மனித யதார்த்தங்கள்
எனது பார்வையில் மனிதர்களும், மனித மனமும்
பகுதி 5 — "நம்புவது உண்மையா, நமக்கு சாதகமானதா!"
கண்ணன் மீ
செயற்கை நுண்ணறிவு ஆலோசகர் | நிதி ஆய்வாளர் | சிந்தனையாளர்
radhaconsultancy.blogspot.com |💬 வலைப்பதிவு வழியாக செய்தி அனுப்ப
அதிகம் சிந்திப்பது வரமா, சாபமா?
அதிகம் சிந்திப்பது வரமா, சாபமா? இதையே நான் பலமுறை அதிகம் சிந்திப்பது உண்டு! நான் நிறைய எழுதுகின்றேன். கொஞ்சம் எழுத வேண்டுமென்றால், நிறைய படிக்க வேண்டும் அல்லவா? அதற்காக ஏஐ (AI) போல நிறைய படித்து, அப்படியே காப்பியெடுத்து சுருக்கித் தருகின்றேன் என்று எண்ண வேண்டாம்.
நாம் படிப்பதை நமது சொந்தக் கோணத்தில், பல்வேறு லென்ஸ் மூலம் பார்த்து, நாம் நம்புவதை, நமக்கு பிடித்ததை, மற்றவர்களுக்கு உபயோகம் என்று எண்ணுவதைப் பகிர்கிறோம் (Sharing). அப்படிப்பட்ட ஒரு பகிர்வுதான் இது.
நான் வங்கி ஃப்ராடு (Bank Fraud) பற்றி நிறைய படிக்கின்றேன். கம்ப்யூட்டரில் கவனமாக கையாள முயற்சிப்பேன். ஆண்ட்ராய்ட் ஃபோனில் ஏன் சரியான வைரஸ் சாப்ட்வேர் இல்லை என்று யோசித்து யோசித்து, கடைசியில் லேப்டாப்பில் மட்டுமே வங்கியின் கணக்குகளைப் பார்ப்பது, பேங்க் வரவு செலவு செய்வது (Transaction) என்று இருந்தேன். மனசில் ஃப்ராடுகளைப் பற்றிய பயம் எப்போதும் ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருந்ததால், மொபைலில் யூபிஐ பேமெண்ட் ரெஜிஸ்டர் பண்ணாமல், பழையபடி ஏடிஎம் மற்றும் இன்டர்நெட் டிரான்ஸ்ஃபர் மூலமே பணப் பரிமாற்றங்களைச் செய்து வந்தேன்.
இடைப்பட்ட காலத்தில் யூபிஐ பலமடங்கு வளர்ந்து பெருகிவிட்டது! 'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்பது போல், இப்போது யூபிஐ-க்குக் கட்டணம் வரப்போகிறது என்று பேசத் தொடங்கிய காலத்தில்... அதாவது கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நான் யூபிஐ பேமெண்ட்டை வங்கி app மூலம் உபயோகப்படுத்தத் தொடங்கினேன்!
இவ்வளவு காலம் இதை விட்டுவிட்டோமே என்ற எண்ணம் மட்டும் இன்று வரை என் மனதை விட்டு அகலவில்லை. காரணம் என்ன தெரியுமா? படியுங்கள்... போக போக புரியும்! "அன்று அவருக்கு காசு போச்சு, எங்கும் எதிலும் ஃப்ராடுதான் நடக்கிறது" என்று நமக்கு நாமே ஜஸ்டிஃபை செய்து கொள்கிறோம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. "இத்தனை காலம் ஆகிவிட்டதே... நல்லது, இப்போதாவது மாறிவிட்டோமே" என்று சந்தோஷப்படுவது உண்டு. ஆனால் சிலர் கல்லறைக்குச் செல்லும் காலம் வரை மாறவே மாட்டார்கள் என்பதையும் நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அதுதான் அடுத்து வரப்போகும் கதை!
இது என்னிடம் மட்டும் நடக்கும் விஷயமில்லை. கணவன்-மனைவி இடையேயும் இதே கன்ஃபர்மேஷன் பயாஸ் இதே பிடிவாதத்துடன் வேலை செய்யும். ஒரு முடிவை மனதில் ஒருமுறை பதித்துக்கொண்டால் பின் அதை மாற்ற மறுக்கும் இந்த குணத்தை, சுமன்-சுகந்தி தம்பதியரிடமும் நான் அப்படியே பார்த்தேன்.
Confirmation Bias (உறுதிப்படுத்தும் பக்கச்சார்பு): நாம் ஏற்கனவே ஒன்றை நம்பிவிட்டால், அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் தகவல்களை மட்டுமே நம் மூளை தேடும். (உதாரணம்: "UPI Safe இல்லை" என்று நம்பியதால், ஃப்ராடு செய்திகளை மட்டுமே படித்துவிட்டு, பாதுகாப்பான பயன்பாட்டைப் புறக்கணித்தது).
The Negativity Bias & Availability Heuristic (எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கம் & எளிதில் கிடைக்கும் நினைவுகள்): நல்ல விஷயங்களை விட ஆபத்தான, எதிர்மறையான சம்பவங்களே நம் நினைவில் முதன்மையாக வந்து நிற்கும்.
சுமனும் சுகந்தியும்: ஆதர்ச தம்பதிகளா, இல்லை சாதாரணமா?
சுகந்தியும், சுமனும் பெற்றோர் பார்த்து பார்த்து முடித்து வைத்த வசதி படைத்த (Well-settled), படித்து சிந்திக்கக்கூடிய தம்பதிகள். கல்யாணமான சில வாரங்களிலேயே, இக்காலத்து இளம் பெண்கள் போல் அயல்நாட்டுச் சுற்றுலா (Foreign trip) செல்ல அடித்தளம் போட்டாள் சுகந்தி.
சுமன் கறாராக லாப நஷ்டக் கணக்குகள் போட்டு, "நாலு நாள் சைட்சீயிங்குக்கு ஏன் பல லட்சம் செலவழைத்து செல்ல வேண்டும்?" என்று யோசித்தான். "யூடியூப்பில் பார்த்தால் என்ன?" என்று சத்தம் கூடப் போட்டிருந்தான். கடைசியில் ஸ்ட்ரிக்ட்டாக 'நோ' சொல்லிவிட்டான்!
சுகந்திக்கு நினைத்தது நடக்கவில்லையே என்று வருத்தம் அதிகமாகிக் கொண்டே போனது. அவள் அன்றே தன் மனத்தில் ஒன்றைப் பதிந்து கொண்டாள். அது கம்ப்யூட்டரில் உள்ள பயாஸ் (BIOS) போன்ற 'ரீட்-ஒன்லி மெமரி' (Read-Only Memory - ROM). அவ்வளவு எளிதாக அழிக்க முடியாதது!
சுகந்தி நினைத்தாள்: "சுமன் ஏன் இப்படி இருக்கின்றான்? என்னை எங்கள் வீட்டார்கள் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார்களே! அடுத்த வீட்டு அம்புஜம் அமெரிக்கா போயிருக்கிறாள்... நாம் அடுத்து இருக்கும் சிங்கப்பூருக்குக் கூட போக முடியவில்லையே?" என்று எண்ணி எண்ணிப் புலம்பினாள்.
சுமன் நினைத்தான்: "காசு என்ன மரத்திலா காய்க்கிறது? இவள் ஏன் காசின் அருமை தெரியாதவளாக இருக்கிறாள்? எப்படி இவளுடன் காலத்தைத் தள்ளுவது?"
ஒருவருக்கொருவர் தான் நினைத்ததை அப்போதைக்கு அடுத்தவரிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளவில்லை. காலங்கள் ஓடின. குழந்தைகள் பிறந்து, பள்ளிக்குச் சென்று படித்துத் திரிகிறார்கள். பின்வந்த காலங்களில் கொடைக்கானல், ஊட்டி என்று சுற்றியதில் அவளுக்குக் குறை ஒன்றும் இல்லை. சுமனின் வருமானமும் பெருகியது. சுற்றுலாக்கள் தமிழ்நாட்டைத் தாண்டி மஹாகாலேஷ்வர், முஸோரி என்றானது!
சுமன் மனதில் சுகந்தியின் ஆதிகாலக் கனவான 'அயல்நாட்டுச் சுற்றுலா' நினைவிருந்தது. அதை மறக்காமல் அவளை ஸ்ரீலங்காவிற்கு கூட்டிச் சென்றான். அங்கு கண்டி சென்று புத்தர் கோயிலையும் பார்த்து வந்தாகிவிட்டது! புத்தரைப் பார்த்த பிறகாவது சுகந்தியின் மனத்தின் ரணங்கள் மறைந்ததா? அது ஒன்றும் அவளுக்கு அவ்வளவு எளிதான செயல் இல்லையே!
நாட்கள் ஓடின. சுகந்தி தாய்வீடு சென்றாள். தன் தாயின் உறவினர்களிடம், "சுமன் ஒரு கஞ்சன்! ஒரு பைசா கூடச் செலவழிக்க மாட்டான்!" என்று புலம்பி அரற்றிவிட்டாள். இது சுமனுக்குத் தெரியுமா? தெரிய வாய்ப்பில்லை. ஏன் இந்த எண்ணம் அவளது மனதை விட்டு அகல மறுக்கிறது? அவளது அழிக்க முடியாத 'பயாஸ்' எழுதப்பட்டு பத்து வருடங்கள் கடந்தாலும் மாறாமல் அப்படியே இருந்து வருகின்றது!
அவள் ஒருபோதும் மஹாகாலேஷ்வர், முஸோரி, ஸ்ரீலங்கா போனதை நினைத்துப் பார்ப்பதே இல்லை. அவள் நினைப்பதெல்லாம், "நேற்று நான் மூன்று எலுமிச்சம்பழம் வாங்கி வரச் சொன்னேன், சுமன் இரண்டு எலுமிச்சம்பழம்தான் வாங்கி வந்தான்" என்று உறவினரிடம் புலம்புவதுதான்!
நடுநிலையோடு யோசித்துப் பாருங்கள்... ஸ்ரீலங்கா சென்று வருவதும், மூன்றுக்கு பதிலாக இரண்டு எலுமிச்சம்பழம் வாங்குவதும் ஒரே மாதிரியான செலவா? இல்லை! இது யதார்த்தத்தில் நடந்த ஒரு சின்னத் தவறு. ஆனால் மனம் அதை ஒருபோதும் நேர்மறையாக நினைப்பதில்லை. "நான் கேட்டதை அவன் தருவதில்லை, எனவே அவன் கஞ்சன்!" அவள் அமெரிக்காவிற்கே அழைத்துச் செல்லப்பட்டாலும், "சுமன் கஞ்சன்" என்ற எண்ணம் மாறப்போவதே இல்லை! இதுவே பல மனமுறிவுகளுக்கு (Breakups) காரணமாக இருக்கலாமோ?
Anchoring Effect (ஆரம்பக் கண்ணோட்டம்): திருமணத்தின் முதல் 2-3 மாதங்களில் உருவான "இவன் கஞ்சன்" என்ற ஆரம்பக்கட்ட எண்ணமே (Initial Impression) வாழ்நாள் முழுமைக்குமான லென்ஸாக (Lifelong lens) மாறிவிடுகிறது.
Confirmation Bias & Cognitive Filtering (தகவல் வடிகட்டல்): சுமன் 80% சரியாக இருந்தாலும், சுகந்தி அந்த 20% தவறான எலுமிச்சம்பழ விஷயத்தை மட்டுமே தன் பயாஸை உறுதிப்படுத்த உயர்த்திப் பிடிக்கிறாள். ஸ்ரீலங்கா பயணங்கள் வடிகட்டப்பட்டு மறக்கப்படுகின்றன.
பங்குச்சந்தையும் வாட்ஸ்அப் குரூப்புகளும்!
இது தம்பதிகளுக்கு இடையே மட்டுமல்ல, நான் இதை பங்குச்சந்தைகளிலும் (Stock market) பலமுறை பார்த்திருக்கின்றேன்!
ஒருவர் மார்க்கெட் இறங்கும் என்று நம்பினால், கோவிட் (COVID-19) காலத்தில் "கோவிட்டில் எத்தனை பேர் இறந்தார்கள்... மார்க்கெட் உயர்வதற்கு வாய்ப்பே இல்லை! இன்னும் நான்கு வருடமானாலும் நாலு காசு பார்க்க முடியாது" என்று பங்குகளை வாங்குவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருவார்கள். ஆனால் மார்ச் 2020-ல் சரிந்த சந்தை, மிக விரைவாக ஐந்தாறு மாதங்களில், அந்த வருட முடிவிற்குள் பழைய நிலைக்கு வந்துவிட்டது!
அதில் அவர்கள் பணம் இழந்ததற்கு முக்கிய காரணம் இந்த கன்ஃபர்மேஷன் பயாஸ்தான்! அவர்கள் சந்தை ஏறுவதை ஏற்க மறுத்தார்கள். சந்தை ஏறினால், "அது டெட் கேட் பவுன்ஸ் (Dead Cat Bounce)" என்று ஜார்கனோடு (Jargon) பேசினார்கள். இது சந்தையில் அன்றாடம் நிகழும் நிகழ்வு. 2020-ல் மட்டுமில்லை, 2026-லும் ஈரான்-அமெரிக்கா சண்டையிலும் இதே போன்ற எண்ணற்ற கன்ஃபர்மேஷன் பயாஸ்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சந்தை உயிர்ப்புடன் இயங்குவதே இந்த கன்ஃபர்மேஷன் பயாஸை வைத்துதான் என்பது என் எண்ணம்!
அரசியல் களம் இதற்கு விதிவிலக்கல்ல. கட்சிகளுக்கும் அதன் கன்ஃபர்மேஷன் பயாஸ்களும் உண்டு. இதை எனது வாட்ஸ்அப் குரூப்புகளில் வரும் அரசியல் பதிவுகளில் மிக அதிகமாகப் பார்க்கின்றேன். 'அங்கிங்கெனாதபடி' நிறைந்திருப்பது இந்த கன்ஃபர்மேஷன் பயாஸ் மட்டுமே! நம் எண்ணம் நாம் நம்புவதை மட்டுமே பார்க்கின்றது, படிக்கின்றது; மற்றவற்றை அடியோடு வெறுக்கின்றது, புறக்கணிக்கின்றது! யதார்த்தத்தில் வருவது எது, அதை எப்படி விரும்பிச் சிந்திப்பது என்று எவருக்கும் தெரிவதில்லை.
Quantification vs. Emotional Reality (அளவீடு செய்ய முடியாத உணர்ச்சி யதார்த்தம்): பங்குச்சந்தையில் கன்ஃபர்மேஷன் பயாஸ் பண இழப்பாக மாறுகிறது; குடும்ப வாழ்க்கையில் அது உணர்ச்சிப்பூர்வமான இடைவெளியாக (Emotional Distance) மாறுகிறது.
சுமன் தங்கமா, தகர டப்பாவா?
சுமன், சுமதி தம்பதியையே மீண்டும் பார்ப்போம். பொதுவாக, "சுமன் என்னை ஒருமுறை கூட அயல்நாட்டுக்குக் கூட்டிப் போகவில்லை" என்பது சுமதியின் முதன்மையான குற்றம். அதன் பிறகு அவர்கள் பலமுறை உள்நாட்டுச் சுற்றுலா சென்று வந்திருக்கிறார்கள்; ஏன், ஸ்ரீலங்காவிற்குக்கூட ஒருமுறை அயல்நாட்டுச் சுற்றுலா சென்று வந்துவிட்டார்கள்! இருந்தாலும் சுமதிக்கு ஏன் சுமன் திருப்தியளிப்பதே (Satisfaction) இல்லை? அவள் ஏன் எப்போதும் குற்றமே கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறாள்?
அந்த Confirmation Bias (உறுதிப்படுத்தும் பக்கச்சார்பு) எனும் மனக்கண்ணாடிதான் காரணம். மூன்று எலுமிச்சம்பழத்திற்குப் பதிலாக இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கி வந்த அந்த இருபது ரூபாய் விவகாரத்திற்கு அவ்வளவு பெரிய சண்டை தேவையா?
அதேபோல் சுமன் பக்கம் பார்த்தால், "சுமதி நன்றாகச் சமைக்கிறாள்... ஆனால் என் அம்மாவின் கைப்பாகம் இவளுக்கு வரவில்லை!" என்று வாதாடுகிறான். சுமதி பத்து தடவையில் ஏழு தடவை மிக அருமையாகச் சமைப்பாள். ஏதோ மூன்று தடவை தோசையை உப்மாவாகக் கிண்டி வைத்தால், "இது பேப்பர் ரோஸ்ட் மாதிரி வரவில்லையே" என்று குறை சொல்வான். இது மனித மூளையில் இயல்பாக இருக்கும் Negativity Bias (எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கம்) செய்யும் வேலை—நல்லபடியாக வந்த 70% உணவை மறந்துவிட்டு, சொதப்பிய அந்த 30% தோசையை மட்டுமே மனசு பிடித்துத் தொங்கும்!
இதை எந்தக் கணித (Mathematical) முறையிலோ அல்லது பணவீக்கக் கணக்கிலோ தீர்க்க முடியும்? ஒரு நடுநிலையான புள்ளியில் பார்த்தால், சுமன் செய்ய வேண்டிய கடமைகளில் 70% முதல் 80% வரை செய்திருக்கிறான்; ஒரு 20% செய்ய மறந்திருக்கலாம் அல்லது வேண்டுமென்றே செய்யாமல் இருந்திருக்கலாம்.
அதேபோல் சுமதியும் 70% முதல் 80% வரை சரியாகவே காரியங்களைச் செய்திருப்பாள். ஆனால் இருவருமே அந்த 20% குறையை மட்டுமே பெரிதுபடுத்தி உயர்த்திப் பிடிப்பது ஏன்?
நான் ஏதோ தோராயமாக 70%, 80% என்று இங்கு எழுதிவிட்டேன். ஆனால் இந்த 80/20 சதவீதத்தை யாரால் துல்லியமாக அளவிட முடியும்? கணவன் வீட்டார் அளக்கப் போனால், "எங்கள் பிள்ளை தங்கம்!" என்பார்கள். மனைவியின் வீட்டார் அளக்கப் போனால், சுமனைத் "தகர டப்பா!" என்பார்கள்.
உண்மையில் சுமன் தங்கமும் இல்லை, தகர டப்பாவும் இல்லை என்பதே நியாயமான யதார்த்தம். ஆனால் சுமன் உண்மையில் வெள்ளியா (Silver) அல்லது எவர்சில்வரா என்றுதான் யாருக்கும் தெரியப்போவதில்லை! வெளியாட்களிடம் போய் நின்று இவர்கள் நியாயம் கேட்டாலும், இந்த உணர்ச்சி சார்ந்த Quantification vs. Emotional Reality (அளவீடு செய்ய முடியாத உணர்ச்சி யதார்த்தம்) சிக்கலை யாராலும் அளந்து தீர்த்து வைக்க முடியாது.
இதை அளவிட இந்தத் தேதியில் ஏஐ (AI) நினைத்தால் கூட முடியாது! எனவே சண்டைகள் தொடரும்... இதுவே எதார்த்தம்!
இந்த கன்ஃபர்மேஷன் பயாஸை மனித இயல்பாகப் பார்க்கின்றேன். சுமன்-சுகந்தி தம்பதியிடமும் பார்த்தேன். "ஈருடல் ஓருயிர்" என்பதெல்லாம் கவிதையில் மட்டுமே சாத்தியம். "ஈருடல் இருபதாயிரம் எண்ணங்கள்" என்பதே யதார்த்தம்! சண்டை சச்சரவுகளுக்கு நடுவில் உயிர்ப்புடன் இருப்பது இந்த கன்ஃபர்மேஷன் பயாஸ்தான்; அது கூடவே வருகின்றது.
"சிந்திப்பதே மனிதத்தன்மை. அதைப் பாதுகாப்போம்."
நாட்கள் செல்லச் செல்ல, சுமனும் சுமதியும் தங்களின் இந்த 'நங்கூர பயாஸ்' (Anchoring Bias) பிடியில் சிக்கித் தவித்தார்கள்.
ஒருநாள் சுமதி சொன்னாள்: "நீ எப்போதும் என் கருத்தைக் கேட்கவே மாட்டாய்!"
சுமன் சொன்னான்: "நீ எப்போதும் என் கருத்தை மறுப்பதுதானே உனக்கு வேலை!"
இருவரும் வழக்கம்போல தங்கள் 20% குறைகளை உயர்த்திப் பிடித்து சண்டை போட்டுக் கொண்டேயிருந்தார்கள். கடைசியில், தங்களின் கன்ஃபர்மேஷன் பயாஸை மாற்ற முடியாது என்று புரிந்த பிறகு, இருவரும் ஒரு வழியாக ஒரே முடிவுக்கு வந்தார்கள் —
"இனிமேல் நாம ரெண்டு பேரும் சேர்ந்து எந்த முடிவையுமே எடுக்க வேண்டாம்!"
இது என்ன நடக்கின்ற காரியமா? காலமே பதில் சொல்லட்டும்!
📚 மனித சுபாவங்கள்! எனது பார்வையில்
நான் நடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்கள் — அவர்களின் சுபாவங்கள் உண்மையில் நமது எண்ணங்களின் பிரதிபலிப்பா? மாறுபட்ட முகங்களில் எது அசல்? எது போலி? நாம் காண்பிப்பது எது? நம் அன்றாட வாழ்க்கையைச் சற்றே கவனித்து, நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ளும் ஒரு முயற்சியே இந்த 15 அத்தியாயங்கள் கொண்ட தொடர்.
🔗 பகுதி 1: நமக்கு வந்தால் வழக்கறிஞர், அடுத்தவருக்கு நீதிபதி
🔗 பகுதி 2: வெற்றி எனது, தோல்வி உனது
🔗 பகுதி 3: சொல்வது எளிது. செய்வது கடினம்
🔗 பகுதி 4: பேச்சில் புரட்சி, செயலில் சமரசம்
📌 பகுதி 5: நம்புவது உண்மையா, நமக்கு சாதகமானதா! (நீங்கள் இப்போது படித்தது)
இக்கட்டுரையில் இருப்பது போல் நீங்கள் கண்ட நிகழ்வுகள், உங்கள் சுற்றத்திலோ அல்லது உங்களின் சொந்த அனுபவங்களையோ, உங்கள் எண்ணங்களையோ என்னுடன் கமெண்ட்டில் பகிரலாமே! அதுவே அடுத்த பகுதியின் கருத்தாக அமையும்.
🤝 கண்ணன் மீ அவர்களுடன் இணைந்திருங்கள்
LinkedIn | Twitter | Instagram | Facebook
மனித ஞானமும், நவீன AI தொழில்நுட்பமும் இணைந்த புதிய பார்வைகளுக்கு எங்களின் வலைப்பதிவைப் பின்தொடருங்கள்: radhaconsultancy.blogspot.com
நாங்கள் வழங்கும் சேவைகள்:
🔹 AI பயிற்சி & விழிப்புணர்வு (AI Training)
🔹 தனி நபர் முதலீட்டு வழிகாட்டுதல் (Mutual Fund Investments)
🔹 மென் திறன் பயிற்சி & வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் (Soft Skills & Career Guidance)
🔹 மாணவர்களுக்கான பிராஜெக்ட் வழிகாட்டுதல் (Project Work Assistance)
உங்களது குறிப்பிட்ட தேவைக்கேற்ப நேரடியாக என்னுடன் பேசுங்கள் — உங்களது தேவையைப் புதிய கோணத்தில் பார்க்கத் தெரிந்துகொள்வோம்; உங்கள் பிரச்சினைக்கான முடிவு எப்போதும் உங்கள் கையில்தான்!
💡 "பாரபட்சமற்ற, தரமான ஆலோசனைக்கு நம்பிக்கையுடன் அணுகுங்கள்!"
📩 தொடர்பு கொள்ள:
▶️ YouTube: எங்கள் சேனலை Subscribe செய்யவும்
💬 வலைப்பதிவு வழியாக செய்தி அனுப்ப
🌐 radhaconsultancy.blogspot.com
#மனிதயதார்த்தங்கள் #தமிழ்உளவியல் #HumanRealities #ConfirmationBias #AnchoringEffect #NegativityBias #நம்புவதுஉண்மையா #மனிதசுபாவம் #AIForTheRestOfUs #KannanM #RadhaConsultancy
No comments:
Post a Comment