பண்ட் வாங்கும் விலை
நாம் பண்டு
திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யும் போது நமக்கு யூனிட்டுகள் வாங்கும் விலை
நிர்ணயம் செய்யபடும் என் எ வி தேதி ( NAV date) குறித்த விதி முறைகள் மாறி கொண்டே உள்ளது. தற்பொழுது 01-01-2021
முதல்
புது விதி முறைகள் நடைமுறைப்படுத்த பட
உள்ளது. அதை விபரமாக இங்கு பார்கலாம்
வாங்கும் விலைக்கான காரணீகள்
யூனிட்டுகள்
வாங்கும் விலை நிர்ணயம் செய்யபடும் என் எ வி
தேதியை நிர்ணயம் செய்வதற்கு தேவையான மூன்று முக்கியமான அடிப்படை விஷயங்களை
தெரிந்து கொள்வோம்
1.
நாம் எந்த தேதியில் பண்டு வாங்கும் படிவத்தை பூர்த்தி
செய்து நிறுவனத்தில் எந்த நேரத்தில் சமர்பித்தோம் என்ற விவரம்
2.
நமது முதலீட்டு பணம் பண்டு நிர்வாகத்திற்கு எந்த
தேதியில் எந்த நேரத்தில் போய் சேர்ந்தது என்ற விவரம்
3.
நாம் வாங்கும் பண்டு எந்த வகையானது என்பது
பண்டு எந்த வகையானது
பண்டு
எந்த வகையானது என்பதை முதலில் பார்ப்போம் இதை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் முதல்
பிரிவு லிக்விட் மற்றும் ஓவர்நைட் பண்டு கள் ( Liquid and
overnight) இதில் அடங்கும். இதைத் தவிர மற்ற எல்லா பண்டுகளும் இரண்டாவது
பிரிவில் அடங்கும்
முதல்
பிரிவான லிக்விட் மற்றும் ஓவர்நைட் பண்டு களின் வாங்கும் விலையில் எந்தவித
மாற்றங்களும் செய்யப்படவில்லை. இரணடாவது
பிரிவில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றது
பண்டுகளின் இரண்டாவது பிரிவில் ( லிக்விட் மற்றும் ஓவர்நைட் பண்டு தவிர) வாங்கும் என் எ வி கணக்கிடபடும் முறை
லாக் டவுனுக்கு முந்தைய வாங்கும் என் எ வி
கணக்கிடபடும் முறை
இந்த
முறையில் மதியம் 3 மணிக்கு முன்னர்
செலுத்தபடும் படிவங்களில் முதலீடு தொகை இரண்டு லட்சங்களுக்கு குறைவாக வாங்கும்
பொழுது அன்றைய தேதியில் என் எ வி கணக்கிடபடும். இதற்கு
அப்பாற்பட்ட வகைகளில் என் எ வி கணக்கிடபடும் முறை மாறுபடும்
புதிதாக அமலுக்கு வரும் வாங்கும் என் எ வி கணக்கிடபடும் முறை – 01-01-2021முதல்
புதிதாக
நடைமுறைக்கு வரவுள்ள முறையில் 2 லட்சத்திற்கு மேல் கீழ் என்ற வேறுபாடு இல்லாமல்
முதலீட்டுத் தொகை நிறுவனத்திற்கு வந்த தேதியும், நேரமும் பிரதானமாக
கொள்ளப்பட்டு வாங்கும் என் எ வி. கணக்கிடப்படும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கிடப்படும் முறையின்
பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது
முதலீடிற்க்கான விண்ணப்பம் தந்த நாள்
/ தேதி |
குறிப்பிட்ட காலமான மதியம் மூன்று மணிக்கு முன்னர்
பின்னர் தரப்பட்டது |
முதலீட்டு தொகை பண்டு நிறுவனத்திற்கு
வந்த நாள் |
முதலீட்டு
தொகை பண்டு நிறுவனத்திற்கு வந்த நேரம் குறிப்பிட்ட காலமான மதியம் மூன்று மணிக்கு முன்னர் பின்னர் |
பண்டு வாங்கிய என் எ வி கணக்கிடப்படும் நாள்/ தேதி |
வரிசை எண் |
திங்கள் |
முன்னர் |
திங்கள் |
முன்னர் |
திங்கள் |
1 |
திங்கள் |
முன்னர் |
திங்கள் |
பின்னர் |
செவ்வாய் |
2 |
திங்கள் |
பின்னர் |
செவ்வாய் |
முன்னர் |
செவ்வாய் |
3 |
திங்கள் |
பின்னர் |
செவ்வாய் |
பின்னர் |
புதன் |
4 |
திங்கள்/04-01-2021 |
பின்னர் |
வியாழன் /07-01-2021 |
பின்னர் |
வெள்ளி /08-01-2021 |
5 |
மாற்றத்தின் தாக்கங்கள்
நீண்ட
கால முதலீட்டு முறையில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த ஒரு நாள், இருநாள் என் எ வி
மாற்றங்கள் பெரிய பாதிப்பு எதையும் தராது. அதே நேரத்தில்
சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தேதியிலேயே என் எ வி கிடைப்பதற்கு முதல் வகை
தவிர மற்ற வகைகளில் கிடைக்கப்போவதில்லை. எனவே நாம் இன்று சந்தை மிகவும் இறங்கியுள்ளது
உடனே இன்றைய என் எ வி ல் வாங்கி விடுவோம்
என்று முறையில் செயல்படுவது அவ்வளவு எளிதாக இருக்காது
நினைவில் கொள்ள வேண்டியவை
நாம்
பண்டு விண்ணப்பம் செய்யும் தேதிக்கும், முதலீட்டு
தொகை பண்டு நிறுவனத்திற்கு கிடைப்பதெற்கான காலதாமதம் ஓரிரு நாளிலிருந்து ஒரு
வாரத்திற்கு மேல் கூட ஆகலாம். (வரிசை எண் 1)
நாம் ஆன்லைன்
தளங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து ஆன்லைன் மூலமாக பணத்தை செலுத்தும் போது
அன்றைய தேதியில் என் எ வி கிடைக்க
சாத்தியமானது. அதேசமயம் (வரிசை எண் 5) வங்கிகள் மற்றும் இடை நிறுவனகளில் ஏற்படும் கால தாமத்தால், பணடு நிறுவனத்திற்கு பணம் கிடைக்க நான்கு நாள் ஆகின்றது.
பண்டு
நிறுவனத்திற்கு பணம் கிடைக்க காலதாமதம் ஏற்பட காரணங்கள்
1.
செலுத்தும் முறை
a.
நேரடியாக செலுத்துகிறமோ
அல்லது மூன்றாம் நிறுவனம் போன்ற எம் எப் யூ (MFU) மூலம் செலுத்துவது
2.
செலுத்தும் வடிவம்
a.
காசோலை ( cheque0) / ஆர் டி சி எஸ்
(RTGS) / நிப்ட் (NEFT) ,
3.
சம்பந்த பட்ட வங்கிகளின் பரிவர்த்தனை முறை
நமது
வங்கி கணக்கில் பணம் கழிக்க பட்ட நேரம் அல்ல. பண்டு நிறுவனத்திற்கு பணம் கிடைத்த நேரமே கணக்கில் கொள்ளப்பட்டு வாங்கும் என் எ வி கணக்கிடபடும்
இங்கு படித்த / பிடித்த பதிவுகளை உங்கள் சமூக ஊடகங்களில் பகிரலாமே
நன்றி
முந்திய பதிவுகள்
---------------
எஸ் ஐ பி பற்றி படிக்க
எஸ்.ஐ.பி யில் லாபத்தை அதிகரிக்கும் 6 வழிமுறைகள்
எஸ்.ஐ.பி முதலீடு... தெரிந்ததும் தெரியாததும்!
எஸ்.ஐ.பி முதலீடு, தெரிந்ததும் தெரியாததும்! (10 அம்சங்கள்)
--------------
முதலீடுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்
பண்டுகளில் ரிஸ்க் அளவீடு செய்வது எப்படி
விகடனில் படிக்க - என்து வலைபூவில் படிக்க
நாமினேஷன் விபரம் அறிய