Monday 11 November 2019

முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 4 எக்ஸெல் பங்க்ஷன்

நன்கு  தெரிந்துகொள்ளவோம்  4 எக்ஸெல்  பங்க்ஷன் - நிதி கணக்கிற்கு

முதலீட்டு கணக்கீட்டு முறைகள்

பணம் வாழ்வில் மிக முக்கியமான பொருளாக நம்மில் எல்லோராலும் கருதப்படுகின்றது. அதை பெருக்க பல வழிகளில் முயற்சிக்கின்றோம், முதலீடு செய்கின்றோம். நிறைய பேசுகின்றோம், கேட்கின்றோம், படிக்கின்றோம். மிக தவறாக அதே சமயம் அதீத நம்பிக்கையோடு பல கருத்துக்களை பதிவு செய்து அதன்படி பணத்தை பெருக்க முயற்சிக்கின்றோம். ஆனால் நிதர்சனம் வேறு மாதிரி இருக்கின்றது. பல நேரங்களில் எதிர்பார்த்த முதலீட்டு பயன்கள் கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் முதலீட்டு பலனை எப்படி கணக்கிடுவது, எப்படி புரிந்து கொள்வது என்பது தான். முதலீட்டு கணக்குகள் புரிந்தால் சரியான பலனுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். அது கிடைத்ததா இல்லையா என்பதை எளிதில் கணக்கிட்டு விடலாம். முதலீட்டு கணக்குகளை எவ்வாறு எளிமையாக கணினி கொண்டு கணக்கிடலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல, கையளவு கணினியில் கணக்கீடு செய்ய புரிதல் அவசியம். மேலே படியுங்கள், புரிதல் எளிதாகும்.

முதலீட்டு கணக்கில் எக்செல்

கணினியை பயன்படுத்தும் போது முதலீடு கணக்குகளை செய்ய பல வகையான ஆப்புகளும் (Apps) மென்பொருள்களும் (Software) நிறைய உள்ளன. இவற்றில் எதை உபயோகிப்பது என்பது கடலில் குறிப்பிட்ட மீனை தேடுவது போல. நமக்கு தெரிந்த மீன் ஸ்பிரட் ஷீட் (spreadsheet) எனப்படும் மென்பொருள் தான் முதலீட்டு கணக்குகளுக்கு ஏற்ற தீர்வாக அமையும். லோட்டஸ் 123 (Lotus 123) காலம் தொடர்ந்து இன்று கூகிள் ஷீட் (google sheet) வரை ஸ்பிரட் ஷீட் (spreadsheet) எனப்படும் மென்பொருள் பல்வேறு வடிவங்களில் வந்துகொண்டு இருக்கின்றது. மைக்ரோ சாப்ட் எக்செல் (microsoft excel) இதில் அடக்கம். தற்போது  இவற்றின் மூலம் எவ்வாரு கணக்கீடு செய்யலாம் என்று பாப்போம். தெரியாதவர்களுக்கு மைக்ரோ சாப்ட் எக்செல் (microsoft excel) மற்றும் கூகிள் ஷீட் (google sheet) ஒரே வகையான மென்பொருள். எக்செல்லில் பயன்படுத்தும் பல்வேறு செயல்களை கூகிள் ஷீட் (google sheet) மூலம் செய்ய முடியும்.

நிதி கணக்கில் மூழ்கி முத்தெடுக்கும் முன்பு ஸ்பிரட் ஷீட் (spreadsheet) எனப்படும் மென்பொருளின் அடிப்படை தகவலைகளை புரிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக செல், ரோ, பார்முலா (cell, row, formula) போன்றவற்றை உபயோக படுத்த தெரியவேண்டும்.

எக்செல் பங்க்ஷன்

அதற்கு மேலும் தற்போது நாம் உபயோக படுத்தப்போவது பங்க்ஷன் (function) எனப்படும் ஒருவகையான செயல் தன்மை. இந்த பங்க்ஷன் எனப்படுவது சின்ன சின்ன கணக்குகளை மிக எளிதாக தெளிவாக நம் உபயோகத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்க பட்டுள்ளது. இந்த பங்க்ஷனில் (function) நிதி சம்மந்தப்பட்ட பங்க்ஷன்கள் (Financial functions), வார்த்தைகள் சம்மந்தப்பட்ட பங்க்ஷன்கள் (Text functions) என்று பல வகைகள் உள்ளது. நாம் உபயோகிக்க போவது நிதி சம்மந்தப்பட்ட பங்க்ஷன் (functions) மட்டுமே.



எக்செல் கொண்டு நிதி கனக்கு  போடுவது

நிதி சம்மந்தப்பட்ட கணக்குகளை எவ்வாறு எக்செல்  கொண்டு செய்வது என்று  ஐந்து பகுதியாக பார்ப்போம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு  எக்செல்  பங்க்ஷன் எப்படி  உபயோகப்படுத்துவது என்று தெளிவாக தெரிந்து கொள்வோம். 

நிதி சம்மந்தப்பட்ட கணக்குகளை  போட  நான்கு எக்ஸெல்  பங்க்ஷன்  ஐந்து   முறைகள்

  1. எப் வி ( Future value)  
  2. எபக்ட்டிவ் ரேட் ( effective rate)
  3. பீ.எம்.டி   ( PMT – Payment)
  4. நமது முதலீட்டு வருமானத்தை ஆண்டு வருமான வீதமாக கணக்கிடுவது - எக்ஸ் ஐ ஆர் ஆர் ( XIRR)
  5. நமது எஸ் ஐ  பி  முதலீட்டு வருமானத்தை ஆண்டு வருமான வீதமாக கணக்கிடுவது

பங்க்ஷன் 1 

எப் வி  மூலம் முடிவில் தேவையான  தொகை கணக்கிடுவது:

ராதா இன்னும் 10 வருடங்களில் வீடு வாங்கலாம் என்று நினைக்கிறார்  தற்போதைய விலை 40 லட்சம் பணவீக்கம்  7% அப்படியானால்  பத்து வருடங்களில் வீடு வாங்க எவ்வளவு பணம் வேண்டும்?  

இந்த திட்டமிடுதலுக்கு எக்செல் பங்க்ஷனை பயன்படுத்துவதற்கு முன்னதாக எக்செல் பங்க்ஷனில்  (excel function) உபயோகப்படுத்தப்பட்டுள்ள காரணிகளை நன்கு புரிந்து, சரியாக உள்ளீடு செய்து விடையை கண்டுபிடிக்க வேண்டும். இப்போதும் உபயோகிக்கப்படுகின்ற  எக்செல் பங்க்ஷன் பீவி மற்றும் பீ.எம்.டி இல் உபயோகப்படுத்தப்படும் காரணிகளின் (Variables/Input data) விவரம். 

  • “ரேட்” (Rate)  வட்டி விகிதம். 
  • “என்பர் “(Nper)  என்பது   எத்தனை மாதம்/ வருடம் தொகையை எஸ்.ஐ.பி யில் செலுத்துகின்றோம் என்பதை குறிக்கின்றது. 
  • “பேமண்ட்” (Pmt)  என்பது நாம் மாதாமாதம் எவ்வளவு  தொகையை கட்டினோம் என்பது. 
  • “பிவி“ (Pv) முதலில் கட்டிய தொகை எவ்வளவு என்பதை குறிக்கின்றது. எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது இது பூஜ்ஜியமாக  (Zero) கொள்ளப்படுகின்றது.
  • “எப்வி“ (Fv) என்பது முடிவில்  கிடைக்கும் தொகை.  
  • “டைப்“ (Type)  என்பது பெரும்பாலும் ஸிரோ   அல்லது ஒன்று என சொல்லப்படுகிறது.
எப் வி மூலம்  தொகை அறிய பன வீக்கமே  வட்டி விகிதம் (7%) ஆக  எடுத்துக்கொள்ள படுகின்றது  . காலம் பத்து  வருடம். இன்றய மதிப்பு 40 லட்சம்  இது பிவி
கணக்கிட உபயோகப்படுத்தும் பங்க்ஷன் பெயர் எப் வி

பயன்படுத்தப்படும் காரணிகள் :







உள்ளீடு  செய்ய வேண்டிய தகவல்:



எப் வி பங்க்ஷன் படிவத்தை மேற்கண்டவாறு  நிரப்பி எக்ஸெலில் சமர்ப்பித்தால் வீட்டின்  வருங்கால விலை 78,68,605 என்பதை நாம் பெறலாம்.

எக்செல் பங்கசனில் எவ்வாறு உள்ளீடு செய்வது என்பதை கீழ்கண்ட படத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம் . தங்களது கணினியில் செல் நம்பர் மாறி இருக்கலாம், ஆனால் உள்ளீடு விவரம் படத்தில் காட்டியவாறு சரியாக இருக்க வேண்டும்.


பங்க்ஷன் 2

மாதாந்திர தவணையில் பணம் சேமிப்பது (SIP )

கார்த்திக் தமது குடும்பத்தோடு ஐந்து வருடங்கள் கழித்து சுமார் 15 லட்சம் ருபாய் செலவழித்து ஐரோப்பா சென்று வர திட்டமிட்டுள்ளார். அவர் தற்போது  மாதாந்திர தவணையில்  எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும்? 
கணக்கிட உபயோகப்படுத்தும் பங்க்ஷன் பெயர் பீ.எம்.டி ( PMT)

பயன்படுத்தப்படும் காரணிகள்.



உள்ளீடு  செய்ய வேண்டிய தகவல்



எக்செல் பங்கசனில் எவ்வாறு உள்ளீடு செய்வது என்பதை கீழ்கண்ட படத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம் . தங்களது கணினியில் செல் நம்பர் மாறி இருக்கலாம், ஆனால் உள்ளீடு விவரம் படத்தில் காட்டியவாறு சரியாக இருக்க வேண்டும்.


கார்த்திக் தமது குடும்பத்தோடு ஐந்து வருடங்கள் கழித்து   சுமார் 15 லட்சம் ருபாய் செலவில்  ஐரோப்பா சென்று வர மாதாந்திர தவணையில்  சுமாராக ரூபாய் 20,000  முதலீடு செய்ய வேண்டும்.

பங்க்ஷன் 3

எபெக்டிவ் வட்டி விகிதம் ( Effective rate) 

உதாரணம்:  வங்கியில் வைப்பு நிதி செய்யும்பொழுது  வங்கி 7 சதவீத ஆண்டு வட்டி தருகின்றது  ஒரு வங்கி  ஆண்டுக்கு ஒரு முறை வட்டி தருகின்றது. இன்னொறு  வங்கி அதே  7% ஆண்டு வட்டியை ஆறு மாதத்திற்கு ஒருமுறை தருகின்றது. இன்னொரு வங்கி மூன்று மாதத்துக்கு ஒரு முறை, என்றால் நாம் குறைந்த காலத்தில் வட்டி தரும் வங்கியில்  வைப்பு நிதியை தொடர வேண்டும் நம் இதில் கிடைக்கும் ஆண்டின் வட்டி விகிதம் விட சற்று அதிகமாக இருக்கும்.

இதை  எவ்வாறு பார்ப்பது எக்சலில் என்பதை இங்கு பார்ப்போம்/

கணக்கிட உபயோகப்படுத்தும் பங்க்ஷன் பெயர்  

பயன்படுத்தப்படும் காரணிகள்.








உள்ளீடு  செய்ய வேண்டிய தகவல்



எக்செல் பங்கசனில் எவ்வாறு உள்ளீடு செய்வது என்பதை கீழ்கண்ட படத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம்



வருடத்திற்கு 7 சதவிகித வட்டி என்பது அரையாண்டு  ஒருமுறை  வட்டி  பெறும்போது 7.12 %  காலாண்டிற்கு   ஒருமுறை பெறும்போது 7.19% ஆகவும் மாதாமாதம் பெரும் போது 7.23% ஆகவும் இருக்கின்றது

பங்க்ஷன் 4

சராசரி ஆண்டு வருமானம் விகிதம் ( XIRR) 

எஸ் பி ஐ  மேகனம் மல்டி கேப் திட்டத்தில் ஒரு லச்சம் ரூபாய்  நான்கு வருடங்களில் முதலீடு செய்து  கிடைக்கும் தொகையில் ஆண்டு சராசரி வருமானத்தை கணக்கிடுவது.  இதில் இரண்டு வகை பயன்படுத்தப்பட்டுள்ளது.


  1. முதல் வகையில் மாறுபட்ட தேதிகளில் மாறுபட்ட தொகையை செலுத்தி லாபத்திற்கு வருமான விகிதம் கணக்கிடுவது. 
  2. இரண்டாவது  முறையில் எஸ்ஐபி முறையாக வருடாவருடம் ஒரே தொகையை ஒரே தேதியில் செலுத்தி கிடைக்கும் லாபத்திற்கு வருமான விகிதம் பார்ப்பது
கணக்கிட உபயோகப்படுத்தும் பங்க்ஷன் பெயர் எக்ஸ் ஐ ஆர்  ஆர் 

பயன்படுத்தப்படும் காரணிகள்.







உள்ளீடு  செய்ய வேண்டிய தகவல்



எக்செல் பங்கசனில் எவ்வாறு உள்ளீடு செய்வது என்பதை கீழ்கண்ட படத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம் . தங்களது கணினியில் செல் நம்பர் மாறி இருக்கலாம், ஆனால் உள்ளீடு விவரம் படத்தில் காட்டியவாறு சரியாக இருக்க வேண்டும்



முடிவாக, இந்த வகையான கணக்கீடுகளை எக்சலின் துணையோடும் செய்யலாம், மேலும் தற்போது ஆண்ட்ராய்டு கைபேசியின் உள்ள கூகிள் ஷீட் மூலமும் செய்யலாம். மேலும் கணக்கீடு உள்ள எக்செல் பைல் தேவைப்படுவோர் இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.  


உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டுமற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் நன்றி .

No comments:

Post a Comment