Read/download this article in magazine/pdf format
கடந்த சில இதழ்களில், விகிதாசாரங்கள், உதாரணமாக லாப விகிதம் செலவு விகிதம் என்றெல்லாம் பார்த்தோம். நிதி மேலாண்மையில் விகிதாசாரங்கள் பார்ப்பது மிக மிக அவசியம் தான். சரி பார்த்து, புரிந்து.. திட்ட நிறுவனங்கள், திட்டங்கள் என்றெல்லாம் முடிவு செய்து ஆகிவிட்டது. வேலை முடிந்த்தா? அதுதான் இல்லை.. முதலீடு செய்ய படிவம் பூர்த்தி செய்யவேண்டுமே!! அங்கு தான் படித்த பட்டதாரிகளுக்கே திரும்பவும் +2 பரிட்சை எழுத்துவதுபோல் இருக்கிறது. இதற்கு choice கிடையாது. அவசியம் நிரப்ப வேண்டிய * ஸ்டார் குறியீட்டு இடங்கள் பல இருக்கின்றன. எனவே திட்டங்கள் வாங்கும்போது காகிதத்திலோ அல்லது ஆன்லைனிலோ (online) சரியாக புரிந்து நடப்பது அவசியம். கோட்டை விட்டால் படிவம் Fail ஆகி, சுவற்றில் அடித்த பந்து திரும்பி வருவது போல் நமக்கே திரும்பி வந்துவிடும்!! இதனால் நாம் நினைத்த நேரத்தில் சந்தையின் சரியான நேரத்தில் பங்குகளையோ திட்டங்களையோ வாங்காமலோ விர்க்காமலோ போய் விடலாம். சரி பரிட்சையில் "பாஸ்" செய்வது எப்படி , பொறுங்கள், கூறுகின்றேன்...
முதலில், நமக்கு மிகவும் பிடித்த நன்றாக தெரிந்த விடைகளில் கூட சிலருக்கு சிக்கல் வருகிறது. என்னவென்று தெரிந்ததா..?? நம் பெயர் தான்!! படிவத்தில் பெயர் எழுதும் போது அவசியம் பான் (PAN) கார்டில் எந்த பெயர் உள்ளதோ அதே வகையில் அதே ஸ்பெல்லிங்கில் எழுதவேண்டும். ஸ்பெல்லிங்கை மாற்றினால் படிவம் Pass ஆகாது.
அடுத்து என்ன? விலாசம் தான்.. ஒவ்வருவருக்கும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட விலாசங்கள் உள்ளன. எந்த திட்டத்திற்கு எந்த விலாசத்தை கொடுத்தோம் என்பது ஞாபகம் இருப்பதில்லை. எனவே தற்போதிருக்கும் விலாசத்தை படிவத்தில் நிரப்புவதே சரியான வழி. அந்த விலாசத்திற்கு அடையாள அட்டை இருக்க வேண்டும். அச்சிகள் ஆத்தா வீட்டு விலாசத்தில் அடையாள அட்டை வைத்துக்கு கொண்டு, செட்டியார் வீட்டு விலாசத்தில் திட்டங்கள் வாங்க முயற்சி செய்வது சரியாக வராது. திருமணமானவுடன் புதிய அடையாள அட்டை புது விலாசத்தில் வாங்குவது சிறப்பாக இருக்கும்.
அடுத்து, யார் பெயரில் திட்டங்கள் வாங்குவது?? ஆச்சி பெயரிலா (மதுரை), செட்டியார் பெயரிலா (சிதம்பரம்) இல்லை புத்தம் புதிதாக பிள்ளை பெயரிலா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். நான் எதுவும் சொல்வதற்கில்லை!! ஆனால் அதன் சாதக பாதகங்களை சற்று விளக்குகிறேன். உதாரணமாக, வரி விலக்கு வேண்டி வரி விலக்கு திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் யாருக்கு வரி விலக்கு வேண்டுமோ அவர்கள் பெயர் முதலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொத்தம் பொதுவாக குழந்தைகள் பெயரில் திட்டங்கள் வாங்கினாலோ தாய் தந்தை அல்லது காப்பாற்றுபவர் பெயர் கட்டாயம் கொடுக்க வேண்டும். (Parent or Guardian) மேலும் தனியாக ஒருவர் மட்டும் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பதிலாக இருவராக சேர்ந்து வாங்குவது சாலச் சிறந்தது. அதிக பட்சமாக மூன்று பேர் பேரிலும் திட்டங்கள் வாங்கலாம். இருவர் அல்லது மூவராக வாங்கும் பொழுது யார் வேண்டுமானாலும் அந்த திட்டத்தை நிர்வகிக்க ஏற்றவாறு ( any one or survivor ) படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும். ஒருவர் இன்னொருவரை ஏய்த்து விட்டு முதலீட்டை ஏப்பம் விட்டுவிடுவதாக கடுகளவு சந்தேகம் வந்தாலும் ( Joint) என்று பூர்த்தி செய்து பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளவும். முன்னர் கூறியபடி முதல் முதலீட்டாளரே வரி சட்டங்களின் படி அந்த திட்ட முதலீடுகளுக்கு பொறுப்பாவார்கள்.
ஒருவழியாக யார் பெயரில் வாங்குவது என்று கலந்தோலாசித்து, இல்லை வழக்கம் போல் உயர்ந்த கை முடிவாகிவிட்டதா, அடுத்தாக வங்கி கணக்கு!! நமது திட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பதிந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஒரு வங்கி கணக்கு அவசியம். திட்டத்தின் முதல் பெயர்தாரர் வங்கி கணக்கிலும் அவர் பெயர் இருக்க வேண்டும். வங்கி கணக்கை சரியாக கொடுப்பதனால் தற்காலத்தில் நாம் திட்டங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் காசோலைகள் மற்றும் online transfer உபயோக படுத்துவதை தவிர்க்கலாம். வாங்கும்போது வங்கி கணக்கிலுருந்து நேரடியாக பணத்தை கழித்துக்கொண்டு திட்டத்தை வாங்குவார்கள். விற்கும் போது அல்லது டிவிடெண்ட் வரும்போது நேரடியாக வங்கி கணக்கில் வரவைத்து விடுவார்கள். இது ஒரு எளிய வழி. இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இன்னும் சில இதழ்கள் காத்திருக்கத்தான்வேண்டும்!
இங்கு முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம்.. திட்டத்தில் யார் பெயர் இருக்கிறதோ அவர்கள் தான் திட்டத்தில் வாங்கவும் விற்கவும் முடியும். உதாரணமாக, உங்கள் பெயரில் இருக்கும் திட்டத்திற்கு உங்கள் தம்பி வங்கி கணக்கிலிருந்து காசோலையில் கையெழுத்திட்டு பணம் கொடுத்து திட்டத்தை வாங்க முடியாது. அவசியம் வாங்க வேண்டும் என்று வரும் பொழுது அதெற்கென்று தனியாக படிவம் பூர்த்தி செய்து அவரது பான் (PAN) கார்ட் விவரங்கள் தர வேண்டும். அதுபோலவே விற்கும்போது விற்று வரும் பணம் உங்கள் கணக்கில் மட்டுமே வர வைக்கப்படும். வேறு கணக்கில் வர வைக்க மாட்டார்கள். நல்லது தானே!! பணம் பத்திரமாக இருக்கும்.. "புரிந்தது புரிந்தது, எங்களுக்கென்ன எட்டு கணக்கா உள்ளது? ஒன்றே ஒன்று கண்ணே கண்ணேவென்று ஒரு கணக்கு தானே இருக்கிறது".. என்று சொல்பவர்கள் மேலே படிக்கவும்!!
Growth’ஆ அல்லது dividend’ஆ.. Payout’ஆ அல்லது reinvestment’ஆ..? எதை தேரந்தெடுப்பது என்றெல்லாம் சந்தேகம் வருவது சகஜம் தான். அதன் விவரம் இதோ..
Growth: நீங்கள் முதலீடு செய்யும் பணத்தில் வரும் லாபத்தை அவர்களே நிறுவனமே வைத்துக் கொள்வார்கள். அதை திரும்பவும் முதலீடு செய்து நமது பணத்தை பெருக்குவார்கள். நாம் திட்டத்தை முடிக்கும்போது அன்றைய தேதியில் இருக்கும் மதிப்பை நமக்கே திருப்பி தந்துவிடுவார்கள். முதலீடு செய்த தேதி மற்றும் திரும்ப பெரும் தேதி, இதற்கு இடைப்பட்ட காலங்களில் dividend வட்டி என்று எதுவும் தர மாட்டார்கள்.
Dividend: திட்டம் லாபம் சம்பாதிக்கும் போது திட்டமேலாளரின் முடிவின் படி வரும் லாபத்தை நமக்கு பகிர்ந்தளிப்பார்கள். இது வருடத்திற்கு ஒரு முறையோ இல்லை பல முறையோ இல்லை பல வருடங்களுக்கு ஒரு முறையோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்குள் இரண்டு வகை உள்ளது. ஒன்றின் பெயர் Dividend Payout - இதில் வரும் லாபம் நமது வங்கி கணக்கில் வரவு வைக்கைப்படும். Dividend Reinvestment - வரும் லாபம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படமாட்டாது, அதே திட்டத்தில் திரும்ப முதலீடு செய்யப்படும். என்ன குழப்புகிறீர்கள், இது தானே growth என்பது..? என்று கேட்டவர்கள் , நீங்களே உங்கள் முதுகில் தட்டிக்கொள்ளுங்கள்.. புத்திசாலிகள் தான்!! இரண்டிற்கும் உள்ள சிறிய வேறுபாடு, இந்திய வரி துறை இரண்டையும் எப்படி பார்க்கிறது என்பது தான். Growth மூலம் வரும் லாபத்திற்கு capital gain எனப்படும். Dividend ஆக வரும் லாபம் தற்போதைய சட்டங்களின் படி வரி விளக்கு பெற்றது. மேலும் விவரம் வேண்டுமெனில், எழுதுங்கள் எனக்கு இன்னொரு இதழில் பார்ப்போம்...
வாழ்க்கையில் அன்றாட தேவைகளுக்கு பணம் வேண்டும் என்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு dividend payout என்ற வகையை பங்கு திட்டங்களில் தேர்வு செய்யலாம். மற்றவர்கள் growth முறையை தேர்வு செய்யலாம். கடன் திட்டங்களில் வரும்போது இது சற்று மாறுபடும். தற்போதைய இந்திய வரி சட்டத்தின் படி, திட்ட நிறுவங்கள் வரும் லாபத்தில் dividend distribution tax கட்டிய பிறகு மீதம் இருப்பதை நமக்கு பகிர்ந்திடுவார்கள். இதனால் வரும் லாபம் சற்று குறையலாம். இந்த நிலைமையில் growth முறையா இல்லை dividend payout முறையா என்பது அவரவர்கள் வரிக்கட்டும் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். இதை புரிந்து கொண்டு நமக்கு எது சாதகமோ அதை தேர்வு செய்யவேண்டும்.
FATCA - மத்திய அரசின் புதிய கொள்கையின் படி சமீப காலமாக இந்த படிவமும் பூர்த்தி செய்யவேண்டும். இதன் படி நாம் இந்தியாவில் மட்டும் கணக்கு வைத்திருக்கிறோமா இல்லை அயல் நாடுகளில் கணக்கு இருந்தால் அந்த கணக்கையும் வரி கட்டும் விவரம் ஆகிவற்றையும் தெரிவிக்க வேண்டும்.
DMAT / Physical Mode - நமது பரஸ்பர நிதி திட்டங்களை இந்த இரண்டு வகையிலும் வைத்துக்கொள்ளலாம். Phyiscal mode என்றால் கற்காலம் ( Stone age) என்று என்ன வேண்டாம். Phyiscal mode திட்டத்தின் விவரங்களையும் கணினியில் இணையத்தில் பார்க்கலாம்.
இணையம் மூலம் வாங்குவது, விற்பது, கைப்பேசியை இதற்கு உபயோகப்படுத்துவது, போன்றவற்றை வரும் காலங்களில் பார்ப்போம்!