Sunday, 5 March 2017

Stock vs Mutual funds

Check out the image below:

(Image Source: Economic Times)

This will give an idea of how even popular name in stocks have given worst returns, where as for same period, different types of mutual funds have given positive returns better than bank - beating inflation.

Since markets are near all time high, it may be better to exit some stocks and invest in equity mutual funds!!

Please reach out to me for any assistance in this process.

குறிக்கோளுடன் கூடிய முதலீடுகள் (Goal Based investments)

பாதி கிணறு தாண்டுவது ஆபத்தானது, எல்லாம்  அறிந்த்துதான். அதுபோலவே, அரைகுறை முதலீட்டு அறிவும் ஆபத்தானதான். நான் வாங்கிய பங்கோ, திட்டமோ, 50%  குறைந்துவிட்டது, இது சரியில்லை, பெரிய ஏமாற்று வேலை, இது வெறும் சூதாட்டம், என்பவர்கள் ஏராளம். படித்தவர்களும், பாமரனை போல், ஆயிரம், குறைகள், சொல்வோருமுண்டு. பங்குகள், மற்றும் பரஸ்பர நிதி திட்டங்கள் மதிப்பு ஏறுவதும், இறங்குவதும், சகஸம்தான. இதை மறுப்பதிற்க்கில்லை. பங்கு சந்தையின் ஏற்றத்தையோ, இறக்கத்தையோ, நீங்களோ, இல்லை, நானோ, நிச்சியம், மாற்றமுடியாது. நம்மால் மாற்ற முடியாததை  பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை. இந்த தெளிவு இல்லாம்ல், பங்குகள், பரஸ்பர நிதி திட்டங்கள், பற்றி அறியாமல், புரியாமல், இந்த பெயரை கேட்டவுடன், நஷ்டம்தான், என்று அரைகுறை அறிவோடு அலராமல், முழுவதும் புரிந்து முதலீடு செய்யலாமே.


படித்தவர்கள், நாம் பார்தவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்  கூறும், டிப்ஸ், ஏராளம். உதாரணமாக,  பங்கு சந்தை இறங்கும் போது வாங்கி, ஏறும் போது விற்கவேண்டும். மிக எளிமையான சூத்திரம்தான் இதிலும் சூட்சும்ம் இருங்கின்றது. நமது, திட்ட மேளாளருக்கூட, எப்போது இறங்கி முடிந்து, மாற்றம் வரும், ( market bottom) எப்போது ஏறிமுடிந்து, மாற்றம் வரும்(Market peak)  என்பதை அறிதியிட்டு கூற முடியாது. ஆனால் நாம் தினமும் என்ன செய்கின்றோம். இன்று வாங்கி, நாளை விற்று, அல்லது இன்று வாங்கி இன்றே விற்று  லாபம்,  பார்க்க என்னுகின்றோம். இந்த நிலையில், சந்தையின் ஏற்ற இறக்கம், நமது, லாபத்தில், மிக்க, அதிக தாக்கத்தை ஏற்படுத்தகிறது.

 இவ்வாறு இல்லாமல் சந்தையின் ஏற்ற இறக்கத்தை பார்காமல், "எல்லா நாளும், நல்ல நாளே" என்று இன்றே முதலீட்டை தொடங்குகள். என்ன இப்படி சொல்கிறார், என்று ஏளனம் வேண்டாம், காரணமாகத்தான் சொல்கின்றேன். இன்று முதலீடு செய்துவிட்டு, அடுத்த மாத இறுதிக்குள், அதிக லாபம், பார்க எண்ணாமல், ஒரு குறிக்கோளுடன் முதலீட்டை தொடங்குகள். உதாரணமாக என்ன குறிக்கோளுடன் முதலீட்டை தொடங்கலாம்.


முதலாவதாக, செட்டியாரின் கவலை, படிப்பு. குழந்தைகளின், பெரிய படிப்பு. அவர்கள், இஞ்சினியராகவோ, டாக்டரவகோவ, இல்லை இதர செலவு கூடிய படிப்பு படிக்க,  படிக்க சேரும் காலத்தில அதிக பணத்தேவைபடும்.  இதற்கு பணம் சேர்கவேண்டும். இந்த குறிக்கோளுடன், படிப்பு தேவைகளுக்காக, முதலீடு தொடங்கலாம்.

இரண்டாவது, ஆச்சிகளின் கவலை, கலியாணம், காலபோக்கில், மெத்தை தலையனை கணக்குகள், குறைந்து போல் தெரிகிறது. தட்டு முட்டு சாமான்கள், குறைந்தாலும, கலியாண செலவுகள், ஏறுகிறதே தவிர, ஏளிமையானதாக இல்லை. மகள் கலியாண செலவுகளுக்காக, பணம் சேர்ப்பது, நல்ல குறிக்கோளே

மூன்றவதாக, நமக்காக, " நம்க்கு நாமே" என்பது போல், சாந்தி முடிந்த கையோடு, சாய்வு நாற்காலியில், சாய்ந்து காலாட்ட, வங்கியில், "கொழுத்" பணம் இருக்கவேண்டும். சமீபத்தில், பத்மஸ்ரீ டாக்டர்  நடராஜன் (முதியவர் சிறப்பு மருத்துவர்) புத்தகத்தில் படித்தேன், வங்கியில் பணம் இருக்கும் முதியவர்கள், மிகுந்த தண்ணம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர் நோக்குகிறார்கள். அதேசமயம் மகன் / மகள் / உற்றவர்கள்/ மற்றவர்களை சார்ந்து இருக்கும் முதியவர்களிடம் ஒய்வு கால வாழ்கை பயம் சிறிது உள்ளது. நமது ஒய்வு கால வாழ்கையில்  மிகுந்த தண்ணம்பிக்கையோடு வாழ்க்கையை சந்திக்க, பணம் சம்பாதிக்கும் காலத்தில், பணம் சேர்க்கவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.  இந்த குறிக்கோளுடன் பணம் சேர்பது அவசியம்.


இது போன்ற குறிக்கோளுடன் மாத மாதம், பல வருடங்கள், பணம் சேர்பதால், சந்தை ஏறி இறங்குவதை பற்றி, அதிகம், கவலைகொள்ள தேவையில்லை. நாம் வாங்கும், திட்டங்களின், சராசரி, விலை, குறைவாக இருக்கும், காலபோக்கில், லாபம், அதிகமாக இருக்க வாய்புக்கள் அதிகம். பல ஆய்வுகளின் படி, பரஸ்பர நதியில் பத்து வருடங்களுக்கு மேல் முதலீடு செய்யும் போது, லாபம் வருகின்றது. நமது குறிக்கோள் நிதர்சனமாகும் தருணம் வரும்போது, நாம் சேமித்த பணத்தை லாபத்தோடு எடுத்தகொள்ளலாம். சந்தை எவ்வாறு உள்ளது, என்று பாராம்ல், நமது தேவைக்கு, அன்று யாரிடமும், செல்லாம்ல். நமது பண்த்தை, நாம், எடுத்து, தேவையை பூர்த்திசெய்து கொள்ளலாம். இப்போது சொல்லுங்கள், இதில், எங்கு சூதாட்டம் என்று.

இது போன்று குறிக்கோளுடன் கூடிய முதலீட்டு விபரங்களை தனித்து பார்த்து, தேவையான அளவு பணம் சேர்க்க, ப்ராங்களின், டெம்பிளிடன், நிறுவனம் சிறப்பாக, ஒவ்வொரு குறிக்கோளுக்கும், எவ்வளவு பணம் சேர்த்து இருக்கின்றோம், என்பதை தெளிவாக காண்பிக்கும்

குறிக்கோளுடன் கூடிய முதலீடின் சிறப்பும்சங்கள்
1. மாத மாதம் சேமிப்பு
2. நீண்ட கால சேமிப்பு
3. வாங்கும் திட்டத்தின் சராசரி விலை குறைவு
4. லாபம் அதிகம் பெறவாய்புகள் அதிகம்
5. குறிக்கோள் நிதர்சனமாகும் போது நமது பண்த்தை நாமே எடுத்துகொள்ளலாம்
6. குறிக்கோளுக்கு தேவையான பணம் சேரும்போது தன்னம்பிக்கை கூடுகிறது.
7. கல்விக்காவோ, கலியாணத்திற்கு சேர்க்கும் பணத்தை எடுத்து வேறு செலவு செய்யாமல் இருப்பது


நான்கு வழிமுறைகள், வட்டி விகித சரிவிலிருந்து மீள (4 ways to beat interest rate blues)

கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி மத்திய வங்கி சமீபத்தில் வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் அதாவது 0.25% குறைத்து 6.25% ஆக மாற்றியது. இது கடந்த ஏழு வருடங்களில் குறைந்த வட்டி விகிதம் ஆகும். நிதி மேலாண்மை  விமர்சர்கள் இது மேலும் 0.25% முதல் 1% வரை குறையலாம் என்று கருத்து கூறுகிறார்கள். 0.25% மேலும் குறைய அதிக வாய்ப்புகள் என்றே தோன்றுகிறது! இதனால் வங்கியில் நிரந்தர வைப்பு நிதி முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதமும் குறையும். அன்றாட தேவைகளுக்கு அல்லது வருங்கால எதிர்பார்ப்புகளுக்காக சேமிப்போர்களுக்கு வட்டி விகித குறைவால் பாதிப்பு தான். இந்த பாதிப்பிலிருந்து விடுபட நாம் நான்கு வழிமுறைகளை பார்க்கலாம். அதில் அவரவர் தேவைக்கேற்ற வழிமுறை தேர்ந்தெடுத்து வட்டி விகித சரிவிலிருந்து சற்று அதிக வருமானம் பெற வாய்ப்புகள் உள்ளது.


பரஸ்பர நிதிகளின் கடன் பத்திர முதலீடு பற்றிய வாசகர்கள் நன்கு அறிந்திருப்பார்கள், நிறைய திட்டங்கள் சிறு சிறு மாறுதல்களுடன் உள்ளது. அதில் எந்த வகையில் இந்த வைப்பு நிதி முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பயன் பெறலாம்.

முதல் வழிமுறை:
பரஸ்பர நிதி திட்டத்தில் liquid fund / ultra short term fund வழிகளில் முதலீடு செய்யலாம். இத்திட்டங்களில் ரிஸ்க் குறைவாக இருக்கும். நமது பணம் பெரும்பாலும் AAA அல்லது sovereign rating முதலீடு செய்யப்படும்.

இரண்டாவது வழிமுறை:
சற்று  கூட ரிஸ்க்குடன் சுமார் வங்கி வைப்பு நிதி விட 1% கூடுதல் வருமானம் பெற mid term fund /accrual fund. நாம் தேர்ந்தெடுக்கு திட்டங்கள்  interest rate risk அல்லது  credit risk உள்ள திட்டங்களா என்று பார்த்து தேர்வு செய்யலாம். corporate  credit fund 'கள் credit risk சேர்ந்தவை. மேற்கூறிய ரெண்டு வகைகளும் முற்றிலும் கடன் பத்திர வகையை சார்ந்தவையே. எனவே ஏற்ற இரக்கம் குறைவாகவும், வருமானம் வைப்பு நிதிகளை விட சற்று அதிகமா கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

மூன்றாம் வழிமுறை:
வருமானத்தில் சிறுதளவு கூட்ட சற்றே பங்கு கலந்த கடன் பத்திரங்கள் முதலீடுகளை செய்யலாம். இது மூன்றாம் வகை ஆகும். இவை கலப்பின திட்டங்களில் கடன் சார்ந்து சிறுதளவு பங்கின் கலப்போடு உள்ள திட்டங்கள் ஆகும்.

உதாரணமாக, CPOF capital protection oriental fund என்ற வகை திட்டங்கள் பெரும்பாலும் மூன்று வருட close ended திட்டங்களாக இருக்கும். நமது அசலுக்கு ஆபத்தில்லாத திட்டங்களாக இருக்கும். சிறுதளவு பங்கு இருப்பதால், வருமானம் சற்று கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மூன்று வகைகளும், கடன் சார்ந்த முதலீடுகள். வரி திட்டங்களும் கடன் சார்ந்து வரி வழிமுறைகளை பின்பற்றுமாறு இருக்கும்.

நாலாவது வழிமுறை:
இறுதியாக நாலாவது முறையாக, நாம் முன்னர் பார்த்த dynamic investing வகையிலான கடனில் அதிக பங்கு கலந்த சிறிதளவு முதலீடு செய்யலாம். இதன் வரி விதிப்பு முறைகள் பங்குகள் போல் உள்ளதால், நாம் ஒரு வருடத்திற்கு மேல் முதலீடு செய்து வரும் வருமானத்திற்கு வரி கட்ட தேவையில்லை. அட்டவணையில், இந்த நாலு வகை திட்டங்களின் கடந்த ஓர் ஆண்டில் கிடைத்த சராசரி லாப விகிதமும் திட்டங்களை பொறுத்து அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச லாப விகிதம் தரப்பட்டிருக்கிறது. இதை கொண்டு நமக்கேற்ற திட்ட வகையை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்து, வருமானம் பெற வாய்ப்புகள் உள்ளது.
இந்த நான்கு வகைகளிலும் risk level மாறுவதால் நாம் முதலீடு செய்ய எண்ணிய மொத்த தொகையை ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறையை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலம், risk குறைந்து வருமானம் கூட வழி வகை செய்யலாம்.


முடிவாக, வங்கியின் நிரந்தர வைப்பு நிதி விட பரஸ்பர நிதி கடன் திட்டங்களில் முதலீடு செய்வதில் சில பல பலன்கள் உள்ளன.

1.நாம் தேவைப்பட்ட போது திட்டத்தில் இருந்து, பணத்தை  திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அபராத வட்டி என்று எதுவும் பிடிப்பதில்லை. அதேசமயம் சில திட்டங்களில் மிக குறுகிய காலத்தில் பணத்தை திரும்ப பெறும்போது சிறிது exit load இருக்கலாம்.

2. கடன் பத்திர வகைகளில் 3 வருடங்களுக்கு மேல் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் indexing  முறையில் வைப்பு நிதி விட குறைந்த வரி கட்டினாள் போதும்.

3. மாதா மாதம் வட்டியை வாங்கி உபயோகிப்பார்கள் இந்த வகை கடன் பாத்திரங்களில் முதலீடு செய்து systematic withdrawal plan மூலம் அதே அளவு பணத்தை பெறும்போது கட்டும் வரியும் குறைவாக இருக்கும். ஏனெனில் வங்கியில் வரும் வட்டியின் மொத்த தொகைக்கும் அந்த அந்த வருடங்களே வரி கட்ட வேணும். அதே நேரம் systematic withdrawal முறையில் நாம் எடுத்த பணத்தில் அசல் போக capital gain எனப்படும் பகுதி குறைவாக இருப்பதால் வரியும் குறைவாக இருக்கும்.



காலத்திற்கேற்ற முதலீடு - Dynamic Investing

கார்மேகம் சூழ்ந்த பருவம் இது. நான் கார்காலத்தை மட்டும் குறிப்பிடவில்லை. அமெரிக்கா அண்ணனின் அரசியல் மாற்றங்கள். எல்லையில் மாறும் மேக மூட்டங்கள். ஆகையால் சந்தையை மூடும் மேகங்கள் என்று சந்தையில் மாற்றங்கள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றது. சூரியனை மேகம் மூடுவதும் பின்னர் விலகுவதும் போல சந்தையை மேகம் மூடுவதும் விடுவதும் இயல்பு தான். நாம் இந்த மாதிரி சமயங்களில் மேகமூட்டத்திற்கு அதாவது காலத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு முதலீடு செய்யவேண்டும் என்பது பற்றி தற்போது பார்ப்போம்.


சமீபத்தில் நமது மத்திய வங்கியின் புதிய ஆளுநர் வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் அதாவது 0.25%, 4th அக்டோபர் அன்று குறைத்தார். அதே சமயம் நமது அண்ணன் அமெரிக்கா வட்டி விகிதத்தை கூட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றே தோன்றுகிறது. இந்த இரண்டுமே நமது கடன் பத்திரம் மற்றும் நமது பங்குகளில் வரும் லாபத்தை மாற்ற வல்லது. இது போன்று மேகங்கள் சந்தையை அவ்வப்போது ஆட்டிவைக்கும். இதை பார்த்து பார்த்து, யோசித்து யோசித்து நாம் பங்கிலிருந்து கடனுக்கும், கடனிலிருந்து பங்குக்கும் மாறுவது என்பது தேவை என்றாலும் அதை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. மழை வரும் என்று வானிலை அறிக்கை கூறினாலும், மழை வராத நாட்கள் எத்தனையோ! அதுபோலத்தான் வட்டி விகித ஏற்ற இறக்கங்களும் வரும் என்று நினைப்பில் வராது! இது மாதிரி தருணங்களில் இது மாதிரி சந்தையை தாக்கும் நிகழ்வுகளை சரியாக கவனித்து அதற்கேற்றவாறு நமது முதலீட்டை பங்கிலும் கடனிலும் கூட்டி குறைத்து அதிக லாபம் பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல. நமது ஆச்சிகள் காய் இல்லாதபோது சும்மா குழம்பு வைப்பது போல் இல்லாமல், இது போன்ற மாறும் மேகங்களை கணித்து முதலீட்டை மாற்றுவது எளிதல்ல! காய் இல்லை என்று ஆச்சிக்கு தெரியும், அதனால் சும்மா குழம்பு வைக்க முடிவெடுக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் சண்டை வருமா அமெரிக்கன் அண்ணன் அரசியல் எப்படி இருக்கும் என்பதெல்லாம் நமது சின்ன மூளைக்கு அப்பாற்பட்டது. இதெல்லாம் மேகம் வருமா வராதா என்று நமக்கு தெரியது போலத்தான்! அதனால் முதலீட்டு முடிவுகளை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றுவது மிகவும் கடினமாக உள்ளது.

இப்போது  என்னதான் செய்வது?? சர்வ ரோக நிவாரணி போல் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், இந்த டெக்னாலஜி யுகத்தில் எது தான் இல்லை!! இதற்கும் வழி உள்ளது. பங்கு மற்றும் முதலீட்டு அளவை கூட்டுவதும் குறைப்பதும் நமது செயல் பாடு இல்லாமல், நமது கடன் பங்கு முதலீட்டை, அதுவாகவே டெக்னாலஜி உபயோகத்தின் வழியாக, பங்கு மற்றும் கடன் திட்ட அளவுகளை மாற்றுவது.
Dynamic equity  திட்டங்கள் பரஸ்பர நிதிகளில் உள்ளது. இந்த வகை திட்டங்களில் சந்தையின் PE’கு ஏற்றவாறு பங்கின் அளவும், கடனின் அளவும் மாறும்.

PE பற்றி புரிய.. அறிய.. இதோ.. சந்தையின் விலை மதிப்பு எவ்வாறு உள்ளது என்று நமக்கு தெரிய வேண்டும். அதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் மிக முக்கியமான அளவுகோல் PE (Price Earnings Ratio ). மும்பை சந்தை குறியீட்டின் நெடு நாளைய சராசரி PE 18.6, தற்போதைய PE 20.78. மும்பை பங்கு சந்தை குறியீட்டு அதிக பட்சமாக  PE 29 ஆகவும்  ( 2000 வருடம்), குறைந்த பட்சமாக  PE 12 ஆகவும்  (2008 வருடம்) இருந்திருக்கிறது.
பங்கின் அளவு மாறும் திட்டங்கள்  - Dynamic Equity investing

முதல் வழியாக,  இந்த Dynamic Equity திட்டங்களில் சந்தையின் PE குறையும் போது, பங்கின் அளவு அதிகமாகும். PE அதிகமாகும் போது, கடனின் பங்கு அதிகமாக இருக்கும். இந்த வகை Dynamic Equity திட்டங்கள் சரிவிகித balance திட்டங்கள் வகையை சார்ந்தது. ஆனால் பங்கு விகிதம் சரிவிகிதமாக இல்லாமல் சந்தைக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும்.  உதாரணமாக, சந்தை இறங்கி அதாவது PE குறைவாக இருக்கும் போது பங்கின் விகிதம், 80-90% வரை இருக்கும். அதே சமயம் PE அதிகமாக இருக்கும் போது பங்கின் விகிதம் குறைந்து 30-40% வரை வரலாம். இந்த விகிதங்கள் திட்டத்திற்கு திட்டம் , திட்ட மேலாளர் பொறுத்து சற்று மாறலாம். ஆகா, சந்தை குறைந்திருக்கும் போது அதிக முதலீடு செய்வது லாபத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. இது போன்ற சில திட்டங்கள் இதோ:

1. ICICI Pru Balance Advantage Fund
2. Axis Equity saver
3. IDFC Dynamic Equity Fund
4. Franklin Templeton PE Fund

முதலீட்டின் அளவு மாறும் முறை  - PE STP. தாய் நாலடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்வது போல், இன்னொரு மேம்பட்ட Dynamic Investing முறை உள்ளது, அதன் பெயர் PE-STP .

சந்தையின் விலை தற்பொழுது  சற்று அதிகம் தான். எனவே கையில் இருக்கும் பணத்தை முழுவதுமாக பரஸ்பர நிதியின் பங்கு திட்டத்தில் முதலீடு செய்யாமல், கடன் பத்திர திட்டங்களில் முதலீடு செய்து, அதில் இருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கடன் திட்டத்தில் இருந்து பங்கு திட்டத்திற்கு STP (Systematic Transfer Plan ) மூலம் மாற்றிக்கொள்ளலாம். இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் ஒவ்வொரு மாதத்திலும் அதே தொகையை மாற்றம் செய்யாமல் சந்தை குறைந்திருக்கும் போது கூடுதல் தொகை மாற்றுவதும், தற்சமயம் போல் சந்தை கூடியிருக்கும் போது குறைந்த தொகை மாற்றுவதும் நமக்கு அதிக லாபம் கிடைக்க ஏதுவாக இருக்கும். ஆனால் இது மாதா மாதம் சந்தையை பார்த்து மாற்றும் தொகையை கூட்டுவதோ குறைப்பதோ எளிதான செயல் இல்லை. அதுவே திட்டத்தின் ஒரு பகுதியாக சந்தையின் PE அளவுக்கு ஏற்றாற்போல் மாறும் தொகையை கூட்டியோ குறைத்தோ லாபம் கிடைக்க ஏதுவாக IDFC பரஸ்பர நிதி நிறுவனம் புதிய வகை PE -STP திட்டத்தை அறிமுக படுத்தி உள்ளது.


இந்த முறை முதலீட்டில் PE 16'க்கு கீழ் இருக்கும் போது நாம் கடன் திட்டத்தில் இருந்து பங்கு திட்டத்திற்கு மாறும் தொகை ஐந்து மடங்காகவும் (Green Zone ), PE 16 - 19 ஆக இருக்கும் போது மாறும் தொகை இரண்டு மடங்காகவும் (Yellow Zone ), PE 19'க்கு மேல் இருக்கும் போது மாறும் தொகை ஒரு மடங்காக (Red Zone ) இருக்கும் (படம்-1 பார்க்கவும்). ஆக, சந்தை இறங்கி இருக்கும் போது பங்கு திட்டத்தில் அதிக முதலீடும், சந்தை ஏறி இருக்கும் போது குறைந்த முதலீடும் செய்கின்றோம். இவ்வாறு செய்வதால் சாதாரணமாக செய்கின்ற STP 'யை விட PE -STP மூலம் செய்யும் போது நமக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், நாம் வாங்கும் யூனிட்களின் NAV, PE -STP மூலம் வாங்கும் போது normal STP விட குறைவாக இருக்கிறது.

இரண்டாவது வகையான PE STP என்பது ஒரு குறிப்பிட்ட திட்டம் இல்லை. STP போன்ற முதலீட்டு முறையே. முதல் வகையான Dynamic Equity திட்டங்களில் PE பொறுத்து பங்கின் அளவு திட்டதில் மாறுபடும். இந்த PE STP இல் PE பொறுத்து நாம் முதலீடு செய்யும் பணத்தின் அளவு மாறும். Dynamic Equity ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் மட்டுமே முதலீடு. இந்த PE STP இல் எந்த பங்கு திட்டதிலும் முதலீடு செய்யலாம். ஒரு குறிபிட்ட பங்கு திட்டதில் இல்லாமல், எந்த பரந்து பங்கு திட்டத்திலும் ( Diversified Equity schemes)  சந்தை இறங்கி இருக்கும் போது அதிக அளவில் நம் முயற்சியின்றி ஆட்டோமேடிக்காக ( Automatic transfer) மூதலீடு செய்ய வழி வகை செய்யும்.

Newsletter - 2

20-FEB-2017
VOLUME 1, ISSUE 2






Thursday, 26 January 2017

SIP – Systematic investment Plan – Let us understand it better

This is most used word and popular among the mutual fund investor and industry. It is good to know more about SIP and invest in this route. But unfortunately, off late, it is either misunderstood or less understood. It is myth that all SIP’s will give positive return

To understand the SIP concept, click the below link (This article is In Tamil)
https://radhaconsultancy.blogspot.in/2016/05/systematic-investment-plan-sip.html

In the following link, there is a good article in Economic times which is available for those who are interested to learn more about it. To read the complete article use the below link

http://economictimes.indiatimes.com/wealth/invest/are-sips-the-risk-free-formula-for-making-money/articleshow/56700651.cms

Here is a quick summary:
  • There is no guarantee all SIP will give positive return. 
  • SIP performance is purely based on markets and underlying scheme assets quality. 
  • For a short term, in the falling market, SIP may give negative returns. 
  • In the rising bull market, SIP returns will be lower than point to point return for the same period. 
  • Sip will give better return in the listless market or sideways market. 
More info with data are available in ET article link given above.

SIP’s are process and not the scheme. Lot if people think it is a scheme – but it is not. SIP can be done in any scheme like equity, debt or hybrid – again we have to choose the suitable AMC and schemes which suits our requirements.

In SIP also there are more variation. -click here to see the excel file showing these different type of sip/stp
  • Fixed SIP 
  • Variable SIP 
  • Flex SIP 
  • Top up SIP 
  • PE SIP /STP
Fixed SIP are better in certain circumstances. Flex sip will help to get units in less average price, but in long run, amount invested may be low in raising market. Hence the total corpus may be low, even though return is high – to read more click below

http://economictimes.indiatimes.com/wealth/invest/does-flexi-sips-help-build-a-bigger-corpus/articleshow/56700134.cms

The following link shows, increasing SIP amount every year, depending upon your cash flow. This will help you to get more corpus at the end. This is based on concept of Top up SIP which is available with some AMC.

http://economictimes.indiatimes.com/wealth/invest/heres-how-an-increase-in-sip-helps-to-save-more/articleshow/56700524.cms?from=mdr

Tuesday, 10 January 2017

7 வழிகளில் பணமில்லாப் பரிவர்த்தனை (Cashless transaction)

This article has been recently published in "Nanayam Vikatan" dated 06/01/2017. Here's the link to read my article through vikatan web media. The same article is given below.


ஆங்கிலத்தில் 'talk of the town' என்று கூறுவார்கள். அதுபோல அகில இந்தியாவிலும் அனைவரின் வாயில் இருப்பது இந்த 500, 1000 ஒழிப்பு (demonetization) எனப்படும் பழையென கழிதலும் (500,1000) புதியன புகுதலும் (2000) ஆகும். இதன் அடுத்த கட்டம் என்ன? அரசாங்கம் அவ்வப்போது கூறிவருவது போல, பணமில்லாப் பரிவர்த்தனை தான். இது டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு விரிவாக்கம்! இதில் குப்பனும் சுப்பனும் பங்கு பெறுவது சாத்தியமா? இல்லவே இல்லை என்று குரல் உயர்த்துவார்கள் ஏராளமானோர். 

சமூகத்தில் எந்த ஒரு புதுச் சிந்தனைகளோ, திட்டங்களோ செயல் படுத்தப்படும்போது நன்று, நன்றன்று என்ற கருத்துக்கள் பகிரப்படுவதும் மக்களாட்சியின் ஒரு அங்கமே. நான் இது சரி, தவறு என்கிற பட்டிமன்றத்துக்கே செல்ல விரும்பவில்லை. பணமில்லாப் பரிவர்த்தனையை எப்படி எல்லாம் செய்யலாம் என்பதை சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். 

கேஷ்லஸ் டிரான்‌ஷாக்‌சன் வந்துவிட்டால், குப்பனும் சுப்பனும்கூட ஸ்மார்ட் போன் இல்லாமல் சாதாரண கைபேசி மூலம் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். கேஷ்லஸ் டிரான்ஷாக்சன் செய்ய உதவும் பல்வேறு வழிமுறைகளின் உள்ள கஷ்ட நஷ்டங்களைப் பற்றிபைனி பார்ப்போம். 

1) கடன் அட்டைகள்: (Credit Card)
'பிளாஸ்டிக் மணி' என்று சொல்லப்படுகிற இதுவும் சந்தைக்குப் புதிதல்ல, இதை உபயோகிப்பவர்களும் அதிகம்தான். நானும் கடந்த பல வருடங்களாக இதை உபயோகித்து வருகிறேன். இது பணமில்லாப் பரிவர்த்தனைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதனால் பாதிப்படைந்தவர்கள் இதை பார்த்து பயப்படுவதும் உண்டு. அதனாலே  பலர் இதை விரும்புவதும் இல்லை. காரணம், தவறான புரிதல் அல்லது புரியாமல் விரலுக்கு தக்க வீக்கம் என்பதைத் தாண்டி கடனில் பெரும்பாலும் பொருட்கள் வாங்கி, பணம் கட்டாமல் வட்டி எகிறி, கடன் அட்டையைத் திட்டுவது சரியான நிலைபாடில்ல. நமது சக்திக்கு உட்பட்டு, கடன் அட்டை மூலம் செலவழித்து, ஒவ்வொரு மாதமும் கட்டிவிட்டால், கடன் அட்டை ஒரு சிறந்த பணமில்லாப் பரிவர்த்தனை தான். 

2) பற்று அட்டை (Debit Card)
மேலே கூறிய, அளவுக்கு மீறிய கடன் அட்டை செலவைக் குறைப்பதற்கு பற்று அட்டை பரிவர்த்தனை நல்லதொரு மாற்று. இதில் முதலில் செலவு, பின்னர் பணம் கட்டவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. கையிலே காசு வாயிலே தோசை என்பது போல, வங்கியில் பணமிருந்தால், பரிவர்த்தனை செல்லும், இல்லையெனில் இதை உபயோகிக்க முடியாது. இது சமீப காலத்தில் மிகவும் பிரபலம். நிறைய வங்கிகளில் ஏடிஎம் அட்டையும் பற்று அட்டையும் ஒன்று தான். இந்த இரண்டையும் பெரும்பாலும் வங்கிகளோடு பன்னாட்டு நிறுவனமான மாஸ்டர் (MASTER) மற்றும் விசா (VISA) நிறுவனங்கள் மூலம் இந்த அட்டைகள் வழங்கப்படுகிறது. 
இதில் சிறிதளவு பணம், சேவைக்காக எடுக்கப்படுகிறது. இது எளியோர்களைப் பாதிக்கும் என்ற எண்ணத்தில் இந்தியாவிலேயே நமது மத்திய வங்கி, வங்கிகளின் துணையோடு ரூபே கார்டு (RUPAY Card) விநியோகிக்கிறது அரசாங்கம். இந்த சேவைக்காக நாம் செலுத்தும் பணம் மிக மிகக் குறைவு. இது போக, பெட்ரோ கார்டு (Petro card), டைம்ஸ் கார்டு (Times card) இன்னும் எத்தனையோ பெயர்களில் பற்று அட்டைகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதில் உள்ள சாதக, பாதகங்கள் என்று பார்த்தால், இந்த அட்டைகளின் அடிப்படை தகவல்களைத் திருடி, போலி அட்டைகள் தயாரித்து, பணம் திருடுவது பல நிகழ்ந்துள்ளது. அது ஒரு மறுக்க முடியாத உண்மை. அதை குறைக்க, மெக்னட்டிக் ஸ்ட்ரிப் (magnetic strip) போக, 'சிப்'  அடிப்படையிலான (chip based) அட்டைகள் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளது. 
இதில் அட்டையைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன் பின் நம்பரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். எனவே, அட்டைகள் காப்பி அடிக்கப்பட்டாலும், நம்மிடம் உள்ள பின்நம்பர் இல்லாமல் பணப் பரிமாற்றம் செய்ய முடியாது.

3) கணினி பணப் பரிமாற்றம் (IMPS/NEFT)
அடுத்ததாக, கணினி மூலம் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்குப் பணம் மாற்றுவது. இதிலும் பல வகை உள்ளது. முதலாவதாக, இணையத்தின் மூலம் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு மாற்றுவது. இவ்வாறு செய்வதற்கு நமக்கு தேவையான விவரங்கள் - இணைய இணைப்பு (internet) வேண்டும். நமது கணக்கின் விவரங்களை அறிய அதற்குரிய கடவு சீட்டு (username) மற்றும் ரகசிய தகவல் (password) இருக்க வேண்டும். மேலும், பணம் பெறுபவரின் பெயர், வங்கி கணக்கு எண், மற்றும் எம்ஐசிஆர் (MICR) மற்றும் ஐஎஃப்எஸ்சி (IFSC) தகவல்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இவ்வளவும் இருந்தால், நாம் நமது கணக்கிலிருந்து அவர்கள் கணக்குக்குப் பணத்தை மாற்றிவிடலாம்.  

மிகவும் படித்தவர்களும், இணையம் பற்றி தெரிந்தவர்களும் இதை உபயோகித்து வருகிறார்கள். தற்போதைய காலத்தில் நிறைய பேருக்கு இது கடினமான  செயலாகவும் இருக்கிறது. இது போன்று பணம் மாற்றுவதில் நெஃப்ட் (NEFT - National Electronic Fund Transfer) மற்றும் ஐஎம்பிஎஸ் (IMPS -Immediate Payment Services) என்று சிற்சில வேறுபாடுகளுடன் நிறைய வழிமுறைகள் உள்ளன. இதன் மூலம் எந்த உச்ச வரம்பின்றி பெரிய தொகையைகூட உடனடியாக மாற்றமுடியும். இது வங்கி காசோலைகளைவிட மிக துரிதமான வகையில் பணத்தை மாற்றமுடிகிறது. இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது,  நமது தகவல்கள் தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ, அவர்களுக்கு நமது வங்கிக் கணக்கின் சரித்திரமே தெரியவரும். பணம் திருடு போகவும் வாய்ப்புகள் அதிகம்.  இந்த சிக்கல்கள் இல்லாமல் பணத்தை எளிதாக மாற்ற கைபேசியில் நிறைய புது செயலிகளும் வழிமுறைகளும் உள்ளன. அவற்றை இப்பொது பாப்போம். கைபேசியில் பணப் பரிமாற்றம் செய்வதற்கு அடிப்படையாக இரண்டு வெவ்வேறு செயல் முறைகள் உள்ளது. ஒன்று, நாம் இணையத்தில் கணினி மூலம் செய்த எல்லாவற்றையும் கைபேசியில் செய்வது, மற்றொன்று கீழே குறிப்பிட்டுள்ள செயல் முறைகளின் மூலம் கணினியைவிட விரைவாக எளிதாக மற்றும் பத்திரமாக பணத்தை மாற்றும் வழிமுறைகள்.

4) மொபைல் மணி (MOBILE MONEY) 
அட்டைகள் இல்லாமல், ரூபாய் நோட்டுகள் இல்லாமல், கைபேசியில் இருந்து கைபேசிக்கு பணம் அனுப்புவதை 'மொபைல் மணி'  என்று கூறலாம். இந்த சேவையை பல தனிப்பட்ட நிறுவனங்களும், தொலைபேசி நிறுவனங்களும், வங்கிகளும் தருகின்றன. இதிலும் சில சில வேறுபாடுகளுடன் பண பரிமாற்றத்துக்காக பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான மூன்று பணப் பரிவர்த்தனை வழிகளை இப்போது பார்ப்போம். 

1. கைபேசி மூலம் மின்னணு பணப்பை மூலம் (Digital Wallet)
2. சூட்டிகை கைபேசி மூலம் வங்கிகளுக்கு இடையே பண மாற்றல் (Smart phone transfer) 
3. சாதாரண கைபேசியிலிருந்து வங்கிகளுக்கிடையே பண மாற்றல் (USSD Transfer) 

கைப்பேசி மூலம் மின்னணு பணப்பை மூலம் பணப் பரிவர்த்தனை (Digital Wallet):
தற்போது இந்த சூட்டிகையான கைபேசியிலிருந்து மின்னணு பணப் பைகளுக்கு பணம் மாற்றும் முறையை பற்றி புரிந்துகொள்வோம். பணம் பெறுபவர், கொடுப்பவர் இருவரிடமும் ஸ்மார்ட் போன் மற்றும் நாம் உபயோகிக்க நினைக்கும் நிறுவனத்தின் செயலி இருக்க வேண்டும். இந்த முறையில் மிகவும் பிரபலமாகி வரும் செயலி பேடிஎம் (Paytm).  இந்த செயலியை பணம் செலுத்துபவர் தரவிறக்கம் செய்து அதில் அவரது விவரங்களையும் வங்கி கணக்குகளையும் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், அவரது வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை அவர் மின்னணு பணப்பைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பணம் பெறுபவருக்கு அவரது கைபேசியில் இந்த பேடிஎம்  செயலியை வைத்திருக்க வேண்டும். இப்போது செலுத்துபவர் அவரது பேடிஎம் செயலியிலிருந்து வாங்குவோரின் கைபேசி எண்ணைப் பதிந்தவுடன் எவ்வளவு பணம் மாற்ற விரும்புகிறாரோ, அவ்வளவு பணம் வாங்குவோரின் பேடிஎம் செயலியில் வரவு வைக்கப்படும். கொடுத்தவரின் செயலியில் கழிக்கபடும். வாங்குபவர் வாங்கிய பணத்தை அந்த பணப் பையில் இருந்தவாறே மற்றவருக்கு மாற்ற முடியும். அல்லது தேவைப்பட்டபோது வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். வங்கிக்கு மாற்றும் சேவைகள் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்; கட்டணங்களும் மாறுபடலாம். தற்போது மிகவும் பிரபலமான மின்னணு பணப் பைகள் பேடிஎம், ஃப்ரீசார்ஜ் (Freecharge), மொபிக்விக் (Mobikwik). இந்த நிறுவனங்கள் எல்லாம் தனிப்பட்ட நிறுவனங்கள். இதே போன்ற சேவையை சில வங்கிகள் அவர்களது செயலிகள் மூலம் தருகிறது. உதாரணம், ஐசிஐசிஐ பாக்கெட்ஸ் (ICICI Pockets).

5) யூபிஐ (Unified Payment Interface)
யூபிஐ என்பது மூன்றாவது நிறுவனம் ஏதுமின்றி, நமது வங்கிக் கணக்கிலிருந்து பெறுவோரின் வங்கி கணக்குக்கு அவரது பெயரோ, வங்கிக் கணக்கு எண் எதுவும் தெரியாமல், வாங்குவோரின் கைபேசி எண் மட்டும் வைத்து பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இவ்வாறு செய்வதற்கு நாம் அதனில் யூபிஐ மென்பொருள் செயல்படக்கூடிய செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் நமது கணக்கு விவரங்களை செலுத்தி மின் அஞ்சல் முகவரி போன்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் (virtual ID). இந்த தனி அடையாளத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து, நமக்கு வரவேண்டிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், நமது வங்கி கணக்கிலிருந்து அவரது வங்கி கணக்குக்கும் இந்த யூபிஐ செயலி மூலம் பணத்தை அனுப்ப முடியும். இது மத்திய ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள செயலி ஆகும். நாம் பணம் பெறும்போது நமது வங்கிக் கணக்கு எண், வங்கி பெயர் போன்ற விவரங்களைத் தெரியாத நபர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியதில்லை. நமது கைபேசி எண் மற்றும் virtual id மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். 
நாம் உபயோகிக்கும் நிறைய வங்கிகள் இந்த யூபிஐ செயலி திட்டத்தில் இணைத்துள்ளதால், நாம் யாருக்கு வேண்டுமானாலும் எளிதாக பணத்தை மாற்றிவிட முடியும். 

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். மின்னணு முறையில் கணினி மூலம் பணம் மாற்றுவதைவிட இந்த வழிமுறை  மிகவும் எளிதானது மற்றும் பத்திரமானது. நமது கணக்கு பற்றிய தகவல்கள் பறிபோவதற்கு வாய்ப்புகள் குறைவு. இதில் மின்னணு பணப்பை போன்ற உச்ச வரம்புகள் ஏதும் இல்லை. (அதிகபட்சம் ரூ.20,000 வரை டிஜிட்டல் வாலெட் மூலம் பரிமாற்றம் செய்யலாம்!) 

6) ஆதார் வழி பண பரிமாற்றம் (ADHAAR based transfer) 
நமது வங்கிக் கணக்கும் ஆதார் எண்ணும் இணைக்கப்படும்போது ரகசிய எண் மற்றும் அதுசார்ந்த தகவல்கள் இல்லமால், முழுக்க முழுக்க ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்யமுடியும். இதில் ரகசிய எண்ணுக்கு பதிலாக கை ரேகை பாதுகாப்பு அம்சமாக உபயோகிக்க படுகிறது. எனவே, கணக்கு வைத்திருப்போரின் கைரேகை இல்லாமல், அந்தக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாததால் இது மிகவும் பாதுகாப்பானதாகும். இதற்கு அடிப்படை தேவையான விவரங்கள் ஆதார் எண் அதோடு இணைந்த வங்கி கணக்கு எண் மற்றும் கை ரேகை மட்டுமே.

7) யூஎஸ்எஸ்டி  (USSD -  Unstructured Supplementary Service Data) 
நான் முன்னாள் கூறிய பணப் பரிமாற்றங்களுக்கு இணைய இணைப்பு, உயர்ரக கைபேசிகள் மற்றும் சற்று படிப்பறிவு தேவைப்படுகிறது. இந்தியாவில் இணைய இணைப்பு எல்லா அடித்தட்டு மக்களுக்கும் எட்டப்படாத பட்சத்தில், கேஷ்லஸ் டிரான்ஷாக்‌சன்  வகை பணப் பரிமாற்றங்கள் சாத்தியமா என்றால் இல்லைதான். அப்படியெனில் நாம் முன்னர் பார்த்த குப்பனும் சுப்பனும் எப்படி பணமில்லாமல் வியாபாரம் செய்வார்கள். அவர்களுக்காகத்தான் இந்த யூஎஸ்எஸ்டி வந்திருக்கிறது.

இதற்கு இணைய இணைப்பு தேவையில்லை. சாதாரண கைபேசி இருந்தால் போதும். இதற்கு அடிப்படை தேவை, வங்கி கணக்கு உதாரணமாக, ஜந்தன் கணக்கு இருந்தாலே போதும். இந்த கணக்கு எண்ணையும், கைபேசி எண் இரண்டையும் இணைக்க வேண்டும். இது வாங்குவோருக்கும் பெறுவோருக்கும் பொருந்தும். வங்கி கணக்கோடு கைபேசி இணைக்க பட்ட பின் குறுஞ்செய்தி போன்ற சரியான குறியீடுகளோடு நாம் ஒரு கைபேசியிலிருந்து இன்னொரு கைபேசிக்கு தகவல் அனுப்புவதால், நமது வங்கிக் கணக்கிலிருந்து அவரது வங்கி கணக்குக்கு பணம் மாறிவிடும். 

என்ன, இது எளிமையாக தானே இருக்கிறது? உபயோகிக்க ஆரம்பித்து பணமில்லாப் பரிவர்த்தனை செய்வோமா? இதனால் வங்கிகளுக்கு செல்வது, பணத்தைப் பாதுகாப்பது, ஏடிஎம் வரிசையில் நிற்பது போன்ற தொல்லைகள் இல்லை. நமது செளகரியத்துக்கு ஏற்ப 24 மணி நேரத்தில் தோதுபட்ட நேரத்தில் தோதுபட்ட இடங்களில் இருந்து பணத்தை மாற்றவும் பெறவும் முடிகிறது. சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல, பழக பழக நிச்சயம் இது எளிதாகி விடும். முயற்சித்துத்தான் பாருங்களேன்!