Friday, 15 January 2021

எஸ் ஐ பி யை நிறுத்துவது எப்படி?

 

ஆன்லைனில் எல்லா சேவைகளையும் செய்ய முடியுமா

இந்த தொடரில் முதல் பகுதி படிக்க இங்கு தொடவும் 

பகுதி-2 - எஸ் பி  யை  நிறுத்துவது எப்படி?

தலைப்பை பார்த்து சிலர் ஆச்சரியம் அடைந்து இருக்கலாம் பெரும்பாலும் இதுபோன்ற தலைப்பில் கட்டுரைகள் வருவதில்லை இது ஒரு விதிவிலக்கு கட்டுரை

கோவிட்-19 கொண்டு வந்த ஒரே நல்ல காரியம் பெரும்பாலான சேவைகளை ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பெறுவது அதிகமாகி கொண்டே வருகின்றது. வீட்டிலிருந்தே ஒரு பண்டில் எஸ் ஐ பி எளிதாக தொடங்கலாம். முன்னர் தொடங்கிய எஸ் ஐ பி  ஐ  நிறுத்த முடியுமா? முடியும் என்பதே பதில். எளிதாக  இல்லை என்பதே நிதர்சனம்

நாம் முகவர்களின் நிர்பந்த்தாலோ  அல்லது விற்பனை பிரதிநிதிகளின் வாய் ஜாலத்தால் எஸ் ஐ பி  தொடங்கியவராக இருக்கலாம். தற்சமயம்  எஸ் ஐ பி  வேண்டாம் அல்லது அது நமக்கு சரிப்படவில்லை என்று தோன்றினால் இதை படியுங்கள் நீங்களாகவே ஆன்லைனில் எஸ் ஐ பி  யை   மூடிவிடலாம் அல்லது தற்காலிக எஸ்ஐபி நிறுத்து முறை  (Pause / பாஸ்)  செய்துவிடலாம். தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்

தற்காலிக எஸ்ஐபி நிறுத்து முறை

ஒரு தடவை எஸ்ஐபி நிறுத்திவிட்டால் திரும்பவும் பெரும்பாலோனர் அதை பின்னர் தொடர்வதில்லை, விட்டுப்போனது விட்டுப்போனது ஆகவே ஆகிவிடுகின்றது. நிறைய பண்டு நிறுவனங்கள் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்கள்  தற்காலிக எஸ்ஐபி நிறுத்து முறை யை அறிமுகபடித்தியுள்ளது. இந்த தற்காலிக எஸ்ஐபி நிறுத்து முறை என்ற புதிய முறை மூலம் மூன்று அல்லது ஆறு மாதங்கள் எஸ்ஐபி கட்டாமல் பின்னர் எல்லாம் சரியாகும் பொழுது எஸ்ஐபி யை தொடரலாம். இது முழுதும் நிறுத்துவதைவிட சிறந்த்தாக கருதபடுகின்றது 

எஸ் பி  யை  மூடுவது / மாற்றுவது க்கான வழிமுறைகள்

முறை 1 முகவர்கள் மூலம் அணுகுவது

எஸ் ஐ பி  ல் மாற்றம் செய்வதற்கு மிக முக்கிய அம்சம் நாம் எவ்வாறு எஸ் ஐ பி  யை   தொடங்கினோம் என்பது நாம் தனிப்பட்ட நபர்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தொடங்கியிருந்தால் திரும்பவும் அதே முறையில் மாற்றங்கள் செய்வதே உசிதமாகும்

தனிநபர் முகவர்கள் மூலம் தொடங்கி இருந்தால் அவர்களை அணுகி அவர்கள் மூலமாக மாற்றம் செய்யலாம் அவர்கள் அதற்கான வழிவகைகளை ஆன்லைனில் பூர்த்தி செய்து உங்களுக்கு எலக்ட்ரானிக் முறையில் அனுப்புவார்கள் அதை நீங்கள் அப்ருவ் (Approve) செய்து மாற்றங்களை செய்ய முடியும்

நீங்கள் ஆன்லைன் தளங்கள் மூலம் உதாரணமாக மூன்றாம் நிறுவன எம் எப் யுகுவேரா (Third party sites – MFU , Kuvera ) போன்ற தளங்களில் எஸ்ஐபி தொடங்கி இருந்தால் நீங்களே அந்தந்த தளங்கள் சென்று அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து மாற்றத்தை செய்ய முடியும். இதில் முக்கியமான அம்சம் மூன்றாம் நிறுவன ஆன்லைன் மூலம் எஸ்ஐபி தொடங்கியிருந்தால்அவர்கள் தளத்தை தவிர வேறு வகையில் எஸ்ஐபி  மூட இயலாது

முறை 2 ஆர் டி (RTA – Registrar and Transfer Agents) தளங்கள் மூலம் மாற்றங்கள் செய்வது

 பிராங்களின் திட்டங்கள் தவிர மற்ற எல்லா வகையான பண்டு நிறுவன திட்ட எஸ் ஐ பி    யில் மாற்றங்கள் செய்வதற்கு  கேம்ஸ் (Cams / KFintech) மற்றும் கே பின் டெக்  நிறுவன தளங்களில் மூலம் ஆன்லைனில் மாற்றங்கள் செய்ய முடியும் அதை பற்றி சற்று விரிவாக இங்கு காண்போம்.

முதலில் அந்தந்த தளத்தில் பதிவு செய்து அதற்கான கடவுச்சொல்லை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ( user name and password)  கைபேசியில் செய்ய வேண்டுமென்றால் அதற்கான அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் கைபேசி மூலமாகவோ அல்லது கணணியில் அந்தந்த தளத்திற்கு சென்று மாற்றம் செய்துகொள்ள முடியும்.

அந்தந்த தளத்திற்கான மெனு ஆங்கிலத்தில் இங்கு தறப்பட்டுள்ளது. எளிதாக புரிவதற்கு அதற்கான படங்களும் தரப்பட்டுள்ளது

கேம்ஸ் மூலம் மாற்றங்கள் செய்வது

தள முகவரி : https://mycams.camsonline.com/

கைபேசிக்கான ஆப் : MyCams app

செய்ய வேண்டிய வழிமுறை

Please login myCAMS --> Go to myTransaction -->Systematic Transaction menu --> Choose Mutual Fund Name --> Select "SIP" under Systematic Transaction Type --> Choose the SIP transaction which you wish to cancel from the Pending / Active tab --> Click on "Cancel SIP" and submit.



கே பின் டெக்   மூலம் மாற்றங்கள் செய்வது

தள முகவரி : KFintech MFS Investor

கைபேசிக்கான ஆப் : KFinkart

செய்ய வேண்டிய வழிமுறைOnce login investor can see the dashboard where there is one option Pause/Cancel Systematic transactions. He has click on the same and select the folio and the scheme and submit for cancellation.



பிராங்களின் மூலம் மாற்றங்கள் செய்வது

தள முகவரி : https://www.franklintempletonindia.com/

கைபேசிக்கான ஆப் : ஏதும் இருப்பதாக தெரியவில்லை

செய்ய வேண்டிய வழிமுறை : மெனுவில் மாடிபய் ( Modify) எஸ் ஐ பியை தேர்ந்தெடுத்து நமக்கான திட்டத்தை தேர்ந்தெடுத்து மாற்றங்கள் செய்து கொள்ள முடியும்



முறை 3 பண்டு நிறுவன தளங்கள் மூலம் மாற்றங்கள் செய்வது

ஒவ்வொரு பண்டு நிறுவன தளங்களும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. இதற்கு பொதுவான வழிமுறைகள் எதுவும் இல்லை. நாம் நமது திட்டத்தின் தக்க தளங்களுக்கு சென்று அங்கு இருக்கும் வழிமுறைகளை பின் பற்றி மாற்றங்கள் செய்ய முடியும். சில தளங்களில் மாற்றங்கள் செய்ய ஏதுவாக இருக்கும். சில தளங்களில் மாற்றங்கள் செய்ய வழிமுறைகள் இருப்பதில்லை

இந்த தொடரில் முதல் பகுதி படிக்க இங்கு தொடவும் 

இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும் 

உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும்  feedback here

முந்திய கட்டுரைகளை  படிக்க 

சந்தையின் உச்சத்தில் லாபத்தை நிரந்தரமாக்குங்கள்

நிதி நலம் பேண, உடல் நலம் பேணும் ஃபண்டுகள்

பங்குகள் பண்டுகள்  ஒரு அலசல்

ரிஸ்க்கோ மீட்டர் 3

நாமினேஷன் அவசியம்

சந்தையில் ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்

எஸ் ஐ பி யை தொடர்வதில் சிரமமா?

முதலீடுகளில் எச்சரிக்கை


No comments:

Post a Comment