Sunday 15 May 2016

Hybrid Funds - கலப்பின திட்டங்களில் கலந்துகொள்ளவோமே

Read/download this article in magazine/pdf format

சமையலில் கை தேர்ந்தவர்கள் நமது ஆச்சிகள். "சும்மா" குழம்பு வைப்பதிலிருந்து “பலாக்காய் சொதி” வைப்பது வரை, நமக்கு நிகர் நாமே! இது ஒருபுறம் இருக்க.. சாப்பிட்டே, சொத்தை அழித்த செட்டியார்களும், இல்லாமல் இல்லை. அதை விட்டுவிடுவோம்.. இதுவரை சொத்தை சேர்ப்பது பத்திதான் பார்த்துவருகின்றோம், அதை தொடருவோம். சொத்துக்கும் “சொதிக்கும்” என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? கலப்பின திட்டங்களில், சொதி எங்கிருந்து வந்த்து என்பவர்களுக்கு எளிமையான விளக்கம் இதோ..

சும்மா" குழம்பில் வெந்நீரும், புளியும் தான்.. சொதியில் முக்கியமாக பலாக்காய், தேங்காய், இத்தியாதி, இத்தியாதி - ஆக சமையல் சாமான்களை பலவாறு கலந்து, அவரவர் விருப்படி, அவரவர்களுக்கு ஏற்ற சுவையில் கலந்து சமைக்கின்றோம்.

நாம் முந்தைய இதழ்களில் பார்த்த தங்க மூதலீடு, பங்கு சார்ந்த மூதலீடு, கடன் சார்ந்த மூதலீடு, எல்லாருக்கும், எல்லா நேரங்களிலும், ஏற்புடையாதாக இருக்காது. அவரவர் விருப்படி, அவரவர்களுக்கு ஏற்ற வகையில், முதலீடு செய்ய சில திட்டங்கள் உள்ளது. இவை பெரும்பாலும், ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை மூதலீடுகளின் ( உ-ம் தங்கம், பங்கு, கடன்) கலவையாக இருக்கும் - பலாக்காய் சொதி போலத்தான்   - இதன் பெயர்தான் கலப்பின திட்டங்கள் (Hybrid funds).

நாம் கடந்த இதழில் பார்தபடி, நமது எல்லா பணத்தையும் "பறந்த கம்பெனியின்" கடன் பத்திரமாகவோ, பங்காவாக வைத்து இருந்தால், கஷ்டம்தான். இதைதான் “ Credit Risk”  என்று பார்தோம். பண பரிமாற்றத்தின் போது நமது அசலை பத்திரப்படுத்தி அதன் பிறகே லாபம் பார்க்கவேண்டும். இதை எப்போதும் ஞாபகம் வைத்திருப்பது மிக மிக முக்கியம்! எந்த வகை முதலீடாக இருந்தாலும் கிரெடிட் ரிஸ்கிற்கு  (credit risk) முக்கியத்துவம் குடுக்க வேண்டும். பங்கிலும் Risk  உள்ளது, கடன் பத்திரத்திலும் Risk உள்ளது, என்று பயந்து எல்லா பண்தையும், "கைபெட்டியில" வைத்து மறப்பது பணம் பெருகாமல்  கரையானுக்கு உணவாகிவிடும்!! வேறு என்னதான் செய்வது?? தங்கம், பங்கு, கடன், கலந்த கலவையான திட்டங்களில் மூதலீடு செய்யலாம். கலவையில் ஒன்று இறங்கினாலும், இன்னொன்று ஏறி அதை சரி செய்ய வாய்ப்புகள் அதிகம். இந்த வகையான Asset Allocation  பற்றி பரந்து விரிந்த முதலீட்டில் பார்தோம்.  Asset allocation திட்டங்கள் பெரும்பாலும் கலப்பின திட்டங்களே.  (Hybrid funds)

இன்னும் விரிவாக புரிந்துகொள்ள , நீங்கள், ரூ 100 முதலீடு செய்தால் ரூ 50  பங்கிலும் ரூ 50   கடன்பத்திர முதலீட்டில் முதலீடு செய்வதான திட்டங்களுக்கு பெயர் Balanced Fund - சரிவிகித திட்டம்  என கொள்ளலாம்.

இன்னொரு வகையான கலப்பின திட்டம், நீங்கள், ரூ 100 முதலீடு செய்தால் ரூ 33  பங்கிலும் ரூ 34   கடன்பத்திர முதலீட்டிலும், ரூ 33 தங்கத்திலும் முதலீடு செய்வதான திட்டங்களுக்கு பெயர் Triple Asset Fund.

இது போல் பங்கு, கடன்பத்திரம், தங்கம், வெள்ளி, போன்ற அடிப்படை முதலீட்டுகளை, பலவிகிதாசாரத்தில் கலந்து, லாபம் பெற ஏற்றவாறு உள்ள திட்டங்கள் பல, பரஸ்பரநிதியில் உள்ளது. சிலவற்றை இங்கு பார்போம்..

முன்னர் கூரிய 50 பங்கு / 50 கடன்பத்திரம்  சரிவிகித திட்டம், இந்த விகிதாச்சாரத்தில் பெரும்பாலும் இருப்பதில்லை. காரணம், வரி சுமை.

அதற்கு முன், ஆச்சி கைபக்குவத்தில் சுட்ட ஆமைவடை சுட சுட சாப்பிட்டுவிட்டு, மேலே படிப்போபம்.... ஆமைவடை என்றதும் ஞாபகம் வருகின்றது. சமீபத்தில் TV யில் பார்த்தேன். ஆச்சிகள் தட்டி போடும் ஆமைவடையை, ராஜஸ்தானில் உருட்டி போட்டு 'கல்மீ' வடை என்கிறார்கள். சுவையில் சிறிது மாறுபடலாம், அல்லது Crispy தன்மையில் மாறுபடலாம். ஆக.. சின்ன சின்னதாக கலவையை மாற்றி நமக்கு ஏற்றவாறு மாற்றி கொள்ளலாம். இது போலவே சரிவிகித திட்டத்தில்  சின்ன மாறுதல் செய்து, வரியை குறைக்கலாம். நடப்பு வரி சட்டங்களின் படி, திட்டத்தில 60% மேல் பங்கு முதலீடு இருந்தால், ஒரு வருட முதலீட்டிற்கு மேல் வரும் லாபத்திற்கு வரி கட்ட வேண்டியதில்லை. இந்த பலனை பெற பெரும்பாலான கலப்பு திட்டங்கள் 60% மேல் பங்கு முதலீடு  வைத்து இருக்கும். ரிஸ்கை குறைத்து, லாபம் பெற 60% பங்கும், 40% கடனும் உள்ள திட்டங்கள் பல உள்ளது - இதற்கு பெயர் ஈக்விடி சேவர் திட்டங்கள் எனப்படும் ( Equity saver/Balanced Advantage)

சிலருக்கு, பங்குவிகிதம் கூட கூட அவர்களது இரத்த அழுத்தமும் கூடலாம்.. இவர்கள், எங்களுக்கு வங்கி வட்டியை விட சற்று கூட லாபம் கிடைத்தால் போதும் என்பார்கள். “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்துதான்”. இவர்களுக்காக, மாதாந்திர வருமான கலப்பின திட்டங்கள் உள்ளது. இதில் கடன் பத்திரங்கள் 70-90% , பங்கு 10-30% என்ற விகித்தில் இருக்கும்.

உங்கள் முதலீட்டில் எவ்வளவு பங்கு, இருக்கவேண்டும் என்பதற்கு நூறிலிருந்து, உங்கள் வயதை கழித்து கொள்ளுங்கள்..  உதாரணமாக உங்கள் வயது 35 என்றால், உங்கள் பங்கு முதலீட்டு விகிதம் 65% ஆக இருக்கலாம். எனவே குழந்தைகளுக்கான முதலீட்டில் நிறைய பங்கு விகிதமும், ஓய்வு பெற்றவர்களுக்கான முதலீட்டில், குறைவான பங்கு விகிதமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கான முதலீட்டில்  இரண்டு வகை உள்ளது. ஆரம்பப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கான முதலீட்டில்  பங்கு முதலீடு கூட இருக்கலாம் ( child care Investment/ Gift). அட்டவணை பாருங்கள், 70% சதவிகிதம் மேல் பங்கு முதலீடு உள்ளது. மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கான முதலீட்டில்  பங்கு முதலீடு குறைவாக இருக்கும் (Saving / Study)  அட்டவணை பாருங்கள் (15%-20%) சதவிகிதம், பங்கு முதலீடு உள்ளது. காரணம்.. குழந்தைகளுக்கான முதலீடு அவர்களது கல்லூரி செலவுக்காக செய்யப்படுவது. நாம் முன்னர் பார்த்தபடி பங்கு முதலீட்டில் லாபம் பெற அதிக காலம் முதலீட்டில் இருக்க வேண்டும். எனவே ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கான முதலீட்டில் அதிக பங்கு உள்ளது. மேல் நிலை பள்ளி படிக்கும் குழந்தைகள் குறைந்த கால இடைவெளியில் கல்லூரிக்கு செல்வதால் பங்கு முதலீடு கம்மியாக உள்ளது.


இந்த திட்டங்கள் பற்றியும், அதன் கலப்பு விகிதம் பற்றியும், கடந்த கால லாபதன்மை பற்றியும் அட்டவணை யில் பார்கலாம்.


Date: 17-Mar-2016 22:15




Fund
Equity %
1-Year Return
3-Year Return
5-Year Return
10-Year Return
Balanced Funds

Franklin India Balanced Fund
64
-3.49
17.68
13.19
12.37
HDFC Balanced Fund
67
-6.01
18.36
14.4
13.93
ICICI Prudential Balanced Fund
78
-5.79
16.55
14.69
11.42
Child Care Plans

HDFC Childrens Gift Fund - Investment Plan
71
-6.48
17.11
14.53
13.13
HDFC Childrens Gift Fund - Savings Plan
16
2.55
11.2
10.43
9.51
ICICI Prudential Child Care Plan - Gift Plan
78
-7.8
16.13
13.14
10.4
ICICI Prudential Child Care Plan - Study Plan
20
4.81
16.68
14.01
11.9
Monthly Income Plans

Franklin India Monthly Income Plan
19
2.73
10.91
10.14
8.84
ICICI Prudential MIP 25
22
1.45
10.66
10.11
9.14
Retirment benefit plans

Franklin India Pension Fund
38
-0.06
13.09
11.44
9.79

 “மனிதன் பாதி, மிருகம் பாதி”… ஞாபகம் வருகிறதா..?? ஆளவந்தானில் வரும் பாடல் வரிகள்.. அது போலத்தான் ஒவ்வொரு பரஸ்பர நிதி நிறுவனமும் பல பெயர்களில் என்னெற்ற கலவைகளில் இந்த திட்டங்களை வழங்கி வருகின்றது. சில கலப்பின திட்டங்களில் முக்கிய வகைகளை இங்கு தந்துள்ளேன்:
1) ஈக்விடி சேவர் திட்டங்கள் ( Mostly balanced funds)
2) சிறுவர்களுக்கான திட்டங்கள்  ( Child care plans)
3) ஓய்வுதிய திட்டங்கள் ( Retirement benefit funds)
4) மாதாந்திர வருமான திட்டங்கள் ( Monthly income plans)

இன்னும் எத்தைனையோ திட்டங்கள் உள்ளது.. “தட்டுங்கள், திறக்கபடும்” என்பது போல்.. தேடுங்கள், உங்களுக்கு உகந்த திட்டங்கள் கிடைக்கும்!!



No comments:

Post a Comment