Monday, 26 November 2018

சி.பி.எஸ்.இ – ஈ.டி.எப் - எப் .எப்.ஓ 3 - நான்காவது வெளியீடு

(CPSE – ETF – FFO 3 – Fourth issue)

மத்திய அரசு நான்காவது முறையாக அதன் பொதுத்துறை பங்குகளை ஈ.டி.எப்  மூலம் வெளியீடு செய்ய முனைகிறது. இதைப் பற்றி பார்ப்போம்.

{என்.எப்.ஓ ஒரு முறையும் ( New fund offer), எப்.எப்.ஓ (Follow on fund offer) இரண்டு முறையும் வெளியீடு செய்துள்ளது 1 NFO + 2 FFO }

முன்கதைச் சுருக்கம்

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை நேரடியாக விற்காமல், நவரத்தினா  எனப்படும் பல பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை  ஒரே கூடையில் வைத்து சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப்  ஆக முதன்முதலில் மாரச் 2014 கொடுத்தது (என்.எப்.ஓ). இந்த சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப்-ல்  முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இறங்கினார்கள். இந்த  வெற்றியின் காரணமாக மத்திய அரசு மீண்டும் இரண்டு முறை சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப்  வெளியீடு செய்தது(எப். எப்.ஓ  - 2017). தற்போது மீண்டும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களை முதலீட்டாளர்களுக்கு விற்க்கும்  எண்ணத்தோடு நான்காவது முறையாக களம் இறங்கின்றது (சந்தையை சந்திக்கின்றது). இதுவரை  எப்பொழுது சந்தையை சந்தித்தது எவ்வளவு தொகை திரட்டியது என்பதை அட்டவணை 1 ல் பார்கலாம்.

நான்காவது முறையாக வெளியீடு

தற்போது மத்திய அரசு நான்காவது முறையாக சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப்  ஐ  சந்தைப்படுத்தும் தேதி 28-11-2018  முதல்  30-11-2018 தேதி வரை. இந்த வெளியீடு ரிலையன்ஸ் ஃபண்ட் நிறுவனம் மூலமாக வெளியீடு செய்யப்படுகின்றது.

சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப்  ன் சிறப்பு அம்சங்கள்
  • இது ஒரு பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு. ஆனால் ஒரு வித்தியாசம்: சாதாரண பண்ட் ல் நாம் முதலீடு செய்யும் போது எண்னென்ன நிறுவனங்கள் அதில்  இருக்க வேண்டும் என்று நாம் நிர்ணயிக்க முடியாது. ஆனால் இந்த சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப்  திட்டத்தில் என்ன பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள்  உள்ளது என்று நாம் முன்னரே அறிய முடியும். 
  • தற்போது இந்த சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப்  ல்  எண்னென்ன பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள்  உள்ளது என்பதை அட்டவணை 2-ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
  • தற்சமயம் 11  வகையான பொதுத்துறை நிறுவன பங்குகள் அடங்கி உள்ளது. 
  • இந்த பொதுத்துறை நிறுவன பங்குகள் அனைத்தும்  லாபம் தரும் பங்குகள். 
  • சி.பி.எஸ்.இ - ஈ.டி.எப்  ல் முதலீடு செய்ய டீமேட் கண்க்கு தேவைபடும்.
  • சி.பி.எஸ்.இ - ஈ.டி.எப் 4.5% தள்ளுபடி விற்பனை மூலம் வழங்கபடுகின்றது.

லாபம்

சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப்  பண்டு முதலில் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து இன்று 20-11- 2018 வரை  கிடைத்த லாப விகித்தை அட்டவணை 1-ல் பார்கலாம் . தற்போது சந்தை இறங்கி உள்ளதால், எப். எப்.ஓ  - 2017 முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தில் உள்ளது. தற்போது சந்தை சரிந்த நிலையில் இருக்கும்போது பொதுத்துறை நிறுவன பங்குகளை, சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப்   மூலம் 4.5% தள்ளுபடி விற்பனை மூலம் வாங்குவது வரும் காலத்தில் லாபம் தரக்கூடிய ஒன்றாக கருதலாம்.

முதலில் சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப்  ல் 10 நிறுவனங்கள் இருந்தது. அதில் 2 வெளியேறி,  3 புதிதாக  உள்ளே வந்துள்ளது. தற்போது உள்ள 11 பங்குகளின் லாபமீட்டும் தன்மைகள் மற்றும் அதன் விலையை பொருத்து வருங்காலத்தில் இந்த சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப்   பண்டு லாபம் அமையும். இதில் ரிஸ்க் குறைவாகவும் சராசரி லாபம் கிடைக்க எதுவாகவும் உள்ளது. இந்த  சி.பி.எஸ்.இ- ஈ.டி.எப்   பண்டில் புதிய முதலீட்டாளர்கள் பங்கு  பெற்று பயன்பெறலாம். 

உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டுமற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் நன்றி 

Wednesday, 21 November 2018

SIP vs Lump sum – Let us choose wisely


SIP – Current Review
SIP is a famous word. Many investors start SIP with high expectation. In the last two years, many more fund houses and intermediaries, encouraged investors to have SIP based investments. Have their expectations been met? If we evaluate SIP’s performance in this fallen market, then the obvious answer would be ‘NO’. Should we feel bad for the fate of SIP? Not really, instead it would be good to understand what SIP actually is!

Due to the fall in markets, the profits we get out of SIP is also falling. The best Equity funds 1-year SIP return percentage ranges from -5% to -15%. The returns from the other funds might be even lesser than this which is clear from the table shown below. Is this the outcome that we envisioned while we invested? Certainly not, our expectation was that SIP is a Superstar plan and there was no way that it can produce losses. But in reality, the return numbers returned by SIP is lower than the ones we expected.


Value Research’s top 5 star studded best Equity funds profit percentage – 10 Nov 2018
Fund
Type
1 Year
3 Years
5 Years
Axis Long Term
Tax
-5.45
10.09
12.74
Mirae Asset Emerging Bluechip
Large and Mid-Cap
-5
12.37
18.42
Axis Bluechip
Large Cap
-3.21
11.02
10.78
L&T Mid Cap
Mid Cap
-15.15
9.26
15.65

SIP vs Lumpsum
Some people are now thinking that they should have invested in Lumpsum instead of SIP. It’s like the saying The grass is always greener on the other side of the fence”. The closer we go, the dangers of Lumpsum becomes visible. To understand SIP and Lumpsum, we also need to take a closer look at Lifestyle practices. In some situations, you might not be able to invest in Lumpsum plans. For instance, a monthly salaried person who wishes to invest small amounts in mutual funds every month might find it comfortable to invest in a SIP plan. Similarly, when you have the money readily available to invest in a Lumpsum fashion, it is not advantageous to invest in a SIP based plan. In this market fallen times, it would be more profitable if we invest through the Lumpsum option. When we have enough money in hand, we shouldn’t be adamant that we will invest only through SIP. In the coming months and years, if the market keeps fluctuating, then SIP mode might be suitable.

Example to understand better
The following table gives, returns for investment done for same amount and same duration via Lump sum and SIP. Let us keep in mind, in lump sum, the money is with fund house for more time, where as in SIP, money is paid in installments – hence return varies. For simplicity purpose, we have taken the returns for the amount invested with fund only. (See the blue shaded first case in the table, for SIP absolute market value is less = 162707 but annual return is more = 10.10%, whereas in  lump sum, absolute market value is more = 172451 but return is less = 6.5%  this is because in lump sum, invested amount is more time in the fund than sip, but created less return, because investment started when market was trending higher vale –Sensex 29220)

Fund used for comparison = Axis Blue-chip Fund - Growth
SIP amount per month = Rs 3,000
Return calculations till 12/11/2018
Current Sensex = 34812 (on the day of return calculation)

Start date
Paid months
Invested value
Market value
Return
Sensex
Mode
27-02-2015
45
135000
162,604
10.10%
29220
SIP
27-02-2015

135000
172,451
6.5%

Lump sum
16-09-2016
26
78000
85,913
8.92%
28599
SIP
16-09-2016

78000
96,498
9.9%

Lump sum
23-12-2016
23
69000
74,640
8.32%
26090
SIP
23-12-2016

69000
97,734
18.3%

Lump sum

Some important points that we need to know about SIP

  • SIP is not isolated from the falling markets. Profit and Loss is part of the market. SIP can lead to losses too. 
  • During current market weakness, we should not stop investing in SIP based plans. SIP investments can turn out good during fluctuating markets. 
  • One thing that was evident from the table is, even when SIP posted negative 1-year returns, its 5-year returns looked to be in good shape. 
  • During the SIP time period itself, we can invest in the same plan on a Lumpsum option at least once. This one has a chance of turning profitable. There is nothing wrong in this and need not worry about it. 
  • Investing in the peak times SIP is better than lump sum – first case in the table with light blue shade
  • SIP in rising market will not give better returns, lump sum at the beginning of rising market will give good returns – refer Last case in the table – light green shade.
  • There are two kinds of investment options. Based on the situation and the amount of money we are willing to invest, we can invest in either of the options. It is very hard to predict or conclude which option is the best for each time period.

If you like this article, please share this on your Whatsapp/Facebook /Twitter. This would be a special gift which you would be giving to our blog.

Tuesday, 13 November 2018

டெப்ட் எப்.எம்.பி (Debt FMP) - ஏற்ற இறக்கங்கள் குறைவாகவும், லாபம் கூடுதலாகவும் பெறும் வழிகள்

Click here to read the same article directly from Nanayam vikatan website. The same article is given below.

Click here to read this article in English

நிதானமான பண்டுகள் - லாபத்தை யூகித்து, மூதலீடு செய்யலாம் வாருங்கள்

சந்தையும் சத்தமும்

கடந்த இரண்டு மாதங்களாக பங்கு மற்றும் கடன் சந்தைகளில் ஒரே கொந்தளிப்பு தான். இந்த சூழலில் முதலீட்டாளர்கள் எங்கு போய் ஒளிவது? எந்த மருந்தை குடித்தால் பித்தம் தெளியும்?  எங்குதான் செல்வது, எங்கு முதலீடு செய்தால்   குறைவான ஏற்ற இறங்களில் அதே சமயம் சீரான / சராசரியான லாபம் கிட்டும்? மனம் தளர வேண்டாம்!! தற்போது இருக்கும் சூழ்நிலையில் சந்தை மிகவும் ஏறி இறங்குவதால் வம்பு வேண்டாம், பங்கும் வேண்டாம்  என்று நினைப்பவர்களுக்கு கடன் திட்டங்களில் ஒருவகையான திட்டங்கள் உள்ளது.  ஏற்ற இறக்கங்கள் குறைவாகவும், நிதானமான பண்டுகளும் உள்ளது. இதில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சாதாரணமான வருமானம் கிடைப்பதற்கு வழிவகை உள்ளது. அதைப் பற்றி இப்போது விரிவாக பார்ப்போம். மீய்சுவல் பண்டுகளில் எல்லா வகையான பித்ததிற்க்கும் மருந்து உள்ளது. அதன் பெயர் டெப்ட் எப்.எம்.பி (FMP - Fixed maturity plan).

குறிப்பிட்ட காலதிட்டங்கள் (Close ended)

பண்டு முதலீட்டாளர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி, நான் பங்குகளில் எவ்வளவு நாள் முதலீடு செய்ய வேண்டும், எப்போது பணம் திருப்பித் கிடைக்கும் என்பதே.  காரணம் வங்கி இருப்பு நிதிகள் மற்றும் இன்சூரன்ஸ்-ல் இந்த வகையான முதலீடுகளில் காலத்தை குறிப்பிட வேண்டும். பெரும்பாலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஓபன் எண்ட்  (OPEN ENDED) என சொல்லப்படும் திட்டங்களில் காலம் நிர்ணயிக்கப்படுவதில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், எப்பொழுது வேண்டுமானாலும் திரும்ப பெறலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில்  குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு திட்டங்களும் உள்ளது. இதற்கு குளோஸ் எண்ட் என சொல்லப்படுகிறது (CLOSE ENDED). குளோஸ் எண்ட் திட்டங்களில் பங்கிலும் முதலீடு செய்யலாம், கடனிலும் முதலீடு செய்யலாம். கடனில் முதலீடு செய்யப்படும் திட்டங்களுக்கு ஒரு பெயர் உண்டு எப்.எம்.பி  FMP / FTP / FTF ( Fixed maturity plan / Fixed tenure plan /Fixed tenure fund) என்பதாகும். அதைப் பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்.

எப்.எம்.பி  (FMP)

நாம் அறிந்ததுதான், அனைத்து கடன் திட்டங்களையும் பாதிக்கும் ரிஸ்க் காரணிகளை. அவை  கிரெடிட் ரிஸ்க், (credit risk) வட்டி விகித ரிஸ்க் (interest rate risk) மற்றும் லிக்விடிட்டி ரிஸ்க் (liquidity risk)  ஆகிய மூன்று வகைகள்.  இந்த மாதிரியான எப்.எம். பி  திட்டங்களில் வட்டி விகித ரிஸ்க் மற்றும் லிக்விடிட்டி ரிஸ்க்  குறைவாகவே இருக்கும். காரணம்  குறிபிட்ட கால திட்டம் என்பதால் நமது பணத்தை கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்றவாறு பணம் திரும்பக் கிடைக்குமாறு முதலிடு செய்யபடுகின்றது.  இதனால் இடைப்பட்ட காலங்களில் ஏற்றபடும் வட்டி விகித  ஏற்ற இறக்கங்கள் இந்த திட்டங்களின் வட்டி விகிதத்தை பாதிப்பதில்லை.  என்.எ.வி யும் (NAV) அதிகம் பாதிப்பதில்லை.  அதேசமயம் கிரெடிட் ரிஸ்க் இந்த திட்டங்களிலும் உள்ளது. எனவே இந்த எப்.எம்.பி  திட்டங்களில் முதலீடு செய்யும்போது நல்ல நிறுவனத்தின் பண்டுகள்  ரிஸ்க் குறைவாக இருக்கிறதா என்று தெரிந்து முதலீடு செய்யலாம். AAA நிறுவணங்களில் முதலீடு செய்யபடுகின்றதா என்று பார்த்து முதலிடு செய்லாம். சமீபத்திய சரித்திரம், ஒரு விதி விலக்கு (ஐ.எல்.எப்.எஸ் சரித்திரம் - IL&FS) இருந்தாலும் AAA மதிப்புகளை நம்பித்தான் ஆகவேண்டும். எல்லா AAA நிறுவணங்களும் பாதிப்புகுள்ளாகும் என்று எண்ண வேண்டாம்

உத்தேசமான லாபத்தை அறியும் வழி

உதாரணமாக நமது திட்டம் மூன்று வருடத்தில் முடிகிறது  என்று வைத்துக்கொள்வோம், ஏனெனில் இது மாதிரியான திட்டங்கள், முன்னர் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.  தற்போது ஷார்ட் டேர்ம் லாபம் என்பது கடன் திட்டங்களுக்கு மூன்று வருடமாக,  மாற்றப்பட்டதால் இவ்வாறான திட்டங்கள் 3 வருடதுக்கு மேல் தற்பொழுது  அளிக்கப்படுகின்றது. எனவே உதாரணத்திற்கு 3 வருட திட்டம் என்று கொள்வோம். திட்டம் AAA வகையில் முதலீடு செய்வதாக கொள்வோம். அந்த மூன்று வருட முடிவில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை முதலீட்டு ஆலோசகர்களோ, நிறுவனமோ தெரிவிக்கப் போவதில்லை. இது செபியின் கட்டளையாகும் . நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பதை இந்த திட்டங்களில் ஒரு வழியாக யூகிக்கலாம். அது எப்படி?? பொதுவாக மூன்று வருட AAA கடன் பத்திரங்கள் 9% லாபம் வருகிறது என்றால் நிர்வாகத்தின் செலவு 0.5% கழித்து மூன்று வருட முடிவில் நமக்கு  8.5 % லாபம்  கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அறியலாம்.  நாம் முதலீடு செய்திருக்கும் திட்டம் இரண்டு, மூன்று வகையான கடன் பத்திரங்களில் முதலீடு செய்து இருக்கும்போதே அதில் கிடைக்கும் லாபமும் மாறுகின்றது. இந்த வகையில் நமக்கு கிடைக்கும் உத்தேசமான லாபத்தை கீழ்க்கண்ட உதாரணம் மூலம் அறியலாம்.

Example for calculating indicative yield of FMP
Instrument
Allocation %
Expected yield %
Weighted yield %
AA Bond
75
9.25%
6.9375
AAA Bond
25
8.80%
2.2
Yield for the fund
9.1375
Expense ratio
0.5
Indicative final yield for investor
8.6375

நவம்பர் மாதத்தில் வரவிற்கின்ற எப்.எம்.பி திட்டங்கள்

தற்போது நடப்பில் உள்ள அல்லது நவம்பர் மாதத்தில் வரவிற்கின்ற எப்.எம்.பி திட்டங்களை கீழ்க்கண்ட அட்டவணையில் பார்க்கலாம்.

Fund name
Launch Date
Close Date
Tenure-Days
ICICI Prudential Fixed Maturity Plan - Series 84 - 1247 Days Plan M
2-Nov-18
5-Nov-18
1247
Aditya Birla Sun Life Fixed Term Plan - Series RN (1240 Days)
5-Nov-18
13-Nov-18
1240
Reliance Fixed Horizon Fund XXXIX - Series 15
13-Nov-18
14-Nov-18
1259
Tata Fixed Maturity Plan Series 56 Scheme E
19-Oct-18
2-Nov-18
1099
UTI FTIF Series XXX - XI
12-Nov-18
26-Nov-18
1246

நிறைவாக

திட்டத்தின் முடிவில் கிடைக்கும் லாபத்திற்கு இண்டக்சேசனக்கு பின் வரி செலுத்துவதால்  எப்.எம்.பி  (FMP) கடன் பண்டுகளின் லாபத்திற்கான வரி  குறைகிறது . ஒரளவு லாபத்தை யூகித்து முதலீடு செய்வதற்கு ஏற்றது இந்த எப்.எம். பி  (FMP) பண்டுகள். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் , வதி விலக்குகளை தவிர்த்து, ஒரளவு லாபத்தை யூகித்து, மூதலீடு செய்யவல்ல திட்டம். இது மட்டுமே.


உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டுமற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் நன்றி 

Thursday, 8 November 2018

Fixed Maturity Plan (FMP)

Click here to read this article in Tamil

Noisy Market
Both the equity and the debt markets have been in turmoil for the last two months. Investors are finding it difficult to invest. They are not sure where to hide or safeguard themselves in this failing market. Is there any way out? Yes there is. In Mutual Funds, there is always one or couple of schemes that are available to get decent returns without much volatility. This category of funds is suitable for any type of situation and for any type of investor who wishes to reduce volatility and get almost certain returns. What we mean is, one close ended plan that is usually called Fixed Maturity Plan (FMP).

Close Ended Mutual Funds
Most of the time, investors frequently ask this question that in how many years we have to invest  and when will we get our money back? Usually in Mutual Funds, we can enter into funds at any time and get the money back on any working day (or) as and when we need the money. This type of schemes are called Open Ended Schemes. Most of the Mutual Funds come under this Open Ended category. The opposite of this category of schemes are also available in Mutual Funds and they are called Close Ended Mutual Funds. Equity based as well as Debt based Close Ended funds are available in Mutual Funds. In order to have reduced volatility and to get slightly better returns, we recommend Fixed Maturity Plan, which comes under Close Ended Debt fund category. FMP is also known as Fixed Tenure Funds /Plans (FTF/FTP).

Fixed Maturity Plans (FMP)
As we know, Debt Funds are impacted by three types of risk. First one is interest rate risk, second one is credit risk and the third one is liquidity risk. Out of these three risks, FMP’s are mostly not affected by interest rate risk and liquidity risk. The reason being, it is a fixed tenure mutual fund. Here the fund manager invests in the debt bonds, where scheme maturity and bond maturity are more or less similar, so on maturity, he will get returns as per the agreed terms. In this way interest risk rate is averted, but at the same time, as any other debt funds, these funds are also subject to credit risk. This has to be kept in mind always. In order to reduce the risk of the investments, the risk averse investors can choose FMP investing in AAA bonds, and those who wants to get slightly higher returns and stomach the risk can go in for FMP investing in AA bonds. (The fact of life is, in the recent past like ILFS, AAA bonds have also come under the defaulting category. We can keep this in mind, but should not worry too much. It is one off case and all AAA rated bonds will not default at the same time. We at least hope so)

Calculating Indicative Yields
In Fixed Maturity Plans, we can calculate likely returns at the end of the maturity period. Most of the schemes will mature only after 3 years. This is because in the recent past, the long term capital gain is applicable to debt funds only after 3 years. Returns received before 3 years is short term. For example, we can take 3 year FMP which completely invest in AAA bond and get a yield of 9%. If the expense ratio is 0.5 %, then the likely yield from the schemes is 8.5% (9 - 0.5 = 8.5). Generally, FMP will invest in mixed assets - the table given below gives an example of how to calculate yield in the case of schemes invested in more papers with the different yields.

Example for calculating indicative yield of FMP
Instrument
Allocation %
Expected yield %
Weighted yield %
AA Bond
75
9.25%
6.9375
AAA Bond
25
8.80%
2.2
Yield for the fund
9.1375
Expense ratio
0.5
Indicative final yield for investor
8.6375

Current FMP open or in the pipeline for the month of November
List of open schemes and the ones likely to open in the near future.

Fund name
Launch Date
Close Date
Tenure-Days
ICICI Prudential Fixed Maturity Plan - Series 84 - 1247 Days Plan M
2-Nov-18
5-Nov-18
1247
Aditya Birla Sun Life Fixed Term Plan - Series RN (1240 Days)
5-Nov-18
13-Nov-18
1240
Reliance Fixed Horizon Fund XXXIX - Series 15
13-Nov-18
14-Nov-18
1259
Tata Fixed Maturity Plan Series 56 Scheme E
19-Oct-18
2-Nov-18
1099
UTI FTIF Series XXX - XI
12-Nov-18
26-Nov-18
1246

Closing
  • At the end of the day, the debt funds are tax efficient than bank deposits and in FMP, tax on returns are paid after indexation.
  • Take Home Money is usually high in FMP after tax.
  • These are good option for conservative investor to get more or less fixed return / expected return in fixed period generally volatility is very low in this funds.
  • This is popular among knowledgeable investors.
  • This will be good option for current market, for risk averse investor.
  • This is the only fund in mutual funds, where we can arrive expected returns more or less close to reality
So those who wish to get slightly higher returns with less tax and less volatility can consider investing in Fixed Maturity Plans.


If you like this article, please share this on your Facebook or Twitter. This would be a special gift which you would be giving to our blog.