Sunday, 15 May 2016

Equity Investing - பங்குகளை பகுத்து அறிவோம்

Read/download this article in magazine/pdf format

கடந்த  இதழ்களில் பரஸ்பர நிதி, ஒரு அறிமுகம், வரி சேமிப்பு ( Tax savings), பரஸ்பர நிதி பராமரிப்பு,(Documentation)  பரந்து விரிந்த முதலீடு பற்றி ( Asset allocation) பார்த்தோம்.  புரிந்து இருக்கும்.
பரந்து விரிந்த முதலீட்டின்  சுருக்கம் புதிதாக படிப்பவர்களுக்காக, நாம் செய்யும், அணைத்து முதலீடுகளையும், நான்கு வகையில் அடக்கிவிடலாம்.
1. பங்கும் பங்கு சார்ந்த மூதலீடுகளும். - நேரடியாக பங்குகளில் மூதலீடு, பரஸ்பர நிதிகளில் பங்கு வகை மூதலீடு
2. கடன் வகை மூதலீடு - வங்கி டெபாசிட், சிறு சேமிப்பு, பரஸ்பர நிதிகளில் கடன் வகை மூதலீடு
3. பொருட்கள் வர்தகம் - தங்கம், வெள்ளி, கச்சா எண்ணை, இதர பல
4. அசையா சொத்தக்கள் - நிலம், வீடு

இந்த இதழில் முதலாவது வகையான பங்கும் பங்கு சார்ந்த முதலீடுகளும்( Equity) பற்றி விரிவாக பார்போம். வரும் இதழ்களில், கடன் பத்திரங்கள் ( Debts), இரணடும் கலந்த கலவையான திட்டங்கள் ( Hybrid funds) பற்றி விரிவாக பார்போம்

நடப்பு ஆண்டில் ( 2016)  பங்குசந்தை இற்க்கத்தில் இருக்கும் போது, பங்கு கட்டுரையா, இப்போது யாரவாது, பங்கு, அல்லது, பங்கு சார்ந்த முதலீடு செய்வார்களா? என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். இது தவறு, எனவே இந்த கட்டுரை. நடப்பு ஆண்டில் பங்குசந்தை, சுமார்  10% குறைந்துள்ளது, இருந்தாலும் பங்குசந்தை இற்க்கத்தில் இருக்கும் போது, , பங்கு, அல்லது, பங்கு சார்ந்த முதலீடு செய்யவேணடும் என்பதே பால பாடம்.
தனிநபர் முதலீட்டில் பங்கு முதலீடு எப்படி ஆரம்பிக்கின்றது. இப்படித்தான். நமக்கு அடுத்தவீட்டுக்காரர் அல்லது அலுவலக நண்பர், ஒரு xyz பங்கை ரு 50, வாங்கி ரு80க்கு விற்று பணம் பார்தார், அவர் கூறிய அற்புதமான டிப்பை கொணடு, அல்லது நாமும் தீடீர் பணக்காரானிகிவிடாலாம் என்ற பேராசை, அவரைவிட நமக்கு நல்லது அதீகம் நடக்கவேண்டுமஃ, என்ற பொறாமையில்  அதே பங்கை  ரு85 வாங்கி சில காலம் கழித்து , பொருமையின்றி அவசரமாக ரு60 க்கு விற்று விட்டு இதனால், பங்கு முதலீடு என்று கேட்டவுடனே, பணம், பண்ணலாம், என்ற நேர்மறையான எண்ணத்தைவிட, பயந்து ஒடிவிடலாம், என்ற எதிர்மறையான எண்ணம் மேலோங்கிறது, நம்மில் பலருக்கு. அதன் காரணம், சிலர் லாபம் பாரத்தைவிட நஷ்டம்அடைந்த்து அதிகம். ஏன் நஷ்டம் அடைந்தார்கள் என்று பார்த்து, புரிந்துகொண்டு விட்டால், நாம், அந்த பாதையை தவிர்து, சற்று கவனமாக, வேறொரு பாதையில் பயணித்து, இலக்கை, லாபத்தை அடைய வாய்ப்புள்ளது.

மேற்கூறிய நான்கு வகை முதலீடுகளில் பங்கும் பங்கு சார்ந்த முதலீடுகளில்அதிக லாபம் பெற முடியும்.  இது மற்றதை விட கூட இருக்கும். நிறைய பேர் விரும்பும், அசையா சொத்தக்கள் தரும் லாபத்தைவிட கூட கிடைக்க சாத்தியகூறுகள் உள்ளது. ஆனால் வேலை சுலபமல்ல, நன்கு கவனம் தேவை, பாதையா பத்திரமாக தெரிவு செய்ய வேண்டும்.

பங்கும் பங்கு சார்ந்த மூதலீடுகளும் என்பது, அதிக Risky ஆனது. இதில் எந்த மாற்றுக்கருத்தும், இல்லை. பங்கு சந்தையில் அடிக்கடி உபயோகபடுத்தபடும் சொல், Risk is more return is more.  Risk ஐ எப்படி கையாள்கிற்றோம் என்பதே, நமது வெற்றியின் இலக்கான, லாபத்தை அடைய  நாம் அமைக்கும் பாதை ஆகும்.

பங்குசந்தையில் ஏற்ற இறக்கம், ஊடல், கூடல், வகையை போன்றது. எப்போது வரும், எப்போது போகும், என்று அறுதியிட்டு கூற முடியாது.
அட்டவனை பார்த்தால் பரியும். Sensex என்பது மும்பை பங்குசந்தை குறியீட்டு எண். ( Bombay stock exchange index- Sensex) இது கூடினால் மும்பை பங்குசந்தை ஏறு முகம், குறைந்தால் இறங்கு முகம்




பங்குசந்தையில் நீண்ட கால முதலீடு நல்ல லாபம் தரும்
பங்குகளில் Risk ஐ குறைக்க பல ஆய்வுகளின் படி, முதல் பால பாடம்,  நீண்ட கால பங்கு முதலீடுகளில்  நஷ்டம்அடைவைதைவிட லாபம் பார்பதற்கான சாத்தியங்கள் அதிகம். நீண்ட காலம், என்றால் எத்தனை நாள்கள், இல்லை வருடங்கள்? இங்குதான் கண்னோட்டங்கள், மாறுபடும், ஆய்வுகளின் படி, ஒரு வருட முடிவில், நஷ்டம்அடைய சாத்தியங்கள் அதிகம். அதுவே மூன்று வருடங்கள், ஐந்து வருடங்கள் ஆகும் போது, நஷ்டம்அடைய சாத்தியங்கள் குறைந்து வந்து, 15 வருடங்கள் ஆகும் போது நஷ்டம்அடைய வாய்பே இல்லாமல், நிச்சிய லாபம் அடைய ஏதுவாக உள்ளது. இதை படத்தில் காணலாம். எனவே Time in the Market is important than Timing the Market.




அதாவது சந்தையில் இறக்கத்தில் வாங்க வேண்டும் என்று நினைப்பில் காத்திருந்து, எது இறக்கத்தின் இறுதி கட்டம், என்று அறிய முடியாமல்,  நல்ல சந்தர்பத்தை தவறவிடாமல், பங்குகளை வாங்கி நீண்ட காலம் வைதிருந்து லாபம் பார்பது, நன்மை பயக்கும்.

Growth investing
அடுத்த்தாக பங்குகளை தேர்வு செய்து வாங்குவது, ஒரு கலை. இதில் இரண்டு வகை உள்ளது. முதலாவது வகை Growth Investing, ஆகும், குறுகிய காலத்தில், விரைந்து வளரும் நிறுவனம், விரைவாக ஏறும் பங்குகளில் முதலீடு செய்வது Growth Investing, ஆகும். முன்னர் பாரத்தபடி குறுகிய காலதம் என்றாலே, Risk அதிகம், என்பதை நினைவில் கொள்க.

மதிப்புள்ள முதலீடு Value Investing
இன்னொரு வகை மதிப்புள்ள முதலீடு -  Value Investing ஆகும். மதிப்புள்ள முதலீடு என்பது உங்கள் முதலீட்டு தொகுப்பிற்கு( portfolio)  நல்ல பேரம் போன்றது. பொறுத்தார் பூமியாள்வர், என்பதிற்க்கினங்க, நிறுவனத்தின் நிதி நிலைமை பற்றி நன்கு ஆராய்ந்து, நிறுவனத்தின் சரியான மதிப்பைவிட பங்கு விலை குறைந்து இருக்கும் பட்சத்தில் அதை வாங்கி அதன் விலை வரும் வரை காத்திருந்த லாபம் பார்பது Value Investing ஆகும. நல்ல நிறுவனங்களின் பங்குகளை அவற்றின் உண்மையான விலையில் தள்ளுபடிசெய்து வாங்குவது என கொள்ளலாம். இதில் Risk குறைவு, லாபம் பார்க்க  காத்திருக்க வேண்டும்.

உலகில் பங்கு வர்தகத்தில் உச்சத்தை அடைந்த வெற்றியாளர்கள், தேர்ந்தெடுத்த பாதை, பெரும்பாலும் Value Investing ஆகும்:

1. குறைந்த விலையில் உள்ள பங்குகளை வாங்கும் முன் கவனம் தேவை. குறைந்த விலையில் உள்ள பங்குகள் எல்லாம் நல்லவையாக இருக்க அவசியம் இல்லை. நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலையில்  வாங்க வேண்டும்.
2. தற்போதைய நிறுவனத்தின் மதிப்பு, அதன் தற்போதைய பங்கு விலையை பாரத்காமல், வரும் காலங்களில், அந்த நிறுவனத்தின் மதிப்பு எப்படி மாறும் என்று கணித்து அந்த நிறுவன பங்குகளை வாங்க வேண்டும்
3. மிக முக்கியமாக, பெரும்பாலும் நாம் கணக்கில் கொள்ளாத அம்சம், நிறுவனத்தின் நிர்வாக குழு. முதலில், நிர்வாக குழுவின் திறமை நிதி அறிக்கைளில் அறியலாம், அடுத்தாக, முக்கியமாக, அவர்கள் பங்குதாரர்களை நடத்தும் விதம். நல்ல நிர்வாக குழு நடத்தும் நிறுவன பங்குகளை மட்டும் வாங்கவும். ( Promotors / Management)
4. சந்தை இறக்கத்தை பாரத்து பயப்படவேண்டாம், சந்தை இறக்கமே பங்குகள் வாங்க சிறந்த நேரம்.
5. முன்னர் பாரத்தபடி, நீண்ட கால அடிப்படையில் பங்குகளை வாங்குதல், பங்குகளை வாங்கி டீமாட்ல் வைத்து மறந்துவிடுவது அல்ல, அடிக்கடி அதன் விபரங்களை பாரத்து அலசி ஆராய்ந்து,  நல்ல நிர்வாக குழு எனில், சந்தையின் இறக்கத்தை பாரத்து பயந்து விற்றுவிடாமல் நீண்ட கால  வைத்திருந்து லாபம் பார்பது.
6. நீண்ட கால அடிப்படையில் தங்கத்தைவிட நல்ல நிறுவன பங்குகள், லாபம் தரக்கூடியவை.
7. பொருட்கள் வர்தகம், சில வருடங்கள் ஏறும், சில வருடங்கள் இறங்கும், தற்போது, தங்கம், கச்சா எண்ணை இறங்கு முகம்.
8. முடிவாக நாம் பங்குகளை மற்றும் வாங்கவில்லை, பங்கின் தொழிலில் பங்குதாரர் ஆகுன்றோம். இதை பலர் புரிவதில்லை. ஏதோ சூதாட்டம் போல், லாட்டரி டிக்கெட் போல் பங்கு வாங்கி விற்றுவருகிற்றோம். இது நன்மை பயப்பதில்லை. நாம் எந்த தொழிலில் பங்குதாரர் ஆகுன்றோம் என்பது மிக மிக முக்கியம்.

நாம் இதுவரை பார்த Value Investing, Growth Investing என்பது ஒரு மாதிரியான பிரிவு.

Market capitalisation
இன்னொரு வகையான பிரிவு, Large cap, Midcap, Small cap ஆகும்.
இதை புரிந்துகொள்ள, நாம், Market capitalisation என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். Market capitalisation என்றால் நிறுவனத்தின் மொத்த பங்குகள் மற்றும், பங்கின் சந்தை விலையின் பெருக்கு தொகை. (Number of equity shares X Market price of the share). நிறுவனத்தின் பங்குகள், அதிகமாகவும், பங்கின் விலை அதிகமாகவும் இருந்தால் Market capitalisation அதிகம் இருக்கும், இந்த நிறுவனம் பெரிய நிறுவனமாக இருக்கும். இதற்க்கு, , Large cap என்று பெயர்.( Reliance industries, Tata steel, ONGC)  நிறுவனத்தின் பங்குகள் குறைவாக இருக்கும் பட்சத்தில், Market capitalisation கம்மியாக  இருக்கும், இந்த நிறுவனம் சறிய நிறுவனமாக இருக்கும்.(Inox)  இதற்க்கு, small cap என்று பெயர். இரண்டிற்க்கும் இடைபட்டது, Midcap ஆகும் ( BEML)

புதிதாக பங்குகளை வாங்குபவர்கள்,  Large Cap பங்குகளை  வாங்கலாம். அதிக Risk எடுத்து அதிக லாபம் பார்க விரும்புவர்கள் சரியான தருண்தில் Small and Mid cap பங்குகளை  வாங்கலாம்

நல்ல நிறுவன பங்குகள் ( Blue chips)
நல்ல நிறுவன பங்குகள் என்பது நல்ல நிதி நிலையுள்ள பரவலாக அங்கீகரிக்கபட்ட பெரிய நிறுவன பங்குகள்,இதன் சிறப்பம்சங்கள்
1. தரமான தலைமை ( Better management)
2. ஆராயப்பட்ட வர்தகமுறை ( Researched Business practices)
3. நல்ல பின்னணி ( Good background)

பரஸ்பர நிதிரயில் பங்கு சார்ந்த முதலீடு
நாம் பங்குகளை நேரடியாக வாங்குவதைவிட பரஸ்பர நிதிரயில் பங்கு சார்ந்த முதலீடு செய்வது, சால சிறந்த்து. என்று பலமுறை சொல்லியாகிவிட்டது. மறுபடியும் கூறுகின்றேன்
1. நிபுணத்துவமான பங்கு மேலாளர்கள் - ஆராய்ச்சி குழுக்கள் ஆதரவளிப்பதால் முதலீடு செய்வதற்கு சரியான பங்குகளை தேர்வு செய்வார்கள்
2. நீண்ட கால கவனம் – பெரும்பாலான ப்ளுசிப் பண்டுகள், ( Blue chips funds)  நீண்ட கால வளர்ச்சியுடைய நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன
3. தனிப்பட்ட பங்கு முதலீடு இல்லாமல், பங்கு தொகுப்பில் முதலீடு ( diversified equity portfolio)
பரஸ்பர நிதிரயில் பங்கு சார்ந்த முதலீடு பத்து வருடத்திற்கு மேல் எப்படி லாபம் தந்து உள்ளது என்று அட்டவனை பார்த்தால் பரியும்.

Diversified equity fund returns as on 16 th feb 2016
Fund
Launch - Month and year
Returns in % -SinceLaunch 
UTI Mastershare Fund
Oct-86
18.01
Franklin India Bluechip Fund | Invest Online Now
Dec-93
21.48
HDFC Top 200 Fund
Sep-96
19.95
Tata Pure Equity Fund - Regular Plan
May-98
21.48
Kotak 50 Regular Plan
Dec-98
19.34
Sundaram Select Focus Fund - Regular Plan
Jul-02
19.35
Birla Sun Life Frontline Equity Fund
Aug-02
21.93
HSBC Equity Fund
Dec-02
21.45
DWS Alpha Equity Fund
Jan-03
20.31
DSP BlackRock Top 100 Equity Fund - Regular Plan
Mar-03
22.26

பல்வேறு ஆய்வுகளின்படி, தனிநபர் பங்கு வர்தகத்தில், பெரும்பாலோனர், சந்தை காளையின் கையில் இருக்கும் போது, நுழைந்து, கரடியின் கையில் போகும்போது, பயந்து. வெளிவந்து, மொத்த்தில், நஸ்டம் அடைவார்கள்.
அதற்கு பதிலாக, நேரடி பங்குவர்தகத்தை தவிர்த்து, பரஸ்பர நிதி பங்கு திட்டத்தில் முதலீடு  செய்து, பங்குசந்தையின் பலனை அனுபவிக்கலாம்
பங்கு வர்தகத்தின் நெளிவு சுளிவு, சிலவற்றை தெரிந்துகொண்டோம்.
தெரிந்தோடு நிற்க்காமல், பரஸ்பர நிதிரயில் பங்கு சார்ந்த முதலீடு செய்வோம் வாருங்கள்








No comments:

Post a Comment