நாம் எல்லோரும் அறிந்ததுதான். நவம்பர் 8’க்கு பிறகு, பணம் பற்றாக்குறை, பணபரிமாற்றத்திற்கு, தகவல் தொழில் நுட்பம் பயன் படுத்த வேண்டும், என்ற அரசாங்க அறிவுரைகள். எல்லா பணபரிமாற்றங்கள், E முறையில்( electronic transactions), வங்கிகளில் நடத்தபடவேண்டும் என்று கூறப்படுகின்றது. நமது பரஸ்பர நிதிகளை எடுத்துகொண்டால், முதலீடு செய்வது, எடுப்பது, எல்லாம் காலம்காலமாக, வங்கிகள் மூலமே நடந்துவருகின்றது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப, எவ்வாறு தகவல் தொழில் நுட்பம் பரஸ்பர நிதிகளில் உபயோகபடுகின்றது, என்று பார்த்துவிடலாம்.இதனால், நமக்கு என்னென்ன செளகரியங்கள், ஏதேனும் அசெளகரியங்கள் உள்ளதா? என்று பார்ப்பது , அவசியம்தானே. நிச்சயம், கூறுகின்றேன்!! அசெளகரியங்களை விட, செளகரியங்கள் அதிகம், அதையும் விரிவாக தெரிந்துகொண்டு உபயோகபடுத்துவோம். நாடு போகின்ற போக்கில், தகவல் தொழில் நுட்பம் இல்லாமல் நிதி பரிமாற்றம் செய்ய இயலாத நிலை கண்கூடு. எனவே, பரஸ்பர நிதியில், தகவல் சேகரிப்பு, மற்றும் நிதி பரிமாற்றம், ஆகிய பல சேவைகளுக்கு, எப்படி தகவல் தொழில் நுட்பத்தை உபயோகிக்கலாம், என்று அறிந்து கொள்ளவது, மிக மிக அவசியமான ஒன்றாகும்.
முதலாவதக நாம், அறிந்து கொள்ளவேண்டியது, காகித்த்தில் அச்சடித்த பங்கு, வைப்பு நிதி பத்திரங்கள், குறைந்து கொண்டே வருகின்றது. கூடிய சீக்கிரம், முற்றிலும் மறைந்துவிடலாம். முன்னர் நாம் , பங்குகளை விற்கும், போது, வைப்பு நிதி பெறும் போது, இந்த பத்திரங்களை பத்திரமாக திருப்பி கொடுக்கவேண்டும். ஆனால் பரஸ்பர நிதியில் நமது யூனிட் விபர தாள்கள் ஏதும் இருந்தால், அதை பத்திரபடுத்த வேண்டிய தேவை இல்லை, அல்லது, குறைவு. பரஸ்பர நிதியில் தேவையாணவர்களுக்கு மட்டும், கணக்கு விபர தாள்களை அச்சடித்து தருகிறார்கள். (Statement of Account - SOA) இது ஒரு விபரமறிய உதவும் தாளே தவிர வேறு உபயோகமில்லை. இந்த தாள்கள் ( SOA) இல்லாமலும், நாம் யூனிட் வாங்கலாம், விற்கலாம். யூனிட் வாங்க, விற்க, உங்களது பரஸ்பர நிதி கனக்கு எண் ( Folio Number) மட்டுமே தேவை. பரஸ்பர நிதி கனக்கு எண் இருந்தால், நாம் அந்த நிறுவணத்தை அனுகி, நமது யூனிட் விபரங்கள், அதன் அன்றைய மதிப்பு ஆகியவற்றை மிக எளிதாக பரஸ்பர நிதியில் பெற்றுவிடலாம். எனக்கு தெரிந்தவரை , இவ்வளவு எளிதாக, அன்றைய மதிப்பு பற்றி மற்ற முதலீடுகளில் அறிய முடிவத்தில்லை.
பரஸ்பர நிதி கனக்கு எண் மறந்துவிட்டது, யூனிட் விபர தாள்கள் தொலைந்துவிட்டது, என்றாலும், பாதகமில்லை, கவலை வேண்டாம், தகவல் தொழில் நுட்பம் கைகொடுக்கும். உங்களது பான் நம்பரை (PAN Number) கொண்டு, அந்த நிதி நிறுவனம் சென்று, பரஸ்பர நிதி கனக்கு எண் பெற முடியும். அதன் மூலம், மற்ற மதிப்பு விபரங்கள் பெற்றுவிடலாம். முதலீடு செய்த நிறுவனமும் தெரியவில்லை எனில், சற்று மெனகிட்டு, பான் நம்பரை கொண்டு, NSDL CAS ( NSDL Common Account Statement) மூலம், நமது மூதலீட்டு விபரம் அறியலாம்
இணையதள முகவரி மற்றும் அலைபேசி செயலிகள் விவரம்:
Fund house
|
Web Link
|
Mobile Apps
|
ICICI Prudential Mutual Fund
|
https://www.icicipruamc.com/PruTracker/APP/ASPX/frmRegister_InvestNowD.aspx
|
I pru touch
|
HDFC Mutual Fund
|
http://www.hdfcfund.com/investorcorner/hdfcmf-online
|
HDFCMFMobile
|
Reliance Mutual Fund
|
https://investeasy.reliancemutual.com/online/
|
Reliance MutualFund
|
Birla Sun Life Mutual Fund
|
https://mutualfund.birlasunlife.com/Pages/Secured/Individual/MyAccount/MyProfile/RegisterOnline.aspx
|
Birla Sun Life MF FinGo
|
SBI Mutual Fund
|
https://www.sbimf.com/en-us/login
|
SBI MF invesTap
|
UTI Mutual Fund
|
https://online.utimf.com/General/Login.aspx
|
UTI Mutual Fund
|
Franklin Templeton Mutual Fund
|
https://online.franklintempletonindia.com/aspx_app/Investors/login/inv_login.aspx
|
-
|
Kotak Mutual
Fund
|
https://online.assetmanagement.kotak.com/
|
Kotak Mutual Fund
|
IDFC Mutual Fund
|
https://mfonline.idfcmf.com/
|
-
|
DSP BlackRock Mutual Fund
|
https://invest.dspblackrock.com/?ref=login
|
-
|
Axis Mutual Fund
|
https://www.axismf.com/Online/NewUserRegistration.aspx
|
Axis Mutual Fund EasyApp
|
பரஸ்பர நிதியில், யூனிட்களை வைத்திருப்பது, இரண்டு வகை உள்ளது. டீமாட், முறை, (Dmat mode , ) மற்றது சாதாரண முறை (Physical Mode) பங்கு பத்திரங்களை டீமாட்டில் வைத்துருப்பது போன்று, பரஸ்பர நிதி, யூனிட்களை டீமாட்டில் வைத்து கொள்ளலாம். பெரும்பாலும், ETF ( exchange traded funds) மற்றும் FMP ( Fixed maturity plans) திட்டங்கள், இந்த முறையில் வைத்து கொள்ளபடுகின்றது. மற்ற எல்லா திட்டஙளும், சாதாரண முறையில் கையாளபடுகின்றது. சாதாரண முறை என்றவுடன், கற்காலம், காகித பத்திர முறை என்று எண்ண வேண்டாம். யூனிட் விபரம் உஙகள், கணக்கில் , பத்திரமாக இருக்கும். பரஸ்பர நிதியில், யூனிட்களை வாங்க, படிவங்களை காகிதத்தில் , பூர்த்திசெய்து, வங்கி காசோலையின் மூலம், பணம் செலுத்தி யூனிட்கள் வாங்கபட்டது. இதே போல் விற்கவும், படிவங்கள், பூர்த்திசெய்து, வங்கியில் பணம் பெறப்பட்டது . இது கடந்த சில வருடங்களாக இருந்த முறை. இப்போதும் புழக்கத்தில் இருந்தாலும், மாறிவருகின்றது. காலம் மாறுகின்றது, தகவல் தொழில் நுட்பம் வளர்கின்றது. பரஸ்பர நிதியில், யூனிட்களை வாங்க, காகித படிவமோ, காசோலையோ, தேவையில்லை. இணையத்தில் Electronic முறையில் படிவம் பூர்த்திசெய்து யூனிட்களை வாங்கலாம், விற்கலாம். வங்கிகளில் இருந்து காசோலை இல்லாமலே தானாகவே பணம் பெற அல்லது கொடுக்கப்படும். இது பெரும்பாலும், கணினி மூலம் செய்யப்பட்டுவந்தது . தற்போது, நேர்தியான / சூட்டிகை கைபேசி ( smart phone) மூலம் செய்ய செயிலகள் ( apps) உள்ளது. என்ன இது மிக பெரிய செளகரியம்தானே. தங்கள் விரல் நுனியில் கைபேசியில், பரஸ்பர நிதியில், யூனிட்களை வாங்கவும், விற்பதும், மிக பெரிய முன்னேற்றம்தானே.
சில பல காரணங்களால், கைபேசியில், கணினியில் , பணம் பரிமாற்றம், செய்ய முடியாதவர்கள், விரும்பாதவர்கள், பயத்தினால், தவிர்பவர்கள, குறைந்தபட்சம், யூனிட் விபரம், அன்றய மதிப்பு ஆகியவற்றை தெரிந்து கொள்ள, இந்த தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை உபயோகபடுத்தலாம். யூனிட் வாங்குவதற்கோ, விற்பதற்க்கோ அதற்கான படிவங்கள் இல்லாதவர்கள் online மூலம் அணைத்து பரஸ்பர நிதி பரிமாற்றங்களை பண்ண முடியும். இதை கைபேசி செயலி மூலம் அல்லது கணினி , tablet மூலம் (மாத்திரை என நினைத்துக்கொள்ள வேணாம்..) அந்தந்த நிறுவனத்தின் வளைதளங்களுக்கு சென்று செய்ய முடியும். இந்த விபரங்களை, இணையத்தில் அறிய, அந்தந்த, நிறுவனத்தின் அனுமதி, பெறவேண்டும் அதாவது, கடவுசீட்டு ( Username), மற்றும் இரகசிய குறியீடு ( password) வேண்டும். இந்த online வசதி பெறுவதற்கு பல படிவங்கள் பூர்த்தி செய்து, முத்திரை தாளில் கைநாட்டு போட்ட காலங்கள் மலையேறிவிட்டது. தற்போது இது மிகவும் எளிமைபடுத்தபட்டுவிட்டது. நாலே (4) கேள்வி தான்… பதில் சரியாக சொன்னால் அடுத்த நிமிடம், online access!! என்ன, நாலு கேள்வியை தெரிந்து கொள்ள ஆசைதானே..?? அந்த கேள்வியை நான் leak செய்து விடுகிறேன்!!
- மின்னஞ்சல்
- கைபேசி எண்
- வங்கி கணக்கு எண்
- பாண் அட்டை எண்
நீங்கள் ஒவ்வொரு நிதி நிறுவனங்களிலும் வெவ்வேறு மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தால் ஞாபகாமா online access வாங்க அதே மின்னஞ்சல் முகவரி கொடுக்க வேண்டும். ஞாபக மறதி இருந்தால் சிக்கல் தான்!! பொதுவாக நான் கூறிய நாலு கேள்விகள் தான். ஆனாலும் அது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடலாம்.
ICICI Prudential பரஸ்பர நிதி நிறுவனத்தின் online access பெறுவதற்கு நீங்கள் செல்லவேண்டிய தளம் - https://www.icicipruamc.com/ அதனுடைய தகவல் பக்கத்தின் மாதிரி இங்கு தரப்பட்டுள்ளது.
தற்சமய நிலவரபடி இந்த செயலிகள், இணையதள உபயோகங்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு ஆகும் செலவை திட்ட செலவினங்களோடு சேர்த்துவிடுவார்கள். எனவே ஏன் இன்னும் தயக்கம்?? நல்ல பயன்களை அனுபவித்து கொள்வோம். இதனால் நிதி நிறுவனங்களுக்கு நேரே செல்லும் பெட்ரோல் செலவு சிக்கனம் ஆகலாம். நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது தானே!! இதே போல் நாம், நமக்கு வரும் தகவலை ஈமெயில் மூலமாக பெறுவதால் காகிதங்களில் அச்சிடப்படுவது குறைகிறது. இது சுற்று சூழலுக்கு மிகவும் நல்லது. எனவே பங்கு, பரஸ்பர நிதி உபயோகிப்பவர்கள் வருடாந்திர கணக்கு புத்தகங்களை (Annual Report) ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்வது சாலச் சிறந்தது.
அதிகம் உபோகிக்கபடும், பரஸ்பர நிதி நிறுவனங்களின் இணை முகவரியும், அதன் செயலிக்ள் விபரமும், அட்டவணையில் உள்ளது.
இதில் முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது, ஒவ்வொரு நிறுவனத்திற்கும், ஒரு செயலி, அல்லது, இணைய அனுமதி, தேவை. நாம் நாலு நிறுவனத்தில் திட்டங்கள் வைத்திருந்தால், நாலு செயலி, அல்லது, நாலு இணைய அனுமதி தேவை. நிறுவன எண்னிக்கை கூடும் போது, சற்று சிரமம்தான் . இதற்கும் வழி வகைகள் உள்ளது.
எல்லா நிறவனத்தின் நமது திட்டங்களை ஒரே இடத்தில், கூட்டாக பார்க்க , அதை இன்னொரு இதழில் பார்ப்போம் .
உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டு, மற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் . நன்றி .
No comments:
Post a Comment