Thursday, 24 January 2019

TITBIT - 40 - Smart Money moves for 2019


  1. USE SIP'S TO BENEFIT FROM VOLATILITY
  2. HARVEST CAPITAL GAINS FROM EQUITY MUTUAL FUNDS 
  3. INVEST IN THE NAME OF A SENIOR CITIZEN PARENT 
  4. TIME TO SERIOUSLY CONSIDER NPS 
  5. CONSIDER SHORT TERM DEBT FUNDS

என்.சி.டி (NCD) - நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் - 10 அம்சங்கள்

To read the same article in English - Click here

யாம் வங்கிகளில் அதிகம் வைப்பு நிதி ( Bank Fixed deposits) வைத்துள்ளோம். அதேசமயம் வட்டி அதிகமாக, வங்கிகளின் வைப்பு நிதி   வட்டியை விட அதிகம் கிடைக்கும் முதலீட்டை  விரும்புகின்றோம். வங்கிகளின் வைப்பு நிதிக்கு மாற்றாக மீயூச்சுவல் பண்டுகளின் கடன் முதலீடுகள் ( Debt based mutual funds) சிறந்தது என்று அவ்வப்போது பேச படுகின்றது. இருந்தாலும் அதிகம் பேர் அதன் பக்கம் போவதே இல்லை.  காரணம் மீயூச்சுவல் பண்டுகளின் கடன்  முதலீட்டில்  வட்டி அல்லது லாப விகிதம் ஒரே சீராக இருப்பதில்லை. சில சமயங்களில்  வங்கியில் கிடைக்கும் வட்டியை விட மீயூச்சுவல் பண்டுகளின் கடன் பத்திர லாபம் குறைவாக   இருக்கிறது.  தற்சமயம் இதுவே நிதர்சனமாக உள்ளது. இதுபோன்ற தருணங்களில் வங்கி வைப்பு நிதியை விட வட்டி அதிகம் வர வேண்டும், ஒரே சீராக வர வேண்டும், குறிப்பிட்ட வட்டி விகிதம் கிடைக்கவேண்டும்  என்று பார்த்தால் இந்த எல்லா அம்சங்களும் பொருந்தி வரக்கூடிய ஒரே முதலீடு நிறுவனங்களின் கடன் பத்திரங்கள். நிறுவனக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய பார்க்க வேண்டிய பத்து அம்சங்களை இங்கு பார்ப்போம்

1. குறிப்பிட்ட இடைவெளியில் குறிப்பிட்ட வட்டி விகிதம் 
குறிப்பிட்ட வட்டி விகிதம் குறிப்பிட்ட இடைவெளியில் முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றது. இது மீயூச்சுவல் பண்டுகளின்  கடன் பத்திரங்களில் கிடைக்கும் லாப விகிதம் ஏறி இறங்குவது போல், இருப்பதில்லை.  எனவே வங்கி வைப்பு நிதி போன்றே இதில் குறிப்பிட்ட தேதிகளில் முதலீட்டாளர்களுக்கு வட்டி கிடைத்துவிடும்.

2. வட்டி பெறும் முறை 
மாதத்திற்கு ஒரு முறை, அல்லது வருடத்துக்கு ஒரு முறையும், முதலீடு முடிவடையும்போது  வட்டி பெற்றுக் கொள்ளும் முறையும் உள்ளது. முதலீட்டாளர்கள் விரும்பிய முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.

3. முதலீட்டு காலம்
முதலீட்டு காலமும் மூன்று, ஐந்து, பத்து வருடங்கள் என்ற வகையில் உள்ளது. முதலீட்டாளர்கள் விரும்பிய காலத்திற்கு முதலீடு  செய்து கொள்ளலாம். 

4. சந்தை பரிமாற்றம்
வங்கி வைப்பு நிதியில் ஒருவர் பெயரில்  இருந்து இன்னொருவர் பெயருக்கு மாற்ற முடியாது. இந்த நிறுவன நிதி கடன் பத்திரங்களை சந்தையில் விற்கவும், வாங்கவும் முடியும். ஒருவர் பெயரில்  இருந்து இன்னொருவர் பெயருக்கு மாற்ற முடியும் ( Transferable instruments)

5. முதிர்வுக்கு முன் பணம் பெறுதல்
வங்கி வைப்பு நிதியில் முதலீடு முடிவடையும் முன்னர் பத்திரத்தை திருப்பி செலுத்தி குறைந்த வட்டியில் பணம் பெறலாம். இந்த கடன் பத்திரங்களை, நிறுவனங்கள் முடிவடையும் முன்னர் திருப்பி  பெறுவதில்லை.  முன்னர் கூறியபடி சந்தையில் விற்று பணம் பெறலாம்

6. ஈடு செய்யப்பட்டுள்ள கடன் பத்திரங்கள் 
பெரும்பாலான நிறுவன கடன் பத்திரங்கள் செக்கூர்ட் ( Secured NCD) வகையை சார்ந்தது. அதாவது ஈடு செய்யப்பட்டுள்ள கடன் பத்திரங்கள்.  ஏதாவது ஒரு காரணத்தால் நிறுவனம் பணத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப தர முடியாத நிலை ஏற்படும் போது அதற்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை விற்று அதில் வரும் பணத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்க சட்டத்தில் வழி வகைகள் உள்ளது. இது போன்ற அமைப்பு வங்கி வைப்பு நிதியில் இல்லை இது கடன் பத்திரங்களின் மிகச்சிறந்த அம்சமாகும்

7. வட்டி விகிதமும் கிரெடிட் ரேட்டிங்
 நிறுவன கடன்  பத்திர முதலீட்டில் கவனிக்க வேண்டிய  முக்கிய அம்சம் கிரெடிட் ரேட்டிங் . ரேட்டிங் அதிகமாக (AAA) இருக்கும்போது சற்றே குறைவாக வட்டி கிடைக்கும் ரேட்டிங் குறைவாக ( A) இருக்கும்போது வட்டி அதிகமாக கிடைக்கும் இதை அட்டவணையில் பார்த்து புரிந்து கொள்ளலாம்

8. டிமேட்டும் கடன் பத்திமும்
இந்தக் கடன் பத்திரங்கள் டிமேட் முறையில் பெறப்படுகின்றது

9. வட்டி விகித அனுமானங்கள்
பொதுவாக வட்டி விகிதம் ஏறி வந்த நிலை மாறி குறையும் வாய்ப்புகள் உள்ளதாக நம்பப்படுகின்றது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவால் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்வே சந்தை வட்டி வகிதம் மேலும் ஏறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது இந்த தருணத்தில் அதிக வட்டி வரும் முதலீட்டு  சந்தர்ப்பங்கள் குறைவே. எனவே இதை பயன்படுத்தி இந்தக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய சிந்திக்கலாம்

10. முதலீட்டிற்கு தக்க தருணம் இதுவே
 ஐ எல்  எப் எஸ் நிகழ்வுக்கு (ILFS Episode) பிறகு நிதி நிறுவனங்களுக்கு அன்றாட பண பரிமாற்றத்திற்கு பணம் கிடைப்பது மிகவும் சிரமமாக  உள்ளது .எனவே முதலீட்டாளர்களை கவரும் வண்ணமாக தாங்கள் அளிக்கும் வட்டி விகிதத்தை தற்சமையம் சற்று அதிகரித்துள்ளார்கள். எனவே முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுபோன்ற நிதி நிறுவன கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணமாக  கருதப்படுகிறது

உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டுமற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் நன்றி 

Friday, 11 January 2019

What is NCD? 10 things to know about Non Convertible Debentures

To read the article in Tamil  as published by  Nanayam vikatan  - Click here
To read the same article in Tamil as published in blog - Click here

Data updated on 21/01/2019

10 things to know about NCD:


Fixed Deposit is nothing new to us, literally everyone has invested some of their savings in Bank Fixed Deposit during some point of time. But at the same time, we love those investments that give us more returns than Fixed Deposits. It has already been talked about that, Debt based Mutual Funds are a better investment than Fixed Deposits. A lot of people are aware about it, but not many have actually made an investment in it. One of the reason could be, the returns from Mutual Funds is not fixed. There have been cases where the returns from mutual funds have been lesser than Fixed Deposits. To keep receiving stable higher returns than Fixed Deposits, we can invest in Non-Convertible Debentures.

So, what is Non-Convertible Debentures (NCD)? Let us take a look at 10 things about Non-Convertible Debentures:

1. Fixed interest rate for a specific time period

Investors get a specified return interest for a fixed time. The interest is not going to fluctuate like it does in some Mutual Funds. Hence, investing in Non-Convertible Debentures means, you will get your specified interest at the opted intervals.

2. The way you receive interest

There are different options for investors to get their returns. It could be once a month, or once a year, or during the end of its term.

3. Investment Time period

There are different options for Investment Time Period too, like 3 years, 5 years or 10 years. The investor can choose their preferred time periods.

4. Transferable Instruments

Fixed Deposits cannot be transferred from one person to another. However, Non-Convertible Debentures can be transferred from one person to another and hence can be sold and bought in the market.

5. Getting money before Maturity

You can break a Fixed Deposit and take your money back with a reduced interest rate. However, in terms of Non-Convertible Debentures, the institution will not allow you to break before its maturity. As indicated in point 4, you can sell it in the market and receive the proceedings.

6. Secured Non-Convertible Debentures

Most of the NCD’s are Secured NCD’s. In a situation where the institution is not able to return the investors’ money, there is a provision where trustees must sell underlying assets secured for the NCD and distribute the proceedings to the investors. This provision is not available in Fixed Deposits. Its one of the highlights of Non-Convertible Debentures.

7. Interest Rate and Credit Rating

An important feature to keep a close eye out for is the Credit Ratings. If an NCD has a high rating (AAA), then its return percentage would be less. If an NCD has a low rating (A), then its interest rate is high.

8. DMAT & Non-Convertible Debenture

NCD’s are obtained in the form of DMAT.

9. Interest rate scenario

The interest rate outlook has changed from a rising trend to a stable or otherwise. The crude oil prices have gone down and the inflationary pressures are less, and in this scenario, the interest rates will not increase again. Because of this, the opportunity to invest in high interest rate instruments are less. Hence, we should use this opportunity to get 9+ % interest rate by investing in NCDs and it may turn out to be a good option.

10. Opportune time

After ILFS episode, Non-banking finance companies are finding it difficult to meet their cash requirements to grow their business. In this backdrop, they are trying to woo the investor with higher interest NCD options. Investor can use this opportune time and invest in good company NCD with attractive interest rates.


NCD's currently open for subscription:

Institutions Name
Mahindra
Sriram Transport
India infoline
Credit Rating
AAA
AA+
AA
Minimum Monthly Time Period
39 Months
36 Months
39 Months
Interest Type
Once a Year
Once a Year
Once a Year
Interest Rate
9.05%
9.40%
9.60%
Buying NCD Deadline Day #
25-01-2019
31-01-2019
20-02-2019
Current status
Closed

Will open on 22- Jan 2019


# The buying deadline day can be earlier than the date mentioned above. This is decided by the institution and once they receive the funds they estimated, they will decide. Hence, if you have decided to invest in NCD’s, then without any delay, invest quickly on them.

If you like this article, please share this on your Whatsapp/Facebook /Twitter. This would be a special gift which you would be giving to our blog.

Monday, 24 December 2018

TITBIT - 39 - Tax saving - Play safe - Avoid Pitfalls

Period : Tax saving season

Looking for the right time to save tax? This is it... Now is the best time!
Don't wait till March 31 to invest in tax saving funds.
Plan ahead and avoid the last minute mad rush and pitfalls - to know more about common tax savings traps Click here - (Source ET Wealth)

Choose ELSS - Equity Linked Savings Scheme - It is one of the better tax saving options available.

Eager to know more about ELSS and Tax Savings? Click the links below:

Tax Savings Part 1

Tax Savings Part 2 / ELSS

HDFC Tax Saver

Previous TitBits

Tuesday, 18 December 2018

வெள்ளிவிழா பண்ட்கள் - ஒரு இலட்சம் ஒரு கோடி ஆவது எப்போது ?

Click here to read this article in English

25 வருடங்களை தாண்டி
டிசம்பர் 1, 2018 நல்லதொரு நாளாக சில முதலீட்டாளர்களுக்கு அமைந்துள்ளது.   பிராங்கிளின் இந்தியா நிறுவனத்தின் இரண்டு பண்ட்கள், ( Franklin Templeton) டிசம்பர் 1, 1993 தொடங்கியதில் இருந்து ,  25 வருடங்களை கடந்து வெற்றி வாகை சூடி இன்றும் தொடரந்து கொண்டிருக்கின்றது.  நான் எழுதிய வெற்றிவாகை என்பதை எனது வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டாம், அருகில் இருக்கும் அட்டவணையை  நீங்களே பாரத்து தெரிந்துகொள்ளலாம்.  

ஆண்டுக்கு 20% அல்லது அதற்கு மேலும் லாபவிகிதம் ( CAGR) கிடைப்பது என்பது மிகச் சிறந்த முதலீட்டு லாபம் ஆகும். இது போன்ற லாபம் தங்க,  வங்கி வைப்பு நிதிகளில் மற்றும் நிறுவன வைப்பு நிதிகளில் நமக்கு கிடைப்பதில்லை. ரியல் எஸ்டேட் மற்றும் அசையா சொத்து முதலீட்டில் இதுபோன்று முதலீட்டு லாபம் சில சமயம் கிடைக்க வாய்ப்புள்ளது.

முதலீட்டாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி - எனது பண்ட் முதலீட்டில் இரண்டு வருட லாபம் குறைவாக இருக்கிறது, எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கவில்லை என்று குறைபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது குழந்தைகள் ஒரு மாதத்தில் பிறப்பதில்லை. பத்து மாத காலம் பொறுத்திருக்க வேண்டும். பொறுத்தார் பூமி ஆழ்வார். இது  போலவே பங்கு பண்ட்கள் முதலீட்டில் ஒரு வருடத்திற்கு பதிலாக 10 வருடம் பொறுத்திருக்கும் போது லாபம் கிடைக்கின்றது. பொதுவாக 7 முதல் 10 வருடங்களுக்கு மேல் பங்கு பண்டுகளில் முதலீடு செய்திருக்கும் போது நஷ்டம் இல்லை. 10 வருடத்திற்கு  மேல் பங்கு, பண்ட் முதலீட்டில் வங்கி வைப்பு நதிகளை விட அதிக லாபம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

நடிகர் ரஜினி தன் படத்தில், முன்னர் சொன்னது நான் 1 தடவை சொன்னால், 100 தடவை சொன்னது போல…. இது போலவே நாம் போட்ட 1 லட்சம், இன்று 100 லட்சமாக இந்த பண்ட்கள் நமக்கு திருப்பி வழங்கி உள்ளது.

பிராங்கிளின் டெம்பிளிடான் பண்ட்கள்
நல்ல நிறுவனங்களில் நல்ல பண்ட்’ல் நீண்ட கால முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதற்க்கு இந்த இரண்டு பிராங்களின் இந்தியா புளு சிப் பண்ட் ( Franklin India blue-chip) மற்றும் பிராங்களின் இந்தியா பிரைமா பண்ட் ( Franklin India Prima )  சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

25 வருட பண்ட் லாப விபரம் -31-10-2018
பண்ட்
முதலீட்டு தொகை
தற்போதைய மதிப்பு
மடங்கு
பண்ட் லாப விகிதம்
குறீயிட்டின் லாப விகிதம்
குறீயிடு
பிராங்களின் இந்தியா புளு சிப் பண்ட்
100000
10300000
103
20.45%
11.43%
நிப்டி
பிராங்களின் இந்தியா பிரைமா பண்ட்
100000
8804000
88
19.67%
11.90%
நிப்டி மிட் கேப்

பங்கும் காலமும்
இன்னொரு ஆய்வு சொல்கிறது பங்கு பண்ட் சார்ந்த திட்டங்களில் முதலீட்டின் ஆயுட்காலம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள்.  அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு வருடங்கள். இந்த மிகக் குறுகிய காலத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.  எனவே பங்கு முதலீட்டில் அதிக வருடங்கள் முதலீடு செய்யும்போது லாபம்  அதிகரிக்கிறது. உதாரணமாக,  குழந்தை பிறந்தவுடன் பங்கு பண்டில் முதலீடு தொடங்கி  அவர்கள் பெரியவர்களாகி வரன் தேடும்போது அல்லது அவர்களது மேற் படிப்பிற்கு  பண்டில் இருந்து கிடைக்கும் தொகை நல்லதொரு வரவாவது கண்கூடாக தெரிகின்றது.

கடந்து வந்த பாதை
நிதி நிறுவனங்களில் நாம் அடிக்கடி  சந்திக்கும் பிரச்சனைகள், நிறுவனங்களின் நஸ்டத்தால்  அவஸ்தைப்படுவது, சிலசமயம் நிறுவனமே காணாமல் போவது. இதனால் நமது முதலீட்டு லாபம் குறைகிறது அல்லது முதலீடு அடியோடு காணாமல் போகின்றது. ஆனால் இந்த இரண்டு பண்ட்கள் ஆரம்பித்து 25 ஆண்டுகளை கடந்து நடந்து கொண்டிருக்கிறது.  முதலில் கோத்தாரி  பயணிராக் (Kothari Pioneer) தொடங்கிய நிறுவனம் பின்னர் கைமாறி பயணியர் ஐடிஐ ஆகியது ( Pioneer ITI).  மேலும் ஒருமுறை கைமாறி தற்போது பிராங்கிளின் டெம்பிளிடானாக (Franklin Templeton) வலம் வருகின்றது. இருந்தபோதும் முதலீட்டாளர்களுக்கு கஷ்டமோ, நஷ்டோமோ இதில் இல்லை. இது மீயூச்சுவல் பண்ட்களின் சிறப்பு ஆகும்.

உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டுமற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் நன்றி 

Friday, 7 December 2018

TITBIT - 38 - Markets @ December

Status: Today (6th December) markets lost 600 Sensex points and 200  nifty points

Upcoming Key Events in December

Dec-06
OPEC Meet
Dec-08
Exit Poll
Dec-11
Election Results
Dec-14
RBI Board Meeting
Dec-15
Advance tax Numbers
Dec-19
FED Meet

Possible scenario:  Impact of this events may throw more opportunity at us. Please use the opportunity to get into equity mutual funds.

To  read English article about astonishing / spectacular returns from equity mutual funds, those which celebrated silver jubilee recently,  click here

To read more about equity mutual funds in general click here

To download silver jubilee equity funds article in Tamil PDF click here

Silver jubilee funds

Click here to read this article in Tamil


December 1, 2018 is red letter day for some of the schemes from  Franklin Templeton staple. The investors money has grown astonishingly by more than 100 times, than the initial investments invested in their flagship schemes like Franklin India Bluechip and Franklin India Prima Fund. Investors in these schemes have reaped full benefits and can enjoy a content laugh on the way to their banks. In the current market slump if you are not believing this statement please study the given table in detail and you'll understand the underlying truth about this

Getting CAGR of 20% annual return (compounded annual growth rate) is not an easy job. This type of return is not possible with respect to Gold investment or conventional financial instruments like Bank Deposit, Post Office saving schemes and Corporate Deposits. This type of 20+ return is possible only in Equity Funds and in some cases with respect to Real Estate investments

Often the question often posted in front of me is, “I am not getting expected returns for the investments I made 1 or 2 years back”.  We have to understand “patience pays” . When Investments are longer, the likely rate of return is also high and if the Investments period is less likely return is less. This is a hard truth we should understand.

When we are investing in a good scheme issued and managed by good fund house the chance of getting better return is high. Such funds are Franklin India Bluechip and Franklin India Prima funds. Return details and other relevant details are given in the table.

25 வருட பண்ட் லாப விபரம் -31-10-2018
25 years fund - Profit details - 31/10/2018
பண்ட்
முதலீட்டு தொகை
தற்போதைய மதிப்பு
மடங்கு
பண்ட் லாப விகிதம்
குறீயிட்டின் லாப விகிதம்
குறீயிடு
Fund
Initial Investment
Current value

Fund Profit %


Franklin India blue chip fund - பிராங்களின் இந்தியா புளு சிப் பண்ட்
1,00,000
1,03,00,000
103
20.45%
11.43%
நிப்டி
Franklin India Prima Fund - பிராங்களின் இந்தியா பிரைமா பண்ட்
1,00,000
88,04,000
88
19.67%
11.90%
நிப்டி மிட் கேப்

Lot of research shows that when we have investment period of more than 10 years in equity related investment the chance of getting negative return especially with respect to mutual fund is extremely remote and possibility of getting double-digit return in the investments is very high.

Also it’s important to understand that in financial world the possibility of losses always exist and we call it risk. Possibility of losses in the institution or the institution itself getting closed or vanishing in thin air is very high. In these cases the investors end up facing losses or they are marked down in asset price or total principal gets wiped off. But in the case of equity mutual fund investments, the probability of entire investment getting wiped off is very remote.

Originally these schemes were started by Kothari pioneer, latter it changed hands to Pioneer ITI and again changed to franklin templeton. Now these schemes are managed by franklin. In spite of all these changes, they are still making good profits and no losses. This is the beauty of equity mutual fund investments in good schemes managed by good AMC.

This equity related mutual fund investments suit goal based investments better like investing when your child is born and use the proceedings for his / her marriage or their higher studies.

If you like this article, please share this on your Whatsapp/Facebook /Twitter. This would be a special gift which you would be giving to our blog.