Monday, 11 January 2021

ஆன்லைனில் எல்லா சேவைகளையும் செய்ய முடியுமா?

 

ஆன்லைனில் எல்லா சேவைகளையும் செய்ய அல்லது பெற முடியுமா?

 

பகுதி-1 சந்தைப்படுத்தலும் சௌகரியம் ஆவதும்

கோவிட்-19 கொண்டு வந்த ஒரே நல்ல காரியம் பெரும்பாலான சேவைகளை ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பெறுவது அதிகமாகி கொண்டே வருகின்றது. வீட்டிலிருந்தே ஒரு பண்டில் எஸ் ஐ பி எளிதாக தொடங்கலாம். முன்னர் தொடங்கிய எஸ் ஐ பி  ஐ  நிறுத்த முடியுமா? முடியும் என்பதே பதில். எளிதாக  இல்லை என்பதே நிதர்சனம். காரணம் இங்கு வாடிக்கையாளர்களிடம் சந்தைப்படுத்துவது அதிகம் வாடிக்கையாளர்களின் சேவை வசதி குறைவு. இதற்கு உதாரணங்கள் அதிகம், சிலவற்றை இங்கு பார்ப்போம்

உதாரணம் 1 - 3 in 1 அக்கவுண்ட்

வங்கி சேமிப்பு கணக்கு  டீமேட் கணக்கு மற்றும் டிரேடிங் கணக்கு இவை மூன்றையும் சேர்த்து 3 in 1 அக்கவுண்ட் என்று அழைப்பார்கள் இதை நாம் எளிதாக திறக்க  முடியும் நமது வீட்டிற்கு முகவர்கள் வந்து இந்த மூன்றையும் ஒரே சமயத்திர படிவங்கள் பூர்த்தி செய்வதன் மூலம் திறந்துவிடுவார்கள். இந்த 3 in 1  அக்கவுண்டை முடுவதற்கு எந்த முகவர்களும் வீட்டிற்கு வரப்போவதில்லை. நாம்  மூன்று வெவ்வேறு நிறுவன அலுவலங்களுக்கு  சென்று பல படிவங்கள் பூர்த்தி செய்து தனித்தனியாக இந்த  அக்கவுண்டுகளே மூடிக்கொள்ள வேண்டும் நமது வேலையை எல்லா வகையிலும் முடிப்பதற்கு வாரங்கள் அல்ல மாதகணக்கில் ஆகின்றது என்பதே இன்றைய நிலைமை. நாம் அறிந்தது, சமீபத்தில் 80 லட்சம் இது போன்ற புதிய அக்கவுண்டுகள் திறக்கப்பட்டுள்ளது. திறந்துவிட்டார்கள்,  அதேசமயம் இதை மூடுவது அவ்வளவு எளிதா? திறந்தவர்கள் யோசிக்கட்டும்

 

உதாரணம் 2 வங்கியில் பிளக்ஸி வைப்பு நிதி திட்டம்

நாம் எல்லோரும் அறிந்த சேவை வைப்பு நிதி திட்டம். ஆன்லைனில்  செய்ய முடியும். அது போக பிளக்ஸி வைப்பு நிதி திட்டமும் ( Flexi deposit) உள்ளது இந்த சேவையை  பெரும்பாலான வங்கிகள் ஆன்லைனில் தருவதில்லை. காரணம் நான் அறியேன். இந்த  சேவையில் வாடிக்கையாளருக்கு நன்மைகள் அதிகம் வங்கிக்கு நன்மைகள் குறைவாக இருக்கலாம்.  இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்றே தெரிகின்றது

உதாரணம் 3 விமான சேவைக்கு பதிவு செய்வது

நாம் இருக்கைக்கு பதிவு செய்வது ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். (online ticketing) அதே சமயம் பதிவு செய்த இருக்கையை விலக்கி கொள்ள (Cancel /கேன்சல்) செய்வதற்கு எளிதாக பண்ண முடியுமா என்றால் இல்லை, காரணம் நிறைய சேவை நிறுவனங்களில் கேன்சல் என்ற ஒரு முறையே ஆன்லைனில் இருப்பதில்லை.  நாம்  இருக்கையை விலக்கி கொள்ள  அவர்களது கால் செண்டரை அழைத்து இருக்கையை விலக்கி கொள்ளவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது 

உதாரணம் 4 எஸ் பி

நாம் முன்பு கூறிய எஸ் ஐ பி  யை எடுத்துக் கொள்வோம் நாம் முகவர்களின் நிர்பந்த்தாலோ  அல்லது விற்பனை பிரதிநிதிகளின் வாய் ஜாலத்தால் எஸ் ஐ பி  தொடங்கியவராக இருக்கலாம். தற்சமயம்  எஸ் ஐ பி  வேண்டாம் அல்லது அது நமக்கு சரிப்படவில்லை என்று தோன்றினால் தொடங்க உதவியவர்கள் பெரும்பாலும் மூடி தரப்போவதில்லை. அதை நாமே ஆன்லைன் மூலம் மூடிக்கொள்ள வேண்டும். எஸ் ஐ பி   யை நிறுத்த வேண்டாம் பாஸ் ( Pause)  செய்துகொள்ளுங்கள் என்று கூறுவார்கள் அந்த பாஸ் 3 அல்லது 6 மாதங்களுக்கு மட்டுமே முடியும் அதற்கு மேல் முடிவதில்லை.  எஸ் ஐ பி யை நிறுத்தும் பொத்தானை கண் காணாத இடத்தில் வைத்து இருப்பார்கள். நிறுத்துவது பெரும்பாலும் எளிதான செயலாக இருக்காது.   இதன் முழு விபரம் அடுத்த பகுதியில் (பகுதி 2 எஸ் ஐ பி யை நிறுத்தும் விதம் படிக்க சில நாட்கள் கழித்து மீண்டும் இங்கு வரவும் )(எஸ் ஐ பி யை நிறுத்தும் விதம்ஆங்கிலத்தில் படிக்க இங்கு சொடுக்கவும்)

தீர்வு

இது போன்ற உதாரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம் இதற்கு என்னதான் தீர்வு?  ஆங்கிலத்தில் கூறுவார்கள். Buyers Beware என்று அது போல் கணக்கு தொடங்கும் முன்பு அல்லது எதையும் புதிதாக ஆரம்பிக்கும் முன்பு, நாம் இதையெல்லாம் எப்படி மூடிக்கொள்ளலாம், எளிதான செயலா? என்ன தேவை? இந்த புதிய அக்கவுண்ட் நமக்கு தேவைதானா? என்று நன்கு சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.  

இரண்டாவதாக வாடிக்கையாளர் சேவையில் குறை ஏற்படும் போது அதற்கான வழி முறைகளை / நெறி  முறைகளை மாற்றுவதற்கு அரசாங்க  துறைகள்  செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்பது வாடிக்கையாளர்களின் ஆதங்கமே

இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும் 

உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும்  feedback here

முந்திய கட்டுரைகளை  படிக்க 

சந்தையின் உச்சத்தில் லாபத்தை நிரந்தரமாக்குங்கள்

நிதி நலம் பேண, உடல் நலம் பேணும் ஃபண்டுகள்

பங்குகள் பண்டுகள்  ஒரு அலசல்

ரிஸ்க்கோ மீட்டர் 3

நாமினேஷன் அவசியம்

சந்தையில் ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்

எஸ் ஐ பி யை தொடர்வதில் சிரமமா?

முதலீடுகளில் எச்சரிக்கை

No comments:

Post a Comment