநியோக வரி 01/04/2018 முதல் நடைமுறைக்கு வருவதால் இடைப்பட்ட பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஈக்விட்டி ஃபண்ட்களிலிருந்து கணிசமான டிவிடெண்ட் முதலீட்டாளர்களுக்கு வர  வாய்ப்பு உள்ளது. காரணம் 31/03/2018-க்கு  முன் ஈக்விட்டி ஃபண்ட்களில் டிவிடண்ட்க்கு வரி கிடையாது. 

தற்சமயம் ஈக்விட்டி சார்ந்த பேலன்ஸ்ட் ஃபண்ட்கள் வரும் காலங்களில் கடன் சார்ந்த பேலன்ஸ்ட் ஃபண்ட்களாக மாற்றக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன.

சில பங்குச் சந்தை சார்ந்த பேலன்ஸ்ட் ஃபண்ட்கள் தொடர்ந்து இரண்டு இலக்கு (10% -12%)  லாபம் கொடுத்து வந்த  நிலையில் இனி அந்த லாபம் கிடைக்குமா என்பது கேள்வி குறியே. 10% டிவிடெண்ட் விநியோக வரி, சந்தையின் போக்கு மற்றும் உலகச் சந்தையில் குரூட் ஆயிலின் விலை, மற்றும் தேர்தல் வருடம் போன்றவை லாப விகித்த்தை பாதிக்கும்  காரணிகளாக  உள்ளன.

டிவிடெண்ட் விநியோக வரியால் ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் லாபம் குறையும். எனவே, இந்த ஃபண்ட்களுக்கு ஆதரவு குறைய  கூடும்.

புதிய நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பில் 31-01-2018 வரை கிடைத்த லாபத்திற்கு வரி செலுத்த தேவையில்லை. 01/02/2018 முதல் ஈக்விட்டி ஃபண்ட்களில் ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட  லாபத்திற்கு 10% வரி கட்ட வேண்டும். லாபத்தை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்படலாம்.  இது முதலீட்டாளர்களுக்கு தலைவலியாக கூட இருக்கலாம். வரி கட்ட வேண்டிய லாப கணக்கீடு செய்வதற்கு இரண்டு என்.ஏ.வி பதிலாக நமக்கு மூன்று என்.ஏ.வி  தேவைப்படுகிறது. வாங்கிய என்.ஏ.வி, 31-01-2018 என்.எ.வி மற்றும் விற்ற என்.ஏ.வி,    மூன்றும் இருந்தால் மட்டுமே லாபத்திற்கு  எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்று கணக்கிட முடியும்.

பட்ஜெட்டால் ஈக்விட்டி ஃபண்டுகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. கடன் ஃபண்ட்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை 3.5% ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுவதால் அது பங்குச் சந்தையைப் பாதித்து வருகிறது. கடன் சார்ந்த ஃபண்ட்களில்  லாபமும் குறைந்து வருகிறது.  10 வருட அரசு கடன் பத்திரங்களின் வருமானம் 7.5% ஆக அதிகரித்துள்ளதால், கடன் சார்ந்த ஃபண்ட்களின் லாபம் குறைந்து, கடந்த ஒரு வருட காலத்தில் கடன் சார்ந்த டைனமிக் பாண்ட் ஃபண்ட்களின் லாபம் 5%  அல்லது அதற்கும குறைவாக உள்ளது.

தற்போதய சூழலில் குறுகிய கால கடன் சார்ந்த ஃபண்ட்களில் முதலீடு செய்தால், கூடுதல் வருமானம் கிடைக்கும்.