Showing posts with label Growth. Show all posts
Showing posts with label Growth. Show all posts

Thursday, 1 September 2016

முதலீட்டுத் தெளிவு – Selection of Investments

முதலீட்டு வகைகள் , அதன் நெளிவு சுளிவுகள், லாபம் ஈட்டும் தன்மை என்று பலவாறு பார்த்தோம். அடுத்து எல்லோருக்கும் எழக்கூடிய சகஜமான கேள்விகள் என்னென்ன?
1) பல பரஸ்பர நிறுவனங்கள் உள்ளன
2) நமக்கு பிடித்த முதலீட்டு வகையிலேயே பல திட்டங்களும் உள்ளன. உதரணமாக, நாம் கேட்கும் சம விகித பங்கு/கடன் திட்டங்கள் உள்ளன
3) இதில் பிரம்மப்ரயர்தனம் என்னவென்றால்... இவைகளில் எதை நாம் தேர்வு செய்வது??


பங்கு வர்த்தகத்தில் ஜெய்க்கும் குதிரையை நாம் தேர்வு செய்வது கடினம் ஆனால் பரஸ்பர நிதிகளில் குதிரையை தேர்ந்தெடுப்பது சுலபம் தான். இதில்லாபம் கிடைக்க வாய்புகள் மிக அதிகம். இன்னும் ஒரு கூடுதல் போனஸ்... இதில் நமக்கேற்றவாறு சேவையும் நன்கிருக்கும். அதை எப்படி சல்லடை போட்டு சலித்து தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இனி பார்க்கலாம் வாருங்கள்!!

முதலாவதாக, எந்த பரஸ்பர நிதி நிறுவனத்தில் முதலீடு செய்கிறோம் என்று முடிவு செய்யவேண்டும். சற்று பெரிய நிதி மற்றும் நல்ல நிதி மேலாண்மை உள்ள நிறுவனமாகவும் தேர்வு செய்யலாம். அட்டவணை 1'ல் பரஸ்பர நிதி நிறுவங்களின் பெயரும் அதன் நிர்வகிக்கும் சொத்து மதிப்பை பார்க்கலாம். (AUM - Assets under Management)

Mutual fund house AUM data as on 31/3/2016 - Table 1 (Figure in Lakhs. Source: AMFI Data)
Mutual Fund Name
Average AUM
ICICI Prudential Mutual Fund
        1,75,88,087
HDFC Mutual Fund
        1,75,77,939
Reliance Mutual Fund
        1,58,40,845
Birla Sun Life Mutual Fund
        1,36,50,341
SBI Mutual Fund
        1,06,78,078
UTI Mutual Fund
        1,06,30,922
Franklin Templeton Mutual Fund
           66,94,692
Kotak Mahindra Mutual Fund
           58,49,515
IDFC Mutual Fund
           52,12,899
DSP BlackRock Mutual Fund
           39,13,331
Axis Mutual Fund
           37,68,787

இரண்டாவதாக, நாம் தேர்வு செய்யும் நிறுவனம் நல்ல சேவை அளிக்குமா என்று பார்க்கவேண்டும். சேவை என்று வரும்பொழுது  தற்போதுள்ள "Technology" யுகத்தில் அந்த நிறுவனத்தின் திட்டங்களைப் பற்றி தகவல் வாங்குவது ( buy), விற்பது (Redeeem) , ஒன்றிலிருந்து இன்னொன்று மாறுவது ( Switch) , சொத்து மதிப்பு பார்ப்பது ( Networth) வாடிக்கையாளர் சேவை தரம் , பதில் அளிக்கும் வேகம் ஆகியவற்றை பரிசீளிக்கவேண்டும். இதெல்லாம் பார்த்த பின், இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களை தேர்ந்தெடுங்கள். அடுத்து, அந்த நிறுவனங்களின் சிறந்த திட்டங்களை எப்படி தேர்வு செய்யவேண்டும் என்று பார்க்கலாம்.
திட்டத்தின் செலவினம் (Expense ratio): நாம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் செலவினம் குறைவாக இருக்குமாறு தேர்வு செய்யலாம். ஏனெனில் நமக்கு கிடைக்கும் லாப விகிதம் திட்டத்தின் லாபத்தில் செலவினம் போக மீதம் தான் நமக்கு கிடைக்கும்.

திட்டத்தின் லாப விகிதம் பரஸ்பர நிதிகளில் பங்குத் திட்டங்களில் லாப விகிதத்தை 3, 5, 10 வருட இடைவெளியில் எவ்வாறு கிடைத்துள்ளது என்பதை பார்த்து தேர்வு செய்யலாம். பங்கு திட்டங்களில் 1 வருடத்திற்கு குறைந்த லாப விகத்தை பார்க்கும்பொழுது Absolute return பார்க்க வேண்டும். இதை ஆண்டிற்கு மாற்றி பார்ப்பது அவ்வளவு உசிதம் அல்ல. உதரணமாக , பங்கு திட்டங்களில் ஒரு காலாண்டில் 10% லாபம் கிடைத்தால் அதை வருடத்திற்கு 40% என்று எண்ணி வருடா வருடம் 40% கிடைக்கும் என்று கொள்ளக்கூடாது. இருந்தாலும் 5 - 10 வருடங்களில் நிலையான லாபம் தந்திருந்தால் அந்த நிதி திட்டம் நல்ல நிதி மேலான்மையோடு செயல்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளவும். 

Alpha, விகிதங்கள்: ஆல்பா என்பது நமது திட்டம் சந்தையின் லாபத்தை விட எவ்வளவு அதிகமா தந்துள்ளது என்பதாகும். உதரணமாக, ஒரு வருடத்தில் மும்பை பங்கு சந்தை குறியீடு எண் 17% ஏற்றமாக இருக்கும்போது நமது திட்டம் 22% ஏறி இருந்தால் ஆல்பா என்பது 5%. எனவே நாம் தேர்ந்தெடுக்கும் திட்டம் ஆல்பா தரும் திட்டமாக இருக்க வேண்டும். இங்கு இன்னொரு தகவல், நிதி திட்டங்களில், மற்றொரு வகை பிரிவும் உள்ளது. ஒன்று, Active Investing என்று பெயர். அடுத்து Passive investing முதல் வகையில், திட்ட மேலாளர் Fund Manager திட்டத்தை நன்கு பராமரித்து, Alpha  தரவேண்டும். இதில் Expense ratio சற்று கூடுதலாக இருக்கும்.

Beta விகிதங்கள்: அடுத்ததாக எல்லார்க்கும் தெரிந்த விஷயம் தான்... சந்தை ஏறும்போது நமது திட்டத்தின் மதிப்பு கூடுகிறது. அதேபோல் இறங்கும் போது இறங்குகிறது. இதைத்தான் பீட்டா என்று கூறுவார்கள். நமது திட்டத்தின் ஏற்ற இறக்கம் சந்தையோடு ஒத்து இருந்தால் பீட்டா 1 என்று பெயர். திட்ட மேலாளர் திறமையில் நம்பிக்கை வைக்காதவர்கள், சந்தை குறீயீட்டு என் சார்ந்த திட்டங்களில் ( index funds)  மூதலீடு செய்யலாம். இதற்கு Passive investing என்று பெயர். இதில் Expense ratio சற்று குறைவாக இருக்கும். நமது லாபம் சந்தையை ஒட்டியே இருக்கும். Beta 1 ஆக இருக்கும்.

Sharpe Ratio  : நமது திட்டத்தின்பீட்டா எண் குறைய குறைய திட்டத்தின் ஏற்ற இறக்கம் சந்தையின் ஏற்ற இரக்கத்தை விட குறைவாக இருக்கும். எனவே, ஆல்பா அதிகமாகவும் பீட்டா குறைவாகவும் இருக்கும் திட்டங்களை நாம் தேர்வு செய்யவேண்டும். இது இரண்டையும், மேலும் திட்டத்தின் ரிஸ்கையும் சேர்த்து பார்ப்பதற்கு உள்ள விகிதத்தின் பெயர் Sharpe Ratio. இது positive எண்ணாக இருக்க வேண்டும்.

நிதி நிறுவன அறிக்கைகளை எடுத்து இந்த விவரங்களை பார்த்து "நமக்கு நாமே" முடிவு செய்து திட்டத்தை தேர்வு செய்வது சற்று கடினம் தான்... நமக்கு வாழைபழத்தை உரித்து கொடுத்தால் தானே சாப்பிட்டு பழக்கம்!!  ஒரு சில ஆச்சிமார்கள் மாம்பழத்தை தோல் சீவி, நறுக்கி, நன்றாக இருக்கிறதா, இனிக்கிறதா என்றெல்லாம் பார்த்து செட்டியாருக்கு சாப்பிட குடுப்பது போல (செட்டியார்களுக்கு ஆசைதான்), இந்த திட்டங்களை அலசி ஆராய்ந்து முதலீடு செய்ய ஏற்றதா என்று திட்டங்களை தர வரிசை படுத்தி நட்சத்திர குறியீடு குடுக்கும் இணையங்கள் சில உள்ளன. நட்சத்திர திட்டங்கள் மேலானவை. 1 நட்சத்திர திட்டங்கள் தவிர்க்கவேண்டியவை. இது போன்று தர வரிசை தரும் இணையங்கள், இதோ உங்களுக்காக சில:
1) http://www.morningstar.in/
2) https://www.valueresearchonline.com/

Morning star என்பது அமெரிக்க இணையதள நிறுவனம். இதன் இந்திய இணையதளம் எந்த நிதி நிறுவன சார்பும் இன்றி நடு நிலையாக திட்டங்களை ஆராய்ந்து தர வரிசை அளிக்கிறது.
Value research online என்பது  இந்திய பரஸ்பர நிதி இணையத்தளத்தில் முதன்மையான ஒன்று. இதன் தரவரிசையும் தரம் வாய்ந்ததுதான்.
நாம் நல்ல திட்டங்களை தேர்வு செய்ய கீழ் கண்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

1) திட்டம் எந்த வகையை சார்ந்தது - பங்கு, கடன், கலப்பு
2) இது Growth வகையா, value வகையா
3) Large, small, midcap வகையா
4) 3 , 5 வருட லாப விகிதங்கள்
5) திட்டம் எந்த பங்குகளில் - கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது என்ற முழு விவரம்
6) திட்டத்தின் டிவிடெண்ட் குடுத்த சரித்திரம்
7) நான் மேல் கூறிய expense ratio, alpha, beta, sharpe ratio ஆகிய விவரங்கள்

இவற்றை பார்த்து திட்டங்களை முடிவு செய்வது நல்ல பலன் தரும் என்று எதிர் பார்க்கலாம்மேலும் ஒரு எச்சரிக்கை.. கடந்த கால லாப விகிதங்கள் மற்றும் தரவரிசை எல்லாம்,  ஒரு குறியீடே! அதே போல் எதிர்கால லாபம் இருக்கும் என்று நிச்சியம் இல்லை என்று புரிந்துகொள்ளவேண்டும். இந்த கட்டுரையில் கூறிபடி, நல்ல திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். லாபம் சந்தையின் கையில்

Saturday, 7 May 2016

Documentation - நிதி பராமாரிப்பில் நிதியில்லா விபர பராமாரிப்பு

Read/download this article in magazine/pdf format

கடந்த சில இதழ்களில் வரி சேமிப்பு, தங்க முதலீடு , சிறுக சேமிப்பு, பரந்த முதலீடு பற்றி பார்தோம். இவற்றில் சிலர் முதலீடு செய்து இருக்கலாம். முதலீடு பெறுக வாழ்த்துக்கள். முதலீடு செய்ய முனைவபவர்கள் இருக்கலாம். முன்னர் முதலீடு செய்தவர்களூக்கு தெரியும், இதற்க்கு சற்று மெனங்கிட வேண்டும் என்று.

நிதி முதலீடுகள் காலையில் கடையில் சென்று பருப்பு வாங்குவது போல் எளிது இல்லைதான். பருப்பு விலை ராக்கெட்டில் போனாலும், ராக்கெட் விலை கொடுத்தால் பருப்பை கொடுத்துவிடுவார்கள். இன்றய நிலவரத்தில் பருப்பு வாங்க பான் நம்பர் கேட்பதில்லை. போற போக்கில் கேட்டாலும் ஆச்சியமில்லை. ஆனால் சர்வ நிச்சியமாக நிதி முதலீடு செய்ய பான் நம்பர் மற்றும் பல விபரங்கள் கேட்பார்கள்.

பான் நம்பர் விபரம் பரவலாக அனைவருக்கும் தெரிந்த்துதான். புதியவர்களுக்காக, பான் நம்பர் என்பது, Permanent Account Number, இது வருமானவரி அலுவலகம் மூலம் வழங்கபடுகின்றது. ஒருவர் ஒன்றுதான் வைத்திருக்கவேண்டும்.


சரி பான் நம்பர் வாங்கியாகிவிட்டது, உடனே நிதி நிறுவனங்களில், நிதி சார்ந்த முதலீடு செய்துவிடலாம், என்று நினைத்துவிடாதீர்கள். காரணம், கறுப்பு பணம், இரகசிய அந்நிய செலவாணி, தீவிரவாத பணப் பரிமாற்றம், இதையெல்லாம் தடுக்க மத்திய அரசாங்கம் பல விதி முறைகளை விதிக்கின்றது. இதில் மிக முக்கியமானது KYC - Know your customer ஆகும். இதை ஒவ்வொரு முதலீட்டாளரும் பின் பற்ற வேண்டும். இதை முதலீட்டுக்கு முன் செய்ய வேணடும். ஒரு முறை செய்தால் போதுமானது. இதற்கு பான் நம்பர், வண்ன புகை படம், சரியான விலாச அட்டை, திரும்பவும் கூறுகின்றேன். சரியான விலாச அட்டை, இங்குதான் நிறைய பேருக்கு சிரம்மே, ஆகியவை தேவை. இந்த KYC இல்லாமல் யாரும் நிதி முதலீடுகள் செய்ய முடியாது. பரஸ்பரநிதி, பங்கு வர்த்தகம், தங்க முதலீடான, அரசாங்க பத்திரம், சிறு சேமிப்பு, டீமாட் கணக்கு ஆக அணைத்திற்க்கும், ஆதியில் KYC வேண்டும்.

இதுவரை KYC செய்யவில்லை எனில், நிதி முதலீடு செய்ய KYC பதிவு பண்ணுங்கள். சில வருடங்களுக்கு முன் KYC இல்லாமல் முதலீடு செய்தவர்கள், கட்டாயம், இப்போது KYC செய்யவேணடும். சில காலம் முன்னதாக KYC செய்து முதலீடு செய்தவர்கள், KYC Status தற்போதைய வழி முறைகளுக்கு ஏற்றவாறு உள்ளதா என்று பார்த்துக்கொள்ளுதல் நன்று.

KYC Status அறிந்து கொள்ள கிழ் கண்ட இணையதள முகவரியை அனுகலாம். உங்கள் பான் நம்பர் உபோயிகித்து KYC Status அறியலாம். இது சரியாக இல்லை எனில் KYC பதிவை அதற்கான படிவம் பூர்த்திசெய்து சரி செய்யலாம். இதில் மெத்தனமாக இருக்காமல் சரி செய்வது, அடுத்த பரிமாற்றங்களை எளிதாக்கும், இல்லையெனில், அடுத்த பரிமாற்றங்கள் முடங்க வாய்புகள் அதிகம்.

சரி அத்தியாவசிய KYC செய்தாகிவிட்து, பான் நம்பர் உள்ளது, விலாசமும், சரியாக இருக்கின்றது, "சிவனே" என்று இருக்க கூடாது. அத்தியாவசியமாக இல்லாவிட்டாலும், அவசியமாக, சிலவற்றை செய்வது, சால சிறந்த்து. அவை பற்றி பார்போம்

முதலாவதாக கைபேசி எண், இப்போது, எல்லோரும் கைபேசி வைத்திருக்கிறாற்கள். இல்லாதவர்கள், கற்காலத்தை சேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். இந்த கைபேசி எண்ணை நிதி நிறுவனங்களில் பதிவு செய்வது, நலம். இதன் நண்மை யாதெனில் வங்கிகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பண பரிமாறுதல் நடந்தால் (உ-ம் Rs 5000) நமக்கு குறுந்செய்தி வருமாறு செய்யலாம். தற்பொழுது கைபேசி மூலம் பலவகை சேவைகள் பெற முடியும். வங்கி மற்றும் பரஸ்பரநிதி பரிமாற்றங்கள், தற்போதைய பரஸ்பரநிதி மதிப்பு ஆகியவற்றை கைபேசி மூலம் பெறலாம்.

அடுத்த்து, மின்னஞ்சல் முகவரி. இது கைபேசி அளவு பரவியாரவிடினும், அணைவருக்கும், தெரிந்த்தே. இதுவரை தனக்கென மின்னஞ்சல் முகவரி இல்லாவிடின், ஒன்றை அவசியம் பெற்று கொள்ளுங்கள். மின்னஞ்சல் முகவரியை உங்களது எல்லா நிதி நிறுவனங்களில் பதிவு செய்யுங்கள். எந்த ஊரில் இருத்தாலும், எந்த நாட்டில் இருத்தாலும், நாம் விரும்பிய நேரத்தில் நிதி நிறுவனத்திற்கு நேரில் போகாமல், குறிப்பாக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைக்கு தொலை பேசியில் அழைக்கும் அவஸ்தை இல்லாமல், Mail back service மூலம் நமது கணக்கு பரிமாற்ற விபரம், இருப்பு, மதிப்பு, ஆகியன எளிதாக அறிய முடியும்.

இன்னொரு பதிவை பார்க்கும் முன், தற்போதைய சமூக அமைப்பு பற்றி சில வார்த்தைகள். எனக்கு தெரிந்தவரை, நிதி நிலைமை பற்றி கணவன் மணைவிக்கு, மணைவி, கணவனுக்கு, தந்தை மகனுக்கு, கூறுவதில்லை. இதுகாறும் ஒருவருக்கொருவர் நிதி நிலைமை பற்று பேசுவதில்லை. ஒவ்வொருவறுக்கும் ஓராயிரம் காரணங்கள், இருக்கலாம். இதன் விளைவு, முதலீடு செய்தவர்களுக்கு பிறகு, அந்த சொத்து, சரியான நபர்களுக்கு போய் சேருவதில், பல சிக்கல்கள் அல்லது போய் சேருவதில்லை. இதுதான் நிதர்சனம் . இந்த இடர்ப்பாடுகளை தவிர்க்க நாம் கண்க்கு துவங்கும் போதே, ஒருவருக்கு மேற்பட்டு, இருவராக கணக்கு துவங்கலாம். மேலும், கண்க்கு துவங்கும் போதே அவர்களுக்கு பிறகு அந்த சொத்து எத்தனை பேருக்கு எந்த விகித்தில் போக வேண்டும் என்று பதிய வேண்டும். இதற்கு பெயர்தான் Nomination. . பரஸ்பரநிதி, பங்கு வர்த்தகம், தங்க முதலீடான, அரசாங்க பத்திரம், சிறு சேமிப்பு, டீமாட் கணக்கு ஆக அணைத்திற்க்கும் Nomination செய்து விடுங்கள். இது நிறைய பேர் செய்யாத்து, ஆனால், அவசியமானது, உடன் Nomination செய்து விடுங்கள். இதில் சிலருக்கு சிக்கல் இருக்கலாம். நம்க்கு பிடித்து இன்று Nomination செய்தவர்கள், சில பல வருடங்களில் பிடிக்காதவரிகள் ஆகிவிடலாம், இது மனிதயிலபு. இந்த மாதிரி தருணங்களில், நாம் Nomination யை மாற்றி கொள்ளலாம். உங்களது காலம் வரை Nomination யை எத்தணை முறை வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.

Nomination போட்டாகிவிட்டது, இத்துடன் வேலை முடிந்த்தா, என்றால் அதுதான் இல்லை. ஏன் சற்று ஆழ்ந்து யோசியுங்கள், விபரம் புரியும், இனி அது பற்றி விரிவாக பார்போம்

நம்மூரில் சில சீமை சமர்த்தர்கள், இருப்பார்கள். நான் மேற்கூறிய எல்லாவற்றையும், பக்கவாக பதிந்து இருப்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் மறந்திருப்பார்கள், அல்லது வேண்டுமென்றே தவிர்த்துருப்பார்கள். இது எதிர்பாத்த பலன் தராது, சொத்து சரியான நபருகு போகாது. ஏன், யோசித்தீர்களா? தெரிந்த சண்டைகள்தான், மனைவிக்கு Nomination செய்தால், மகமிண்டி போர்கொடி காட்டுவாள், ஏன் மகனை போடவில்லை என்று, மகனுக்கு போட்டால் ஆத்தாகாரிகதி அதோகதிதான். இந்த சிக்கலில் செட்டியார் சொத்து விபரம், Nomination செய்த விபரத்தை மனைவிக்கும், மக்களுக்கும் சொல்வதில்லை. விளைவு, முன்னர் பார்த்துதான். சொத்து விபரம் வாரிசுகளுக்கு தெரியாது இருப்பதால், அது அவர்களுக்கு பெரும்பாலும் போவதில்லை. இப்பொழுது புரிகின்றாதா, Nomination செய்தால் மட்டும் போதாது, சொத்து விபரம், Nomination விபரம் வாரிசுகளுக்கு தெரிவது நல்லது. அல்லது அந்த நேரத்து சண்டைகளை தவிர்க, சொத்து விபரம், Nomination விபரம் வாரிசுகளுக்கு பின்னர் தெளிவாக தெரியும்படி செய்யலாம், இது எவ்வளவு சரியாக நடக்கும் என்பது, அவரவர் அறிவுப்படி.

இன்னமும் தெளிவாக சொல்வதானால், உதாரணத்திற்கு செட்டியார் மகனை Nomination செய்யும் போது, மகனை அழைத்து அருகில் வைத்துகொண்டு, இந்த பரஸ்பரநிதி நிறுவனத்தில் இந்த திட்டத்தில் இவ்வளவு பணம் இந்த கணக்கில் உள்ளது எனறு கூறினால், அவருக்கு பிறகு, அவன் அந்த பரஸ்பரநிதி நிறுவனத்தில் படிவங்கள், பூர்த்திசெய்து பணம் பெறுவது சுலபாமாக இருக்கும்.

இப்போது புரிகிறாதா, மூதலீடு செய்து, லாபம் பெறுவது, ஒரு நிலை, அந்த மூதலீட்டில் அணைத்து Documentation சரிவர செய்து, அதை பராமரித்து, உரிய நபர்களுக்கு சேருமாறு செய்வது இன்னெரு நிலை - இந்த இராண்டவது பகுதியை பெரும்பாலோர் செய்வதில்லை. அவரத்களுக்காகவே, இந்த கட்டுரை. இதை படித்தவர்கள், உங்கள் மூதலீட்டு நிறுவனங்களில் பான் நம்பர், KYC, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, சரியான விலாசம், Nomination ஆகியவற்றை சரி பாரத்து, விட்டு போனவற்றை உடனே பதியவும்.

யூடிஐ மாதிரி பரஸ்பரநிதி கணக்கு அச்சிடபட்ட படம் கிழே உள்ளது. இது சரிவர தகவல்கள் இல்லாத கணக்கு. இது போல் உங்கள் பரஸ்பரநிதி கணக்கு அச்சிடபட்டு இருந்தால், Please Provide என்று இருக்கும் இடத்தில் உள்ள தகவல்களை நீங்கள் பரஸ்பரநிதி நிறுவனத்திற்கு தருவது நல்லது. KYC Status Yes அல்லது ok என்று இருக்க வேண்டும்

மின்னஞ்சல் முகவரி, விலாசம் போன்றவை மாறக்கூடியது, மாறினால், அதை உடனுக்குடன் மாற்றி பதியவும். இப்பொழுது ஒரு "Tip" சொல்லுகின்றேன். நீங்கள், ஒன்றுக்கு மேற்ப்பட்ட பரஸ்பரநிதி நிறுவனத்தில் , மூதலீடு செய்து இருத்தால், ஒவ்வொரு நிதி நிறுவனத்திலும், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, சரியான விலாசம் ஆகியவற்றை மாற்ற வேண்டாம். அதற்கு பதிலாக, Change kyc form மூலமாக, ஒரு முறை மாற்றினால், எல்லா பரஸ்பரநிதி நிறுவனங்கள், அந்த விபரத்தை பெற்று கொள்ளும். எனவே இந்த Non-Financial Data எல்லாவற்றையும், சரியாக பதிந்து பயன் பெறலாம்.