எஸ்.ஐ.பி எல்லா பிணியையும் போக்கும் சர்வ வல்லமை படைத்த சஞ்சீவினியா?
எஸ்.ஐ.பி
எஸ்.ஐ.பி, இது மிக மிக பிரபலமான வார்த்தை. பல முதலீட்டாளர்களால், மிகுந்த எதிர்பார்ப்புகளோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலீட்டு முறை. கடந்த இரண்டு வருடங்களில் பல தரப்பினரால் ஆரம்பிக்கப்பட்டு வரும் முதலீட்டு முறை, தொடர்ந்து வரும் முதலீட்டு ஆசை, எதிர்பார்புகள் நிறைவேறியதா? தற்போதைய சந்தை சரிந்த நிலையில் முதலீடு லாபமா என்று பார்த்தோமானால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதில் வருத்தப்பட தேவையில்லை. எஸ்.ஐ.பி சரிவர புரிந்து கொண்டால் போதும். எஸ்.ஐ.பி யின் இன்றைய லாபங்களை அட்டவணை பார்த்து தெரிந்து கொள்ளலாம். சந்தை வீழ்ச்சியால் எஸ்.ஐ.பி யில் கிடைக்கும் லாபமும் குறைந்து வருகின்றது. ஐந்து நட்சத்திர குறியீடு பெற்ற ஈக்விட்டி பண்ட்களின் 1 வருட எஸ்.ஐ.பி லாப சத விகிதமே -5% முதல் -15% வரை உள்ளது. மற்ற பண்ட்களின் லாபம் இதைவிட குறைவாகவும் இருக்கலாம். இது இந்த அட்டவணையில் இருந்து மிகத் தெளிவாக தெரிகின்றது. ஆனால் நாம் முதலீடு செய்யும் போது இப்படியா எதிர்பார்த்தோம்? இல்லயே, நாம் எதிர்பாரத்ததெல்லாம் எஸ்.ஐ.பி சாலச் சிறந்தது, நஷ்டம் வர வாய்ப்பே இல்லை என்று மனக் கோட்டைகள் பல, ஆனால் நிதர்சனம் அதிர்ச்சி தர தக்கதாக உள்ளது. நாம் முதலில் போட்ட தொகையைவிட சில சமயங்களில் குறைவாக இன்றைய மதிப்பு உள்ளது.
வேல்யூ ரிசரச் ஐந்து நட்சத்திர குறியீடு பெற்ற ஈக்விட்டி பண்ட் களின் எஸ்.ஐ.பி லாப சத விகிதம் - 10 Nov 2018
|
||||
பண்ட்
|
பிரிவு
|
1 வருடம்
|
3 வருடங்கள்
|
5 வருடங்கள்
|
ஆக்ஸிஸ் லாங் டேர்ம்
|
வரி சலுகை
|
-5.45
|
10.09
|
12.74
|
மிர்ரே அசெட்
எமர்ஸிங் புளு சிப்
|
லார்ஸ் மற்றும் மிட்
கேப்
|
-5
|
12.37
|
18.42
|
ஆக்ஸிஸ் புளு சிப்
|
லார்ஸ் கேப்
|
-3.21
|
11.02
|
10.78
|
எல் அண்ட் டி மிட்
கேப்
|
மிட் கேப்
|
-15.15
|
9.26
|
15.65
|
எஸ்.ஐ.பி – லம்ப்சம் ( SIP Vs Lumpsum)
சிலர் இப்போது நினைக்கிறார்கள் எஸ்.ஐ.பி யில் போட்டதற்க்கு பதிலாக லம்ப்சம் மில் முதலீடு செய்து இருக்கலாம் என்று. இது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போன்றவையே. அருகில் போனால் தான் அதன் ஆபத்துக்கள் வெளிச்சம். எஸ்.ஐ.பி மற்றும் லம்ப்சம் இரண்டு முறைகளை புரிந்துகொள்வதற்கு வாழ்வியலையும் பார்க வேண்டி உள்ளது. சில நேரங்களில் சிலருக்கு அவர்கள் வாழ்வியல் சூழலில் லம்ப்சம் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கலாம். உதாரணமாக மாதாந்திர சம்பளம் வாங்கி, குறைந்த அளவில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு எஸ்.ஐ.பி ஏதுவாக இருக்கலாம். இவர்களுக்கு லம்ப்சம் முதலீடு அவ்வளவு சுலபமாக இருக்கபோவதில்லை. எனவே எது சாத்தியமோ, அதைச் செய்வதே நல்லது. அடுத்தது இதற்கு மாறாக கையில் பணம் இருக்கும் போது, குறைந்த தொகையில் எஸ்.ஐ.பி செய்து வருவது, சாதகமில்லை. தற்போதைய சந்தை சரிந்த நேரங்களில் நாம் லம்ப்சம் மூலமாக முதலீடு செய்வது என்பது லாபம் அதிகமாக பெறுவதற்கு வழி வகுக்கும். கையில் கணிசமாக பணம் இருக்கும் போது லம்ப்சம் போடாமல் எஸ்.ஐ.பி தான் போடுவேன் என்று அடம் பிடிப்பது சில நேரங்களில் உகந்தது அல்ல. அடுத்த சில மாதங்களுக்கு, வருடங்களுக்கு சந்தை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்குமானால் எஸ்.ஐ.பி சிறப்பானதாக அமையும்.
கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் மூன்று வகையான நேரங்களில் லம்சம் மற்றும் எஸ்ஐபி முறையில் அதே தொகையை முதலீடு செய்தால் கிடைக்கும் ஆண்டு லாபவிகிதம் தரபட்டுள்ளது. இதில் முக்கியமாக நாம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் லம்சம் முறையில் பணம் முதலிலேயே முதலீடு செய்யப்படுகிறது . எஸ்ஐபி முறையில் மாதாமாதம் பணம் செல்வதால் சிலகாலம் பணம் நம்மிடம் உள்ளது. கட்டிய பணத்திற்கான லாபசதவிகிதம் மட்டுமே எளிமையாக புரிந்து கொள்ள தரப்பட்டுள்ளது
லம்சம் மற்றும் எஸ்ஐபி லாபவிகித அட்டவணை:
ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட்
மாதாமாதம் கட்டிய தொகை ரூபாய் 3000
லாபம் கணக்கிடப்பட்ட தேதி 12 அக்டோபர் 18 (சென்செக்ஸ் குறியீட்டு எண் - 34812)
எஸ்.ஐ.பி பற்றி நாம் அறிய வேண்டிய அதி முக்கியமான விஷயங்கள் :
- சந்தை அபாயத்திற்க்கு உட்பட்டதே.
- லாப நஷ்டம் சகஜமே, இதில் நஷ்டமும் வரலாம்.
- நஷ்ட காலத்தில், தற்போதைய சுழலில் எஸ்.ஐ.பி நிறுத்த கூடாது. ஏனெனில் சந்தை ஏறி இறங்கும் போது தொடர்வது நல்லது.
- அட்டவணையில் இருந்து இன்னொற்றும் மிகத் தெளிவாக தெரிகின்றது. கடந்த ஒரு வருட லாபம், நஷ்டத்தில், எஸ்.ஐ.பி தொடரும் போது, ஐந்து வருட லாபம் நல்ல நிலையில் உள்ளது.
- எஸ்.ஐ.பி நடந்து கொண்டிருக்கும்போது அதே திட்டத்தில் அதே போலியோவில் லம்ப்சம் மூலம் நம்மிடம் இருக்கும் பணத்தை சந்தை குறைந்துள்ள காலங்களில் ஒரு முறை கூட முதலீடு செய்யலாம். இது சாத்தியமானதே. இதில் தவறு ஏதுமில்லை
- சந்தை ஏறி இருக்கும்போது லம்சம் முதலீட்டில் லாப விகிதம் குறைவு
- சந்தை இறங்கி இருக்கும்போது லம்சம் முதலீட்டில் லாபவிகிதம் அதிகம்
என்னமோ ஏதோ என்று எண்ண வேண்டாம். இரண்டு வகையான முதலிட்டு முறையில் காலத்திற்கேற்றவாறு, கையிலிருக்கும் பண்த்திற்கேற்றவாறு முதலீடு செய்யலாம். எல்லாக் காலத்திற்கும் இந்த முறைதான் சிறந்தது என்று சொல்லிவிடுவதற்கு காரணம் ஏதுமில்லை.
இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யலாம்.
உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டு, மற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் . நன்றி .
No comments:
Post a Comment