Saturday, 18 November 2023

செயற்கை நுண்ணறிவு மூலம் புத்திசாலித்தனமான முதலீடு

 செயற்கை நுண்ணறிவு மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் - இன்றைய தேவை


செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் இன்றைய நவீன உலகில் மிகவும் முக்கியமானவை.

_________________________________________________________

நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளரா? உங்கள் முதலீடுகளை திறம்பட நிர்வகிப்பதற்கான நுண்ணறிவுகளைத் தேடுகிறீர்களா? மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான எங்கள் விரிவான புத்தகத்தின் 14வது தொழில்நுட்ப அத்தியாயத்தை அறிமுகப்படுத்த நாங்கள் மிகவும் உற்சாகப்படுகிறோம், இந்த அத்தியாயத்தை பெற இங்கு தொடவும்

_________________________________________________________

செயற்கை நுண்ணறிவு என்பது என்ன? 

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது கணினிகள் மற்றும் மென்பொருள்களைப் பயன்படுத்தி மனிதர்கள் செய்வது போல சிந்தித்து செயல்பட வைப்பதற்கான ஒரு தொழில்நுட்பமாகும். இது இயற்கை மொழி செயலாக்கம், பெரிய அளவு தரவு ஆய்வு மற்றும் புலனாய்வு போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.

ஏஐ அரட்டை போட்ஸ் (AI Chat bots) என்றால் என்ன?

ஏஐ அரட்டை போட்ஸ் என்பது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான chatbots ஆகும். இது மனிதர்களுடன் உரையாடக்கூடிய திறன் பெற்றுள்ளது. சில எடுத்துக்காட்டுகள்: ChatGPT, Google Bard, and Microsoft new bing 


AI தொழில்நுட்பம் நமது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு முதன்மையான முதலீடு. 


AI மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் இணைந்து செயல்படும்போது, முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித்தரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. AI தொழில்நுட்பம் மியூச்சுவல் ஃபண்டுகளின் தரவுகளை ஆழமாக பகுப்பாய்வு செய்து சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிய உதவுகிறது.


எடுத்துக்காட்டாக, AI சாத் போட்ஸ் போன்ற செயற்கை நுண்ணறிவு அரட்டைகள் மூலம் நாம் நமது மியூச்சுவல் ஃபண்டு கேள்விகளுக்கு விரிவான பதில்களைப் பெற முடியும். இது சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவும். எனவே, AI மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் இன்றைய முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

மியூச்சுவல் ஃபண்டு தேர்வில் எவ்வாறு பயன்படுத்தலாம்?

மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்த கேள்விகளை ஏஐ அரட்டை போட்ஸிடம் கேட்கலாம். அது தேவையான தகவல்களைச் சேகரித்து எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் வழங்கும். இது சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவும்.


உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் ஒரு பங்கு நிதியில் முதலீடு செய்ய விரும்பினால், AI தொழில்நுட்பம் அவர்களின் ஆபத்து பொறுப்பை அடிப்படையாகக் கொண்டு சிறந்த திட்டங்களை பரிந்துரைக்க முடியும்.


AI தொழில்நுட்பம் முதலீட்டாளர்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களை ஒப்பிடுவதையும் எளிதாக்குகிறது. இது முதலீட்டாளர்களுக்கு தங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான திட்டத்தைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.


உதாரணம்

மியூச்சுவல் ஃபண்டின் விவரங்களை அறிய விரும்பினால், "HDFC Equity Fund பற்றி எனக்குச் சொல்லுங்கள்" அல்லது "ICICI Prudential Bluechip Fund எவ்வாறு செயல்படுகிறது?" போன்ற இயற்கை மொழியைப் பயன்படுத்தி AI அமைப்பிடம் கேட்கலாம். அமைப்பு உங்களுக்குத் தேவையான தகவலை தெளிவாகவும் சுருக்கமாகவும் வழங்கும். இரண்டு மியூச்சுவல் ஃபண்டுகளை ஒப்பிட விரும்பினால், "SBI Magnum Multicap Fund மற்றும் Kotak Standard Multicap Fund இவற்றில் எது சிறந்தது?" அல்லது "Axis Long Term Equity Fund மற்றும் Mirae Asset Tax Saver Fund இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?" போன்ற இயற்கை மொழியைப் பயன்படுத்தி AI அமைப்பிடம் கேட்கலாம். அமைப்பு உங்களுக்கு இரு நிதிகளின் விவரங்களுடன் ஒரு அழகான மற்றும் தகவலறிந்த ஒப்பீட்டு அட்டவணையை வழங்கும். 


எடுத்துக்காட்டு ஒன்று.


கேள்வி.

compare balanced advantage funds of icici prudential and nippon india, with respect to 5 year returns, star rating and expense ratio in neat table format give output in tamil


பதில். (New Bing chat)


எடுத்துக்காட்டு இரண்டு 


கேள்வி.

ஹெச்டிஎஃப்சி டேக்ஸ் சாவர். ஃபண்டில் லாப விவரங்களை மூன்று மற்றும் ஐந்து வருடங்களுக்கும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாமா என்பதற்கான தகவல்களையும் விரிவாக தரவும். 


பதில். (New Bing chat)

ஹெச்டிஎஃப்சி டேக்ஸ் சாவர் ஃபண்டின் முதலீடு விவரங்கள் பின்வருமாறு உள்ளன:

வருமானம்

1 ஆண்டு: 18.92%

3 ஆண்டுகள்: 25.35%

5 ஆண்டுகள்**: 14.27%


நன்மைகள்

நமது  கேள்விகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் இரண்டும் கலந்த ஒரு கேளிவியாக கேட்கலாம். எந்த மொழியில்? பதில் வரவேண்டும் என்று முன்னரே நாம் எடுத்துக்காட்டில் கூறியபடி கூறினால் அந்த மொழியில் நமக்கு பதில் கிடைக்கும். இதில் வரும் விவரங்களை நாம் இன்னொரு முறையில் சரிபார்த்துக்கொள்வது நல்லது. இது ஒரு மாதிரி மட்டுமே.

ஒப்பீடு செய்வதற்கு சுமார் அரைமணி நேரம் ஆகலாம். ஆனால் செயற்கை நுண்ணறிவு தளத்தில் ஓரிரு நிமிடங்கள் இதுபோன்ற தகவல்கள் அழகாக அட்டவணைப்படுத்தப்பட்டு வருகிறது. எந்த தளத்தில் இருந்து எந்த தரவு எடுக்கப்பட்டது என்ற விவரங்களையும் எண்கள் மூலம் தெரிவிக்கிறது. நாம் அந்த தளத்திற்கு சென்று தகவல்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.

ரோபோ ஆலோசகர்களின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

ரோபோ ஆலோசகர்கள் என்பவை கணினிமயமாக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள் ஆகும். சில நேரங்களில் செயற்கை முறையைக் கொண்டு மேம்படுத்தப்பட்ட ரோபோ ஆலோசகர்கள்.  அவை ஒரு நபரின் குறிக்கோள்கள் மற்றும் இடர் வகிக்கும் திறனைப் புரிந்துகொள்ள ஒரு வினாடி வினாவைப் பயன்படுத்தி, பின்னர் அவர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட முதலீட்டுத் திட்டத்தை வழங்குகிறது.

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் பிரபலமான மென்பொருள் Robo Advisor ஆலோசகர்களின் முதல் 3 பட்டியல் பின்வருமாறு:

  1. ஐந்துவெல்த் (INDWealth)

  2. WealthTech Robo Advisory

  3. ஏஞ்சல் புரோகிங் ஏஆர்கேயு (Angel Broking ARQ)


இந்த மென்பொருள் Robo Advisor ஆலோசகர்கள் பல்வேறு வசதிகளை வழங்குகின்றன, அவற்றில்:

  • இலக்கு அடிப்படையிலான முதலீடு: நீங்கள் ஓய்வுக்குப் பின்னுள்ள சேமிப்பு அல்லது குழந்தையின் கல்விக்கான சேமிப்பு போன்ற குறிப்பிட்ட நிதி இலக்குகளை அமைக்கலாம், மேலும் அந்த இலக்குகளை அடைய உதவும் வகையில் முதலீட்டு ஆலோசகர் தானாகவே ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவார்.

  • தானியங்கி போர்ட்ஃபோலியோ சமநிலைப்படுத்தல்: உங்கள் போர்ட்ஃபோலியோ உங்கள் அபாய சகிப்புத்தன்மை மற்றும் முதலீட்டு இலக்குகளுடன் இணைந்து இருப்பதை உறுதிசெய்ய, முதலீட்டு ஆலோசகர் தானாகவே உங்கள் போர்ட்ஃபோலியோவை சமநிலைப்படுத்துவார்.


ஜெனரேட்டிவ் ஏஐ: Generative AI


2022இல் ஜெனரேட்டிவ் ஏஐ ஸ்டார்ட்அப்கள் இந்தியாவில் இரட்டிப்பாகின. எதிர்காலத்தில்,உலகத்திலும் சரி இந்தியாவிலும் சரி இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இவை மேலும் வளரும். செயற்கை நுண்ணறிவு (AI): AI இந்தியாவில் ஒரு வேகமாக வளர்ந்து வரும் துறையாகும். AI ஐப் பயன்படுத்தி பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கலாம், இது பல தொழில்களில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.


ஏஐ  துறையில் முதலீடு செய்து, வளர்ச்சியில் பங்கு பெற விரும்பும் முதலீட்டாளர்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் புதிய  நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதுமையான யு டி ஐ அறிமுகப்படுத்தியுள்ள இன்னொவேஷன் (UTI Innovation Fund) திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய எங்களை அணுகலாம். 


முடிவாக, AI மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் இன்றைய டிஜிட்டல் உலகில் ஒன்றிணைந்து செயல்படும்போது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித்தருவதோடு, சரியான முடிவுகளை எடுப்பதிலும் உதவுகிறது. எனவே, இன்றைய முதலீட்டாளர்கள் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் முதலீடுகளில் அதிக லாபம் ஈட்ட முடியும். வருங்காலத்தில்  AI தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படும் . நீங்களும் இதைப்பற்றி தெரிந்து புரிந்து அதை அன்றாட வாழ்க்கை நடைமுறைப் படுத்துங்க. 


இந்த பதிவை PDF ஆக பெற்று பகிருங்களேன்

பண்ட் நிர்வாக புத்தகம் பெற 

இந்த புத்தகத்தில் , உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்க தொழிநுட்ப   நுணுக்கங்களை நாங்கள் ஆழமாக ஆராய்கிறோம். மொத்தம் 19 பக்கங்கள் மற்றும் படங்கள்  கொண்ட இந்த அத்தியாயம், உங்கள் முதலீடுகளை மேம்படுத்த மதிப்புமிக்க தொழிநுட்ப  நுண்ணறிவுகளை வழங்குவதே நோக்கம். இந்த அத்தியாயத்தை பெற இங்கு தொடவும்.  

மேலும் படிக்க 

இன்னும் வெளிவராத  மியூச்சுவல் ஃபண்ட் புத்தகத்தின் முதல் பத்துக்கும் மேற்பட்ட  அத்தியாயங்கள் சுருக்கத்தை இங்கே படிக்கலாம். முழு அத்தியாயத்தை படிக்க என்னை தொடர்பு கொள்ளுங்கள் நீங்கள் எனக்கு ஈமெயில் அனுப்பவும், நான் கையேடு தருகின்றேன் 

அத்தியாயம் 1 மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு அறிமுகம் 

அத்தியாயம் 2 ஏன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்? 

அத்தியாயம் 3 மியூச்சுவல் ஃபண்டின் வகைகள்

அத்தியாயம் 4 ஈக்விட்டி ஃபண்ட் (Equity fund) 

அத்தியாயம் 5 கடன் திட்டங்கள்

அத்தியாயம் 6 கலப்பின திட்டங்கள் (Hybrid funds) 

அத்தியாயம் 7 குறிக்கோளுடன் கூடிய முதலீடுகள் FOF /ETF

அத்தியாயம் 8 மியூச்சுவல் ஃபண்ட்களை தெரிவு செய்தல்

அத்தியாயம் 9 எஸ் ஐ பி  (SIP)

அத்தியாயம் 10 பண்டு நிர்வாகம் 

அத்தியாயம்  பண்டுகளின் லாபத்தைப் பாதிப்பது உணர்ச்சி பூர்வமான எண்ணங்களா?


Single Sign On - ஒற்றை அடையாளத்தில் நிதி விபரம்

விரல் நுனியில் தகவல்கள்

எக்ஸெல் பங்க்ஷன்

AI Developments: Exploring the Latest Tools and Fe... (radhaconsultancy.blogspot.com)


#தொழில்நுட்பம்

#மியூச்சுவல்ஃபண்டு

#AI


No comments:

Post a Comment