கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி மத்திய வங்கி சமீபத்தில் வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் அதாவது 0.25% குறைத்து 6.25% ஆக மாற்றியது. இது கடந்த ஏழு வருடங்களில் குறைந்த வட்டி விகிதம் ஆகும். நிதி மேலாண்மை விமர்சர்கள் இது மேலும் 0.25% முதல் 1% வரை குறையலாம் என்று கருத்து கூறுகிறார்கள். 0.25% மேலும் குறைய அதிக வாய்ப்புகள் என்றே தோன்றுகிறது! இதனால் வங்கியில் நிரந்தர வைப்பு நிதி முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதமும் குறையும். அன்றாட தேவைகளுக்கு அல்லது வருங்கால எதிர்பார்ப்புகளுக்காக சேமிப்போர்களுக்கு வட்டி விகித குறைவால் பாதிப்பு தான். இந்த பாதிப்பிலிருந்து விடுபட நாம் நான்கு வழிமுறைகளை பார்க்கலாம். அதில் அவரவர் தேவைக்கேற்ற வழிமுறை தேர்ந்தெடுத்து வட்டி விகித சரிவிலிருந்து சற்று அதிக வருமானம் பெற வாய்ப்புகள் உள்ளது.
பரஸ்பர நிதிகளின் கடன் பத்திர முதலீடு பற்றிய வாசகர்கள் நன்கு அறிந்திருப்பார்கள், நிறைய திட்டங்கள் சிறு சிறு மாறுதல்களுடன் உள்ளது. அதில் எந்த வகையில் இந்த வைப்பு நிதி முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பயன் பெறலாம்.
முதல் வழிமுறை:
பரஸ்பர நிதி திட்டத்தில் liquid fund / ultra short term fund வழிகளில் முதலீடு செய்யலாம். இத்திட்டங்களில் ரிஸ்க் குறைவாக இருக்கும். நமது பணம் பெரும்பாலும் AAA அல்லது sovereign rating முதலீடு செய்யப்படும்.
இரண்டாவது வழிமுறை:
சற்று கூட ரிஸ்க்குடன் சுமார் வங்கி வைப்பு நிதி விட 1% கூடுதல் வருமானம் பெற mid term fund /accrual fund. நாம் தேர்ந்தெடுக்கு திட்டங்கள் interest rate risk அல்லது credit risk உள்ள திட்டங்களா என்று பார்த்து தேர்வு செய்யலாம். corporate credit fund 'கள் credit risk சேர்ந்தவை. மேற்கூறிய ரெண்டு வகைகளும் முற்றிலும் கடன் பத்திர வகையை சார்ந்தவையே. எனவே ஏற்ற இரக்கம் குறைவாகவும், வருமானம் வைப்பு நிதிகளை விட சற்று அதிகமா கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
மூன்றாம் வழிமுறை:
வருமானத்தில் சிறுதளவு கூட்ட சற்றே பங்கு கலந்த கடன் பத்திரங்கள் முதலீடுகளை செய்யலாம். இது மூன்றாம் வகை ஆகும். இவை கலப்பின திட்டங்களில் கடன் சார்ந்து சிறுதளவு பங்கின் கலப்போடு உள்ள திட்டங்கள் ஆகும்.
உதாரணமாக, CPOF capital protection oriental fund என்ற வகை திட்டங்கள் பெரும்பாலும் மூன்று வருட close ended திட்டங்களாக இருக்கும். நமது அசலுக்கு ஆபத்தில்லாத திட்டங்களாக இருக்கும். சிறுதளவு பங்கு இருப்பதால், வருமானம் சற்று கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மூன்று வகைகளும், கடன் சார்ந்த முதலீடுகள். வரி திட்டங்களும் கடன் சார்ந்து வரி வழிமுறைகளை பின்பற்றுமாறு இருக்கும்.
நாலாவது வழிமுறை:
இறுதியாக நாலாவது முறையாக, நாம் முன்னர் பார்த்த dynamic investing வகையிலான கடனில் அதிக பங்கு கலந்த சிறிதளவு முதலீடு செய்யலாம். இதன் வரி விதிப்பு முறைகள் பங்குகள் போல் உள்ளதால், நாம் ஒரு வருடத்திற்கு மேல் முதலீடு செய்து வரும் வருமானத்திற்கு வரி கட்ட தேவையில்லை. அட்டவணையில், இந்த நாலு வகை திட்டங்களின் கடந்த ஓர் ஆண்டில் கிடைத்த சராசரி லாப விகிதமும் திட்டங்களை பொறுத்து அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச லாப விகிதம் தரப்பட்டிருக்கிறது. இதை கொண்டு நமக்கேற்ற திட்ட வகையை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்து, வருமானம் பெற வாய்ப்புகள் உள்ளது.
இந்த நான்கு வகைகளிலும் risk level மாறுவதால் நாம் முதலீடு செய்ய எண்ணிய மொத்த தொகையை ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறையை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலம், risk குறைந்து வருமானம் கூட வழி வகை செய்யலாம்.
முடிவாக, வங்கியின் நிரந்தர வைப்பு நிதி விட பரஸ்பர நிதி கடன் திட்டங்களில் முதலீடு செய்வதில் சில பல பலன்கள் உள்ளன.
1.நாம் தேவைப்பட்ட போது திட்டத்தில் இருந்து, பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அபராத வட்டி என்று எதுவும் பிடிப்பதில்லை. அதேசமயம் சில திட்டங்களில் மிக குறுகிய காலத்தில் பணத்தை திரும்ப பெறும்போது சிறிது exit load இருக்கலாம்.
2. கடன் பத்திர வகைகளில் 3 வருடங்களுக்கு மேல் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் indexing முறையில் வைப்பு நிதி விட குறைந்த வரி கட்டினாள் போதும்.
3. மாதா மாதம் வட்டியை வாங்கி உபயோகிப்பார்கள் இந்த வகை கடன் பாத்திரங்களில் முதலீடு செய்து systematic withdrawal plan மூலம் அதே அளவு பணத்தை பெறும்போது கட்டும் வரியும் குறைவாக இருக்கும். ஏனெனில் வங்கியில் வரும் வட்டியின் மொத்த தொகைக்கும் அந்த அந்த வருடங்களே வரி கட்ட வேணும். அதே நேரம் systematic withdrawal முறையில் நாம் எடுத்த பணத்தில் அசல் போக capital gain எனப்படும் பகுதி குறைவாக இருப்பதால் வரியும் குறைவாக இருக்கும்.

No comments:
Post a Comment