________________________________________________________________
பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அந்த முதலீடுகளை நன்கு பராமரிப்பதில் அதே அளவு ஆர்வம் காட்டுவதில்லை. முதலீடுகளைப் பராமரிப்பதில் ஆவணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் ஆவணங்களை நன்கு பராமரிபது அவசியம். இது நீண்டகால முதலீட்டு வெற்றிக்கு அடிப்படையாக அமையும். எங்கள் விரிவான புத்தகத்தின் 11வது அத்தியாயம் "ஆவணப்படுத்தல் " என்ற தலைப்பில் உள்ளது. விரிவான pdf பெற தொடவும். முழு புத்தகத்தை படிக்கவும் தொடுப்புகள் அதனுள் உள்ளது ________________________________________________________________
தலைமுறைகள் தாண்டிச் செல்ல வேண்டுமே?
மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? நாம் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற ஆவணப்படுத்தும் விபரங்களை விரிவாக பார்ப்போம்.
இதை படிப்பவர்களில் சிலர் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து இருக்கலாம். முதலீடு பெறுக வாழ்த்துக்கள். முதலீடு செய்ய முனைவபவர்கள் இருக்கலாம். முன்னர் முதலீடு செய்தவர்களூக்கு தெரியும், இதற்க்கு சற்று மெனங்கிட வேண்டும் என்று.
நிதி முதலீடுகள் காலையில் கடையில் சென்று பருப்பு வாங்குவது போல் எளிது இல்லைதான். பருப்பு விலை ராக்கெட்டில் போனாலும், ராக்கெட் விலை கொடுத்தால் பருப்பை கொடுத்துவிடுவார்கள். இன்றய நிலவரத்தில் பருப்பு வாங்க பான் நம்பர் கேட்பதில்லை. போற போக்கில் கேட்டாலும் ஆச்சியமில்லை. ஆனால் சர்வ நிச்சியமாக நிதி முதலீடு செய்ய பான் நம்பர் மற்றும் பல விபரங்கள் கேட்பார்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை எப்படிப் பராமரிப்பது என்பது முக்கியம்.
முக்கிய ஆவணங்கள்:
- பான், ஆதார் எண்கள் - முதலீட்டாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த
- தனிப்பட்ட விவரங்கள் - பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள்
- வங்கிக் கணக்கு விவரங்கள் - கணக்கு எண், IFSC குறியீடு
- பெயர்க்குறிப்பீடு (Nomination) - உரிமையாளரருக்கு பிறகு யாருக்குச் முதலீடு சேர வேண்டும். இது பற்றி மேலும் படிக்க
இன்னொரு நாமினேஷன் விபரம் (Successive Nomination)
- 2 வழி உறுதிமொழி ( Two factor authentication)- கணக்கு பாதுகாப்பு
- கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி - தொடர்புக்காக
KYC என்பது ஒரு முறை செயல்முறையாகும். அதாவது, ஒரு முறை முதலீட்டாளர் KYC செயல்முறையை முடித்துவிட்டால், அவர்கள் எந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திலும் முதலீடு செய்யலாம். Kyc பற்றி மேலும் படிக்க
ஆவணங்களைப் பராமரிப்பது:
மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றன. ஆனால் அவற்றை நாம் எப்படி அணுகுவது?
இங்கேயே ஆர்டிஏ (RTA) அல்லது பதிவுப் பரிமாற்ற முகவர்கள் உதவுகின்றனர். இவர்களிடம் முதலீட்டாளர்களின் அனைத்துத் தகவல்களும் உள்ளன.
தற்போது CAMS மற்றும் KFin Tech ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே RTA பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அறிக்கைகளை மின்னஞ்சல் மூலம் பெறலாம்:
1. முதலீட்டு மதிப்பு அறிக்கை (CAS): http://www.camsonline.com/InvestorServices/COL_ISAccountStatementCKF.aspx
2. போர்ட்போலியோ அறிக்கை: (Portfolio)
3. பரிவர்த்தனை விவரங்கள்: (Transactions)
4. கணக்கு விவர அறிக்கை: SOA - Statement of Accounts
5. லாபம்/நட்ட அறிக்கை: (Profit and Loss) (Captial gain reports)
இவ்வாறு தேவையான அறிக்கைகளை மின்னஞ்சலில் பெற்று, கணக்கை பராமரிக்கலாம்.
மேலும், மாதாந்திர ஃபேக்ட்புக்கள் (Fact books) மூலம் சரியான தகவல்களைப் பெறலாம். இதில் திட்டத்தின் அனைத்துத் தகவல்களும் இருக்கும். பண்டு நிறுவனங்களின் தகவல் புத்தகங்களைப் பெறுவதற்கான தொடுப்புகள் இங்கே உள்ளது.
எளிதாக ஆவணங்களைப் பராமரித்து சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை:
- ஆவணங்களில் ஏதாவது மாற்றம் வேண்டுமானால் RTAக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
- கணக்கு விவரங்களை ஆண்டுதோறும் சரிபார்க்க வேண்டும்
- ஃபேக்ட்புக்களில் (Fact Book of Mutual funds) உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்க வேண்டும் முக்கியமான
- வரிக் கணக்குகளுக்கு லாபம்/நட்ட அறிக்கை முக்கியம்
- கைபேசி மற்றும் மின்னஞ்சல் வழி அறிவிப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்
இன்றே ஆவணங்களைப் சரிபாருங்கள், அது தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய உதவும். உங்கள் முதலீடு ஆவணங்களைப் சரி பார்க்க எங்களை அணுகவும்
மேலும் படிக்க
இன்னும் வெளிவராத மியூச்சுவல் ஃபண்ட் புத்தகத்தின் மற்ற அத்தியாயங்கள் சுருக்கத்தை இங்கே படிக்கலாம். முழு அத்தியாயத்தை படிக்க என்னை தொடர்பு கொள்ளுங்கள் நீங்கள் எனக்கு ஈமெயில் அனுப்பவும், நான் கையேடு தருகின்றேன்
அத்தியாயம் 1 மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு அறிமுகம்
அத்தியாயம் 2 ஏன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?
அத்தியாயம் 3 மியூச்சுவல் ஃபண்டின் வகைகள்
அத்தியாயம் 4 ஈக்விட்டி ஃபண்ட் (Equity fund)
அத்தியாயம் 5 கடன் திட்டங்கள்
அத்தியாயம் 6 கலப்பின திட்டங்கள் (Hybrid funds)
அத்தியாயம் 7 குறிக்கோளுடன் கூடிய முதலீடுகள் FOF /ETF
அத்தியாயம் 8 மியூச்சுவல் ஃபண்ட்களை தெரிவு செய்தல்
அத்தியாயம் 9 எஸ் ஐ பி (SIP)
அத்தியாயம் 10 பண்டு நிர்வாகம்
அத்தியாயம் 12 வரி சேமிப்பு
அத்தியாயம் 14 தொழில் நுட்பம்
நிதி பராமரிப்பில் நிதி இல்லா விவரங்களை பராமரிக்க.
மியூச்சுவல் ஃபண்ட் - தகவல் களஞ்சியங்கள்
கே ஒய் சி (KYC) மற்றும் எம் எப் யு (MFU) தளங்களின் விவரங்களை ஆங்கிலத்தில் படிக்க.
All you need to know about KYC, CAN and MFU for mutual fund investments
#documentation
#accountmaintenance
#மியூச்சுவல்ஃபண்டு
#முதலீடு
#ஆவணம்
#கணக்குப்பராமரிப்பு
No comments:
Post a Comment