Monday, 18 November 2019

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்!

Click here to read this article directly from Nanayam Vikatan.
Click here to read this article in English in this blog.

இதுவரை எண்ணிறந்த கட்டுரைகள் மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்வது என்று வந்துவிட்டது.. வந்து கொண்டிருக்கிறது..  இனியும்  வரும்.  இருந்தபோதும் நாம் செய்யும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகளில் அடிக்கடி தவறுகள் நேருகின்றது. எதிர்பார்த்த பலன்கள் கிட்டுவதில்லை. காரணம் கட்டுரைகள் தாண்டி நாம்  கொண்டுள்ள சில நம்பிக்கைகள் அல்லது மேலோட்டமாக முடிவு செய்வது என்று பல காரணங்கள் உள்ளது. தவறு என்று தெரிந்த பின்பு, அந்த தவறை திறுத்துவதற்கு சிலபல ஆலோசகர்களை அணுகுகின்றோம். தவறு செய்யும் முன்னே  தவறை தவிர்ப்பது நல்லது தானே. அதைப் பற்றி இங்கு பார்ப்போம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாம் எந்த வகையான முதலீடுகளை ஆரம்பத்திலேயே தவிர்த்து விடலாம்  என்பதே இக் கட்டுரையின் நோக்கம்.

1. என் ஏவி குறைந்த ஃபண்டுகள் அல்லது புதிய ஃபண்டுகள்

பெரும்பாலோரின் அசைக்க முடியாத நம்பிக்கை என்.ஏ.வி குறைந்த பண்டு களில் முதலீடு செய்வது லாபகரமானதாக  இருக்கும்  என்பதே. பலமுறை சொல்வதை திரும்ப சொல்கின்றோம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் அது கொண்டுள்ள நிறுவனங்களின் வளர்ச்சிக்கேற்ப லாபம் கிடைக்குமே தவிர என்ஏவி குறைந்த பண்டு அதிக லாபத்தையும், என்ஏவி அதிகமுள்ள பண்டு குறைந்த லாபத்தையும் தருவதில்லை. உதாரணமாக பார்ப்போம்: சமீபத்தில் நிறைய நிறுவனங்களிடமிருந்து ஸ்மால் கேப் ஃபண்ட் தொடங்கப்பட்டது. புதிதாக முதலீடு தொடங்குவோருக்கு இரண்டு வகையான அணுகுமுறைகள் உள்ளது. ஒன்று இந்த புதிய பண்டுகளில் என்ஏவி பத்து ஆக இருக்கும்போது முதலீடு செய்வது அதேசமயம் பல காலமாக ஸ்மால் கேப் ஃபண்டுகள் நடத்திவரும் நிறுவங்களின் திட்டத்தில்  முதலீடு செய்வது. இந்த இரண்டு அணுகுமுறையிலும் கடந்த வருடங்களில் எவ்வாறு லாபம் கிடைத்தது என்று அட்டவணையில் பார்க்கலாம்.
இங்கு இரண்டு ஃபண்டுகள் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்வெஸ்கோ ஸ்மால் கேப் ஃபண்ட் ஆரம்பித்து ஒரு வருடம் தான். மற்றொன்று எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து  வருகின்றது. எனவே புதிதாக முதலீடு செய்பவர் இந்த எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்டில் கடந்த ஒரு வருடம் முன்னால் முதலீடு செய்திருந்தால் அதன் தொடக்க என் ஏவி  49.33 தொடங்கி 53.46 ஆக உள்ளது அதாவது சராசரியாக 8 சதவீதத்திற்கும் மேல் வருமானம் கிடைத்துள்ளது அதேசமயம் புதிய  இன்வெஸ்கோ ஸ்மால் கேப் ஃபண்ட் என் ஏவி 10.07 தொடங்கி 10.53 ஆக உள்ளது அதாவது சராசரியாக 4 சதவீத லாபம். இதிலிருந்து தெரிவது பண்டுகளில் லாபம்  என்ஏவி பொறுத்து அமைவதில்லை. திட்டத்தில் இருக்கும்  நிறுவனங்களின் தன்மையைப் பொருத்து அமையும்.


பண்டின் பெயர்
ஆரம்பித்த தேதி
முதலீட்டுத் தொகை
முடிவு தொகை
லாபம்
லாப விகிதம்
என் ஏவி 11/11/18
என் ஏவி 11/11/19
இன்வெஸ்கோ ஸ்மால் கேப் ஃபண்ட்
30-Oct-18
100,000
104,568
4,568
4.58
10.07
10.53
எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட்
9-May-09
100,000
108,237
8,237
8.26
49.33
53.46

2. பண்டு நிர்வகிக்கும் தொகையும் அதன் லாப விகிதம்

பெரும்பாலும் நாம் மிகப்பெரிய பண்டுநிறுவனத்தில், மிக அதிகமாக நிர்வகிக்கப்படும்  தொகை உள்ள  திட்டத்தில் சேர்ந்தால் நல்லது என்று நினைத்துக் கொள்கின்றோம். அது அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக  பண்டுகளை எடுத்துக்கொண்டால் மிக அதிகமாக நிர்வகிக்கும் தொகை இருக்கும்போது இந்த தொகையை அந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய சிலசமயம் சிரமத்திற்கு உள்ளாகுகின்றது. அதிக தொகை  நிர்வகிக்க  முதலீடு செய்ய நல்ல, சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை. எனவே தொகை அதிகரிக்கும்போது நிர்வாக சிரமங்களும் சற்று கூடவே செய்கின்றன. எனவே நாம் எந்த வகையான  பண்டுகளை தேர்ந்தெடுக்கிறோம் அதற்கு நிர்வகிக்கப்படும் தொகை அதிகமாக இருப்பது நல்லதா , இல்லயா என்று புரிந்து செயல்பட வேண்டும். உதாரணமாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் நிர்வகிக்கும் தொகை, ஸ்மால் கேப் ஃபண்டுகள் இன் 1 வருட மற்றும் 3 வருட லாப வீதங்கள் தரப்பட்டுள்ளது. நாம் 1  வருடம் லாபம் வைத்துக் பார்த்தோமானால் தொகை  குறைவாக  இருக்கும் பொழுது லாபம் அதிகமாக உள்ளது. தொகை  அதிகரிக்கிறது செல்லச்செல்ல லாபம் குறைகின்றது. 3 வருடத்தில் லாபம் பார்க்கும் போது முதல் இரண்டு குறைந்த நிர்வகிக்கும் தொகை உள்ள பண்டு அதிக லாபத்தை தருவது கண்கூடாக தெரிகிறது.

அட்டவணையில் , ஸ்மால் கேப் ஃபண்டுகள் இன் ஒரு வருட மற்றும் மூன்று வருட லாப வீதங்கள் தரப்பட்டுள்ளது.
ஒரு வருட மற்றும் மூன்று வருட லாப வீதங்கள்- நிர்வகிக்கும்தொகை - தரப்பட்டுள்ளது 

பண்டுநிறுவனம்
பண்டு நிர்வகிக்கும் தொகை  கோடிகளில்
1 வருட லாபம்
3 வருட லாபம்
செலவு சதவீதம்
Axis
1200
22.9
13.08
2.38
SBI
2915
8.3
12.44
2.03
DSP
4905
-2.47
0.77
1.87
L&T
6112
-7.64
8.08
1.79
Franklin
7031
-4.33
2.47
2.29
HDFC
9137
-7.94
9.32
2.01

3. செலவு சதவீதமும் லாபமும்

சமீப காலங்களில் நாம் அதிகம் படிக்கின்றோம் அதிகம் தெரிந்து கொள்கின்றோம் அவையெல்லாம் நடைமுறை  வாழ்வில்  உபயோகமாக இருக்கின்றதா இல்லை புதிதாக ஏதும் சிக்கல் தருகிறதா ? உதாரணமாக நாம் தெரிந்துகொண்ட முக்கியமான விஷயம், செலவு சதவிகிதம் அதிகமாகும் போது  லாபம் குறைக்கின்றது. மாற்றுக் கருத்தும் இல்லை.  அதேசமயம் அட்டவணையை பாருங்கள் எக்ஸ்பிரஸ் சதவீதம் சற்று அதிகமாக உள்ள ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் தொடர்ந்து 1 மற்றும் 3 வருடங்களில் அதிக லாபம் தருகின்றது. நஷ்டம் தரும் பங்குகளை விட மிகமிக அதிக லாபம் தருகின்றது எனவே நாம் செலவு சதவீதம் குறைவாக உள்ள பண்டை தேர்வு செய்ய வேண்டுமா? இல்லை செலவு  சதவீதம் சற்று அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஆக்சிஸ் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டுமா? சற்று யோசியுங்கள்... செலவுசதவீதத்தை  ஈகுவீட்டி திட்டங்களில்  பார்ப்பதற்கு முன் லாப விகிதம் அதிகமாக இருந்தால், திட்டம் நல்ல திட்டமாக இருக்கும்பட்சத்தில் அதிலேயே முதலீடு செய்யலாம். செலவு சதவீதமும் மட்டும் தனியாக பார்க்கவேண்டாம்.

4. ஃபண்ட் நிறுவன அளவுகளும் லாபமும் - பெரிய பண்ட் நிறுவனம் பெரிய லாபம் தருமா ?

தற்போது அரசாங்க வங்கி, தனியார் வங்கி, பெருநிறுவனங்கள், மற்றும்  அயல்நாட்டு நிறுவனங்கள் என்று பலவகையான நிறுவனங்கள் பண்ட்களை  நிர்வகித்து வருகின்றது. நாம்  பெரும்பாலும் நமக்குப் பழக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட நிறுவனங்கள் அல்லது நாம் மிகப்பெரிய நிர்வணம் என்று நினைக்கும் நிறுவனங்களிலோ முதலீடு  செய்கின்றோம். அந்த  திட்டங்கள் அதிகம் லாபம் தருகின்றதா? இல்லை  சிறிய நிறுவனத் திட்டங்கள்  பெரிய லாபம் தருகிறதா என்று பார்க்கலாம்.  கீழே உள்ள அட்டவணையில் லார்ஜ் கேப்  திட்டங்களின் ஒன்று, மூன்று, ஐந்து வருட லாபம் விதங்களும் தரப்பட்டுளது . இதில் நாம் எண்ணத்தில் முதலில் வரக்கூடிய மிகப்பெரிய நிறுவனத் திட்டங்கள் தொடர்ந்து இரண்டு இலக்க லாபம் தரவில்லை. சிறிய பண்டு நிறுவன திட்டங்களான மிரே பண்ட் தொடர்ந்து பத்து சதவிகிதம் மேல்  லாபம் தருகிறது . இதற்கு அடுத்ததாக வருகின்ற ஆக்சிசன் திட்டமும் அதிக லாப வீதத்தை தந்திருக்கின்றது. இதையும் நாம் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பொழுது  கவனத்தில் கொள்ள வேண்டும்.

அட்டவணையில் லார்ஜ் கேப்  திட்டங்களின் ஒன்று, மூன்று, ஐந்து வருட லாபம் விதங்களும் தரப்பட்டுளது. 
பண்டு நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த தொகை கோடிகளில் தரப்பட்டுளது 


Fund
Rating
1-Year Return
3-Year Return
5-Year Return
Scheme AUM in  Crores
AMC AUM in Crores
HDFC Top 100 Fund
* * *
8.53
11.09
7.6
                            18,507.00
                376,597.57
ICICI Prudential Bluechip Fund
* * * *
9.25
11.64
8.93
                            24,132.00
                348,068.36
SBI Bluechip Fund
* * * *
12.5
10.32
9.71
                            23,585.00
                320,662.84
Aditya Birla Sun Life Focused Equity Fund
* * *
11.6
10.11
8.5
                               4,360.00
                253,828.50
UTI Mastershare Fund - Regular Plan
* * *
10.21
10.93
7.8
                               6,174.00
                154,229.01
Franklin India Bluechip Fund
*
4.45
6.93
6.41
                               6,669.00
                124,025.02
Axis Bluechip Fund
* * * * *
22.58
17.86
10.79
                               8,749.00
                105,526.17
IDFC Large Cap Fund - Regular Plan
* *
11.06
10.95
6.53
                                   457.00
                   94,150.54
DSP Top 100 Equity Fund - Regular Plan
*
16.96
9.56
7.46
                               2,641.00
                   75,415.56
Mirae Asset Large Cap Fund - Regular Plan
* * * * *
13.22
13.94
11.7
                            15,897.00
                   33,282.15
Invesco India Large Cap Fund
* * *
12.31
10.71
8.34
                                   202.00
                   23,542.83
Edelweiss Large Cap Fund - Regular Plan
* * * *
13.62
13.05
9.09
                                   172.00
                   11,763.71

5. அடிக்கடி டிவிடெண்ட் தரும் பண்டு நல்லதா ?

ஒரு திட்டம் அடிக்கடி பெரிய தொகை டிவிடெண்ட் தருகின்றது எனில் அந்த திட்டம்  நல்ல திட்டம் என்ற எண்ணம் நம்மில் பலரிடையே  இருக்கிறது. இதுவும் சரியான அணுகுமுறை இல்லை என்றே தோன்றுகின்றது நமக்கு வரும் டிவிடெண்ட்  தொகைகும் கிடைக்கும் லாபத்திற்கு பெரும்பாலும் விரிவான உறவுகளோ இருப்பதில்லை. பொதுவாக டிவிடெட் வந்தால்  கைக்கு  பணம் கிடைக்கிறது  என்று  கொள்ளலாமே தவிர  அது நிச்சியம் நல்ல  திட்டம் என்று கூற முடியாது. ஒரு திட்டம் அடிக்கடி டிவிடெண்ட் தருகின்றது, அந்த  டிவிடெண்ட் சேர்த்து அதன் ஆண்டு வருமான விகிதம் 8%. இன்னுரு  திட்டம்  குறைந்த வகையில் டிவிடெண்ட் தருகின்றது ஆனால் அதன் ஆண்டு வருமானம் 9% சதவிகிதம் என்றால் இரண்டாவது திட்டமே நல்ல திட்டம். டிவிடெண்ட் குறைவாக இருந்தாலும் இந்த திட்டத்தில் லாபம் அதிகம்.  முதல் திட்டம் அவ்வளவு உகந்ததல்ல மேலும் நமது கைகளில் தற்போது டிவிடெண்ட் வரி இல்லை நிறுவனங்கள் வரி கட்டுகின்றது இவை மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  எனவே டிவிடென்ட்  கிடைப்பதை  வைத்து  திட்டம் சிறந்ததா இல்லையா என்று முடிவு செய்வது சரியாக இருக்காது

முடிவாக

ஒரு திட்டதின் லாபம் அந்தத் திட்டம் நடத்தப்படும் விதம், அதில் உள்ள  நிறுவனப் பங்குகளின் தரம் இவற்றை வைத்தே பெரும்பாலும் அமைகிறது.

மேற்கூறிய லாபத்துக்கான  காரணிகள் திட்டத்தின் லாபத்தை மேம்படுத்த பல சமயங்களில் உதவுகின்றது எனவே  பண்டு முதலீடு செய்யும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எவற்றை தள்ள வேண்டும்  என்று பார்த்து அதன்படி செயல்படுவது நல்லது. வாழ்த்துகள்


உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டுமற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் நன்றி .

No comments:

Post a Comment